Modi: வேட்டி, சட்டையில் பிரதமர் மோடி… சென்னை தி.நகரில் ரோடு ஷோ | ஸ்பாட் க்ளிக்ஸ்

சென்னையில் பிரதமர் மோடி ரோடு ஷோ சென்னையில் பிரதமர் மோடி ரோடு ஷோ சென்னையில் பிரதமர் மோடி ரோடு ஷோ சென்னையில் பிரதமர் மோடி ரோடு ஷோ சென்னையில் பிரதமர் மோடி ரோடு ஷோ சென்னையில் பிரதமர் மோடி ரோடு ஷோ சென்னையில் பிரதமர் மோடி ரோடு ஷோ சென்னையில் பிரதமர் மோடி ரோடு ஷோ சென்னையில் பிரதமர் மோடி ரோடு ஷோ சென்னையில் பிரதமர் மோடி ரோடு ஷோ சென்னையில் பிரதமர் மோடி ரோடு ஷோ … Read more

”ஒரு தொண்டராக இருந்து தலைவரானவர் ஆர்.எம்.வீ. சார்” – நெகிழும் எஸ்.பி.முத்துராமன்

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளரும், எம்.ஜி.ஆர் கழகம் கட்சியின் நிறுவனருமான முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன், தன்னுடைய 98-வது வயதில் இன்று காலமானார். திடீர் மூச்சுத் திணறல் காரணமாக இன்று காலை சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆர்.எம்.வீரப்பன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். எம்.ஜி.ஆர், கமல், ரஜினி ஆகியோரை வைத்துப் பல படங்களைத் தயாரித்திருக்கிறார். அவரது சத்யா மூவீஸ் தயாரிப்பில் ரஜினி, சிரஞ்சீவி இருவரும் இணைந்து நடித்த ‘ராணுவ வீரன்’ படத்தை இயக்கியவர் எஸ்.பி.முத்துராமன். ஆர்.எம்.வி-யின் கம்பன் கழகத்தின் செயற்குழு … Read more

வேலூர்: ‘‘நான் விரித்த கம்பளத்தில்தான் மோடி வருகிறார்!’’ – சொல்கிறார் கதிர் ஆனந்த்

வேலூர் நாடாளுமன்றத் தொகுதி பா.ஜ.க வேட்பாளர் ஏ.சி.சண்முகம் உட்பட கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து, வேலூர் கோட்டை மைதானத்தில் நாளை நடைபெறவிருக்கும் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டுப் பேசுகிறார். வேலூர் அருகேயுள்ள அப்துல்லாபுரம் விமான நிலையத்துக்கு ஹெலிகாப்டரில் வந்திறங்கும் பிரதமர் மோடி, அங்கிருந்து சாலை மார்க்கமாக கோட்டை மைதானத்தை வந்தடைகிறார். பிரதமரின் வருகையையொட்டி, பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் வேலூர் கொண்டுவரப்பட்டிருக்கிறது. பிரதமரின் வருகைக் குறித்து நம்மிடம் பேசிய வேலூர் தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்த், … Read more

"முதல் படம் பண்றப்ப வேலைக்கு லீவ் போட்டுட்டு போய் இசையமைச்சேன். ஏன்னா…" – இசையமைப்பாளர் அஸ்வத்

அமேசான் ப்ரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றுவருகிறது `இன்ஸ்பெக்டர் ரிஷி.’ ஹாரர் த்ரில்லர் திரைப்படங்களின் தன்மையை பார்வையாளர்களிடம் கடத்துவதற்கு முதல் முக்கியமான தேவை, பின்னணி இசைதான். அதனை சரியான பக்குவத்துடன் ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’ வெப்சீரிஸில் கையாண்டு கவனிக்க வைத்திருக்கிறார் இசையமைப்பாளர் அஸ்வத். இவர் இதற்கு முன்பு ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’, விஷ்ணு விஷாலின் ‘எஃப்.ஐ.ஆர்’ ஆகிய திரைப்படங்களுக்கு இசையமைத்தவர். Inspector Rishi சினிமா என்று மட்டும் தனது பாதையைச் சுருக்கிக்கொள்ளாமல் விளம்பரங்களுக்கும் இசையமைத்திருக்கிறார். … Read more

Basalt: எஸ்யூவி வாங்கப் போறீங்களா? சிட்ரனில் இருந்து புது கூபே வருது! ஆனால் விலை பயமுறுத்துமோ?

சிட்ரனில் இருந்து பசால்ட் என்றொரு கார் வருவதாக சில மாதங்களுக்கு முன்பிருந்தே செய்திகள் வந்து கொண்டிருந்தன. நம் மோட்டார் விகடன் வாசகர்கள் சிலரே பசால்ட் கார், சென்னையில் டெஸ்ட் டிரைவ் செய்யப்பட்டு வருவதைப் படம் எடுத்து அனுப்பி வந்தனர். உண்மையில் பசால்ட் என்கிற காரின் முந்தைய பெயர் C3X என்பதாகத்தான் இருந்தது. அந்தக் காருக்குத்தான் இப்போது Basalt என்று நாமம் சூட்டியிருக்கிறது சிட்ரன் நிறுவனம். இப்போது பசால்ட் காரை, நமது வாசகரான ஸ்ரீராம் என்பவர், ஸ்பை புகைப்படங்கள் … Read more

படத்தயாரிப்பாளரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.எம்.வீரப்பன் மறைந்தார்!

