இந்திய ராணுவத்தால் நிராகரிக்கப்பட்டதால், உக்ரைன் ராணுவத்தில் இணைந்த கோவை இளைஞர்

உக்ரைன்: உயரம் குறைவாக இருந்த காரணத்தால் இந்திய ராணுவத்தால் நிராகரிக்கப்பட்ட கோவையைச் சேர்ந்த மாணவர் சாய் நிகேஷ் உக்ரைன் ராணுவத்தில் சேர்ந்துள்ளார். ரஷ்யா – உக்ரைன் நாடுகளுக்கு இடையே கடந்த மாதம் 24 ஆம் தேதி முதல் போர் நடந்துக்கொண்டு இருக்கிறது. அதன் படி, இன்றுடன் கிட்டதட்ட 13 வது நாளாக இந்த போர் நீடித்து வருகிறது. உக்ரைனில் நடக்கும் இந்த போரைத் தொடர்ந்து, அந்நாட்டு மக்கள் கிட்டதட்ட 17 லட்சம் பேர் அருகில் உள்ள அண்டை … Read more

போர்ட் பிளேயர் முனிசிபல் கவுன்சில் தேர்தலில் காங்கிரஸ், திமுக, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகளின் கூட்டணி முன்னிலை

அந்தமான்-நிக்கோபார்: போர்ட் பிளேயர் முனிசிபல் கவுன்சில் தேர்தலில் காங்கிரஸ், திமுக, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகளின் கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது. அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளின் பஞ்சாயத்து மற்றும் முனிசிபல் தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது, இதில் காங்கிரஸ் மற்றும் பாஜக தலா 10 இடங்களைக் கைப்பற்றின. பஞ்சாயத்து தேர்தல் முடிவுகள் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், அனைத்து மாநகராட்சி தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன, இதில் காங்கிரஸ் மற்றும் பாஜக தலா 10 இடங்களையும், தெலுங்கு … Read more

மேகதாது – ஒரு செங்கல் கூட வைக்க தமிழக மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் – அமைச்சர் துரை முருகன்

சென்னை: மேகதாது – ஒரு செங்கல் கூட வைக்க தமிழக மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்று அமைச்சர் துரை முருகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உச்சநீதிமன்றம் 18.5.2018 அன்று அளித்த ஆணையின்படியும், மத்திய அரசு 1.6.2018 அன்று வெளியிட்டதன் அரசிதழிலும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் என்பது உச்சநீதிமன்றத்தின் ஆணையை செயல்படுத்தத்தான் எனக் கூறியுள்ளது. ஆகையால், அதற்கு இடையூறு விளைவிக்கும் விதம் எந்தப் பணியையும் மேலாண்மை ஆணையம் மேற்கொள்ளக்கூடாது. இந்த கருத்தை ஏற்கனவே … Read more

உக்ரைன் : சுமி நகரில் வசித்த 694 இந்திய மாணவர்களும் போல்டவா வந்தனர்

டில்லி உக்ரைன் நாட்டில் உள்ள சுமி நகரில் வசித்த 694 இந்திய மாணவர்களும் இன்று போல்டவாவுக்கு வந்துள்ளனர். இன்றுடன் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் தொடர்ந்து 13வது நாளாக நீடித்து வருகிறது. இரு நாடுகளைச் சேர்ந்த பொதுமக்கள், வீரர்கள் என பலர் உயிரிழந்து உள்ளனர்.  பல்வேறு நாடுகளைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர் உக்ரைனில் இருந்து வெளியேறி வருகின்றனர்.  இவர்களை மீட்கும் பணியில் பல்வேறு நாடுகளும் சிறப்பு விமானங்களை இயக்கி வருகின்றன. இந்தியர்கள் ஆபரேசன் கங்கா திட்டத்தின் கீழ், கடந்த பிப்ரவரி … Read more

தேர்தலுக்காக பெட்ரோல் விலை உயர்த்தப்படவில்லையா : மத்திய அமைச்சர் பதில்

டில்லி நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்களுக்காக பெட்ரோல் விலை உயர்த்தப்படவில்லையா என்பதற்கு மத்திய அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன.  சமீபத்தில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது.  அதே வேளையில் இந்திய ரூபாய் மதிப்பு குறைந்துள்ளது. ஆனால் சுமார் 110 நாட்களுக்கும் மேலாக … Read more

கோவில்களுக்குச் சொந்தமான 31 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்யும் பணிகள் தொடக்கம்! அமைச்சர் சேகர்பாபு

சென்னை: இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களுக்குச் சொந்தமான 31 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்யும் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வழிகாட்டுதலின்படி பல்வேறு திருக்கோயில்களில் ஆய்வு மேற்கொண்டு திருக்கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்த நிலையில், கோவில்களுக்குச் சொந்தமான 31 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்யும் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து … Read more

கோகுல்ராஜ் ஆணவக்கொலை: தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை தலைவர் யுவராஜூக்கு 3 ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு…

சேலம்: கோகுல்ராஜ் ஆணவப்படுகொலை  செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு என்ன தண்டனை என்பது குறித்து நீதிபதி இன்று அறிவித்துஉள்ளார். கோகுல்ராஜ் கொலை வழக்கில் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை தலைவர் யுவராஜூக்கு 3 ஆயுள் தண்டனை விதிப்பு மதுரை மாவட்ட வன்கொடுமை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட யுவராஜ் உள்ளிட்ட அவரது கூட்டாளிகள் 10 பேர் குற்றவாளிகள் என்று நீதிபதி கடந்த 5ந்தேதி பரபரப்பு தீர்ப்பு … Read more

ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேரை விடுதலை செய்ய இலங்கை நீதிமன்றம் உத்தரவு

கொழும்பு: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரத்தை சேர்ந்த 11 மீனவர்களை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிறப்பித்துள்ளது. எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, கடந்த மாதம் (பிப்ரவரி)  11ந்தேதி  ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து அவர்கள்,  இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும்,  அவர்கள் விசைப்படகுகளை விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி … Read more

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: சிவசங்கர் பாபாவுக்கு ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றமும் மறுப்பு…

சென்னை: தனது பள்ளியில் படித்து வந்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பான வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டுள்ள சில்மிஷ டான்ஸ் சாமியார் சிவசங்கர் பாபாவுக்கு ஜாமின் வழங்க உச்சநீதி மன்றமும் மறுத்து விட்டது. செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அடுத்த புதுப்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா. இவர் பள்ளி மாணவி களிடம் பாலியல் சில்மிஷம் செய்தாக கொடுத்த புகாரின் போரில்  போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இவர் … Read more

உக்ரைன் மாணவர்கள் கல்வியைத் தொடர விரைவில் நல்ல முடிவு : முதல்வர் உறுதி

திருநெல்வேலி கல்வியை பாதியில் நிறுத்தி விட்டு வந்துள்ள உக்ரைன் மாணவர்கள் கலவியைத் தொடர விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளதால் உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்கள் தங்கள் கல்வியைப் பாதியில் நிறுத்தி விட்டு இந்தியாவுக்குத் திரும்புகின்றனர்.  இவர்களில் பெரும்பாலோனோர் மருத்துவ கல்வி மாணவர்கள் ஆவார்கள்.  இவர்களை அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்ப மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை  எடுத்து வருகின்றன. தற்போது தமிழகத்தின் தென்பகுதியில் சுற்றுப்பயணம் … Read more