சாராய சப்ளை சகுந்தலா.. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரத்தில் மேலும் ஒரு பெண் கைது!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரத்தில் மேலும் ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார். ரங்கநாதபுரம் பகுதியைச் சேர்ந்த சகுந்தலாவை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது. கள்ளச்சாராயம் குடித்து உடல்நிலை பாதிக்கப்பட்டதால் சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்பு Source Link

காசு கொடுத்து வாங்கிய சாப்பாட்டில் கரப்பான்பூச்சி! வந்தே பாரத் மூலம் வரும் வாந்தி பேதி!

போபால்: வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்த ஒருவருக்கு வழங்கப்பட்ட உணவு பொட்டலத்தில் செத்துப் போன கரப்பான் பூச்சி ஒன்று கிடந்ததாகப் புகார் எழுந்துள்ளது. கடந்த சில மாதங்களில் மட்டும் இதைப் போன்று பல குற்றச்சாட்டுகள் ரயிலே நிர்வாகத்திற்கு எதிராக வைக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் ஆட்சிக்கால சாதனைகளில் ஒன்றாக ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் ரயில் இதுவரை முன்வைக்கப்பட்டு Source Link

குடிப்பழக்கம் கிடையாது! 25 வருஷமாக கள்ளச்சாரயம் விற்பனையில் கல்லா கட்டிய கண்ணுக்குட்டி யார்? பின்னணி

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்ட கண்ணுகுட்டி, அவருடைய சகோதரர் தாமோதரன் மனைவி விஜயா மற்றும் 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 900 லிட்டர் கள்ளச்சாராயத்தையும் பறிமுதல் செய்துள்ளனர். கள்ளச்சாராய விற்பனையில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஈடுபட்டு வந்த கண்ணுக்குட்டி யார் என்பது பற்றி இங்கே பார்ப்போம். கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் Source Link

1 மாதம் பாமகவிடம் ஆட்சியை கொடுத்து பாருங்க.. போதைப்பொருளே எங்கும் இருக்காது! அடித்துச்சொன்ன அன்புமணி

கள்ளக்குறிச்சி: பாமகவிடம் 1 மாதம் ஆட்சியைக் கொடுத்தால் போதைப்பொருள் புழக்கத்தை ஒழித்து காட்டுவோம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 51 பேர் பலியான சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் ம்ருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர்களில் பலரின் Source Link

இவருக்கு இப்படி ஒரு வீக்னெஸ் இருக்காம்.. மாமா பவன் கல்யாண் பற்றி மருமகன் உடைத்த ரகசியம்!

அமராவதி: ஆந்திர மாநில துணை முதல்வராகப் பதவியேற்றுள்ள பவன் கல்யாணுக்குத் தெலுங்கு நடிகர் ஒருவர் வீடியோ கேம் விளையாட்டுப் பொருட்களை வாங்கி பரிசளித்துள்ளார். அவர் யார்? இந்த விளையாட்டுப் பொருட்களைப் பவனுக்குப் பரிசளிக்க என்ன காரணம் என்ற சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்துள்ளன. ஆந்திர மாநிலத்தின் துணை முதல்வராகக் கடந்த வாரம் பதவியேற்றார் பவன் கல்யாண். அன்று முதல் Source Link

‛‛விஜயின் அந்த ஒரு பார்வை’’.. மனசாட்சி இல்லையா தம்பி! கள்ளக்குறிச்சியில் இளைஞரை கண்டித்த நிர்வாகிகள்

கள்ளக்குறிச்சி: கள்ளச்சாராயம் குடித்து கள்ளக்குறிச்சியில் சிகிச்சை பெற்று வருவோரை நேற்று நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இந்த வேளையில் மனசாட்சி இன்றி செல்பி எடுத்த இளைஞரை விஜய் ஒரு பார்வை பார்த்ததும், அதன்பிறகு அவரது கட்சி நிர்வாகிகள் செய்த செயல் தொடர்பான வீடியோ இணையதளத்தில் வெளியாகி பரவி வருகிறது. Source Link

கள்ளச்சாராயம் குடித்து சிகிச்சை பெறுவோரின் நிலை என்ன? பலி அதிகரிக்கும் அபாயம்! ஆட்சியர் விளக்கம்

கள்ளக்குறிச்சி: விஷ சாராயம் குடித்ததில் உயிரிழப்பு 50 பேர் ஆக உயர்ந்துள்ள நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பவர்களில் எத்தனை பேரின் உடல் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது? எத்தனைப் பேர் மீண்டிருக்கிறார்கள் என்கிற விவரங்களை மாவட்ட ஆட்சியர் வழங்கியுள்ளார். பாக்கெட் சாராயம்: கள்ளக்குறிச்சி அடுத்த கோமுகி ஆற்றங்கரை நந்தவனம் பகுதியில் கள்ளச்சாராயம் தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வந்திருக்கிறது. Source Link

அம்மா காலில் விழு.. விஜய் வரும் போது.. கள்ளக்குறிச்சி பெண்ணை காலில் விழ சொன்னார்களா? ஷாக் வீடியோ!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் நடிகர் விஜய் மக்களை பார்க்க சென்ற போது அவரின் காலில் விழும்படி பெண் ஒருவரிடம் தவெக நிர்வாகி கூறியதாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் தமிழ்நாட்டையே உலுக்கி உள்ளது. இதில் பலியானோர் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்து உள்ளது. இதில் ஏற்கனவே சாராயம் காய்ச்சிய 3 பேர் கைது செய்யப்பட்டு Source Link

10-வது சர்வதேச யோகா தினம்- ஜம்மு காஷ்மீர் ஶ்ரீநகரில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பு!

ஶ்ரீநகர்: 10-வது சர்வதேச யோகா தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் தலைநகர் ஶ்ரீநகரில் நடைபெற்ற சர்வதேச யோகா தின நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்று யோகாசனங்களை மேற்கொண்டார். உலக அளவில் ஆண்டுதோறும் ஜூன் 21ம் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. திரு நரேந்திர மோடியின் தொலை Source Link

மனிதநேயம் இல்லா ஹவுஸ் ஓணர்.. ரோட்டில் மகனுக்கு இறுதி சடங்கு செய்த தாய்.. கள்ளக்குறிச்சி கண்ணீர் கதை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவரின் உடலை வீட்டில் வைத்து இறுதி சடங்கு செய்ய வாடகை வீட்டின் உரிமையாளர் அனுமதி மறுத்தார். இதனால் மகனை பறிகொடுத்த தாய் தனது உறவினர்களுடன் மகனுக்கு நடுரோட்டில் இறுதி சடங்கு செய்தது துயரத்திலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 42 பேர் பலியாகி உள்ளனர். Source Link