பிரேசிலில் 1932-ம் ஆண்டுக்குப் பிறகு மிகக் கனமழை: வெள்ளப் பெருக்கு, நிலச்சரிவில் 94 பேர் உயிரிழப்பு

ரியோ டி ஜெனிரோ: தென் அமெரிக்க நாடான பிரேசிலில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி 94 பேர் உயிரிழந்தனர். மேலும் பலரை காணவில்லை. பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ மாநிலத்தில் பெட்ரோபோலிஸ் என்ற மலைப்பிரதேசம் உள்ளது. இங்கு கடந்த செவ்வாய்க்கிழமையன்று 3 மணி நேரத்தில்25.8 செ.மீ. அளவுக்கு கனமழைகொட்டித்தீர்த்தது. இது முந்தைய30 நாட்களில் அங்கு பெய்த மொத்த மழையின் அளவாகும். மேலும் 1932-ம் ஆண்டுக்குப் பிறகு மிக மோசமான மழை இதுவெனக் கூறப்படுகிறது. … Read more

ரவுடிகள், குண்டர்களுக்கு ஆதரவாக கோவை போலீஸ்: இபிஎஸ் குற்றச்சாட்டு

சேலம்: “குண்டர்களையும, ரவுடிகளையும் வெளியேற்றுவதற்கு பதிலாக, அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, அவர்களுக்கு ஆதரவாக கோவை மாநகர காவல்துறை ஈடுபட்டிருப்பது கண்டனத்துக்குரியது. கோவை மாநகராட்சியில் ஜனநாயக முறைப்படி மக்கள் வாக்களிக்க அனைத்து நடவடிக்கைகளையும் தேர்தல் ஆணையம் மேற்கொள்ள வேண்டும்“ என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சேலத்தில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசியது: “எஸ்.பி.வேலுமணி தலைமையில், சட்டமன்ற உறுப்பினர்கள், குண்டர்களை வெளியேற்ற வேண்டும் என்று நேரடியாக மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளிக்கப்பட்டது. … Read more

இரு தினங்களில் பஞ்சாப் தேர்தல்… அரசு இல்லத்தில் சீக்கிய மதத் தலைவர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு

புதுடெல்லி: பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் இரு தினங்களே நிலையில், தனது டெல்லி அரசு குடியிருப்பில் பிரதமர் நரேந்தர மோடி, சீக்கிய மதத் தலைவர்களுடன் சந்திப்பு நடத்தியுள்ளார். பிப்ரவரி 20-ல் ஒரே கட்டமாக பஞ்சாப்பின் 117 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் பஞ்சாப்பின் அரசியலில் அங்குள்ள சீக்கியர்கள் சமூகம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்நிலையில், பிரதமர் மோடி தனது அரசு இல்லத்தில் சீக்கியர்களுடன் இன்று காலை ஒரு முக்கியச் சந்திப்பு நடத்தினார். இதில், … Read more

ஈரான் தீவிரமாக இருந்தால் அணுசக்தி ஒப்பந்தம் சாத்தியம்: அமெரிக்கா

வாஷிங்டன்: அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் தீவிரமாக இருந்தால், சில நாட்களில் ஒப்பந்தம் சாத்தியமாகும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை, ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் நடந்து வருகிறது. இதில் பிரான்ஸ், பிரிட்டன், சீனா, ஜெர்மனி, ரஷ்யா ஆகிய நாடுகள் கலந்துகொண்டுள்ளன. அமெரிக்காவும் இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டுள்ளது. அமெரிக்கா விதிக்கும் கட்டுப்பாடுகளுக்கும் ஈரான் ஒப்புக்கொண்டால் அணு ஆயுத ஒப்பந்தத்தில் இணைவதில் அமெரிக்கா தயாராக இருப்பதாகவும், அந்நாட்டின் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகளை சிலவற்றை நீக்குவதாகவும் … Read more

ஓட்டுநர்கள் கண்ணயர்ந்தால் எச்சரிக்கும் கருவி: நாக்பூர் ஓட்டுநர் புதிய கண்டுபிடிப்பு

நாக்பூர்: வாகனங்களை இயக்கும்போது, ஓட்டுநர்கள் தங்களை மீறி கண்ணயர்ந்தால் அதனைத் தடுக்கும் அலாரத்தை நாக்பூர் ஓட்டுநர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார். சாலைகளில் ஏற்படும் விபத்துகளில் பலநேரங்களில் ஓட்டுநர்கள் தங்களைமீறி கண்ணயர்ந்துவிடுவதும் ஒரு காரணமாக இருக்கிறது. இதனை தடுக்கும் விதமாக நாக்பூரைச் சேர்ந்த கவுரவ் சவ்வாலாகே ஒரு புதிய கருவியைக் கண்டுபிடித்துள்ளார். வண்டிஓட்டும்போது ஓட்டுநர்களின் உறக்கத்தைத் தடுக்கும் அலாரமாக அது செயல்படுகிறது. நாக்பூரைச் சேர்ந்த கவுரவ் சவ்வாலாகே – படம் உதவி: ஏஎன்ஐ 3.6 வோல்ட் பேட்டரி போதுமானதாக உள்ள … Read more

