நடிகை அம்பிகா-வுக்கு இண்டிகோ விமானத்தில் ஏற்பட்ட விபரீத அனுபவம்

கொச்சியில் இருந்து சென்னைக்கு இண்டிகோ விமானம் மூலம் பயணம் செய்த நடிகை அம்பிகா-வுக்கு விமானத்தில் விபரீத அனுபவம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “அவசர வழி-க்கு அருகில் இருந்த சீட்டு எனக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. அதில் அமர்ந்த போது அதில் இருந்த சீட் பெல்ட் பாதி மட்டுமே இருந்ததை கவனித்தேன். இது தொடர்பாக விமானப் பணியாளரிடம் தெரிவித்ததற்கு அவர் அதை பெரிதாக பொருப்படுத்தாமல் “நாங்கள் இருக்கிறோம் கவலைப்படாதீர்கள்” என்று தெரிவித்தார். விமானம் திடீரென அவசரமாக … Read more

குஜராத்தில் வாக்குசேகரிக்க வந்த பாஜக எம்.எல்.ஏ. மீது தாக்குதல்… நாளுக்கு நாள் அதிகரிக்கும் ராஜ்புத் சமூகத்தினரின் எதிர்ப்பு…

குஜராத்தில் பாஜக-வுக்கு எதிராக வாக்களிப்பது என்று ராஜ்புத் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் ‘உப்பு ஜாடி’ மீது சத்தியம் செய்துள்ளனர். ராஜ்புத் சமூகத்தினரின் எதிர்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பிரச்சாரத்திற்கு வந்த பாஜக எம்.எல்.ஏ.-வை அவர்கள் முற்றுகையிட்டனர். சபர்கந்தா பகுதியில் பிரச்சாரத்திற்கு வந்த பா.ஜ.க எம்.எல்.ஏ ரமண்லால் ஓரா-வை ராஜ்புத் சமூகத்தினர் முற்றுகையிட்ட விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. பாஜக ஆட்சியில் ராஜ்புத் சமூகத்தினர் புறக்கணிக்கப்படுவதாகவும் அவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் முக்கியத்துவம் வழங்கப்படுவதில்லை என்றும் … Read more

மோடி அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்தச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டங்கள் ரத்து செய்யப்படும் : ப. சிதம்பரம்

மோடி அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்தச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டங்கள் ரத்து செய்யப்படும் என்று முன்னாள் நிதி அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறினார். இதுகுறித்து அவர் கூறியதாவது : “மோடி அரசு கொண்டு வந்த பல்வேறு சட்டங்கள் ரத்து செய்யப்படும் அதில் முதன்மையானது சிஏஏ சட்டம். #WATCH | Thiruvananthapuram, Kerala: Congress leader P … Read more

கோடை விடுமுறை: தமிழகத்தில் 19 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு…

சென்னை: கோடை விடுமுறையொட்டி, தமிழ்நாட்டில்  19 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாகவும், இதன்மூலம்  239 முறை ரயில் சேவைகள் நடைபெறும் என தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. விடுமுறை மற்றும் விஷேச நாட்களில் தமிழ்நாடு அரசு சிறப்பு பேருந்துகளை இயக்குவதுபோல, ரயில்வேயும் சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. அதன்படி, தற்போதைய கோட்டை விடுமுறையையொட்டி, சொந்த ஊர்கள் மற்றும் சுற்றுலா இடங்களுக்கு பொதுமக்கள் செல்லும் வகையில் தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்து உள்ளது. அதன்படி,  கோடை விடுமுறையையொட்டி, 19 … Read more

தமிழகத்தில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு 72.09% இல்லை; 69.46%தான் ! மக்களை குழப்பிய தேர்தல் ஆணையம்…

சென்னை: தமிழகத்தில்  மக்களவை தேர்தல்  வாக்குப்பதிவு 72.09% இல்லை;  69.46% என தமிழ்நாடு தேர்தல் ஆணையம் இறுதியாக தெரிவித்து உள்ளது. இது மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.   முதல்கட்ட தேர்தலில் 64%  வாக்குகள் பதிவாகி இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. நேற்று இரவு 9மணி அளவில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் சத்தியபிரதா சாகு,  தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு  72.09 சதவீதம்  பதிவானதாக  தெரிவித்திருந்தார். இந்த நிலையில், தற்போது, தமிழகத்தில் 69% வாக்குகள் பதிவாகியுள்ளன என அறிவிக்கப்பட்டு … Read more

சென்னை உள்பட தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு குறைவு ஏன்? மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன்

