மோசமான தோல்வி..!! 15 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளை இழந்த சிட்னி அணி..

இந்தியாவில் பிரபலமான ஐபிஎல் தொடர் போல் ஆஸ்திரேலியாவின் மிக பிரபலமான டி20 கிரிக்கெட் தொடர் பிக்பாஷ் லீக். இந்த ஆண்டுக்கான ஆண்கள் பிக்பாஷ் லீக் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் மெல்போர்ன் ரெனேகட்ஸ், மெல்போர்ன் ஸ்டார்ஸ் ,பிரிஸ்மென் ஹீட்,கோபர்ட் ஹூரிகேன்ஸ், பெர்த் ஸ்கார்சேர்ஸ் ,சிட்னி தண்டர்ஸ் , அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ், சிட்னி சிக்சர்ஸ் என மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ளன. இந்த தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் – சிட்னி தண்டர்ஸ் அணிகள் … Read more

நாடாளுமன்றத்தில் கீழே விழுந்த சசி தரூர்!…மருத்துவமனையில் தீவிர சிகிச்சை…

நாடாளுமன்றத்தில் வழுக்கி விழுந்த காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், கேரள மாநிலம், திருவனந்தபுரம் தொகுதி எம்.பி.யுமான சசி தரூர் நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்து கொள்ளச் சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக சசி தரூர் நாடாளுமன்றத்தில் வழுக்கி விழுந்தார். இதில் அவரது இடது காலில் சுளுக்கு ஏற்பட்டுள்ளது. தாங்க முடியாத வலி காரணமாக அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். இதனால் நேற்று அவர் நாடாளுமன்ற கூட்டத்தில் … Read more

5 ஆண்டுகளில் 177 வெளிநாட்டு செயற்கைக்கோள்களை ஏவிய இஸ்ரோ…

கடந்த 5 ஆண்டுகளில் 177 வெளிநாட்டு செயற்கைக்கோள்களை இஸ்ரோ விண்ணில் செலுத்தியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் பதிலளித்தார். அப்போது பேசிய அவர், கடந்த 5 ஆண்டுகளில் 177 வெளிநாட்டு செயற்கைக்கோள்களை இஸ்ரோ விண்ணில் செலுத்தியுள்ளது என்றார்.   இஸ்ரோவின் பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி-எம்கே3 ராக்கெட்டுகள் மூலம் கடந்த 2018 முதல் 2022 வரை 5 ஆண்டுகளில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட 19 நாடுகளின் 177 செயற்கைக்கோள்கள் … Read more

சீனா அத்துமீறலா?.. என்ன சொல்கிறார் ராணுவ தளபதி?

டோக்லாம் பகுதியில் சீனா புதிதாக எதையும் கட்டவில்லை என்று கிழக்கு பிராந்திய ராணுவ தளபதி தெரிவித்துள்ளார். கிழக்கு பிராந்திய ராணுவ தளபதி ஆர்.பி.கலிடா, நேற்று கொல்கத்தாவில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, சிக்கிம் மாநிலத்தை ஒட்டி அமைந்துள்ள டோக்லாம் பகுதியில் சீனா கட்டுமான பணிகளில் ஈடுபட்டு வருகிறதா? என்று கேட்கப்பட்டது. அதற்கு , கடந்த 2017-ம் ஆண்டு அப்பகுதியில் சீனா சாலை அமைத்ததால், பிரச்சினை ஏற்பட்டது என்றார். 73 நாட்களாக இருநாட்டு படைகளிடையே மோதல் நிலவியது. ஆனால் … Read more

இனி இங்கிலாந்து செல்ல 15 நாட்களுக்குள் விசா….!

இங்கிலாந்து செல்லும் இந்திய பயணிகளுக்கு 15 நாட்களுக்குள் விசா (விசிட் விசா) வழங்கப்படும் என இந்தியாவுக்கான அந்நாட்டு தூதர் அலெக்ஸ் எல்லிஸ் கூறியுள்ளார். சுற்றுலா, வர்த்தகம் உள்ளிட்ட குறுகிய கால நோக்கங்களுக்காக இங்கிலாந்து செல்லும் இந்திய பயணிகளுக்கு 15 நாட்களுக்குள் விசா (விசிட் விசா) வழங்கப்படும் என இந்தியாவுக்கான அந்த நாட்டு தூதர் அலெக்ஸ் எல்லிஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டர் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், ‘இந்த ஆண்டு இறுதிக்குள், இந்தியாவில் இருந்து … Read more

4 கால்களுடன் பிறந்த குழந்தை… எங்கு தெரியுமா ?

