கட்டில் விமர்சனம்: பாரம்பரிய கட்டிலின் வயது 250! படத்தின் கதை, ஆக்கத்துக்கு வயது என்னவோ?

மூன்று தலைமுறையைக் கடந்த கணேசனின் (ஈ.வி.கணேஷ்பாபு) பாரம்பரிய வீட்டை விற்க முடிவு செய்கிறார்கள் அவனது உடன் பிறப்புகள். அதற்கு மனமில்லாமல் அவர் ஒப்புக் கொண்டாலும் வீட்டில் இருக்கும் பர்மா தேக்கு கட்டிலின் மீதுள்ள பிணைப்பின் காரணமாக அதை மட்டும் விற்க அனுமதிக்கவில்லை. இதனால் கட்டில் வைக்கும் அளவிற்கு ஒரு புதிய வீட்டைத் தேடி அலைகிறார் கணேசன். அவருக்குப் புதிய வீடு கிடைத்ததா, அந்தப் பயணத்தில் அவர்கள் சந்திக்கும் சவால்கள் என்னென்ன என்பதே `கட்டில்’ படத்தின் கதை. கட்டில் … Read more

'தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு வழக்கு' – சி.பி.ஐ சொதப்பியது எங்கே?!

கடந்த 2018-ம் ஆண்டு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 15 பேர் பலியாகினர். இதுகுறித்து விசாரணை நடத்த சி.பி.ஐ-க்கு உத்தரவிட்டது, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை. அதன்படி சி.பி.ஐ சமர்ப்பித்த அறிக்கையில், காவல் ஆய்வாளர் திருமலை என்பவர் மட்டும் முக்கிய குற்றவாளியாக குறிப்பிடப்பட்டது இருந்தது. இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டின் தூத்துக்குடி மாவட்ட முன்னாள் செயலாளர் கே.எஸ்.அர்ச்சுனன், ‘சி.பி.ஐ-யின் நடவடிக்கை சட்ட விதிமுறைகளுக்கு எதிரானது. எனவே … Read more

மிக்ஜாம் பெருவெள்ளம்… அடித்துச் சொல்லும் பாடங்கள்!

மீண்டும் ஒருமுறை சென்னையையும் அதன் புறநகர்ப் பகுதிகளையும் புரட்டிப் போட்டிருக்கிறது பெருவெள்ளம். மிக்ஜாம் புயலால் பெய்த மழை, பெரும் பணக்காரர்கள் வசிக்கும் போட் கிளப் பகுதி தொடங்கி பரம ஏழைகள் வசிக்கும் புளியந்தோப்பு வரை பாகுபாடு இல்லாமல் படுத்தி எடுத்திருக்கிறது.இந்தப் பெருவெள்ளம் ஏற்படுத்திய பாதிப்புகளில் இருந்து உடனடியாக மீண்டு வந்தது சென்னை நகரின் சில பகுதிகள் மட்டுமே. பல பகுதிகளில் மழைநீர் வடிவதற்கான கால்வாய்கள் அடைபட்டதில் வெள்ளநீர் இன்னும் வடியாமலே இருக்கிறது. சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் பெரும்பாலானவை … Read more

மிஸ்டர் மியாவ்: பெரிதாகிக்கொண்டே போன பஞ்சாயத்து; மும்பை சென்ற தயாரிப்பாளர்!

வெற்றிமாறன் – கலைப்புலி தாணு – சூர்யா கூட்டணியில் திட்டமிடப்பட்ட ‘வாடிவாசல்’ படத்தின் பலவிதமான ரைட்ஸும் பூஜை போடப்பட்டபோதே விற்கப்பட்டுவிட்டன. பூஜை முடிந்து பல வருடங்களான நிலையில், படத்துக்குத் திட்டமிடப்பட்ட பட்ஜெட் பல கோடிகளாக இப்போது மாறியிருக்கிறதாம். குறைவான தொகைக்கு ரைட்ஸ் விற்கப்பட்டிருக்கும் நிலையில், படத்துக்கான பட்ஜெட்டை மட்டும் எப்படி மாற்ற முடியும் என்கிற யோசனையில் இருக்கிறார் தாணு. இதற்கிடையில், ‘விடுதலை பார்ட்-2’ படத்துக்காக இன்னும் ஐந்து மாதங்கள் அவகாசம் கேட்டிருக்கிறாராம் வெற்றிமாறன். அதனால், ‘வாடிவாசல்’ திறக்க … Read more

தடகள பயிற்சிக்குச் செல்லும் வழியில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை – 15 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!

