கௌபாய் கெட்-அப்பில் சுயேட்சை; பாஜக வேட்பாளராக ஜான் பாண்டியன் – தென்காசி அப்டேட்!

ஏப்ரல் 19-ம் தேதி நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் தென்காசி மக்களவை தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியனும், அ.தி.மு.க. கூட்டணியின் சார்பில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியும் போட்டியிடுகின்றனர். இருகட்சித் தலைவர்கள் நேரடி போட்டியால் எதிர்பார்ப்பு கூடியிருக்கும் தென்காசி மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர் ஜான் பாண்டியன் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கல் தொடங்கிய நாளிலிருந்து யாரும் மனுதாக்கல் செய்யாத நிலையில், … Read more

மற்றுமொரு ஓ பன்னீர்செல்வம் ராமநாதபுரத்தில் போட்டி

ராமநாதபுரம் வேறு ஒரு ஓ பன்னீர் செல்வமும் ராமநாதபுரத்தில் இருந்து போட்டியிட உள்ளார்.  நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக்கூட்டணியில் அங்கும் வகிக்கும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகக் களமிறங்கும் ஓ. பன்னீர்செல்வம் சுயேச்சை சின்னத்தி ல் போட்டியிடுகிறார். ஓ.பன்னீர்செல்வம் ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் சென்று தேர்தல் நடத்து அதிகாரியிடம் வேட்பு மனுவை ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். மேலும் ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் … Read more

மாஸ்கோ தாக்குதலுக்கு உக்ரைன் மூளையாக செயல்பட்டிருக்கலாம்.. புதின் சந்தேகம்! தீவிரமடையும் போர்

மாஸ்கோ: கடந்த 22ம் தேதி இரவு ரஷ்யாவில் இசை கச்சேரி நடந்த அரங்கில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டிருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதில் 137 பேர் கொல்லப்பட்ட நிலையில் இதன் பின்னணியில் உக்ரைன் இருக்கலாம் என்று ரஷ்ய அதிபர் புதின் சந்தேகம் தெரிவித்துள்ளார். கடந்த 22ம் தேதி இரவில் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் ‘பிக்னிக்’ Source Link

ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக களமிறங்கிய `ஒ.பன்னீர்செல்வம்’ – பரபரக்கும் ராமநாதபுரம் தொகுதி!

முன்னாள் முதல்வரான ஓ.பன்னீர்செல்வம் பாஜக-வுடன் கூட்டணி சேர்ந்து நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க உள்ளார். ஆனால் அவர் அதிமுக-வின் பெயர், கொடி மற்றும் சின்னத்தை பயன்படுத்த நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனால் அவரை தாமரை சின்னத்தில் போட்டியிட பாஜக தரப்பில் வலியுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இதனை ஓ.பன்னீர்செல்வம் ஏற்கவில்லை. இதனால் பாஜக – பன்னீர்செல்வம் இடையே கூட்டணி ஒப்பந்தம் ஏற்படுவதில் இழுபறி நிலவியது. இந்நிலையில் ராமநாதபுரம் தொகுதியில் பாஜக கூட்டணியில் தானே சுயேட்சையாக போட்டியிட போவதாக ஓ.பி.எஸ் அறிவித்தார். … Read more

தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள பிரதமர் மோடி மற்றும் 18 மத்திய அமைச்சர்கள் படையெடுப்பு… காங். மௌனம்…

தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வரவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விருதுநகர், கரூர் உள்ளிட்ட இடங்களில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ள அவர் பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்க உள்ளார். பிரதமரைத் தொடர்ந்து அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 18 மத்திய அமைச்சர்கள் வரிசையாக தமிழகம் நோக்கி படையெடுக்க உள்ளனர். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல். முருகன், தமிழிசை சௌந்தரராஜன் என பாஜக … Read more

ரூ.19.79 கோடி போதைப்பொருளுடன் மும்பை ஏர்போர்ட்டில் சிக்கிய சியரா லியோன் நாட்டு பெண்

