தமிழர்களுக்காக பேசிய ஒரே நாடு இந்தியா!

இலங்கை சிறுபான்மை தமிழ் மக்கள் தொடர்பாக ஜெனிவாவில் முதன் முதலாக 13 ஆவது திருத்தச்சட்ட தீர்வு திட்டத்தை முன்வைத்த நாடு இந்தியா எனவே இதனை அனைத்து தமிழ் தலைமைகளும் ஏற்றுக்கொண்டு செயற்படுமாறு கிழக்கு மாகாண முன்னாள் உறுப்பினர் இரா.துரைரெட்ணம் அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.   மட்டக்களப்பு வாவிக்கரையில் அமைந்துள்ள ஈ.பி.ஆர்.எல்.எப்.பத்மநாபா மன்ற காரியாலயத்தில் நேற்று (18) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 13 ஆவது திருத்தச்சட்டம் அவர் மேலும் கூறுகையில், இலங்கை சிறுபான்மை … Read more

ரஷ்ய படைகளிடமிருந்து மீட்கப்பட்ட 7 இலங்கையர்கள் தொடர்பில் வெளிவரும் தகவல்

உக்ரேனின் கார்கிவ் நகரில் ரஷ்யப் படைகளிடம் இருந்து மீட்கப்பட்ட 7 இலங்கை மாணவர்கள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்துள்ளார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை சேர்ந்த குறித்த மாணவர்கள், கடந்த ஜனவரி மாதம் உக்ரைனுக்கு குடிபெயர்ந்துள்ளனர். ரஷ்யாவிடம் சிக்கிய இலங்கையர்கள் கடந்த மார்ச் மாதம் முதல் ரஷ்யப் படைகளின் பிடியில் சிக்கியுள்ள இந்த மாணவர்கள் தொடர்பில் இதுவரை எவரும் முறைப்பாடு செய்யவில்லை என ராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். ரஷ்ய படைகளால் … Read more

ஜனாதிபதி அலுவலகத்தினால் அரச நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்ட விசேட சுற்றறிக்கை

எந்தவொரு குடிமக்களும் உணவுப் பற்றாக்குறையால் பட்டினியாக இருக்கக்கூடாது என்றும், குழந்தைகள் ஊட்டச் சத்து குறைபாட்டால் பாதிக்கப்படக்கூடாது என்றும் ஜனாதிபதி அலுவலகம் அரச நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. சுற்றறிக்கை உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், ஊட்டச் சத்து குறைபாட்டிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதற்கும் தொடர்ச்சியான செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கும், அமைச்சுகள், மாகாண சபை பிரதம செயலாளர்கள், மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு சுற்றறிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளன. இலங்கையில் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மை வியத்தகு அளவில் அதிகரித்துள்ளதாகவும், 66,000 பேர் கடுமையான உணவுப் பாதுகாப்பற்ற நிலையில் … Read more

மகாராணியின் இறுதிச் சடங்கு – வரலாற்றில் இடம்பிடிக்கும் ஜனாதிபதி ரணில்

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ளும் அரச தலைவர்கள் மத்தியில் பிரித்தானிய வரலாற்றுப் புத்தகத்தில் இணைவதற்கான அரிய வாய்ப்பு இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்குக் கிடைக்கவுள்ளது. எலிசபெத் மகாராணியின் முடிசூட்டு விழாவில் கலந்துகொண்ட தம்பதிகளின் மகனான ரணில் விக்ரமசிங்க, எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக பிரித்தானிய வரலாற்றுப் புத்தகத்தில் இணையவுள்ளார். நெதர்லாந்தின் முன்னாள் ராணி இளவரசி பீட்ரிக்ஸ், இதேபோன்ற வரலாற்றைக் கொண்ட அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பெற்றோர்களான … Read more

பசியோடு இருக்கும் திலீபம்…!

Courtesy: ஜெரா ஈழத்தமிழர் அரசியல் வரலாற்றில் இன்று மிக முக்கிய நாள். திலீபன் எனும் நான்கெழுத்துத் தமிழ் பெயர் அகிம்சையின் அடையாளமாகிய எழுச்சி நாள். 1987 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 15 ஆம் திகதி காலை 10.38 மணிக்கு இராசையா பார்த்தீபன் என்கிற இயற்பெயரும், திலீபன் என்கிற ‘இயக்கப்’ பெயருமுடைய தியாகத்தின் திருமேனி நல்லூர் வீதியில் இன விடுதலைக்கான விரதத்தில் அமர்ந்த நாள். திலீபனின் கொள்கை “கோரிக்கை நிறைவேறும் வரை உண்ணாவிரதம் இருப்பேன். ஒரு சொட்டு … Read more

