"தோனியை ரன் அவுட் செய்ததற்காக இன்னமும் என்னைத் திட்டி மெயில் வருகிறது!"- மார்ட்டின் கப்தில்

கடந்த 2019-ம் ஆண்டு இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டி இங்கிலாந்தில் நடைபெற்றது. இந்திய அணியை நியூசிலாந்து அணி 18 ரன்கள்  வித்தியாசத்தில் தோற்கடித்து இறுதிபோட்டிக்குத் தகுதிப் பெற்றிருந்தது. அந்தப் போட்டியில் ஜடேஜா உடன் ஜோடி சேர்ந்த தோனி மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.  ஆனால் கடைசி கட்டத்தில் மார்ட்டின் கப்தில் அடித்த த்ரோ நேராக ஸ்டம்பைத் தாக்கியதால் நூலிழையில் தோனி ரன் அவுட் ஆனார்.  இந்திய … Read more

Lokesh kanagaraj: `G Squad' நண்பர்களுக்காகத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார் லோகேஷ் கனகராஜ்!

`மாநகரம்’ படத்தின் மூலம் கோலிவுட் ரசிகர்களைக் கவர்ந்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ், `கைதி’, `மாஸ்டர்’, `விக்ரம்’ மற்றும் `லியோ’ படங்களை இயக்கிக் குறுகிய காலத்திலேயே இந்தியாவின் கவனிக்கத்தக்க இயக்குநராக வலம் வந்து கொண்டிருக்கிறார். அண்மையில் வெளியான விஜய்யின் ‘லியோ’ படத்திற்குப் பிறகு ‘கைதி -2’ மற்றும் ரஜினியின் 172வது படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளைத் தொடங்கி, தனது அடுத்தடுத்தப் படங்களுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறார் லோகேஷ். இந்நிலையில் தற்போது ‘G Squad’ என்ற பெயரில் புதிய தயாரிப்பு நிறுவனம் தொடங்குவது … Read more

பீகாரைத் தொடர்ந்து ஆந்திராவில் சாதிவாரி கணக்கெடுப்பு; தமிழ்நாட்டில் சாத்தியப்படுமா… என்ன நிலை?

ஆந்திராவில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த, ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அரசு முடிவுசெய்திருக்கிறது. ‘ஆந்திராவில் விரிவான சாதிவாரி கணக்கெடுப்பு வரும் டிசம்பர் 9-ம் தேதி தொடங்கும்‘ என்று அந்த மாநிலத்தின் தகவல் மற்றும் மக்கள் தொடர்புதுறை அமைச்சர் சீனிவாச வேணுகோபால கிருஷ்ணா தெரிவித்திருக்கிறார். ஜெகன்மோகன் ரெட்டி சோதனை அடிப்படையில் சாதிவாரி கணக்கெடுப்பு ஏற்கெனவே இரண்டு நாள்கள் நடத்திமுடிக்கப்பட்ட நிலையில், டிசம்பர் 9-ம் தேதி விரிவாக கணக்கெடுக்கும் பணி தொடங்கும் என்றும் அவர் கூறினார். ஏற்கெனவே, பீகாரில் நிதிஷ் குமார் … Read more

“பிரதமரின் பாராட்டு மிகப் பெரிய அங்கீகாரம்…'' – மோடி பாராட்டிய கோவை கூலித் தொழிலாளி…!

பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும், கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் ‘மனதின் குரல்’ என்ற நிகழ்ச்சி மூலம் வானொலி வாயிலாக பொதுமக்களோடு உரையாடி வருகிறார். அந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக சமூக ஆர்வலர்களை பாராட்டிம் பேசி வருகிறார். பிரதமர் மோடி திருப்பதியில் பிரதமர் மோடி | புகைப்படத் தொகுப்பு! அதன்படி, நேற்று ஒலிபரப்பான ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த தினக்கூலி தொழிலாளியான லோகநாதன் என்ற சமூக ஆர்வலரின் சேவை குறித்து மோடி பாரட்டி பேசினார். கோவை … Read more

தொடர்ந்து வலுக்கும் எதிர்ப்பு – கே.எஸ்.அழகிரி பதவி தப்புமா?!

கடந்த 2019-ம் ஆண்டு, பிப்ரவரியில் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவராக கே.எஸ்.அழகிரி நியமனம் செய்யப்பட்டார். அவரது பதவிக்காலம் கடந்த ஆண்டு பிப்ரவரியுடன் முடிந்துவிட்டது. இதையடுத்து, அந்தப் பதவியைப் பிடிக்க பலரும் காய் நகர்த்தி வருகிறார்கள். கார்த்தி சிதம்பரம், செல்லகுமார், ரூபி மனோகரன், செல்வப்பெருந்தகை, ஜோதிமணி இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. பதிலுக்கு தனது பதவியை தக்கவைத்துக்கொள்ள ‘ஆடுபுலி ஆட்டம் ஆடி’ ஒவ்வொரு காயாக வீழ்த்தி வருகிறார். இந்நிலையில்தான் தமிழக காங்கிரஸின் மூத்த தலைவர்களுள் ஒருவரான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், … Read more

