ஜாதி, மத அரசியலுக்கு எதிரான படம்: இறைவன் மிகப் பெரியவன் பற்றி அமீர் விளக்கம்

நீண்ட இடைவெளிக்கு பிறகு அமீர் இயக்கும் படம் இறைவன் மிகப் பெரியவன். இதன் கதையை வெற்றிமாறன், எழுத்தாளர் தங்கம் இணைந்து எழுதியிருக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார், ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் துவக்க விழா நேற்று நடந்தது. இதில் அமீர் பேசியதாவது: பாரதிராஜா நிறைய கதைகளை வெளியில் வாங்கி படம் இயக்குவார். ஆனால் எல்லோரும் அவர் கதை என நினைப்போம். ஆனால் இன்றைய காலகட்டத்தில் வேறொருவரின் கதையை செய்தால் கொஞ்சம் சினிமாவில் ஒரு மாதிரியாக … Read more

அவருக்கு ஏங்க நன்றி சொல்லல? கோப்ரா பட இயக்குநரை விளாசிய பிரபல இயக்குநர்!

டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற வெற்றி படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து , தற்போது ’ கோப்ரா ’ படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் விக்ரம் ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தில், ஸ்ரீநிதி ஷெட்டி, மியா, இர்பான் பதான், கே.எஸ்.ரவிக்குமார், ரோஷன் மேத்யூ, பத்மப்ரியா ஜானகிராமன், கனிகா, ஷாஜி சென் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். நடிகை சதா இப்போ எப்படி இருக்கார் தெரியுமா… லேட்டஸ்ட் க்ளிக்ஸ்! இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இந்தப்படத்தை செவன் ஸ்கிரீன் … Read more

சிபிராஜின் 20வது படம் அறிவிப்பு

ஸ்டூடன்ட் நம்பர் ஒண் படத்தின் மூலம் 2003ம் ஆண்டு அறிமுகமான சிபிராஜ், திரைப் பயணத்தில் தனது 20வது ஆண்டை நெருங்குகிறார். இந்த நிலையில் அவரது 20வது படம் பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த திரைப் பயணத்தில் ஜோர், மண்ணின் மைந்தன், வெற்றிவேல் சக்திவேல், கோவை பிரதர்ஸ், லீ, நாய்கள் ஜாக்கிரதை, நாணயம், ஜாக்சன் துரை, சத்யா, கட்டப்பாவ காணோம், கபடதாரி, வால்டர் படங்கள் முக்கியமானவை. தற்போது மாயோன், ரேன்ஞர், வட்டம் படங்களில் நடித்து வருகிறார். சிபிராஜின் … Read more

தனுஷிடம் இருந்து வந்த நல்ல செய்தி..ரசிகர்களுக்கு குட் நியூஸ்..!

நடிகர் தனுஷ் தற்போது ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்து வருகிறார். மாறன், திருச்சிற்றம்பலம் , நானே வருவேன், வாத்தி என படு பிஸியாக நடித்து வருகிறார். இதில் இவர் நடித்து முடித்துள்ள மாறன் திரைப்படம் விரைவில் OTT யில் வெளியாகவிருக்கிறது. இதையடுத்து தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகிக்கொண்டிருக்கும் வாத்தி திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் மூலம் தனுஷ் நேரடி தெலுங்கு படத்தில் அறிமுகமாகிறார். இந்நிலையில் கடந்தாண்டு மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் … Read more

புதிய வாரிசு அறிமுகம்

தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பனின் பேரனும், இயக்குனர் விஜய், நடிகர் உதயா ஆகியோரின் சகோதரி மகனுமான ஹமரமேஷ், ‛ரங்கோலி' என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார். மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. கோபுரம் ஸ்டுடியோஸ் சார்பாக கே.பாபுரெட்டி மற்றும் ஜி.சதீஷ்குமார் தயாரிக்கிறார்கள். இயக்குனர் வஸந்த்திடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த வாலி மோகன்தாஸ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகிறது. இதன் படப்பிடிப்பு வரும் மே மாதம் சென்னை, ஐதராபாத் மற்றும் கேரளாவில் … Read more

காதலர் தின கொண்டாட்டத்தில் திளைத்த ஐஸ்வர்யா: கடுப்பில் தனுஷ் ரசிகர்கள்..!

