மாகாண சபை தேர்தலை விரைவுபடுத்த ஒன்றிணையுமாறு அமைச்சர் டக்ளஸ் பகிரங்க அழைப்பு

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதை விரைவுபடுத்தும் நோக்கில் தமிழ் தரப்புக்கள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அழைப்பு விடுத்துள்ளார். இதன்மூலம் மாகாண சபைகளுக்கான தேர்தலை விரைவுபடுத்த முடியும் எனவும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், “தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஸ் குணவர்த்தன ஆகியோர் அனைத்து தரப்புக்களையும் ஒன்றிணைத்து செயற்படுத்துவதற்கான ஆர்வத்தினை வெளியிட்டு வருகின்றனர். இந்த அரசியல் சூழலை தமிழ் தரப்புக்கள் … Read more

வர்த்தக அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் முதலாவது கூட்டத்தில் பல்வேறு ஆண்டறிக்கைகள் ஆராய்வு

வர்த்தக, வணிக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் கௌரவ நளின் பெர்னாந்து தலைமையில் கடந்த வாரம் நடைபெற்ற வர்த்தக அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் முதலாவது கூட்டத்தில் ஆறு வருடாந்த அறிக்கைகள் குறித்து ஆராயப்பட்டன. கூட்டுறவு மொத்தவிற்பனை நிறுவனத்தின் 2017-2018ஆம் ஆண்டுக்கான வருடாந்த கணக்கறிக்கை, பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகாரசபையின் 2016 மற்றும் 2020ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை, இலங்கை ஒத்தியல்பு மதிப்பீட்டுக்கான தராதர அங்கீகார சபையின்  2020ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கைகள் என்பன இவற்றில் உள்ளடங்குகின்றன. இங்கு கருத்துத் … Read more

பௌத்த மத விரோத செயற்பாடுகளில் ஈடுபடும் பிக்குமார் தொடர்பில் தலைமை பிக்குமாருக்கு அறிவிக்க அமைச்சின் தலையீட்டுடன் புதிய வேலைத்திட்டம்

பௌத்த குருமாருக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சட்டத்தை நிலைநாட்டுவதற்கு அமைச்சின் ஒருங்கிணைப்புடன் பொலிஸ் ஊடாக சம்பந்தப்பட்ட பீடங்களின் தலைமை பிக்குமாருக்குத் தெரியப்படுத்துவதற்கும், பொதுவான சட்ட நடவடிக்கைக்கு மேலதிகமாக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கான பொறிமுறையொன்றைத் தயாரிக்குமாறு முன்மொழிவதாக அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்தார். தலைமை பிக்குமாரின் வழிகாட்டுதலின் கீழ் எதிர்காலத்தில் இந்தப் பிரச்சினையை கையாள்வதற்காக தனியான கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கான அதிகாரங்கள் கொண்ட புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். குறைந்த வயதில் சிறுவர்களை துறவறம் புகச் … Read more

மன்னார் மாவட்டத்தில் இம்முறை  57 ஆயிரம் ஏக்கரில் பெரும்போக செய்கை

மன்னார் மாவட்டத்தில் 2022-2023 ஆம் ஆண்டுக்கான பெரும்போக விவசாய நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட நீர்ப்பாசன திணைக்களத்தின் பணிப்பாளர் எஸ்.ஜோகராசா  தெரிவித்துள்ளார்.  பெரும்போக விவசாய நடவடிக்கைகளுக்காக கடந்த 24ம் திகதி கட்டுக்கரை குளத்தில் இருந்து சிறு குளங்களுக்கு நீர்  திறந்துவிடப்பட்டுள்ளது.  கட்டுக்கரை குளத்தின் நீர்ப்பாசனத்தின் கீழ் 31,339 ஏக்கரிலும், மன்னார் மாவட்டம் முழுவதும் சுமார் 57 ஆயிரம் ஏக்கரிலும் பெரும்போக நெற்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளது.  மன்னார் மாவட்டத்தில் நானாட்டான், மடு, மன்னார், மாந்தை மேற்கு, முசலி ஆகிய பிரதேச … Read more

இந்தியப் பல்கலைக்கழகங்களின் பட்டதாரிகளையும் பட்டதாரி நியமனங்களில் உள்வாங்குவதற்கு தீர்மானம்