கடலூர்: 2 குழந்தைகளைக் கொன்றுவிட்டு தற்கொலைக்கு முயன்ற தாய்க்கு இரட்டை ஆயுள் தண்டனை

விருத்தாசலம்: இரண்டு குழந்தைகளைக் கொன்றுவிட்டு தற்கொலைக்கு முயன்று உயிர் தப்பிய தாய்க்கு இரண்டை ஆயுள் தண்டனை விதித்து கடலூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடலூர் மாவட்டம் முட்டம் பெரிய காலனியைச் சேர்ந்தவர் வினோத் – சசிகலா தம்பதியினர் கடந்த 2013-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு வரோகா (4), விஜய ஸ்ரீ (3 மாதம்) ஆகிய குழந்தைகள் இருந்தனர். கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வந்த நிலையில், 2018-ம் ஆண்டு விஜய ஸ்ரீ பிறந்தது முதலே … Read more

”நான் ஓர் இனிமையான தீவிரவாதி” – காலிஸ்தானி விமர்சனத்துக்கு கேஜ்ரிவால் பதிலடி

புதுடெல்லி: “மக்களுக்காக பள்ளிக்கூடங்களையும், மருத்துவமனைகளையும் கட்டும் நான் ஓர் இனிமையான தீவிரவாதி” என்று ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அர்விந்த் கேஜ்ரிவால் கூறியுள்ளார். பஞ்சாப் மாநிலத்திலுள்ள 117 சட்டமன்றத் தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக வருகின்ற பிப்ரவரி 20-ம் தேதி நடைபெறவுள்ளது. அங்கு கடைசிக்கட்டப் பிரச்சாரங்கள் அனல் பறக்கின்றன. இந்நிலையில், “ஆம் ஆத்மியின் மிகப்பெரியத் தலைவரை தீவிரவாதிகளின் வீடுகளில் காணலாம்” என அரவிந்த் கேஜ்ரிவாலை மறைமுகமாகச் சாடியிருந்தார் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி. இதனைத் … Read more

துவாலு முதல் நவுரு வரை… கரோனாவே இல்லாத நாடுகளின் பட்டியல் – WHO வெளியீடு

ஜெனீவா: கரோனா தொற்று இல்லாத நாடுகள் எவை என்பது குறித்து உலக சுகாதார நிறுவனம் ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்தப் பட்டியலில் 10 நாடுகள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் பெரும்பாலான நாடுகள் பசிபிக் மற்றும் அட்லான்டிக் பெருங்கடலில் உள்ள தீவு தேசங்கள். துவாலு: பசிபிக் பெருங்கடலில் உள்ள இந்த நாட்டு காமன்வெல்த் கூட்டமைப்பில் ஓர் அங்கம் வகிக்கிறது. கரோனா பரவல் தொடங்கியவுடன் இந்த நாடு கட்டாய தனிமைக்குச் சென்று எல்லைகளை மூடியது. இப்போது அங்கு 50% மக்கள் முழுமையாக … Read more

மெரினா கடற்கரையில் 4 நாட்களுக்கு காட்சிப்படுத்தப்படும் குடியரசு தின அலங்கார ஊர்திகள்

சென்னை: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்றுவிட்டு இன்று சென்னை திரும்பும் தமிழக அரசின் குடியரசு தின அலங்கார ஊர்திகள் பிப்.20-ம் தேதி முதல் பிப்.23-ம் தேதி வரை பொதுமக்கள் பார்வைக்காக மெரினா கடற்கரையில் காட்சிப்படுத்தப்படும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் ஜெ. விஜயா ராணி கூறியுள்ளார். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: “சென்னையில் 26.01.2022 அன்று நடைபெற்ற குடியரசு தினவிழாவில், இந்திய விடுதலைப் போரில் ஆங்கிலேயர்களைத் தீரமுடன் எதிர்கொண்ட தமிழக சுதந்திரப் போராட்ட வீரர்களின் … Read more

சென்னை பக்தரின் உயில்படி நன்கொடையாக ஏழுமலையானுக்கு ரூ.9.2 கோடி: தேவஸ்தானத்திடம் உறவினர்கள் வழங்கினர்

திருப்பதி: திருப்பதி ஏழுமலையானுக்கு சென்னை பக்தர் ரூ.9.2 கோடி நன்கொடை வழங்கி உள்ளார். சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்தவர் டாக்டர் ஆர். பர்வதம் (76). திருப்பதி ஏழுமலையானின் தீவிர பக்தரான இவர், தனக்குச் சொந்தமான ரூ.6 கோடி மதிப்புள்ள 2 வீடுகள் மற்றும் வங்கியில் டெபாசிட் செய்திருந்த ரூ.3.2 கோடி பணத்தை ஏழுமலையானுக்கு சேர வேண்டுமென உயில் எழுதி வைத்திருந்தார். டாக்டர் பர்வதம் தற்போது பர்வதம் காலமானதையடுத்து, சென்னை காரப்பாக்கத்தில் வசித்து வரும் அவரது சகோதரி ரேவதி மற்றும் … Read more