இலங்கை என்ற நாட்டை நாங்கள் இழந்து விடுவோம்! பகிரங்க எச்சரிக்கை

மக்கள் போராட்டம் தோல்வியடையவும் இல்லை. முடிவடையவும் இல்லை என முறைமைகள் மாற்றத்திற்கான சட்டத்தரணிகள் அமைப்பின் அழைப்பாளர் சட்டத்தரணி இந்திக தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். போராட்டத்தின் எதிர்பார்ப்புகள் நிறைவேறவில்லை மேலும், “எல்லா துறைகளிலும் எமது நாடு தோல்வியடைந்துள்ளது. போராட்டங்களினால் எதிர்பார்க்கப்பட்டதற்கு அமைவாக பொருளாதார குற்றவாளிகள் மற்றும் மோசடி செய்தவர்களுக்கு தண்டனை வழங்கப்படவில்லை. மேலும் நாட்டு மக்களிடம் இருந்து கொள்ளையடித்த நிதியை மீண்டும் பெற்றுக்கொள்வதற்கு எதிர்பார்த்தோம். ஆனால் அதுவும் நடக்கவில்லை. தொடர்ச்சியாக … Read more

மகிந்தவை கொலை செய்ய முயற்சி: முன்னாள் பொலிஸ் அதிகாரி உட்பட நால்வருக்கு எதிராக குற்றப்பத்திரிகை!

2009 ஆம் ஆண்டு குருநாகலில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை குண்டு தாக்குதல் நடத்தி கொலைசெய்ய முயற்சித்த குற்றச்சாட்டில், முன்னாள் பொலிஸ் அத்தியட்சகர் லக்ஷ்மன் குரே உள்ளிட்ட 4 பேருக்கு எதிராக கொழும்பு மேல்நீதிமன்றில் குற்றப்பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டமா அதிபரால் மேல்நீதிமன்ற நீதிபதி மஹேன் வீரமனிடம் இந்த குற்றப்பத்திரங்கள் கையளிக்கப்பட்டுள்ளன. கைவிரல் அடையாளங்கள் இதன்போது, குற்றபத்திரங்களை ஆராய்ந்த நீதிபதி, பிரதிவாதிகளின் கைவிரல் அடையாளங்கள் அடங்கிய அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளார். … Read more

மின்சார வாகன இறக்குமதி! அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்கள்

இலங்கையின் புலம்பெயர் பணியாளர்கள், மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பான தகவல்களை பெற்றுக் கொள்வதற்காக மூன்று தொலைபேசி இலக்கங்களை தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, 0773 039 034 அல்லது 0112 368 175 அல்லது 0112 582 447 ஆகிய இலக்கங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. மின்சார வாகனத்தை இறக்குமதி செய்ய அனுமதி புலம்பெயர் தொழிலாளர்கள் உத்தியோகபூர்வ வழிகளில் நாட்டிற்கு அனுப்பும் பணத் தொகையின் அடிப்படையில் மின்சார வாகனத்தை இறக்குமதி செய்வதற்கு அமைச்சர் … Read more

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் ராஜபக்சர்களுக்கு எதிராக பொருளாதார குற்றச்சாட்டு

இலங்கையில் பொருளாதார குற்றங்கள் புரிந்ததாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோர் மீது ஜெனீவா மனித உரிமைகள் பேரவை குற்றம் சுமத்தியுள்ளது. 51-5 அறிக்கையின்படி இந்த குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை தொடர்பாக தயாரிக்கப்பட்ட 36 பக்க அறிக்கை இன்று மனித உரிமைகள்  கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்படவுள்ளதுடன், அந்த அறிக்கையில் இந்த மூவருக்கும் எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. முதன்முறையாக பொருளாதார குற்றச்சாட்டு மனித … Read more

கொழும்பு, யாழில் இன்று பதிவாகியுள்ள தங்க விலை! தங்க நகை வாங்கவுள்ளோருக்கான தகவல்

கொழும்பில் தங்க விலை நிலவரம் கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரப்படி 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 176,500 ரூபாவாக பதிவாகியுள்ளது. இதேநேரம் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 163,200 ரூபாவாக பதிவாகியுள்ளது. இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்படும் முன்னர் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 40 ஆயிரம் தொடக்கம் 60 ஆயிரம் வரையான விலை வரம்பிற்குள் இருந்தது. இரண்டு இலட்சத்தை தொட்ட தங்க விலை எனினும் நாட்டில் பொருளாதார நெருக்கடியின் … Read more