Kuldeep Yadav: “தோனியைப் போன்ற வழிகாட்டி தேவைப்பட்டார்!" – குல்தீப் யாதவ் உருக்கம்

ஐ.பி.எல் இல் தற்போது டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் விளையாடி வரும் குல்தீப் யாதவ் முன்னர் கே.கே.ஆர் அணியிலிருந்தது குறித்தும் அங்கே ஆடியபோது அவர் எவ்வளவு பலவீனமாக இருந்தார் என்பது குறித்தும் பேசியிருக்கிறார். குல்தீப் யாதவ் நடப்பு சீசனில் மிகச்சிறப்பாகப் பந்துவீசி வருகிறார். 5 போட்டிகளில் ஆடியிருக்கும் அவர் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். டெல்லி அணிக்காக நடப்பு சீசனில் அதிக விக்கெட்டுகளை எடுத்திருக்கும் பௌலர் அவர்தான். இந்நிலையில், கொல்கத்தா அணிக்காக ஆடியபோது அவர் எந்த அளவுக்கு பலவீனமான வீரராக … Read more

Ayothi: `மனிதம் பேசி கவனம் ஈர்த்த படைப்பு' – தயாராகும் இயக்குநர் மந்திர மூர்த்தியின் அடுத்த படம்!

கடந்த 2023ம் ஆண்டு சசிகுமார் நடிப்பில் வெளியாகி கவனம் ஈர்த்த படம் `அயோத்தி’. திரையில் வன்முறைப் படங்கள் மத்தியில் மனிதர்கள் மீதான நம்பிக்கையையும், அன்பையும் விதைக்கும் படமாக வந்திருந்தது. அந்த படத்தின் மூலம் கவனம் பெற்ற அறிமுக இயக்குநர் ஆர்.மந்திர மூர்த்திக்கு, விகடனின் நம்பிகை விருதும் கொடுத்து கௌரவித்தோம். இப்போது தனது அடுத்த படத்தை அறிவித்திருக்கிறார் இயக்குநர் மந்திர மூர்த்தி. அன்புச்செழியன் தயாரிப்பில் அடுத்த படத்தை இயக்குகிறார். இந்தப் படம் குறித்து விசாரிக்கையில் கிடைத்த தகவல்கள் இனி.. … Read more

குஜராத்: கர்ப்பிணிக்கு சிகிச்சையளிக்க மறுத்த மருத்துவர்… என்ன காரணம்?

மருத்துவர்கள், உயிர்களைக் காப்பாற்றும் கடவுளாக மதிக்கப்படுகின்றனர். இன்னொரு பக்கம், சில நேரங்களில், மருத்துவமனையில் நோயாளிகள் உயிரிழக்க நேரிடும்போது, கோபத்தில் டாக்டரை நோயாளிகளின் உறவினர்கள் அடித்து உதைத்து விடுகின்றனர். இந்நிலையில், குஜராத் மாநிலத்தில், டாக்டர் ஒருவர் கர்ப்பிணிக்கு சிகிச்சை அளிக்க முடியாது என்று தெரிவித்து இருப்பது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. குஜராத் மாநிலம், வதோதராவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் மகப்பேறு மருத்துவராகப் பணியாற்றி வருபவர் டாக்டர் ராஜேஷ் பாரிக். இதே மருத்துவமனையில் 30 வயது மதிக்கத்தக்க கர்ப்பிணி சிகிச்சைக்காக … Read more

திரவ நைட்ரஜன் உணவு பொருள் விற்பனை… ஆய்வு செய்ய பறந்த உத்தரவு!

ஸ்மோக் பிஸ்கட்: கடந்த சில தினங்களுக்கு முன்பாக கர்நாடகாவில் பொருள்காட்சியில் சிறுவன் ஒருவன் ஸ்மோக் பிஸ்கட் சாப்பிட்ட ஒரு சில நிமிடங்களிலேயே மயக்கமடைந்த ஒரு வீடியோ வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. திரவ நைட்ரஜன் பயன்படுத்தி தயாரிக்கப்படும் இந்த வகை ஸ்மோக் பிஸ்கட் போன்ற உணவு பொருள்கள் உடலுக்கு பல்வேறு தீங்குகள் விளைவிப்பதாக மருத்துவ ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். ஸ்மோக் பிஸ்கட் தமிழகத்திலும் பல்வேறு திருமண மற்றும் பொருட்காட்சி போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் திரவ நைட்ரஜன் … Read more

சகோதரியின் கடையில் ரொட்டிக்கு தகராறு; சகோதரன் தாக்கியதில் உயிரிழந்த இளைஞர் – கர்நாடகாவில் அதிர்ச்சி

கர்நாடக மாநிலம் யாத்கிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஃபயாஸ். இவரின் சகோதரி அதே பகுதியில் ஒரு ரொட்டி கடையை நடத்தி வந்திருக்கிறார். இந்த நிலையில் கடந்த வாரம் அதே பகுதியை சேர்ந்த 22 வயதான ராகேஷ் என்ற இளைஞர் ஒருவர், அந்த கடைக்கு ரொட்டி வாங்க வந்திருக்கிறார். அப்போது ராகேஷிடம் கடையின் உரிமையாளரான ஃபயாஸின் சகோதரி, கடையில் ரொட்டிகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிட்டதாக  கூறியிருக்கிறார். இருப்பினும் அதை கேட்காமல் ராகேஷ் ரொட்டி வேண்டுமென்று விடாப்பிடியாக இருந்ததால், இருவருக்கும் இடையே … Read more

மேட்டுப்பாளையம்: கைகுலுக்கும்போது ஏற்பட்ட மோதல்.. எஸ்யூவி காரின் மூலம் நடந்த கொடூரக் கொலை.!

உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் இந்திரசிங். இவர் கோவை துடியலூர் பகுதியில்  பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். இவர் தன் ஊழியர்கள் மோகன்குமார் ஷர்மா, மசூத் அகமது, முகமது கலீல், சுமன்குமார் முன்னா மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோருடன் தன் எஸ்.யூ.வி காரில் கோத்தகரி – மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள வியூ பாயின்ட்டுக்கு சென்றுள்ளனர். இந்திரசிங் இதனிடையே பட்டுக்கோட்டையைச் சேர்ந்த பாண்டி, தன் நண்பர்கள் பெரியநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த அருண்குமார், சரவணம்பட்டி பகுதியைச் சேர்ந்த வசந்தகுமார் ஆகியோருடன் … Read more

Ghilli: “ரிலீஸ் அப்போ மிஸ்ஸானது, ரீ-ரிலீஸ்ல நடந்துருச்சு..!" – நாகேந்திர பிரசாத்

20 வருடங்களுக்குப் பிறகு ரீ-ரிலீஸாகி இருக்கும் ‘கில்லி’, தியேட்டர்களுக்கு ஆடியன்ஸை படையெடுக்க வைத்திருக்கிறது. இந்த ரீ-ரிலீஸ் அனுபவம் குறித்தும் ‘கில்லி’ படத்தில் நடித்ததைப் பற்றியும் நடிகர் நாகேந்திர பிரசாத்திடம் பேசினோம்.  ‘கில்லி’ படத்தை இப்போ தியேட்டரில் பார்த்தீங்களா..? கில்லி “முதல் நாளே பார்த்துட்டேன். புதுசா ரிலீஸான படம் மாதிரி கொண்டாடுறாங்க. நான் போன தியேட்டர் திருவிழா மாதிரி இருந்துச்சு. அந்தப் படத்தில் நடிச்ச எனக்கே படத்தை 20 வருஷம் கழிச்சி பார்க்கிறப்போ ரொம்ப ஃப்ரஷ்ஷா இருந்துச்சு. மக்களுக்கு … Read more

அமேதி தொகுதியில் ராகுல் காந்தி மீண்டும் போட்டியா..?! – பரவும் தகவலும் பின்னணியும்!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி மீண்டும் உத்தரபிரதேசம் அமேதி (AMETHI) நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடவிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. ராகுல் காந்தி கடந்த நான்கு நாடாளுமன்றத் தேர்தலில் தொடர்ந்து அமேதி தொகுதியில் போட்டியிட்டு மூன்று முறை வென்றிருக்கிறார். ஸ்மிருதி இரானி 2019-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போதும், பா.ஜ.க சார்பில் அவரை எதிர்த்து போட்டியிட்ட அமைச்சர் ஸ்மிருதி இராணியிடம் 55,120 வாக்குகள் வித்தியாசத்தில் அமேதி தொகுதியின் நான்காவது முறையாக நாடாளுமன்ற உறுப்பினராகும் வாய்ப்பை … Read more

CSK v LSG : `இல்ல… இது பழைய சிஎஸ்கே இல்ல!' – சிஎஸ்கேவின் தோல்விக்கு வித்திட்ட 3 காரணங்கள்

மஞ்சள் அலைகளுக்கு மத்தியில் லக்னோ ஜெர்சி அணிந்த ஒரே ஒரு ரசிகர் துள்ளிக் குதித்துக் கொண்டிருக்கிறார். அந்தப் புகைப்படம்தான் இப்போது இணையத்தில் வைரல். சேப்பாக்கம் மைதானத்தில் லக்னோ அணி சென்னையை வீழ்த்திய பிறகு நிகழ்ந்த காட்சி அது. லக்னோவுக்கு எதிராக சென்னை அணி தொடர்ச்சியாக அடையும் இரண்டாவது தோல்வி இது. LSG Fan மேலும் நடப்பு சீசனில் சொந்த மைதானமான சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணி அடையும் முதல் தோல்வி இது. இந்தப் போட்டியில் சென்னை அணி … Read more

வயநாடு: `தோல்வி பயம்; பிரித்தாளும் கொள்கையை கையிலெடுத்திருக்கிறார் மோடி!' – செல்வப்பெருந்தகை காட்டம்

2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் நிறைவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் வருகின்ற 26-ம் தேதி நடைபெற இருக்கிறது. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் மாநிலங்களில் இன்று மாலையுடன் தேர்தல் பரப்புரை நிறைவடைகிறது. செல்வப்பெருந்தகை இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ராகுல் காந்தி போட்டியிடும் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் செல்வப்பெருந்தகை இறுதிகட்ட பரப்புரையில் … Read more