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட இந்தியப் பல்கலைக்கழகங்களின் பட்டதாரிகளையும் பட்டதாரி நியமனங்களில் உள்வாங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் (27) பிரதமர் தினேஸ் குணவர்த்தன மற்றும் கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜெயந்த ஆகியோருடன் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் கலந்துரையாடப்பட்ட நிலையில் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த கால யுத்த அனர்த்தம் காரணமாக இடம்பெயர்ந்து இந்தியாவில் தங்கியிருந்த காலப்பகுதியில், இந்தியப் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்று பட்டதாரிகளானவர்கள், யுத்தம் நிறைவடைந்த பின்னர் தங்களின் சொந்த இடங்களுக்கு திரும்பியுள்ளனர். அவ்வாறானவர்கள், அண்மைய … Read more

அமெரிக்காவில் சாலை விபத்தில் சிக்கி இந்திய மாணவர்கள் 3 பேர் பலி..!

அமெரிக்கா – நியூயோர்க் நகரில் இடம்பெற்ற கார் விபத்தில் மூன்று இந்திய மாணவர்கள் பலியான நிலையில், ஐந்து பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர்கள் பிரேம்குமார் ரெட்டி கோடா (27), பவானி குல்லப்பள்ளி (22) மற்றும் சாய் நரசிம்ம பட்டம்செட்டி (22) என இந்திய துணைத் தூதரகத்திற்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் சென்ற கார் மற்றொரு வாகனத்தின் மீது மோதியதில்  மூவரும் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக பெர்க்ஷயர் மாவட்ட வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 5 பேர் … Read more

அரச நிறுவனங்களின் செயற்திறனை அளவிடுவதற்கு பிரதான செயல்திறன் குறிகாட்டி (KPIs)

அரச நிறுவனங்களின் செயற்திறனை அளவிடுவதற்கு பிரதான செயல்திறன் குறிகாட்டிகளை (KPIs / Key Performance Indicators) அறிமுகப்படுத்த பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ நாமல் ராஜபக்ஷ தலைமையில் அண்மையில் (26) கூடிய குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால கொள்கைத் தயாரிப்புக்கான முன்னுரிமைகளை அடையாளம் காண்பதற்கான தேசிய பேரவையின் உப குழுவில் தீர்மானிக்கப்பட்டது. அரச பொறிமுறையை மிகவும் பயனுள்ளதாகவும் வினைத்திறனாகவும் மாற்றுவதற்கு அரச நிறுவங்கள் மற்றும் அரச அதிகாரிகளின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்கான அளவீடுகளை தயாரிக்கும் தேவை குறித்து குழுவில் … Read more

நலன்புரி வசதிகளைப் பெறத் தகுதியானவர்களை தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்களை ஏற்கும் பணிகள் பூர்த்தி.

“எவரையும் கைவிடாதீர்’’ என்ற தொனிப் பொருளில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் பணிப்புரையின் பேரில் ஆரம்பிக்கப்பட்ட, குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நலன்புரி வசதிகளை வழங்கும் துரித வேலைத் திட்டத்திற்கு தகுதியானவர்களைத் தெரிவுசெய்வதற்கான விண்ணப்பங்களை ஏற்கும் பணிகள் இன்றுடன் (28) நிறைவடைந்திருப்பதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. அரசாங்கத்தின் நலன்புரி உதவிகளை எதிர்பார்த்து, இதுவரை 2.4 மில்லியன் விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. நலன்புரி உதவிகளைப் பெறுவதற்கு தகுதியானவர்களென அடையாளம் காணப்பட்டுள்ள 70 சதவீதமானவர்களின் … Read more

நெல் விவசாயிகளுக்கு 50 கிலோ யூரியா பத்தாயிரம் ரூபாவுக்கு வழங்க நடவடிக்கை.

உலக வங்கியின் 110 மில்லியன் அமெரிக்க டொலர் துரிதக் கடன் திட்டத்தின் கீழ் 13,000 டொன் யூரியாவின் ஒரு பகுதி இன்று (28) விவசாய அமைச்சிடம் கையளிக்கப்பட்டது. • உலக வங்கியின் சலுகை அடிப்படையில் 13,000 டொன் யூரியா நாட்டிற்கு கிடைத்துள்ளது. இதனடிப்படையில் நெற் பயிர்ச்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு 50 கிலோ கிராம் நிறையுடைய யூரியா மூடையை 10,000 ரூபாவுக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலையீட்டில் முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடல்களின்போது முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கமையவே … Read more