Paruthiveeran: "அமீரின் நேர்மையை எடைப்போட்டு பார்க்கும் தகுதி எவருக்கும் இல்லை!" – கவிஞர் சினேகன்

`பருத்திவீரன்’ படத்தின் தயாரிப்பு மற்றும் வெளியீடு தொடர்பாக அமீருக்கும் – தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கும் இடையே உண்டான சர்ச்சைகள் கோலிவுட்டில் பெரும் பேசுபொருளாகி வருகிறது. இந்த விவகாரத்தில் ஞானவேல்ராஜா, “அமீர் கடனில் இருந்தார், அவருக்கு உதவுவதற்காகத்தான் ‘பருத்திவீரன்’ படத்தை நான் தயாரித்தேன். படப்பிடிப்பில் செலவானதற்கு அவர் சரியாகக் கணக்குக் காட்டவில்லை” என்று கூறியிருந்தார். மேலும், அமீருக்குச் சரியாகப் படம் எடுக்கத் தெரியாது, அவரின் ‘ராம்’ படத்தின் இயக்கம் சரியாக இல்லை. அப்படி இருந்தும் ‘பருத்திவீரன்’ படம் மூலம் அமீருக்கு … Read more

TASMAC: திறந்தவெளி `பார்' ஆக மாறிய சென்னையின் முக்கிய பகுதி – அவதிக்குள்ளாகும் பொதுமக்கள்!

பொதுமக்கள் அதிகம் வந்து போகும் சென்னையின் முக்கியப் பகுதியில், பேருந்து நிறுத்ததுக்கு மிக நெருக்கமாக அமைத்திருக்கும் டாஸ்மாக்கால் அந்தப் பகுதியே திறந்தவெளி `பார்’ ஆக மாறியிருப்பது, அங்கு பேருந்து ஏற வரும் பெண்கள், முதியவர்கள், கல்லூரி மாணவ, மாணவிகளை கடும் அவதிக்குள்ளாக்க்கி வருகிறது. அண்ணா சாலையிலிருக்கும் தலைமை தபால் நிலையத்து வெளியே சுரங்கப் பாதையும், தபால் நிலையத்து எதிராக சாலைக்கு அப்பால் சாந்தி திரையரங்கம் பேருந்து நிறுத்தமும் இருக்கிறது. சாலையைக் கடந்து பேருந்து நிறுத்தம் செல்வதற்கு ஏதுவாக … Read more

" `மலையில தான் தீ பிடிக்குது ராசா' வரிகளை நாட்டுப்புறப் பாடலில் இருந்து தான் எடுத்தேன்"- யுகபாரதி

சேலம் மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள மாநகராட்சி திடலில் புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது. திரைப்பட கவிஞர் திரு. யுகபாரதி இந்த விழாவில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். ‘அறமும் அகமும்’ என்ற தலைப்பில் பேசிய அவர், “இந்த விழாவில் எனக்கு ஒரு சிறிய வருத்தம், அது என்னவென்றால் நான் ஏன் சேலத்தில் பிறக்கவில்லை. ஒரு காலத்தில் சினிமா என்றாலே சேலம்தான்” என சேலத்தின் சிறப்பைக் கூறி தனது உரையைத் தொடங்கினார்.  சங்க இலக்கிய பாடல் மூலம் ‘அறமும் … Read more

திருக்கார்த்திகைத் திருநாள் : எழில்மிகு திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோயில் தேரோட்டம்!

திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோவில் தேரோட்டம். திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோவில் தேரோட்டம். திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோவில் தேரோட்டம். திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோவில் தேரோட்டம். திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோவில் தேரோட்டம். திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோவில் தேரோட்டம். திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோவில் தேரோட்டம். திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோவில் தேரோட்டம். திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோவில் தேரோட்டம். திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோவில் தேரோட்டம். திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோவில் தேரோட்டம். … Read more

கடவுளை மற, உடம்பை நினை..! | மகிழ்ச்சி – 9

உடம்பு, மனசு இரண்டில் எது முக்கியம் என்று ஒரு மருத்துவரிடம் கேட்டால், இரண்டுமே முக்கியம் என்பார். இதே கேள்வியை ஆன்மிகவாதியிடம் கேட்டால், ‘வியர்வையும், மலமும், சிறுநீரும் நிறைந்த உடம்பை மதிக்காதே, மனதும் ஆன்மாவும்தான் முக்கியம்’ என்று உறுதிபடச் சொல்வார். உடல் உழைப்பினால் வாழும் சாதாரண மனிதனிடம் இந்தக் கேள்வியைக் கேட்டால், ‘உடம்பு உரமாயிருந்தாத்தான் வேலை செய்யமுடியும், மனசைப் பத்தி எதுவுமே தெரியாது’ என்பார். இப்படி ஆளுக்கு ஒன்றாகச் சொல்லும்போது சரியானதை கண்டுபிடிப்பது எப்படி? வெகு சுலபம். இயற்கை … Read more