இமயமலையே சூடாகிடுச்சு.. சீன எச்சரிக்கையை மீறி தலாய் லாமாவை சந்தித்த அமெரிக்க பிரதிநிதிகள்

தரம்சாலா: சீனாவின் எதிர்ப்பை மீறி திபெத்திய புத்தமத தலைவர் தலாய் லாமாவை அமெரிக்காவின் நாடாளுமன்ற குழு உறுப்பினர்கள் சந்தித்திருக்கின்றனர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்கள், சீனா தலாய் லாமாவுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளனர். சமீப நாட்களாக சீனாவின் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்காவின் தலையீடுகள் அதிகரித்துள்ளன. ஏற்கனெவே பல நாடுகளில் இதுபோன்ற தலையீடுகளை மேற்கொண்டு Source Link

கள்ளச்சாராயம் குடித்த 18 பேர் பலி.. உயிரிழப்பு இன்னும் உயரும் என அச்சம்! கள்ளக்குறிச்சி அருகே ஷாக்!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்த 5 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் 3 பேர் பலியாகினர். தொடர்ந்து தற்போது பலி உயர்ந்து வரும் நிலையில் உயிரிழப்பு 18 ஆக அதிகரித்துள்ளது.  மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. கள்ளக்குறிச்சி நகர்ப்பகுதியைச் சேர்ந்த கருணாபுரம் பகுதியில் கண்ணுக்குட்டி என்ற பட்டப்பெயர் கொண்ட நபர் ஒருவர் Source Link

உயரும் கள்ளச்சாராய பலி.. கள்ளக்குறிச்சியில் என்ன நடந்தது? வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி அரசு விளக்கம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 10 பேர் வரை பலியாகி உள்ளனர். இன்னும் 50க்கும் அதிகமானவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் தான் கள்ளக்குறிச்சியில் என்ன நடந்தது? என்பது பற்றி அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதோடு வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம் செய்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாகுளம் அருகே கள்ளச்சாராயம் குடித்தவர்கள் Source Link

பிரதமர் மோடியின் கார் மீது செருப்பு வீச்சு.. வாரணாசி பேரணியில் பரபரப்பு.. பின்னணியில் யார்?

வாரணாசி: லோக்சபா தேர்தல் வெற்றிக்கு பிறகு முதல் முறையாக சொந்த தொகுதியான வாரணாசிக்கு பிரதமர் மோடி சென்ற நிலையில் அவரது கார் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நம் நாட்டில் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் என்பது நடந்து முடிந்தது. 543 தொகுதிகளில் பதிவான ஓட்டுகள் கடந்த 4ம் தேதி எண்ணப்பட்டு Source Link

கல்வியை மனித நலனுக்கான கருவியாகக் கருதுவதே இந்திய பாரம்பரியம்.. பீகார் நாளந்தா பல்கலை.யில் மோடி!

ராஜ்கிரி: பீகார் மாநிலத்தில் ராஜ்கிரில் நாளந்தா பல்கலைக் கழகத்தின் புதிய வளாகத்தைப் பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். முன்னதாக நாளந்தா பல்கலைக் கழகத்தின் பழங்கால இடிபாடுகளை பிரதமர் மோடி பார்வையிட்டார். பீகார் மாநிலம் நாளந்தா பல்கலைக்கழகத்தின் வரலாற்று எச்சங்களாக திகழும் பண்டைக்கால இடிபாடுகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று பார்வையிட்டார். அசல் நாளந்தா பல்கலைக்கழகம் உலகின் Source Link

கள்ளச்சாராயம் குடித்ததால் மரணம் என்பது உண்மை அல்ல.. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் மறுப்பு!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 5 பேர் பலியானதாக தகவல் வெளியான நிலையில், கள்ளச்சாராயத்தால் அவர்கள் இறந்ததாக இன்னும் உறுதிப்படுத்தவில்லை என மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் மறுப்பு தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்த 5 பேர் உயிரிழந்ததாகவும், மேலும், கள்ளச்சாராயம் குடித்ததால் உடல் நலம் பாதிக்கப்பட்ட 10க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் Source Link

5,000 போலி சான்றிதழ்கள்! 'டுபாக்கூர் சர்ட்டிபிகேட் நிறுவன' சிதம்பரம் தீட்சிதர் உட்பட 2 பேர் கைது!

சிதம்பரம்: பிரபல பல்கலைக் கழகங்களின் பெயரில் போலி சான்றிதழ்களை தயாரித்து கொடுத்ததாக சிதம்பரம் தீட்சிதர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிதம்பரத்தில் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 100-க்கும் மேற்பட்ட பல்கலைக் கழகங்களின் பெயரிலான போலி சான்றிதழ்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போலி சான்றிதழ்களை கன கச்சிதமாக தயாரிப்பதையே ஒரு நிறுவனம் போல இருவரும் நடத்தியதாகவும் அதிர்ச்சி தகவல்கள் Source Link

இனிமேல் நிம்மதி! 3000 கி.மீ தூரத்துக்கு ரெடியாகும் \"கவாச்\"! ஆமா, ஏன் லேட்டாகுது? மத்திய அரசு அறிக்கை

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் நடந்த ரயில் விபத்தையடுத்து, மத்திய ரயில்வே அமைச்சகம் முக்கிய அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருக்கிறது. இந்தியாவில் கடந்த சில வருடங்களாகவே மோசமான ரயில் விபத்துகள் அதிகரித்து வருகின்றன.. இப்படித்தான் கடந்த வருடம் ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தில் கிட்டத்தட்ட 280 பேர் உயிரிழந்தனர். நேற்றுமுன்தினம்கூட, மேற்கு வங்க மாநிலத்தில் ரயில் விபத்து Source Link

ரூ 500 கோடியில் ஜெகன் மோகன் கட்டிய ரகசிய மாளிகை! அரண்மனை கெட்டுச்சு! பரபரப்பு புகார்

அமராவதி: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியால் கட்டப்பட்ட ரகசிய மாளிகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக புதிதாக பதவியேற்ற தெலுங்கு தேசம் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. ஆந்திராவின் தலைநகராக விசாகப்பட்டினத்தை அறிவித்த ஜெகன் மோகன் ரெட்டி, அங்கு ருஷிகொண்டா ஹில்ஸில் ஒரு சொகுசு மாளிகையை கட்டியுள்ளார் என தெலுங்கு தேசம் கட்சி பரபரப்பு குற்றச்சாட்டை அளித்துள்ளது. இதுகுறித்து Source Link

நீட் வினாத்தாள் கசிவு.. ஒரு மாணவருக்கு ரூ.30 லட்சம்.. பீகாரில் கைமாறிய லஞ்சம்? வெளியான திடுக் தகவல்

பாட்னா: பீகாரில் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததாகவும், ஒரு மாணவருக்கு ரூ.30 லட்சம் வரை பெறப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. மேலும் இது தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டும் வருகின்றனர். மருத்துவ படிப்புகளில் சேர நீட் எனும் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. Source Link