பஞ்சாப் மாநிலத்தின் பெரோஸ்பூர் மாவட்டத்தில், தடகள வீராங்கனையான 15 வயது சிறுமியை, 4 பேர் கொண்ட கும்பல் வலுக்கட்டாயமாகப் போதை மருந்து கொடுத்துக் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. போலீஸ் தரப்பில் வெளியான தகவலின்படி, மம்தாட் காவல் நிலையத்துக்குட்பட்ட கிராமத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த சம்பவம் நடைபெற்றிருக்கிறது. சிறுமிக்கு நேர்ந்த கூட்டு பாலியல் வன்கொடுமை – பஞ்சாப் சம்பவம் நடந்த அன்று, பாதிக்கப்பட்ட சிறுமி தடகள பயிற்சிக்காக, அதிகாலை ஆறு மணியளவில் … Read more

இளைஞர் கொலை வழக்கு; ஐந்து பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி – கும்பகோணம் நீதிமன்றம் அதிரடி!

கும்பகோணம் அருகேயுள்ள மாதுளம்பேட்டைப் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் (20). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் 2018-ம் ஆண்டு தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதில் சக்திவேலை, அந்த நபர்கள் அரிவாளால் வெட்டியிருக்கின்றனர். அதில் படுகாயமடைந்த சக்திவேல் சிகிச்சை பெற்று, பின்னர் வீடு திரும்பினார். இது தொடர்பான வழக்கு போலீஸ் விசாரணையில் இருந்து வந்தது. ஆயுள் தண்டனை பெற்றவர்கள் இந்த நிலையில், கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி 13-ம் தேதி சக்திவேல் வீட்டில் இருந்திருக்கிறார். அப்போது அங்கு வந்த மாதுளம்பேட்டை, … Read more

அவள் பெயர் ரஜ்னி Review: நாயகனைத் துரத்துவது பெண்ணா, பேயா? எப்படியிருக்கிறது இந்த ஹாரர் த்ரில்லர்?

சென்னையில் உள்ள நெடுஞ்சாலை ஒன்றில், இரவு நேரத்தில் அபிஜித் (சைஜூ குருப்) என்பவர் அவரின் மனைவி கௌரியின் (நமீதா பிரமோத்) கண்முன்னாலேயே கொலை செய்யப்படுகிறார். இக்கொலையைச் செய்தது ஒரு பேய் என்று கொலையைப் பார்த்த சிலரும், பெண் என்று போலீஸாரும் யூகிக்கிறார்கள். இந்நிலையில், கௌரியின் தம்பியான நவீன் (காளிதாஸ் ஜெயராம்) கொலைக்கான பின்னணியைக் தேடும்போது, அவரை ஒரு பெண் பின்தொடர்ந்தே வருகிறார். உண்மையில் கொலை செய்தது ஒரு பெண்ணா, பேயா, பின்தொடரும் அந்தப் பெண் யார், அக்கொலைக்கான … Read more

Dhruva Natchathiram: தொடரும் தாமதம்; துருவ நட்சத்திரம் படத்திற்கு என்னதான் சிக்கல்?

கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம், ரிதுவர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் படம் `துருவ நட்சத்திரம்’. இந்தப்படத்தில் இவர்களுடன் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன், சுரேஷ் மேனன், வம்சி கிருஷ்ணா, சலீம் பெய்க், சதீஷ் கிருஷ்ணன், முன்னா சிமோன், மாயா எஸ்.கிருஷ்ணன், ஷ்ரவந்தி சாய்நாத், திவ்யதர்ஷினி உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். கவுதம்மேனன் எழுதி இயக்கி தயாரித்துமிருக்கிறார். இப்படம் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பல்வேறு சிக்கல்களால் தாமதமாகிவந்தது. பல தடைகளைத் தாண்டி நவம்பர் … Read more