பூஸ்டர் டோஸ்களுக்குப் பதிலாக ஆண்டுக்கு ஒரு முறை கரோனா தடுப்பூசி: ஃபைஸர் சிஇஓ பரிந்துரை

கரோனாவின் வெவ்வேறு உருமாற்றங்களில் இருந்தும் மக்களைக் காக்கும் வகையில் உலக நாடுகள் பூஸ்டர் தடுப்பூசிகளை செலுத்தி வரும் நிலையில் இதற்கு மாற்றாக ஆண்டுக்கு ஒரு முறை தடுப்பூசி செலுத்துவதைப் பரிசீலிக்கலாம் என ஃபைஸர் சிஇஓ ஆல்பர்ட் போர்லா பரிந்துரைத்துள்ளார். அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் தங்களின் மக்களின் ஃபைஸர் இன்க் நிறுவனத்தின் ஃபைஸர் தடுப்பூசியை செலுத்துகின்றனர். உலகம் முழுவதும் டெல்டா வைரஸ் மிகக் கொடூரமான பாதிப்புகளை ஏற்படுத்திய நிலையில் தற்போது ஒமைக்ரான் பாதிப்பு காரணமாக இஸ்ரேல் … Read more

வேலூர் மாவட்டத்தில் பழமையான கல்வெட்டுகள் படியெடுப்பு: புத்தகமாக வெளியிட நடவடிக்கை என தகவல்

வேலூர் மாவட்ட கல்வெட்டு வரலாற்றை புத்தகமாக வெளியிட தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை யினர் பழமையான கல்வெட்டுகளை படியெடுத்து வருகின்றனர். தமிழகத்தின் வரலாற்றை புத்தகமாக வெளியிட தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை முயற்சி எடுத்துள்ளனர். ஏற்கெனவே பல கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்ட நிலையில் மீண்டும் அவற்றை படியெடுப்பதுடன் விடுபட்ட கல்வெட்டுகளையும் படியெடுத்து முழுமையாக பதிவு செய்ய திட்டமிட்டுள்ளனர். இதற்காக, தமிழகத்தில் உள்ள கல்வெட்டுகளை படியெடுத்து புத்தகமாக வெளியிட நடவடிக்கை எடுத்துள்ளனர். அதன்படி, வேலூர் மாவட்டத்தில் உள்ள கல்வெட்டுகளை ஓய்வுபெற்ற … Read more

உ.பி.யில் அரசியல் குரு முலாயம் சிங்கின் மகன்; அகிலேஷை எதிர்த்து போட்டியிடும் இணை அமைச்சர்: கடும் போட்டியை சந்திக்கிறது கர்ஹால் தொகுதி

புதுடெல்லி: உத்தர பிரதேச தேர்தலில் பாஜக முதல்வர் ஆதித்யநாத் கோரக்பூர் தொகுதியிலும், எதிர்க்கட்சி சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் சிங் யாதவ் கர்ஹால் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். இருவருமே சட்டப்பேரவை தேர்தலை முதல் முறையாக சந்திக்கின்றனர். அகிலேஷின் மக்களவை தொகுதியான மெயின்புரியில் அடங்கியது கர்ஹால் தொகுதி. இங்கு, ஆக்ரா மக்களவை தொகுதிபாஜக எம்.பி.யாக இருக்கும்எஸ்.பி.சிங் பகேல், அகிலேஷ் சிங்கை எதிர்த்து போட்டியிடுவது பெரும் சவாலை ஏற்படுத்தி உள்ளது. அகிலேஷின் தந்தையும் சமாஜ் வாதி நிறுவனருமான முலாயம் சிங் சீடராக இருந்து … Read more

கரோனா விதிமுறைகளால் திருமணத்தை ரத்து செய்தார் நியூஸிலாந்து பிரதமர் 

வெலிங்டன்: நியூஸிலாந்தில் அண்மைக்காலமாக ஒமைக்ரான் தொற்று பெருகி வரும் சூழலில் தனது திருமணத்தை தற்போதைக்கு ரத்து செய்வதாக அந்நாட்டுப் பிரதமர் ஜெசிந்தா ஆல்ட்ரென் அறிவித்துள்ளார். 40 வயதான ஜெசிந்தா கடந்த 4 ஆண்டுகளாக அந்நாட்டின் பிரதமராக உள்ளார். கரோனா முதல் அலையின் போது உலகளவில் முதல் நாடாக ஜீரோ கோவிட் என்ற இலக்கை நியூஸிலாந்து எட்டியது. இதற்காக அவர் சர்வதேச அளவில் கவனம் பெற்றார். இந்நிலையில் தற்போது நியூஸிலாந்தில் ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வருகிறது. இதுவரை அங்கு … Read more

’எங்களுடன் ஆலோசிக்கவில்லை’ – கூடங்குளம் அணுக்கழிவு மையம் அமைக்காதீர் – பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

