ஜனாதிபதி அலுவலகத்தினால் அரச நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்ட விசேட சுற்றறிக்கை


எந்தவொரு குடிமக்களும் உணவுப் பற்றாக்குறையால் பட்டினியாக இருக்கக்கூடாது
என்றும், குழந்தைகள் ஊட்டச் சத்து குறைபாட்டால் பாதிக்கப்படக்கூடாது என்றும்
ஜனாதிபதி அலுவலகம் அரச நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

சுற்றறிக்கை

ஜனாதிபதி அலுவலகத்தினால் அரச நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்ட விசேட  சுற்றறிக்கை | President S Office Has Directed State Institutions

உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், ஊட்டச் சத்து குறைபாட்டிலிருந்து
குழந்தைகளைப் பாதுகாப்பதற்கும் தொடர்ச்சியான செயற்பாடுகளை
நடைமுறைப்படுத்துவதற்கும், அமைச்சுகள், மாகாண சபை பிரதம செயலாளர்கள், மாவட்ட
மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு சுற்றறிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளன.

இலங்கையில் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மை வியத்தகு அளவில்
அதிகரித்துள்ளதாகவும், 66,000 பேர் கடுமையான உணவுப் பாதுகாப்பற்ற நிலையில் 6.2
மில்லியன் மக்கள் அல்லது 28 வீதமான மக்கள், கடுமையான உணவுப்
பாதுகாப்பற்றவர்களாக இருப்பதாகவும் ஐக்கிய நாடுகளின் அறிக்கை எச்சரித்துள்ள
நிலையில் இந்த உத்தரவுகள் வந்துள்ளன.

மோசமடையும் நிலை

ஜனாதிபதி அலுவலகத்தினால் அரச நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்ட விசேட  சுற்றறிக்கை | President S Office Has Directed State Institutions

2022 அக்டோபர் முதல் 2023 பெப்ரவரி 2023 வரை நிலைமை மோசமடையக்கூடும் என்றும்
ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு மற்றும் உலக உணவுத் திட்டம்
ஆகியவை எச்சரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.