மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அமெரிக்க தூதரக பேச்சாளார் விளக்கம்

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கை அதிகாரிகளுக்கு அமெரிக்காவினால் தடைவிதிக்கப்படுமா என்ற கேள்விக்கு இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் பதில் வழங்கியுள்ளது. இது தொடர்பில் ஆங்கில செய்தித்தாள் ஒன்று எழுப்பிய இந்த கேள்விக்கு பதிலளித்துள்ள அமெரிக்க தூதரகத்தின் பேச்சாளார் ஒருவர் கொழும்பில் அமைந்துள்ள தூதரகம், மற்றும் வெளிவிவகார திணைக்களம் தீவிரமாகவும் தொடர்ச்சியாகவும் இவ்வாறான விடயங்களை மீளாய்வு செய்து வருகின்றது.  அத்துடன் உலகளவில் இடம்பெறுகின்ற மனித உரிமை மீறல் செயற்பாடு  என்றும் அவர்  குறிப்பிட்டுள்ளார். இருதரப்பு இணைப்பு இலங்கையின் … Read more

ஆரம்ப துடுப்பாட்ட வீரராக விளையாட கிடைத்தது என்னை அடையாளப்படுததிக்கொள்ள கிடைத்த சிறந்த சந்தர்ப்பம்

ஆரம்ப துடுப்பாட்ட வீரராக விளையாடியதே என்னை சிறந்த துடுப்பாட்ட வீரராக அடையாளப்படுத்த மிகவும் பொருத்தமான இடத்தைக் கொடுத்ததாக புதுமுக வீரர் நிஷான் மதுஷ்க தெரிவித்துள்ளார். அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் முடிவில் இரட்டை சதத்தை பெற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். ‘என்னுடைய மூன்றாவது போட்டியிலேயே இரட்டை சதம் பெற்றதற்கு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். முன்பிருந்தே நான் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக துடுப்பாட்ட ம் செய்து கொண்டிருந்தேன். … Read more

சிலரின் போதையூட்டக்கூடிய கருத்துக்கள் தொடர்பாக மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் – கடற்றொழில் அமைச்சர்

பெரும்போக அறுவடையின் போது அரசாங்கத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட நெல்லை அரிசியாக்கி வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கும் நிகழ்வு, வேலனை பிரதேச செயலகத்தில் இன்று (28.04.2023) இடம்பெற்ற போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். வருமானம் குறைந்த மக்களுக்கு உதவும் முகமாக நாடு முழுவதும் 20 இலட்சம் குடும்பங்களை தெரிவு செய்து ஒரு குடும்பத்திற்கும் தலா 10 கிலோ எடையுடைய அரிசி பொதி வீதம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாரபட்சமற்ற விதத்தில் ஜனாதிபதி இந்த முடிவினை எடுத்துள்ளார். கிளிநொச்சி விவசாயிகளை … Read more

அரச ஊழியர்களுக்கு அனுமதி வழங்கும் சுற்றறிக்கை! நாடாளுமன்றில் வெளியான அறிவிப்பு

அரச ஊழியர்கள் தொடர்பிலான சுற்றறிக்கையொன்று அடுத்த வாரம் வெளியிடப்படும் என பொது நிர்வாக அமைச்சரான பிரதமர் தினேஷ் குணவர்தன அறிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்றைய தினம் (28.04.2023) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்ட அரச ஊழியர்களுக்கு தேர்தல் தொகுதிகளுக்கு அண்மித்த பிரதேசங்களிலுள்ள அரச நிறுவனங்களில் பணிபுரிய அனுமதி வழங்கும் சுற்றறிக்கை அடுத்த வாரம் வெளியிடப்படும். வழங்கப்படும் சந்தர்ப்பம் அத்துடன் தொலைதூர பிரதேசங்களில் இருந்து அரச நிறுவனங்களுக்கு … Read more

சுழற்பந்து வீச்சில் பிரபாத் ஜயசூர்ய உலக சாதனை..