சென்னை: கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணு எரிபொருள் கழிவுகளைச் சேகரிக்கும் மையத்தை அமைத்திடும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடித்தத்தில், “கூடங்குளம் அணுமின் நிலைய திட்டத்தின்கீழ், அணு உலைகளிலிருந்து வெளியேறும் பயன்பாடு முடிந்த அணு எரிபொருள் கழிவுகளை அகற்றுவது தொடர்பாக பொது மக்களிடையே உள்ள கவலையை இந்தியப் பிரதமரின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளோம். இந்தத் திட்டத்தில் 1000 மெகாவாட் … Read more

ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளுக்கு விஜயவாடா கல்லூரியில் அனுமதி மறுப்பு

விஜயவாடா: கர்நாடக மாநிலத்தை தொடர்ந்து தற்போது ஆந்திராவிலும் ‘ஹிஜாப்’ விவகாரம் துளிர் விடத் தொடங்கி உள்ளது. ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் உள்ள லயோலா கல்லூரியில் பட்டப்படிப்பு படிக்கும் 2 இஸ்லாமிய மாணவிகள் நேற்று ஹிஜாப், புர்கா அணிந்து வகுப்புக்கு வந்தனர். அப்போது கல்லூரி முதல்வர் கிஷோர், அந்த பெண்களை அழைத்து, ”ஏன் கல்லூரிக்கு ஹிஜாப் அணிந்து வந்தீர்கள்? வீட்டிற்கு சென்று, மாற்று உடை அணிந்து வாருங்கள்” என கூறினார். இதுகுறித்து அந்த 2 மாணவிகளும் தங்களது பெற்றோருக்கு … Read more

கரோனா பெருந்தொற்று முடிவைக் காணும் தருவாயில் ஐரோப்பா உள்ளது: உலக சுகாதார அமைப்பு நம்பிக்கை

கரோனா பெருந்தொற்று முடிவைக் காணும் தருவாயில் ஐரோப்பா உள்ளதாக, ஐரோப்பாவுக்கான உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஹான்ஸ் க்ளூக் தெரிவித்துள்ளார். ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டி: ஐரோப்பா கரோனா பெருந்தொற்று முடிவைக் காணும் தருவாயை நோக்கிச் செல்வது தற்போதைய நிலவரத்தால் புலப்படுகிறது. மார்ச் மாதத்திற்குள் ஐரோப்பாவின் 60% பேரை ஒமைக்ரான் தொற்றிவிடும். ஒமைக்ரான் அலை ஐரோப்பாவில் குறைந்தவுடன் உலகளவில் சில காலம் அமைதி நிலவும். அதற்குக் காரணம் தடுப்பூசி ஆற்றலாக இருக்கலாம் அல்லது மக்களுக்கு … Read more

பிப்ரவரி 18: தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (பிப்ரவரி 18) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,42,929 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ: எண். மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் … Read more

'இஸ்லாத்தில் ஹிஜாப் அணிவது அவசியமான ஒன்று இல்லை' – உயர் நீதிமன்றத்தில் கர்நாடக அரசு வாதம்

பெங்களூரு: “இஸ்லாத்தில் ஹிஜாப் அணிவது அவசியமான மத நடைமுறை ஒன்றும் அல்ல. எனவே ஹிஜாப் அணிய விதித்த தடை, அரசியல் சாசன சட்டம் 25-ஐ மீறுகிறது என்ற வாதத்தை ஏற்க முடியாது” என்று கர்நாடக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கர்நாடகாவில் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதற்கு விதித்த தடையை எதிர்த்து உடுப்பி முஸ்லிம் மாணவிகள், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இவ்வழக்கு 6-வது நாளாக இன்று தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஷ்தி, நீதிபதிகள் ஜே.எம்.காஷி, கிருஷ்ணா … Read more

ஊடுருவுகிறது ரஷ்யா; உக்ரைனிலிருந்து வெளியேறுங்கள்: தூதரக அதிகாரிகளுக்கு அமெரிக்கா உத்தரவு

வாஷிங்டன்: உக்ரைன் எல்லையில் ரஷ்யா தமது படைகளை நிறுத்தியுள்ளதால், அங்குள்ள தங்கள் நாட்டு தூதரக அதிகாரிகளை வெளியேறுமாறு அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது. இதுகுறித்து இன்று அமெரிக்க வெளியுறவுத் துறை வெளியிட்ட அறிக்கையில், “உக்ரைன் நாட்டின் எல்லையில் ரஷ்யா பல்லாயிரக்கணக்கான படைகளைக் குவித்து வருகிறது. எல்லையில் பீரங்கிகள், ஏவுகணைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. உக்ரைனில் ஊடுருவதற்கான முயற்சியில் ரஷ்யா உள்ளது. எனவே, உக்ரைனிலுள்ள அமெரிக்க பிரதிநிதிகள், தூதரக அதிகாரிகள், பொதுமக்கள் உக்ரைனிலிருந்து வெளியேறுமாறு கேட்டுக் கொள்கிறோம். இம்முடிவை தற்போதே பரிசீலியுங்கள்” என்று … Read more