எம்.ஜி.ஆர்.கழகத்தின் நிறுவனரும், முன்னாள் அமைச்சரும், படத் தயாரிப்பாளருமான ஆர்.எம்.வீரப்பன், வயது மூப்பின் காரணமாக இன்று காலை காலமானார். அவருக்கு வயது 98. அ.தி.மு.க.வில் அமைச்சராக இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன். எம்.ஜி.ஆரின் நம்பிக்கைக்குரியவராகவும் இருந்தவர் அவர். திரைப்படத் துறையிலும் சிறந்து விளங்கினார். கதை வசனகர்த்தாவாகவும் தயாரிப்பாளராகவும் பணியாற்றினார். எம்.ஜி.ஆரின் தாயார் பெயரில் ‘சத்யா மூவீஸ்’ என்ற படத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியவர் ‘தெய்வத் தாய்’, ‘நான் ஆணையிட்டால்’, ‘காவல்காரன்’ உட்பட எம்.ஜி.ஆரை வைத்து பல படங்களைத் தயாரித்துள்ளார். ஆர்.எம்.வீரப்பன் அதைப் … Read more

கடலூர்: பாமக வேட்பாளர் தங்கர் பச்சானுக்கு கிளி ஜோசியம் பார்த்தவர் கைது! – என்ன காரணம்?!

கடலூர் நாடாளுமன்றத் தொகுதியில் பா.ம.க வேட்பாளராக போட்டியிடும் திரைப்பட இயக்குநர் தங்கர் பச்சான், மாவட்டம் முழுவதும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி நேற்று தென்னம்பாக்கம் கிராமத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த அவர், பிரசித்தி பெற்ற கோயிலான அழகு முத்து அய்யனார் கோயிலுக்குச் சென்றார். அப்போது அங்கு மரத்தடியில் அமர்ந்து கிளி ஜோசியம் பார்த்துக் கொண்டிருந்தவரிடம் சென்ற தங்கர் பச்சான், `இந்த தேர்தலில் நான் வெற்று பெறுவேனா என்று பார்த்துச் சொல்லுங்கள்’ என்று கேட்டார். உடனே, `என் கிளி … Read more

சென்னையில் சங்கர விஜயம்: 7 நாள்கள், ஆன்மிகக் கருத்தரங்குகள், அறிஞர்களின் சொற்பொழிவுகள்!

பாரத தேசமெங்கும் ஆதிசங்கரர் பயணம் செய்து தேசத்தின் நான்கு திசைகளிலும் திருமடங்களை நிறுவி ஆன்மிகப் பணி சிறக்க வகை செய்தார். அந்த வகையில் தேசத்தின் தெற்கு திசையில் அவரால் நிர்மாணிக்கப்பட்ட மடம் சிருங்கேரி சாரதா பீடம். இந்த பீடத்தைப் பல்வேறு மகான்கள் பீடாதிபதிகளாக இருந்து அலங்கரித்து வந்திருக்கிறார்கள். 1954 முதல் 1989 வரை சிருங்கேடி மடத்தின் பீடாதிபதியாக இருந்து சேவை செய்தவர் ஜகத்குரு ஶ்ரீ அபிநவ வித்யாதீர்த்த மகாசுவாமிகள். இவரின் ஆசியோடு தொடங்கப்பட்டது, சென்னை ஶ்ரீ வித்யாதீர்த்த … Read more

திருமணத்தை நிரூபிக்க `கன்னிகாதானம்' அவசியமில்லை: அலகாபாத் உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

இந்து திருமணத்தை உறுதிப்படுத்த ‘கன்னிகாதானம்’ அவசியமில்லை என அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ பெஞ்ச் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது. கிரிமினல் வழக்கு ஒன்றில் வழங்கப்பட்ட விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, அசுதோஷ் யாதவ் என்பவர் குற்றவியல் சீராய்வு மனு தாக்கல் செய்திருந்தார். திருமணம் `சுதந்திரமாக வாழவே விவாகரத்து செய்தேன்’ – ஆமீர் கான் முன்னாள் மனைவி கிரண் ராவ் அதில் அவர் இந்து முறைப்படி நடைபெற்ற தனது திருமணத்தில் ‘கன்னிகாதானம்’ செய்யப்படவில்லை என்றும், இதுதொடர்பாக தலைமை மற்றும் குறுக்கு … Read more

திருப்பூர்: கார் – அரசுப் பேருந்து மோதல்; 5 பேர் பலி… கோயிலுக்கு சென்றுவிட்டு திரும்பியபோது சோகம்

திருப்பூர் நல்லிக்கவுண்டர் நகரைச் சேர்ந்தவர் சந்திரசேகர் (60). இவரின் மனைவி சித்ரா. சந்திரசேகர் பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். இத்தம்பதியினரின் 60-வது திருமண நாளுக்காக திருக்கடையூர் சென்றுவிட்டு திருப்பூர் நோக்கி திங்கள்கிழமை இரவு வந்து கொண்டிருந்தனர். காரை சந்திரசேகரின் இளைய மகன் இளவரசன் ஓட்டி வந்தார். விபத்து கார் வெள்ளக்கோவில் அருகே வந்தபோது எதிரே திருச்சி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து மீது நேருக்கு நேர் மோதியது. இதில், கார் முழுவதுமாக பேருந்துக்கு அடியில் சென்றது. இந்த … Read more