கொழும்பில் Beauty Salon செல்லும் பெண்களுக்கு எச்சரிக்கை – ஆபத்தான பெண் கண்டுபிடிப்பு

கொழும்பில் அழகு சிகிச்சை பெற்றுக் கொள்வதாக கூறி பெறுமதியான பொருட்கள் அடங்கிய பைகளை திருடும் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அழகுக்கலை நிலையங்களுக்கு வரும் வாடிக்கையாளர்கள் தங்கள் பைகளை ஒரு இடத்தில் வைத்து விட்டு அந்த பைகள் தொடர்பில் அவதானம் செலுத்தாத சந்தர்ப்பங்களை இந்த பெண் பயன்படுத்திக் கொள்வதாக குறிப்பிடப்படுகின்றது. இந்த பெண் அங்குள்ள பைகளில் பொருட்கள் மற்றும் பணத்தை கொள்ளையடிப்பதாக தெரியவந்துள்ளதென பொலிஸார் கூறியுள்ளனர். அவிசாவளை, கம்பளை, பொரலஸ்கமுவ, வரக்காபொல ஆகிய பல நிலையங்களில் … Read more

பதில் பாதுகாப்பு அமைச்சராக இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ளார்

மூன்றாம் சார்ள்ஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் கலந்துகொள்வதற்காக கௌரவ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் இன்று (04) காலை இலங்கையிலிருந்து பிரித்தானியாவிற்கு பயணமானார். மேற்படி முடிசூட்டு விழாவானது இம்மாதம் 06ஆம் திகதி சனிக்கிழமை காலை 11.௦௦ மணிக்கு வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் தொடங்கவுள்ளது. இதன்படி, பதில் பாதுகாப்பு அமைச்சராக இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய விமானப்படை தளபதி பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு

இந்தியாவில் நடைபெறும் பயிற்சி கற்கைநெறிகளில் கலந்து கொள்ளும் இலங்கை பாதுகாப்பு படையினரின் தொழில்முறை தரத்தை இந்திய விமானப்படைத் தளபதி பாராட்டினார். இந்திய விமானப்படைத் தளபதி எயார் சீப் மார்ஷல் வி. ஆர்.சௌதாரி பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன அவர்களை (மே 03) சந்தித்தார். கோட்டே, ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சுக்கு இன்று காலை வருகை தந்த இந்திய விமானப்படைத் தளபதி பாதுகாப்புச் செயலாளரினால் வரவேற்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற சுமூகமான கலந்துரையாடலின் போது, இரு … Read more

பாதுகாப்பு செயலாளருக்கு போர் வீரர்களின் கொடி அணிவிப்பு

போர் வீரர்கள் நினைவு மாதத்தினை முன்னிட்டு பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன அவர்களுக்கு புதன்கிழமையன்று (மே 03) போர்வீரர்களின் கொடி அணிவிக்கப்பட்டது. ரணவிரு சேவா அதிகாரசபையின் தலைவர் மேஜர் ஜெனரல் நந்தன சேனாதீர (ஓய்வு) தலைமையிலான குழுவினர், கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்புச் செயலாளரை சந்தித்த போது அவர் மீது போர்வீரர்களின் கொடி அணிவிக்கப்பட்டது. பணிப்பாளர் மேஜர் ஜெனரல் கித்சிறி ஏகநாயக்க (ஓய்வு), பிரிகேடியர் ரொஷான் திரிமான்ன, லெப்டினன்ட் கேர்ணல் ரக்ஷித … Read more

2023 ஆம் ஆண்டினுள் காணி உரிமைகளை வழங்கும் 2000 காணி காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கத் திட்டம்

தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் கடன், நிதியுதவி மற்றும் அரச அளிப்பு காணி உரிமங்களை வழங்கும் நிகழ்வு பொலன்னறுவையில் ஆரம்பம். ஜனாதிபதி ரணிலின் வேலைத் திட்டத்தினை முன்னெடுக்கும் நோக்கில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மீண்டும் அவதானத்திற்குக் கொண்டு வரும் நோக்கில் பொலன்னறுவை, ஹிங்குராக்கொடை தாரகை மண்டப கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற அரச அளிப்பு காணி உறுதிகளை வழங்கும் நிகழ்வில் அண்மையில் (29) கலந்து கொண்ட போதே அமைச்சர் ரணதுங்க இதனைத் தெரிவித்தார். இதன்போது கிங்குராக்கொடை பிரதேச செயலகத்தினால் பயனாளிகள் … Read more

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது. 2023 மே 04ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு. 2023 மே 03ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களுக்கு பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மாகாணத்திலும் காலி, மாத்தறை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் மற்றும் புத்தளம், மாவட்டங்களிலும் கரையோரப்பிரதேசங்களில் காலை … Read more

சாரதி அனுமதிப்பத்திரம் பெற காத்திருப்பவர்களுக்கு முக்கிய தகவல்

சாரதி அனுமதி பத்திரங்களை பெற்றுக்கொள்வதற்கான மருத்துவ பரிசோதனை சான்றிதழ்களை வழங்குவதை டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் தலைவர் தர்ஷன் அபேரத்ன தெரிவித்துள்ளார். இத்திட்டத்தின் மூலம் அரசாங்கத்திற்கு வருடாந்தம் 2 கோடியே 30 லட்சம் ரூபாய் மேலதிக செலவீனத்தை சேமிக்க முடியும் என தலைவர் குறிப்பிட்டுள்ளார். ஓட்டுநர் உரிமம் வழங்கும் போது தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தால் வழங்கப்பட்ட உடல் மற்றும் மனநிலை தகுதி சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். தேசிய போக்குவரத்து … Read more

மற்றொரு விமான நிலையம் அமைக்க தயாராகும் அரசாங்கம்

விமானப்படையால் நடத்தப்படும் ஹிகுரக்கொடட விமான ஓடுதளத்தை மேம்படுத்தி மற்றுமொரு சிவில் விமான நிலையத்தை நிர்மாணிக்க திட்டமிட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்று (03.05.2023) துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் அமைச்சில் இடம்பெற்றது. தற்போதுள்ள ஓடுபாதையின் நீளம் 2287 மீட்டர். இதனை 2800 மீட்டராக நீட்டித்து மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. விமான நிலையத்தின் கட்டுமானம் விமான தளம் … Read more

போராட்டக்காரர்களால் அடித்து கொலை செய்யப்பட்ட அரசியல்வாதி : ஊடகங்களின் வகிபாகம் தொடர்பில் அமைச்சர் பகிரங்க கேள்வி

கடந்த ஆண்டு அரகலய போராட்டத்தின் போது ஊடகங்கள் ஆற்றிய பங்கு குறித்து அரசாங்கம்  கேள்வி எழுப்பியுள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் அரசியல்வாதிகளின் சொத்துக்கள் தாக்கப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் கொல்லப்பட்ட போது ஊடகங்கள் ஆற்றிய பங்கு தொடர்பில் தனக்கு கேள்விகள் இருப்பதாக ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் நேற்று (03.05.2023)  கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே குணவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார். இலங்கையில் ஊடக சுதந்திரம் இலங்கையில் ஊடக … Read more

ஜனாதிபதியின் இல்லத்துக்கு தீ வைத்த சம்பவம்! ஜெ. ஸ்ரீ ரங்காவிற்கு பிணையில் செல்ல அனுமதி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட வீடு எரிக்கப்பட்ட சம்பவத்தில் சந்தேகநபராக குறிப்பிடப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீ ரங்காவிற்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்றப்புலனாய்வு பிரிவினர் குற்றச்சாட்டு  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வீட்டுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களில் ஒருவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெ. ஸ்ரீ ரங்கா என குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்துக்கு தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.  கடந்த வருடம் ஜீலை 9ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க … Read more