கள்ளக்குறிச்சி விஷ சாராய பலி சதி! கரெக்டா இந்த நேரத்துல எப்படி? சந்தேகம் கிளப்பும் பீட்டர் அல்போன்ஸ்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி விஷச் சாராய உயிரிழப்பு சம்பவம் சட்டசபை கூடும்போது ஏன் நடக்க வேண்டும்? நாடாளுமன்றத் தேர்தலில் 40க்கு 40 இடங்களை வென்ற திமுக கூட்டணிக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்ற திட்டமிடலோடு இந்த சம்பவம் உருவாக்கப்பட்டதோ என சந்தேகம் எழுப்பி உள்ளார் மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்திய Source Link

காலிஸ்தானி ஹர்தீப் சிங்கிற்கு கனடா நாடாளுமன்றத்தில் கவுரவம்! அடுத்து நடந்த பெரிய சம்பவம்.. பரபரப்பு

டொரண்டோ: கடந்தாண்டு கனடாவில் கொல்லப்பட்ட ஹர்தீப் சிங் நிஜ்ஜருக்கு கனடா நாடாளுமன்றத்தில் கவுரவிக்கப்படுகிறார். இது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹர்தீப் சிங் உயிருடன் இருந்த வரை கனடா அரசே அவர் மீது பல்வேறு நடவடிக்கைகளை எடுத்த நிலையில், அவர் உயிரிழந்த பிறகு மட்டும் திடீரென நிலைப்பாட்டை மொத்தமாக மாற்றியது ஏன் என்று செய்தியாளர்கள் சரமாரியாகக் கேள்வி எழுப்பினர். Source Link

கள்ளச்சாராயம் குடித்து இருவர் பலி! பிரேதங்களை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய ஆட்சியர் உத்தரவு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்ததாக கூறப்படும் இருவரின் உடல்களை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்த 150 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்களில் வயிற்றுப்போக்கு, கண் பார்வை குறைவு, காது கேளாமையால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். எனினும் கள்ளச்சாராயத்தின் வீரியம் அதிகரித்துள்ளதால் பலர் உயிரிழந்து வருகிறார்கள். Source Link

ஆவேசமான ஜெகன்.. புல்டோசர் கொண்டு இடித்து தரைமட்டமாக்கப்பட்ட ஒய்எஸ்ஆர் அலுவலகம்! அலறும் ஆந்திரா

அமராவதி: முன்னாள் முதல்வர் ஜெகன் மோகனின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் மத்திய அலுவலகம் அமராவதி அருகே அமைந்திருந்தது.. அந்த கட்டிடம் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ளதாகப் புகார் எழுந்ததால் அது இடிக்கப்பட்டது. இது ஆந்திராவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக ஜெகன் மோகன் ரெட்டி சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஆந்திராவில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் Source Link

நீட் வினாத்தாள் விற்பனை… ஜார்க்கண்ட்டில் 5 பேரை தூக்கிய பீகார் போலீஸ்- கைது 18 ஆக உயர்வு!

ராஞ்சி: இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு முறைகேடுகள் நாடு முழுவதும் ஒவ்வொரு நாளும் பேரதிர்வுகளை ஏற்படுத்தி வருகின்றன. நீட் நுழைவுத் தேர்வு வினாத்தாள் விற்பனை வழக்கில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் 5 பேரை பீகார் பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். நீட் நுழைவுத் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக பீகார் போலீசாரால் Source Link

யோனிதான் தெய்வம்.. அம்மனின் மாதவிடாய் காலமே திருவிழா.. அஸ்ஸாம் காமாக்யா கோவிலில் குவியும் பக்தர்கள்!

குவஹாத்தி: அஸ்ஸாம் உள்ளிட்ட கிழக்கு, வடக்கு மாநிலங்களின் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான அஸ்ஸாம் காமாக்யா கோவில் அம்புபாச்சி மேளாவை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தொடர்ந்து குவிந்து வருகின்றனர். அஸ்ஸாம் காமாக்யா கோவில் அம்புபாச்சி திருவிழாவை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை அம்மாநில அரசு மேற்கொண்டுள்ளது. அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் மட்டுமல்ல கிழக்கு மாநில மக்களுக்கும் குவஹாத்தி Source Link

மெத்தனாலா? எத்தனாலா? எது ஆபத்து அதிகம்? இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?

கள்ளக்குறிச்சி: கள்ளச்சாராயம் தயாரிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் வேதிப்பொருளான மெத்தனால் என்றால் என்ன? அதை ஏன் பயன்படுத்துகிறார்கள்?  அதை உட்கொள்வதால் ஏற்படும் பாதிப்புகள் என்ன? இது பற்றிய முழுத் தகவல்களை மருத்துவர் ஸ்பூர்த்தி பகிர்ந்து கொள்கிறார். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்தால் உடல்நிலை பாதிக்கப்பட்டு மொத்தம் 193 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டிருந்தனர். அதில் இதுவரை 55 பேர் உயிரிழந்துள்ளனர். மரணங்கள் Source Link

மளிகை + அத்தியாவசிய பொருள்.. கள்ளச்சாராய பாதிப்பு குடும்பத்துக்கு உதவி.. விஜய் கட்சி முக்கிய முடிவு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 55 பேர் பலியான நிலையில் 100க்கும் அதிகமானவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் தான் கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு விஜயின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஒரு மாதத்துக்கு தேவையான மளிகை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டது. மெத்தனால் கலந்த Source Link

நிற்காத மரணம்.. கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய பலி 55 ஆக உயர்வு.. 100 பேருக்கு தொடர் சிகிச்சை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று இரவு வரை 52 பேர் பலியான நிலையில் இன்று உயிரிழப்பு 55 ஆக அதிகரித்தது. மேலும் 100க்கும் அதிகமானவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வரும் நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டது. Source Link

திரும்பவும் வீட்டுல போய் மிச்சம் இருந்த விஷ சாராயத்தை குடிச்சிருக்காங்க.. மா.சுப்பிரமணியன் வேதனை!

கள்ளக்குறிச்சி: விஷச்சாராயம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர்கள் மீண்டும் வீட்டில் மீதம் இருந்த சாராயத்தை குடித்து மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேதனையுடன் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 51 பேர் உயிரிழந்த சூழலில், நூற்றுக்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. Source Link