இலங்கையில் இளம் வயதினர் மத்தியில் எயிட்ஸ் அதிகரிப்பு

கடந்த ஆண்டில் 439 எயிட்ஸ் நோயாளிகள் பதிவாகியுள்ளதாக தேசிய எயிட்ஸ் தடுப்பு திட்டத்தின் பணிப்பாளர் டொக்டர் ரசாஞ்சலி ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார். இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் 20 எச்.ஐ.வீ தொற்றாளிகள் பதிவாகியுள்ளனர். இதில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் 20 முதல் 49 வயது வரையிலானவர்கள். கடந்த காலங்களை விடவும் இளம் வயதினர் எயிட்ஸ் நோய்த் தொற்றுக்கு உள்ளாகும் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் அதிகரித்து என டொக்டர் ரசாஞ்சலி தெரிவித்துளார். மேல் மாகாணத்தில் கூடுதல் தொற்றாளர்கள் பதிவு இது ஓர் ஆபத்தான … Read more

INSEE Cement இலங்கையில் இரத்த சோகை சிறுநீரக நோயாளிகளுக்கு 10,000 EPO

இலங்கையின் மிகப்பெரிய மற்றும் முன்னணி சீமெந்து உற்பத்தியாளரான INSEE Cement, இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடியின் விளைவாக ஏற்பட்டுள்ள மருந்துப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக 10,000 Erythropoietin (EPO) தடுப்பூசிகளை  சுகாதார அமைச்சிடம் கையளித்துள்ளது. நாட்டின் கிராமப்புறங்களில் பரவலாக காணப்படும் சிறுநீரக நோயால் (Chronic Kidney Disease) பாதிக்கப்பட்ட நோயாளர்களுக்கு இரத்த சோகைக்கு சிகிச்சையளிப்பதன் அவசியம் குறித்து சுகாதார அமைச்சின் அவசர கோரிக்கைக்கு இணங்க, ரூபா 40 மில்லியன் பெறுமதியான இந்த நன்கொடை இலங்கை INSEE Cement … Read more

முடிந்தால் பெரும்பான்மையை நிரூபித்து காட்டுங்கள் – ரணிலுக்கு மைத்திரி சவால்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமித்ததன் மூலம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, அரசியலமைப்பை மீறியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றம் சுமத்தியுள்ளார் பெரும்பான்மை பலமுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை பிரதமராக நியமிக்க வேண்டும் என்று அரசியல் சாசனத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார். முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவால் வெற்றிடமான பதவியை ஏற்க ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருக்கு அழைப்பு விடுத்ததன் மூலம் ஜனாதிபதி கோட்டாபய ​​ராஜபக்ச அரசியலமைப்பை மீறியதாக … Read more

தன்னை முகம் சுளிக்கும் வகையில் கேலி செய்தவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த ஹிருணிகா

தனது மார்பகங்கள் குறித்து பெருமைப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார். இன்று நடத்தப்பட்ட போராட்டத்தின் போது சிலர் அவரது மார்பகங்களை கேலி செய்துள்ள நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். தனது பேஸ்புக் பதிவில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அந்த பதிவில் தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளதாவது, “என் மார்பகங்களைப் பற்றி நான் பெருமைப்படுகிறேன்! நான் மூன்று அழகான குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுத்தேன். நான் அவர்களை வளர்த்து, அவர்களுக்கு ஆறுதல் அளித்து, என் முழு உடலையும் அவர்களுக்காக … Read more

அடுத்த வாரம் முதல் ,கொழும்பு மக்களுக்கு குறைந்த விலையில் அரிசி

நெல் சந்தைப்படுத்தும் சபையினால் தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்படும் ‘PMB அரிசி’யை (PMB Rice)  அடுத்த வாரம் கொழும்பு மக்களுக்கு விற்பனை செய்ய ,விவசாய மற்றும் வனவிலங்குகள் பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.  இந்த அரிசி 5 மற்றும் 10 கிலோவாக பொதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் என்று விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பில் பல இடங்களில் அவற்றை விற்பனை செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், கொழும்பில் 200,000 அரிசி பொதிகளை விற்பனை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