குவாலியரில் உள்ள சிகந்தர் கம்பூ என்ற பகுதியைச் சேர்ந்தவர் ஆர்த்தி குஷ்வாஹா. நிறைமாத கர்ப்பிணியான இவரை, இவரது குடும்பத்தினர் குவாலியரில் உள்ள கம்லா ராஜா மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு ஆர்த்திக்கு கடந்த புதன்கிழமை பெண் குழந்தை பிறந்தது. அப்போது, குழந்தை 4 கால்களுடன் இருந்ததால், உடனடியாக மருத்துவ நிபுணர்கள் இது குறித்து ஆலோசனை மேற்கொண்டனர். ஜெய் ஆரோக்கியா மருத்துவமனையின் தலைவரும் மருத்துவருமான ஆர்.கே.எஸ்.தாகட்-டும் இந்த ஆலோசனைக்காக அழைக்கப்பட்டிருந்தார். ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவர் தாகட், “குழந்தை … Read more

இந்த சிப்ஸ் பாக்கெட்க்கு திடீர் கிராக்கி… அதிஷ்டத்திற்காக அலைமோதும் மக்கள் கூட்டம்..!!

பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் பல விதமான சிப்ஸ் பாக்கெட்டுகள் தான் இந்த காலத்து குழந்தைகளுக்கு பிடித்த நொறுக்குத்தீனி. வீட்டின் பக்கத்தில் உள்ள பெட்டிக்கடையில் இருந்து, பள்ளிக்கு வெளியே சேர் போட்டு அமர்ந்திருக்கும் பாட்டி கடை வரை, சிறுவர்கள் கண்ணை கவரும் வகையில் சிப்ஸ் பாக்கெட்டுகள் தொங்கிக்கொண்டிருக்கும். 1 ரூபாயில் இருந்து 10 ரூபாய் வரை வகையாக வகையாக இருக்கும் நொறுக்குத் தீனி பாக்கெட்டுகளை வாங்கித்தரும்படி, குழந்தைகள் பெற்றோரை நச்சரிப்பார்கள். அவை உடல்நலத்திற்கு நல்லதல்ல என்பதால் பெற்றோர்கள் அதனை … Read more

இது ஓசி டிக்கெட்ன்னு பேருந்தில் போயிட்டு போயிட்டு வருவியா..?மூதாட்டியை திட்டிய நடத்துநர்..!

தனது தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டிருந்த அரசு பேருந்தில் மகளிருக்கு இலவசம் என்பதை உடனடியாக நிறைவேற்றியது திமுக அரசு.ஏற்கனவே, பள்ளி மாணவிகளுக்கு பஸ் பாஸ் வசதி இருக்கும் நிலையில், தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவிகளில் இருந்து, வேலைக்கு செல்லும் பெண்கள் வரை இத்திட்டம் பயனளித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும், பெண்கள் எளிதாக கட்டணமில்லா பேருந்துகளை அடையாளம் காண பேருந்துகளுக்கு பின்க் நிற பெயிண்டும் அடிக்கப்பட்டது. இந்நிலையில், தஞ்சாவூரில் இருந்து திருக்கருக்காவூர் வழித்தடத்தில் 34A என்ற அரசு பேருந்து இயங்கி … Read more

இருள் போல துன்பங்களை அனுபவிப்பவர்களுக்கு இன்பக்காலம் விடியும் மாதமே மார்கழி..!!

மாதங்களில் சிறந்த மாதம்… மார்கழி. கீதையில் மாதங்களில் நான் மார்கழி என்று மாதவனால் பெருமை பெற்று மனிதனை உயர்வழிக்கு அழைத்துச் செல்வதில் மார்கழி மாதம் முக்கியத் துவம் பெறுகிறது. ஆடியில் தெய்வ வழிபாடு… புரட்டாசியில் பெருமாள் வழிபாடு.. ஆனால் மார்கழி மாதம் அனைத்து தெய்வங்களையும் வழிபட உகந்த மாதம். வருடம் முழுவதும் கோயிலுக்கு போன பலனை இந்த மாதம் நமக்கு தருகிறது. நமக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள். இவர்களது பகல் பொழுது உத்தராயணம் … Read more

திருமண விழாவில் ஆடும் போதே உயிர் பிரிந்த சோகம்..!!

மத்திய பிரதேச மாநிலம் சியோனி மாவட்டத்தின் பந்தோல் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பக்காரி கிராமத்தில், ஒரு பெண் திருமண நிகழ்ச்சி ஒன்றில் மற்ற பெண்களுடன் நடனமாடும்போது திடீரென மேடையில் சரிந்து விழுந்தார். மேடையில் மயங்கி விழுந்த அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக அங்கு மருத்துவர்கள் தெரிவித்தனர். அந்த பெண் மேடையில் நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மத்திய பிரதேசத்தின் சியோனியில் உள்ள பக்காரி கிராமத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. … Read more