நாடாளுமன்றத்தை கலைப்பதே ஒரே தீர்வு: ஜனாதிபதிக்கு ஏற்பட்டுள்ள அழுத்தம்

பொது தேர்தலை நடத்துவது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இதற்கமைய பொது தேர்தலை எதிர்வரும் ஆண்டு மார்ச் மாதத்துக்கு முன்னதாக நடத்துவது அரசியலமைப்புச் சட்டத்தின்படி சாத்தியமில்லை என்று தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி.புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். கேகாலை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தை கலைத்தல் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,“பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென்றால் ஜனாதிபதி நாடாளுமன்றத்தைக் கலைக்க வேண்டும். எமது அரசியலமைப்பின் பிரகாரம் அடுத்த வருடம் … Read more

இலங்கையில் முதலீட்டுக்கு உகந்த சூழலை உருவாக்கி, பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த துரித முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன – ஜனாதிபதி

இலங்கையில் முதலீட்டுக்கு உகந்த சூழலை உருவாக்கி பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த துரித முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார். இன்று (20) முற்பகல் ஹெவ்லொக் சிட்டி, மிரேகா டவர் வர்த்தக மற்றும் அலுவலக கட்டிடத் தொகுதி ((Mireka Tower) திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். முதலீட்டுக்காக பாரிய கொழும்பு பொருளாதார ஆணைக்குழுவினால் அறிமுகப்படுத்தப்பட்ட சட்ட கட்டமைப்புகளை மீண்டும் செயற்படுத்தி தற்போதைய மெதுவான செயற்பாடுகளுக்குப் பதிலாக செயற்திறன்மிக்க … Read more

தொழில்முனைவர்களுக்குக் காணப்படும் தடைகளை நீக்குவதற்கு புதிய கொள்கைக் கட்டமைப்பு

இந்நாட்டில் உள்ள தொழில்முனைவர்களுக்குத் தற்பொழுது காணப்படும் தடைகளை நீக்கி புதிய கொள்கைக் கட்டமைப்பை உருவாக்க சம்பந்தப்பட்ட சகல நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து இரண்டு வாரங்களுக்குள் ஆரம்பகட்டப் பேச்சுவார்த்தைகளை ஏற்பாடு செய்யமாறு குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால கொள்கைத் தயாரிப்புக்கான முன்னுரிமைகளை அடையாளம் காண்பதற்கான தேசிய பேரவையின் உப குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ நாமல் ராஜபக்ஷ நேற்றையதினம் (19), மனிதவலு மற்றும் வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அனுஷா கோகுலவுக்குப் பணிப்புரை வழங்கினார். பாடசாலை கல்வியிலிருந்தே தொழில்முனைவு … Read more

இழக்கப்பட்ட நிதியை மீண்டும் அறவிடுவதற்கான அதிகாரம்

அரசாங்க நிதியை துஷ்பிரயோகம் செய்த அதிகாரிகள், அவ்வாறு செய்வதற்குத் தீர்மானித்த அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளிடமிருந்து இழக்கப்பட்ட நிதியை மீண்டும் அறவிடுவதற்கான அதிகாரம் அரசாங்க கணக்குகள் பற்றிய குழு மற்றும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு ஆகியவற்றுக்கு வழங்கப்பட வேண்டும் என பொதுநிர்வாக சேவைகள் சங்கம் பரிந்துரை  • குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால கொள்கைத் தயாரிப்புக்கான முன்னுரிமைகளை அடையாளம் காண்பதற்கான உபகுழுவில் கலந்துரையாடப்பட்டது   அரசாங்க நிதியைத் துஷ்பிரயோகம் செய்த அதிகாரிகள், அவ்வாறு துஷ்பிரயோகம் செய்வதற்குத் … Read more

மேல் மாகாண மக்களுக்கு அவசர அறிவித்தல்

நாட்டில் ஏற்பட்டுள்ள மழையுடன் கூடிய காலநிலை மாற்றத்தால் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார். மேல் மாகாணத்திலே அதிகளவான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். வழங்கப்பட்ட தரவுகளின்படி 61,391 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் கண்டி, காலி, யாழ்ப்பாணம், கேகாலை, புத்தளம் மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் இருந்தும் அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. டெங்கு நோயாளர்களின் … Read more

இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் பச்சை நிற ஆப்பிள் பழத்தின் முதல் அறுவடை ஜனாதிபதியிடம் கையளிப்பு

இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் பச்சை நிற ஆப்பிள் பழத்தின் முதல் அறுவடை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இன்று (20) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது. எம்.பி. லக்ஷ்மன் குமார எனும் விவசாயியே கல்கமுவ, தம்புத்தேகம பிரதேசத்தில் இரண்டு ஏக்கர் காணியில் இந்த ஆப்பிள் விளைச்சலை மேற்கொண்டுள்ளார். மேற்படி விவசாயிடம் பயிர்ச்செய்கை தொடர்பில் தகவல்களைக் கேட்டறிந்த ஜனாதிபதி, ஆப்பிள் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படுவதை நேரில் வந்து பார்ப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் கூறினார். ஆப்பிள் விதைகளை இந்நாட்டுக்கு எடுத்து வந்து பரிசோதனைக்கு … Read more

‘செய்கடமை’ கொவிட் 19 – சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது

‘செய்கடமை’ ‘கொவிட் 19 – சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தை முடிவுக்குக் கொண்டுவர அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய ‘கொவிட் 19- சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின்’ பேரில் இலங்கை வங்கியில் பேணப்பட்டு வந்த 85737373 என்ற உத்தியோகபூர்வ கணக்கு 2022ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 18ஆம் திகதியின் பின்னர் செயற்படாது என சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் செயலாளர் கலாநிதி.தாரக்க லியனபத்திரன தெரிவித்தார். எனவே அதில் பணம் வைப்பிலிட வேண்டாம் என்றும் இந்தக் கணக்கில் வைப்பிலிடுவதற்காக … Read more

இலங்கைக்கு வரும் வெளிநாட்டு அழகிகள்! டயானா கமகேவின் அதிரடி அறிவிப்பு

80 நாடுகளைச் சேர்ந்த அழகிகளில் இலங்கைக்கு வருகைத் தரவுள்ளனர்.  80 அழகிகள் இவ்வாறு இலங்கைக்கு வருகைத் தரவுள்ளதாக சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார்.  மிஸ் டூரிசம் வேர்ல்ட் மிஸ் டூரிசம் வேர்ல்ட் இறுதிப்போட்டி டிசம்பர் 8 முதல் 21 வரை கொழும்பில் நடைபெறவுள்ளது. சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர்  டயானா கமகே தலைமையில் நாட்டின்   சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக  இந்த நிகழ்வு  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 80 நாடுகளிலிருந்து வரும் அழகிகள் 2 வாரங்கள் நாட்டில் தங்கியிருப்பார்கள் எனவும் … Read more

உலகை அதிர்ச்சியில் ஆழ்த்திய பாபா வாங்கா!! முன்கூட்டியே கண்டறிந்த பேரழிவுகள் – நிதர்சனமான உண்மைகள்(Video)

நாம் வாழும் இந்த பரந்த உலகம், இயற்கை எமக்கு கொடுத்த, ஆச்சர்யமூட்டும், திகிலூட்டும் மர்மங்கள் நிறைந்த ஒரு அதிசய பரிசு என்று கூறலாம். நாளுக்கு நாள் எம்மை வியக்க வைக்கும் அதிசயங்களும், ஆச்சர்யங்களும், விடை தெரியா மர்மங்களும் எம்மை வியக்க வைத்துக் கொண்டிருக்கின்றன. ஆனால், எதிர்காலத்தில் நடக்கப் போகின்ற அசம்பாவிதங்களை எதிர்வுகூறுபவர்களை நம்புவது என்பது சற்று கடினம். காலத்திற்கு காலம் இவ்வாறு நடக்கப்போகின்றது என்று பலர் கூறுவதுண்டு.. ஆனால் அவற்றில் அரைவாசி பேர் தங்களது சுய விளம்பரத்திற்காக … Read more

2022 ரி 20 உலகக் கிண்ணம்: சூப்பர் 12 சுற்றுக்கு இலங்கை அணி தகுதி

2022 ரி 20 உலகக் கிண்ண போட்டியில் நெதர்லாந்து அணியை 16 ஓட்டங்களால் தோல்வியடைய செய்து, இலங்கை அணி 16 அணிகள் விளையாடும் சுப்பர்-12 சுற்றில் (பிரதான சுற்றுக்கு) விளையாட தகுதி பெற்றுள்ளது. அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னில் ஜீலோங்கில் இன்று (20) காலை 9.30 ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதற்கமைய, 20 ஓவர்கள் நிறைவில் இலங்கை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 162 ஓட்டங்களை பெற்றது. இலங்கை … Read more