கடும் பொருளாதார நெருக்கடியில் இலங்கை – இந்தியா வழங்கியுள்ள உறுதி

இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு இலங்கைக்கு முழு ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்குவதாக உறுதியளித்துள்ளார். நிர்மலா சீதாராமன், இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொடவை திங்கள்கிழமை சந்தித்தபோது, ​​அந்த உறுதிமொழியை வழங்கினார். “இலங்கையில் பொருளாதார மீட்சிக்கான முழு ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்குவதாக இந்திய நிதியமைச்சர் உறுதியளித்தார்” என்று இலங்கை உயர்ஸ்தானிகராலயம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. 55 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் உதவி  பொருளாதார நெருக்கடியைக் கருத்தில் கொண்டு இந்தியாவின் பொருளாதார ஒத்துழைப்பு … Read more

தென்கிழக்கு ஆசிய வலய நாடுகளின் தூதுவர்கள் , உயர்ஸ்தானிகர்கள் ஜனாதிபதியை சந்தித்தனர்…

தென்கிழக்கு ஆசிய வலய நாடுகளின் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்களை சந்தித்தனர். இன்று (22) பிற்பகல் கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. தற்போதைய பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கு தென்கிழக்கு ஆசியப் பிராந்தியத்தில் உள்ள நாடுகள் இலங்கைக்கு வழங்கிய ஆதரவையும் உதவியையும் ஜனாதிபதி அவர்கள் பாராட்டினார். புவியியல் நெருக்கத்தின் அடிப்படையில் இலங்கைக்கும் பிராந்திய நாடுகளுக்கும் இடையிலான சுற்றுலா, முதலீட்டு வாய்ப்புகள், விவசாய அபிவிருத்தி, கல்வி மற்றும் ஏனைய பல்வேறு துறைகள் குறித்து … Read more

மெல்போர்ன் இலங்கை தூதரகத்தினால் புதிய மென்பொருள் செயலி அறிமுகம்

அவுஸ்திரேலியாவின் விக்டோரியாஇ தெற்கு அவுஸ்திரேலியா மற்றும் தஸ்மேனியா மாகாணங்களில் உள்ள இலங்கையர்களுக்கு வினைத்திறனான தூதரக சேவைகளை வழங்குவதற்காக, மெல்பேர்னில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் டிஜிட்டல் தூதரக முகாமைத்துவ அமைப்பை நடைமுறைப்படுத்தியுள்ளது. தூதரகத்தின் செலவுகளைக் குறைப்பதற்காக இந்த செயலி  “App” இனை அறிமுகம் செய்துள்ளதுடன், மேலும் அரசாங்கக் கொள்கைக்கு இணங்க சிறந்த சேவையை வழங்கவும் எதிர்பார்த்துள்ளது. மெல்போர்னில் உள்ள துணைத் தூதரகம் குறைந்த பணியாளர் குழு மூலம் மாதத்திற்கு சுமார் 150 கடவுச்சீட்டு விண்ணப்பங்கள், பிறப்புப் பதிவுக்கான … Read more

வீதியில் வாகனத்தை நிறுத்தி எரிவாயு பெறும் பொலிஸ் அதிகாரி

சமையல் எரிவாயு ஏற்றிச் சென்ற வானகத்தை சாலையில் நிறுத்தி பொலிஸ் அதிகாரி ஒருவர் சமையல் எரிவாயுவை பெற்றுக்கொள்வதுபோன்ற காணொளி ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. குறித்த காணொளி தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக எரிபொருள், எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்வதில் மக்கள் கடும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.  லிட்ரோ நிறுவனத்தின் அறிவிப்பு  இந்த நாட்களில் சமையல் எரிவாயுவிற்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகின்றது. பொதுச் சந்தைக்கு எரிவாயு விநியோகிப்பதை லிட்ரோ நிறுவனம் … Read more

சிறுவர்களுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் அனைவரும் அக்கறையுடன் செயற்படவேண்டும்

சிறுவர்களுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் அனைவரும் அக்கறையுடன் செயற்படவேண்டும் என திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான B. H. N. ஜயவிக்ரம அறிவுறுத்தியுள்ளார். மாவட்ட சிறுவர் அபிவிருத்திக் கூட்டம் இன்று (22) மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற போதே அரசாங்க அதிபர் இவ்வாறு தெரிவித்தார். பிரதேச செயலக ரீதியாக சிறுவர்களது நலன்கள் மற்றும் தேவைகள் குறித்து விரிவாக ஆராயப்படல் வேண்டும்.சிறுவர்கள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படல் தொடர்பான சம்பவங்கள் மாவட்டத்தில் பதிவாகின்றன.இதற்கான காரணங்களைக் கண்டறிந்து அவற்றை முற்றாக இல்லாதொழிக்கும் வகையில் பொறுப்பு … Read more