இலங்கை சுழற்பந்து வீச்சாளர் பிரபாத் ஜயசூர்ய சர்வதேச டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளில் ஆகக்குறைந்த போட்டிகளில் 50 விக்கெட்டுக்களை வீழ்த்திய சுழற்பந்து வீச்சாளர் என்ற சாதனையை இன்று (28) பெற்றுள்ளார். இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் கடைசி நாளில் அயர்லாந்து வீரர் பால் ஸ்டிர்லிங்கை (Paul Stirling) தோற்கடித்து தனது 50வது டெஸ்ட் விக்கெட்டை பிரபாத் கைப்பற்றினார். இதன்படி பிரபாத் ஜயசூரிய 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 50 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை … Read more

மட்டக்களப்பில் புனரமைக்கப்பட்ட சிங்கள மகா வித்தியாலயம் மீளத் திறப்பு

மட்டக்களப்பு சிங்கள மகா வித்தியாலயம் மும்மொழிப் பாடசாலை நேற்று (27) கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்தினால் உத்தியோகபூர்வமாக மீள திறந்துவைக்கப்பட்டது. மட்டக்களப்பு கல்வி வலயத்தின் மண்முனை வடக்கு கோட்டத்திலுள்ள சிங்கள மகாவித்தியாலயம் கடந்த 30 வருடங்களாக நாட்டில் ஏற்பட்டிருந்த அசாதாரன சூழ்நிலை காரணமாக கடந்த 1990 ஆண்டு முதல் பூட்டப்பட்டிருந்த நிலையில் தற்போதய கிழக்கு மாகாண ஆளுநரின் முயற்சியினால் மீள் புனரமைக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டுள்ளது. 1954 ஆம் ஆண்டளவில் சிங்கள மொழிமூல கலவன் பாடசாலையாக ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலையில் … Read more

யாழிற்கு விரைந்துள்ள முக்கிய குழு! வீதிகளில் களமிறக்கப்பட்டுள்ள இராணுவத்தினர் (Photos)

ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும், ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்னாயக்க, இலங்கை இராணுவத் தளபதி விக்கும் லியனகே உள்ளிட்டோர் அடங்கிய குழு யாழ்ப்பாண மாவட்டத்திற்கு இன்று விஜயம் செய்துள்ளது.  2022/2023ஆம் ஆண்டின் காலபோக அரசாங்கத்தின் நெல் கொள்வனவு மற்றும் இருப்பினை விநியோகித்தல் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கான இரண்டாம் கட்ட அரிசி பகிர்ந்தளித்தல் நிகழ்வு இடம்பெற்று வருகின்றது. பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு இந்நிலையில் குறித்த நிகழ்வில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி பணிக்குழாம் … Read more

கடற்பரப்புகளிலும் பல இடங்களில் மழை

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது.  அடுத்த 24 மணித்தியாலத்துக்கான நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2023 ஏப்ரல் 28ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.மழை நிலைமை:நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. காற்று :நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்கிழக்கு முதல் கிழக்கு வரையான திசைகளிலிருந்து வீசக் கூடுவதுடன் … Read more

இலங்கையில் அதிநவீன எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்கும் சீனா

இலங்கையில் நாளந்தம் 4 தொன் கச்சா எண்ணெய் சுத்திகரிக்கக்கூடிய புதிய சுத்திகரிப்பு நிலையம் ஸ்தாபிக்கப்படவுள்ளது. சீன முதலீடாக இலங்கையில் ஸ்தாபிக்கப்படும் என இலங்கைக்கான சீன தூதுவர் தெரிவித்துள்ளார். இலங்கைக்கான சீனத் தூதுவர் மல்வத்து அஸ்கிரி மகாநாயக்க தேரர்களை நேற்று சந்தித்து ஆசி பெற்றதன் பின்னர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். இலங்கையில் தற்போதுள்ள கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் 60 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட மிகவும் பழமையானது. இதனால் புதிய தொழில்நுட்பத்துடன் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். … Read more

இலங்கை மத்திய வங்கியின் 2022 ஆம் ஆண்டிற்கான அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

இலங்கை மத்திய வங்கியின் 2022ஆம் ஆண்டிற்கான வருடாந்த அறிக்கை,மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவினால் நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் (27) நிதியமைச்சில் வைத்து கையளிக்கப்பட்டது. இலங்கை மத்திய வங்கியின் 73 ஆவது வருடாந்த அறிக்கையாக முன்வைக்கப்பட்டுள்ள இது 04 பிரதான பகுதிகளைக் கொண்டுள்ளது. அதன்படி, ஆண்டின் பொருளாதார விவகாரங்களின் நிலையை விளக்குகின்ற 08 அத்தியாயங்களையும், 30 புள்ளிவிபர அத்தியாயங்களையும் முதல் பகுதியில் உள்ளடங்குகின்றது. இரண்டாவது பகுதியானது, … Read more