தனுஷுக்கும் கடந்த 2004ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் பரஸ்பரம் பிரிய உள்ளதாக அண்மையில் அறிவித்தது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியது. விவாகரத்து அறிவிப்பிற்கு பிறகு தனது வழக்கமான பணிகளுக்கு திரும்பிய ஐஸ்வர்யா மியூசிக் ஆல்பம் இயக்கும் வேளைகளில் இறங்கினார். இதற்காக ஐதராபாத்தில் தங்கி பணிகளில் ஈடுபட்டு வந்தார். இடையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஐஸ்வர்யா, அதன்பின்னர் சிறிது கால ஓய்விற்கு பின்னர் … Read more

சோனி லைவ் ஓடிடியில் வெளியாகும் விஷால் – ஆர்யாவின் ‘எனிமி’

நடிகர் விஷால் – ஆர்யாவின் ‘எனிமி’ ஓடிடியில் வெளியாகிறது. ‘அரிமா நம்பி’, ’இருமுகன்’, ‘நோட்டா’ படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விஷால் – ஆர்யா நடிப்பில் ’எனிமி’ கடந்த தீபாவளியையொட்டி வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்ற இப்படத்தில் வில்லனாக ஆர்யா நடித்திருந்தார். பிரகாஷ் ராஜ், மிர்ணாளினி ரவி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ’எனிமி’ வெளியாகி மூன்று மாதங்கள் ஆன பின்னும் டிஜிட்டல் உரிமை குறித்த அறிவிப்பு வெளியாகாமல் இருந்து வந்தது. இந்த நிலையில், ‘எனிமி’ படத்தின் தியேட்டர் … Read more

சசிகுமாரின் புதிய படம் அறிவிப்பு

இயக்குனரும், நடிகருமான சசிகுமார் தற்போது பகைவனுக்கு அருள்வாய், காமென்மேன் படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் அடுத்து நடிக்கும் படத்தை பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. கடந்த ஆண்டு அஞ்சல என்ற படத்தை இயக்கிய தங்கம் சரவணன் இயக்குகிறார். அனன்யா நாகல்லா, கருணாஸ், ராஜ்மோகன், அபிராமி ராகுல், ஜோ மல்லூரி உள்பட பலர் நடிக்கிறார்கள். கதாநாயகி தேர்வு நடந்து வருகிறது. சாம் சி.எஸ் இசை அமைக்கிறார், ராமி ஒளிப்பதிவு செய்கிறார். மோகன் தயாரிக்கிறார். படத்திற்கு இன்னும் … Read more

ஐஸ்வர்யாவின் செயலால் கடுப்பான தனுஷ்..முற்றும் மோதல்..!

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் விவாகரத்து செய்தி அனைவரும் அறிந்ததே. பல ஆண்டுகளாக நிலவி வந்த கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர் என்று தகவல்கள் வந்தன. இதுமட்டுமில்லாமல் இவர்களின் பிரிவிற்கு உண்மையான காரணம் தெரியாமல் பலபேர் பலவிதமான கருத்துக்களை சமூகத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். மேலும் இவர்கள் பிரிந்தாலும் இவர்களை சேர்த்து வைக்கும் பணிகளை இவர்களது குடும்பத்தினர் செய்து வருகின்றனர். குறிப்பாக தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா முழுமூச்சாக இவர்களை சேர்த்து வைக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். … Read more

நடிகர் மாதவனின் ‘ராக்கெட்ரி‘ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

மாதவன் இயக்கி, நடித்துள்ள ‘ராக்கெட்ரி : நம்பி விளைவு’ திரைப்படம், வரும் ஜூலை மாதம் 1-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரோவில் பணியாற்றிய விண்வெளி ஆராய்ச்சியாளர் நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து ‘ராக்கெட்ரி – நம்பி விளைவு’ என்ற படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தை முதலில் ஆனந்த் மகாதேவன் இயக்கியநிலையில் படத்திலிருந்து அவர் விலகினார். பின்னர், இந்தப் படத்தை நடிகர் மாதவனே இயக்கினார். இந்தப் படத்தின் மூலம் நடிகர் மாதவன் இயக்குநராக … Read more