கோவில்களுக்குச் சொந்தமான 31 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்யும் பணிகள் தொடக்கம்! அமைச்சர் சேகர்பாபு

சென்னை: இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களுக்குச் சொந்தமான 31 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்யும் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளது.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வழிகாட்டுதலின்படி பல்வேறு திருக்கோயில்களில் ஆய்வு மேற்கொண்டு திருக்கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்த நிலையில், கோவில்களுக்குச் சொந்தமான 31 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்யும் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்து சமய அறநிலையித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  தமிழ்நாடு முழுவதும் உள்ள இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில் நிலங்கள் நவீன ரோவர் உபகரணங்களை பயன்படுத்தி அளவீடு செய்யும் பணிகள் மண்டல வாரியாக  தொடங்கப்பட்டு உள்ளது.

அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் 3660.54 ஏக்கரும், திருச்சி மாவட்டத்தில் 3151.14 ஏக்கரும், திருப்பூர் மாவட்டத்தில் 3043.77 ஏக்கரும், திருநெல்வேலி மாவட்டத்தில் 2705.79 ஏக்கரும், சிவகங்கை மாவட்டத்தில் 1897.51 ஏக்கரும் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இதுவரை 31670.64 ஏக்கர் நிலங்கள் அளக்கப்பட்டுள்ளது. அ

ளவீடு செய்யப்பட்ட நிலங்களில் விழுப்புரம் மாவட்டத்தில் 106 கற்களும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 167 கற்களும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 98 கற்களும், கோயம்புத்தூர் மாவட்டத்தில் 400 கற்களும் உட்பட பல்வேறு மாவட்டத்தில் HRCE என்ற பெயர் பொறிக்கப்பட்ட எல்லைக்கல் ஊண்டி கம்பிவேலி அமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மேலும், மீதமுள்ள நிலங்களை 150 நில அளவையர்கள் மூலம் 56 ரோவர் கருவிகளைக் கொண்டு அளவீடு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை விரைந்து முடிக்க வட்டாட்சியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் திருக்கோயில் நிலங்களை கண்டறிவதுடன் ஆக்கிரமிப்புதாரர்களிடமிருந்து நிலங்களை பாதுக்காத்து திருக்கோயிலுக்கு வருவாய் ஈட்ட ஏதுவாக இருக்கும் என்று செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.