சென்னை: நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில்,  பல கிராம மக்கள், மாநிலஅரசின் நடவடிக்கைக்கு எதிராக தேர்தலை புறக்கணித்துள்ள நிலையில், படித்தவர்கள் அதிகம் பேர் வசிக்கும்   சென்னையில் மாநிலத்திலேயே குறைந்த அளவிலான வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் நேற்று (ஏப்ரல் 19) நடைபெற்ற வாக்குப்பதிவில் 60 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இது கடந்த தேர்தல்களை விட குறைவு. குறிப்பாக சென்னையில் வாக்குப்பதிவு இதுவரை இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. … Read more

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடிக்க ஆடி அசைந்தாடி வருகிறது தஞ்சை பெரிய கோவில் தேர்…

தஞ்சாவூர்: தஞ்சை பெரிய கோவில் சித்திரை திருவிழாவையொட்டி, இன்று  பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடிக்க தேரோட்டம் நடைபெற்று வருகிறது. தேர் ஆடி அசைந்தாடி வருகிறது. தேர் செல்லும் பாதையில் முறையான பராமரிப்பு செய்யாதால், தேரின் அலங்காரப் பந்தல்  பல இங்களில் மின்கம்பம் உள்பட பல பகுதிகளில் சிக்கிசேதமடைந்தது. இது பக்தர்களியே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை பெருவிழா 18 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி நடபபாண்டு,  சித்திரை … Read more

போதை பொருத்தல் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக் விவகாரம்: ஞானேஷ்வர் சிங் மீதான புகார் மீது நடவடிக்கை…

சென்னை:  தமிழ்நாட்டைச்சேர்ந்த முன்னாள் திமுக நிர்வாகி, ஜாபர் சாதிக் தொடர்புடைய போதைப்பொருள் கடத்தல் வழக்கை விசாரணை நடத்தி வந்த,  என்.சி.பி. துணை தலைமை இயக்குனர் ஞானேஷ்வர் சிங்கிற்கு எதிராக திமுக உள்பட பல பகுதிகளில் இருந்தும் புகார்கள் சென்றன. இதையடுத்து இந்த  புகார்களை விசாரிக்க மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு உத்தரவிட்டு உள்ளது.  கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி டெல்லியில் போதைப்பொருள் தயாரிக்கப் பயன்படும் 50 கிலோ ரசாயன பொருட்களை மத்திய தடுப்பு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் … Read more

போதை பொருள் கடத்தல் ஜாபர்சாதிக்குக்கு ஹவாலா கும்பலுடன் தொடர்பு? விசாரணைகளை தீவிரப்படுத்துகிறது என்சிபி…

சென்னை: போதை பொருள் கடத்தல் மன்னன் ஜாபர்சாதிக்குக்கு ஹவாலா கும்பலுடன் தொடர்பு உள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் அவர் சட்டவிரோத சம்பாதித்த பணம் தொடர்பாக, அவரிடம் தொடர்புகொண்டவர்களிடமும் விசாரணை நடத்த தேசிய போதை பொருள் தடுப்புத்துறை தீவிரமாக செயலாற்றி வருகிறது. டெல்லியில் இருந்து ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு சூடோ பெட்ரின் என்கிற போதைப் பொருட்களை கடத்தி விற்பனை செய்த தி.மு.க. அயலக அணி முன்னாள் நிர்வாகியான ஜாபர்சாதிக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருடன் … Read more

ஏசி பெட்டியில் குவியும் பயணிகள் – இது ஒரு உணர்வற்ற அரசாங்கம் என மோடி அரசை விமர்சனம் செய்யும் பொதுமக்கள்! செயலற்ற ரயில்வே துறை…

சென்னை: மோடி அரசு, உணர்வற்ற அரசு,  சாமானிய மக்களின் நலனின் அக்கறை கொள்ளவில்லை என்றும், ரயில்வே துறை செயலற்று உள்ளது என்றும், குஜராத்தைச் சேர்ந்த  தனது நண்பர்களுக்கு ரயில்வே துறையை  பரிசளிக்க விரும்புவதால், இந்த சீரழிவு வேண்டுமென்றே செய்யப்பட்டதாகத் தெரிகிறது? என  பொதுமக்களும் ரயில் பயணிகளும்  விமர்சித்து வருகின்றனர். வசதியானர்களுக்கு ஆதரவாகவே செயல்படும் மோடி அரசு, செல்வந்தர்கள் செல்லும் வந்தேபாரத் போன்ற கட்டணம் அதிகம் உள்ள ரயில்களில் மட்டும் வசதிகளை செய்துகொடுக்கிறது. ஆனால், சாமானிய மக்கள் பயணம் … Read more