முதல் ரி20 போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றி

சுற்றுலா  இந்திய மகளிர்  மற்றும் இலங்கை மகளிர் கிரிக்கெட்அணிகளுக்கிடையிலான  மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரில் இந்திய மகளிர்  அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கும் இலங்கை அணிக்குமிடையில் மூன்று T 20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் இடம்பெறவுள்ளன. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் T20 ஓவர் போட்டி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று (23) நடைபெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் … Read more

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான தகவலை வெளியிட்ட சர்வதேச நாணய நிதியம்

இலங்கைக்கு ஆதரவளிப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளார். இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தினால் நியமிக்கப்பட்ட பிரதிநிதிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்தனர். இந்த சந்திப்பு இன்று பிற்பகல் கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது. ஜனாதிபதியுடன் சந்திப்பு பிரதிநிதிகள் குழு இலங்கையில் ஒரு வார காலம் தங்கியிருந்து பணியாளர் மட்ட உடன்படிக்கையை எட்டுவது தொடர்பான கொள்கைகள் மற்றும் பிரச்சினைகள் குறித்து நீண்ட ஆய்வு செய்து வருகின்றனர். தற்போதைய நிலைமை குறித்து பிரதமர், … Read more

நாடு முழுவதும் 2.30 மணி நேர மின் துண்டிப்பு

நாடு முழுவதும் ஜூன் 24 முதல் 26 வரை 2.5 மணி நேரம் வரை மின் துண்டிப்பு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது மேலும் ஜூன் 22, 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் காலை 9.30 மணி முதல் 10 மணி வரை 2.5 மணித்தியாலங்கள் வரை மின் துண்டிப்பு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் (A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W) ஜூன் 24ஆம் தேதி மதியம் 12.00 … Read more

அனைத்து ஊழியர்களின் விடுமுறைகளும் இரத்து! வெளியானது அறிவிப்பு

உர விநியோகத்தை எளிதாக்கும் வகையில் விவசாய அமைச்சின் கீழ் உள்ள அனைத்து நிறுவனங்களின் ஊழியர்களின் விடுமுறையும் ஜூலை 06 முதல் 15 வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது. இந்திய அரசினால் வழங்கப்பட்ட 65,000 மெற்றிக் தொன் யூரியா உரம் ஏற்றிச் செல்லும் கப்பல் எதிர்வரும் 6ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளது. விவசாயிகளுக்கு உரம் விநியோகம்  எதிர்வரும் ஜுலை 7ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் உள்ள கமநல அபிவிருத்தி நிலையங்களுக்கு இந்த உரம் கொண்டு செல்லப்பட்டு … Read more

இன்று முதல் 74 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக சுகாதாரப் ஊழியர்களுக்கு எரிபொருள்

நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக சுகாதார ஊழியர்களுக்கு எரிபொருள் வழங்கும் வேலைத்திட்டம் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. எரிபொருளைப் பெறுவதற்குத் தேவையான சுகாதாரப் ஊழியர்கள் தாங்கள் பணிபுரியும் மருத்துவமனை நிர்வாகத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. பதிவு செய்த சுகாதார ஊழியர்களுக்கு மாத்திரம் இன்று முதல், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் எரிபொருள் விநியோகிக்கப்படும். இந்த எரிபொருள் விநியோகம் தேர்ந்தெடுக்கப்பட்டு 74 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக விநியோகிக்கப்படும் என்று சுகாதார அமைச்சு … Read more

மட்டக்களப்பு முகத்துவாரம் விரிவாக்கம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் ஆற்று வெள்ளப் பெருக்கினால் வயற்காணிகளில் ஏற்பட்ட வெள்ள நீரை வெளியேற்றும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தனின் தலைமையில், மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் அண்மையில்  இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் ,மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆற்றுவெள்ளம் பெருக்கெடுத்துள்ளதனால் 5000 ஏக்கருக்கு மேற்ப்பட்ட வயல்கள் வெள்ளத்தில் மூழ்கியமை சுட்டிக்காட்டப்பட்டது. ஆற்றுவெள்ளத்தை அகற்றாவிடின் விவசாயிகள் பாரிய நட்டத்தினை எதிர்நோக்கவேண்டிய நிலையில் உள்ளனர் என மாவட்ட விவசாயிகள்மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத் தலைவர் … Read more

முல்லைத்தீவில் பல மாணவிகள் துஷ்பிரயோகம்! ஆசிரியர் – மாணவர் உள்ளிட்டோர் கைது: திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் பாடசாலை மாணவிகள் பலர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் ஆசிரியர் ஒருவரும் மாணவர்கள் பலரும் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர். ஆசிரியரும் மாணவரும் விளக்கமறியலில் இந்நிலையில், ஆசிரியரும் மாணவர் ஒருவரும் எதிர்வரும் 30ஆம்  திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.   சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் சுமார் பதினேழு பதினெட்டு வயதை உடைய ஆறு மாணவர்களையும் நீதிமன்றத்தில் பொலிஸார்  முன்னிலைப்படுத்தியுள்ளனர்.   இதன் போது, மாணவர் ஒருவர் எதிர்வரும் 30.6.2022 வரை … Read more

இலங்கையில் 45 இலட்சம் பேருக்கு காத்திருக்கும் சிக்கல்! தொழில்வாய்ப்பு அற்றுப்போகும் அபாயம்

இலங்கையில் எதிர்காலத்தில், சிறு மற்றும் மத்தியதர கைத்தொழிலாளர்கள் உட்பட 45 இலட்சம் பேருக்கு தொழில்வாய்ப்பு அற்றுப்போகும் அபாய நிலை உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் பணிப்பாளர் லலந்த வதுதுர தெரிவித்துள்ளதுடன் தொழில் வாய்ப்புகள் இல்லாது போனால் என்ன நடக்கும் எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார். ஊடகமொன்றில் கருத்து தெரிவிக்கும் போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். 45 இலட்சம் தொழில்வாய்ப்புகள் மேலும் தெரிவிக்கையில், 45 இலட்சம் தொழில்வாய்ப்புகள் தொடர்பில் நான் இங்கு கருத்து … Read more

அடுத்த வார பாடசாலை நடவடிக்கை: இறுதித் தீர்மானம் வார இறுதியில்

போக்குவரத்து சிக்கல் இல்லாத கிராமப்புற ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பாடசாலை வருகை இந்த வாரம் சிறந்த மட்டத்தில் காணப்பட்டதாக கல்வி அமைச்சர் சுசில் பிறேம் ஜயந்த தெரிவித்துள்ளார். இதேவேளை ,அடுத்த வாரம் பாடசாலை கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் இந்த வார இறுதிப் பகுதியில் தீர்மானிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார். நாடு முழுவதிலும் உள்ள பத்தாயிரத்து 193 பாடசாலைகளில் 9 ஆயிரத்து 567 பாடசாலைகளை இந்த வாரம் இயங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. கடந்த வருடங்களில் பாடசாலை … Read more