4 தமிழக பாஜக எம் எல் ஏக்கள் அதிமுக போட்ட பிச்சை : முன்னாள் அமைச்சர்

விழுப்புரம் நேற்று அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் சி வி சண்முகம் விழுப்புரத்தில் தேர்தல் பிரசாரம் செய்துள்ளார். தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடித்து வருகிறது. வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் கட்ட தேர்தல் தமிழகத்தில் நடைபெற உள்ளது.  இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி, நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி நிலவுகிறது. அனைத்துக் கட்சிகளின் வேட்பாளர்கள் பட்டியலும் அறிவிக்கப்பட்டுள்ளன.  வேட்பு மனுத் தாக்கல் மும்முரமாக நடைபெற்று வருகிறது.  கட்சிகள் தங்கள் … Read more

நாளை பாமக தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறது.

சென்னை பாமக நாளை தனது தேர்தல் அறிக்கையை வெளியிட உள்ளது. நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக போட்டியிடுகிறது.  10 பா.ம.க. வேட்பாளர்களும் தங்களது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துவிட்டனர். நாளை நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பா.ம.க. வெளியிட உள்ளது. இன்று பா.ம.க. செய்தித்தொடர்பாளர் க.பாலு வெளியிட்டுள்ள அறிக்கையில், ”பா.ம.க.வின் நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை சென்னையில் நாளை (புதன்கிழமை) காலை 11 மணிக்கு வெளியிடப்படவுள்ளது. சென்னை தியாகராயர் நகரில் உள்ள … Read more

21 நாட்களாக நீடித்த உண்ணாவிரத போராட்டத்தை முடித்துக்கொண்ட காலநிலை ஆர்வலர்

லே: லடாக் யூனியன் பிரதேசத்திற்கு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தி, காலநிலை ஆர்வலரும் கல்வி சீர்திருத்தவாதியுமான சோனம் வாங்சுக், உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். அவரது போராட்டத்திற்கு ஆதரவாக ஏராளமான மக்கள் திரண்டனர். இந்நிலையில் சோனம் வாங்சுக் தனது உண்ணாவிரத போராட்டத்தை 21-வது நாளான இன்று முடித்துக்கொண்டார். பின்னர் பேசிய அவர், முதற்கட்ட உண்ணாவிரதப் போராட்டம் இன்றுடன் முடிவடைவதாகவும், ஆனால் தனது போராட்டம் முடிவுக்கு வரவில்லை என்றும் தெரிவித்தார். இந்த உண்ணாவிரதத்தின் முடிவு, போராட்டத்தின் புதிய கட்டத்தின் … Read more

மாரடைப்பால் நகைச்சுவை நடிகர் சேஷு மரணம்

சென்னை பிரபல தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகர் சேஷு  இன்று மாரடைப்பால் மரணம் அடைந்தார். விஜய் தொலைக்காட்சியின் “லொள்ளு சபா” என்கிற நகைச்சுவை நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நகைச்சுவை நடிகர் சேஷு  தற்போது சுமார் 60 வயதாகும் இவர் தனது தனித்துவமான நகைச்சுவை பாணியைக் கொண்டு ரசிகர்களைக் கவர்ந்தார். விஜய் தொலைக்காட்சியைத் தொடர்ந்து, ஏ1, வடக்குப்பட்டி ராமசாமி உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் சேஷு நடித்துள்ளார்.  நடிகர் சேஷு மாரடைப்பு காரணமாக, ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் 10 நாட்களுக்கு … Read more

பெண் வேடமிட்டு வழிபாடு செய்த ஆண்கள்: கேரள கோவிலில் வினோத வழிபாடு

திருவனந்தபுரம், கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கொட்டங்குளங்கரா ஸ்ரீதேவி கோவிலில் ஆண்கள் பாரம்பரிய உடையில் பெண்கள் போல அலங்கரித்துக்கொண்டு வந்து வழிபாடு செய்கிறார்கள். இது அங்கு நடக்கும் தனித்துவமான திருவிழா ஆகும். இந்த திருவிழா ஆண்டிற்கு 2 நாள் மட்டுமே நடைபெறும். மார்ச் 24ம் தேதி சனிக்கிழமை இந்த விழா தொடங்கியது. விழாவின் பாரம்பரிய சடங்குகள் ஞாயிற்றுக்கிழமை இரவு நிறைவுபெற்றது. ஆண்கள் தங்கள் மீசையை எடுத்துவிட்டு, பெண்களின் ஆடைகளை அணிந்து, நகைகளை அணிந்து, பெண் போல … Read more

“இதற்கே கூச்சப்பட்டால் எப்படி?” – யோகா மாஸ்டரின் சீண்டல்… கொலையில் முடிந்த கதை!

சென்னை யோகா மாஸ்டர் கொலையில், அவரிடம் பயிற்சி பெற்ற பெண்ணும், அவருடைய கணவருமே கைதாகியிருப்பது எதிர்பாராத ட்விஸ்ட்! சென்னை கானத்தூர், ரெட்டிகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் லோகநாதன். இவர், செம்மஞ்சேரியில் இருக்கும் மாநகராட்சி பூங்காவில் யோகா பயிற்சி அளித்துவந்தார். கடந்த 13-ம் தேதி முதல் லோகநாதன் திடீரென மாயமானதால், அவருடைய மகன் அஜய் போலீஸில் புகாரளித்தார். கிட்டத்தட்ட ஒரு வார கால விசாரணைக்குப் பிறகே அவர் கொலைசெய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. கொலையின் பின்னணி குறித்து கானத்தூர் போலீஸாரிடம் விசாரித்தோம். “புகார் … Read more

நாளைக்குள் பம்பரம் சின்னம் குறித்து முடிவு : தேர்தல் ஆணையத்துக்குக் கெடு

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் நாளைக்குள் மதிமுகவுக்குப் பம்பரம் சின்னம் வழங்குவது குறித்து முடிவு எடுக்கத் தேர்தல் ஆணையத்துக்குக் கெடு விதித்துள்ளது.  கடந்த டிசம்பர் மாதம் நாடாளுமன்ற தேர்தலில் பம்பரம் சின்னம் ஒதுக்கக்கோரித் தேர்தல் ஆணையத்திடம் அளித்த விண்ணப்பத்தை பரிசீலித்து சின்னம் ஒதுக்கத் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் ம.தி.மு.க. கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கு தலைமை நீதிபதி கங்கப்பூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் … Read more

கர்நாடக முன்னாள் முதல் மந்திரி குமாரசாமி மாண்டியாவில் போட்டி

பெங்களூரு, கர்நாடகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 26-ந் தேதி மற்றும் மே மாதம் 7-ந் தேதி என 2 கட்டமாக நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பா.ஜனதாவுடன் முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் ஜனதாதளம் (எஸ்) கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இந்த நிலையில், கர்நாடக முன்னாள் முதல் மந்திரி குமாரசாமி மாண்டியா தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாண்டியா தொகுதி பாஜக கூட்டணியில் உள்ள மதச்சார்பற்ற ஜனதா தள கட்சிக்கு ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. குமாரசாமியின் மகன் நிகில், … Read more

புதுமுகங்கள்… கடைசி நேர முடிவுகள்… பதற்றம்… சுதாரிக்கும் எடப்பாடி!

கிராமங்களில் ‘தும்பை விட்டு வாலைப் பிடித்த கதை…’ என்று ஒரு பழமொழி உண்டு. அதுபோலத்தான் நடந்திருக்கின்றன அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சமீபகால அரசியல் முடிவுகளெல்லாம். ஒரு விஷயத்தைக் கையிலிருக்கும்போது விட்டுவிட்டு, அது கைமீறிப் போன பின்பு அதன் வாலைப் பிடித்து ஓடுவதைப்போலத்தான் பல விஷயங்களில் முடிவெடுத்திருக்கிறார். தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாக, தான் எடுத்த வியூகங்களெல்லாம் சரியான பலனைக் கொடுக்காததால் கூட்டணி, தொகுதி, வேட்பாளர் தேர்வு எனக் கடைசி நேரத்தில் பல முடிவுகளை எடுத்திருக்கிறார் எடப்பாடி. … Read more

நிர்மலா சீதாராமன் கர்நாடகாவுக்குத் துரோகம் செய்தார் : சித்தரா மையா

பெங்களூரு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கர்நாடகாவுக்குத் துரோகம் செய்ததாக அம்மாநில முதல்வர் சித்தராமையா கூறி உள்ளார். மத்திய அரசு வறட்சி நிவாரண பணிகளுக்கு நிதி வழங்கவில்லை என்று உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. பெங்களூருவில் இது குறித்துப் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கர்நாடகத்திற்கு வழங்க வேண்டிய நிதி முழுமையாக வழங்கப்பட்டு விட்டதாகவும், நிதி வழங்கவில்லை என்று மாநில அரசு பொய் சொல்வதாகவும் கூறினார். முதல்வர் சித்தராமையா இதற்கு பதிலளித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மத்திய … Read more