மும்பை: கென்யாவின் நைரோபியில் இருந்து மும்பை வரும் விமானத்தில் போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று மும்பை சர்வதேச விமான நிலையத்தில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. அந்த விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகள் தீவிரமாக சோதனையிடப்பட்டன. ஒரு பெண் பயணியின் உடைமைகளை சோதனையிட்டபோது, அவர் ரூ.19.79 கோடி மதிப்பிலான கோகைன் என்ற போதைப்பொருளை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் கைது செய்தனர். விசாரணையில், அவர் சியரா லியோன் … Read more

வெள்ளியங்கிரி மலை ஏறும் பக்தர்கள் தொடர் உயிரிழப்பு – 24மணி நேரத்தில் 3 பேர் பலியான சோகம்….

கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள  வெள்ளியங்கிரி மலைமீதுள்ள சிவன்கோவிலுக்கு சென்று சுவாதி தரிசனம் செய்ய முயற்சிக்கும் பல பக்தர்கள் உயிரிழந்துள்ள நிலையில், கடந்த 24மணி நேரத்தில் மலை ஏறிய 3 பேர் உயிரிழந்துள்ளனர். இது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை வெள்ளியங்கிரி மலையில் ஏறியபோது  தெலுங்கானா மாநலிம் ஹைதராபாத்தை சேர்ந்த சுப்பாராவ் (57) என்ற மருத்துவர், மயங்கி விழுந்து  உயிரிழந்த நிலையில்,  சேலம் மாவட்டத்தை சேர்ந்த தியாகராஜன் (35) என்பவர் வெள்ளியங்கிரியின் முதல்மலையான  குரங்குபாலம் அருகே … Read more

இன்ஸ்டாகிராம் வீடியோ எடுத்தபோது விபரீதம்…!! பெண்ணிடம் சங்கிலி பறிப்பு

காசியாபாத், சமூக ஊடகங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் ரீல் வெளியிடும் மோகம் மக்களிடையே அதிகரித்து வருகிறது. இதற்காக, வித வித ஆடைகளை அணிவது, ஒப்பனை செய்து கொள்வது என தங்களை தயார்படுத்தி கொண்டு வீடியோ எடுக்கின்றனர். வீடு, பூங்கா, பொது இடம் என எதனையும் விட்டு வைக்காமல் கிடைக்கிற இடங்களில் எல்லாம் வீடியோ எடுக்கின்றனர். எனினும், இதில் சில ஆபத்துகளும் ஏற்படுகின்றன. இதுபோன்ற சம்பவம் ஒன்று உத்தர பிரதேசத்தில் நடந்துள்ளது. காசியாபாத் நகரை சேர்ந்த சுஷ்மா என்ற பெண் … Read more

தனியறை… உதவியாள்… வேளைக்கு சாப்பாடு… முதுமையின் சந்தோஷத்துக்கு இவை மட்டுமே போதுமா?

ஐம்பத்தி ஐந்து வயதில் அம்மா போன பிறகு கொஞ்சம் கொஞ்சமாகப் பேசுவதை நிறுத்திக்கொண்டார் அப்பா. தொடக்கத்தில் பெரிதாக ஏதும் தோன்றவில்லை மகனுக்கு.இனி, அப்பாவோடு சண்டை பிடிக்கவும், குறை சொல்லவும், அதட்டவும் ஆளில்லை. அப்பா நினைத்தபடி இருக்கலாம். ஆனாலும், ஏன் இப்படி அமைதியாகிப் போனார்… சிரிப்பதை முழுவதுமாக மறந்து போனார். இது தொடர்ந்தபோது… தனக்குத்தானே பலமுறை கேட்டுக்கொண்டாலும் பதில் இல்லை மகனுக்கு. கொஞ்ச நாள்கள் கழிந்த தும் அப்பா இயல்புக்குத் திரும்புவார் என நம்பிய மகனுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. … Read more

மு.க.ஸ்டாலினின் மிரட்டலுக்கு நாங்கள் அஞ்ச மாட்டோம்; மேகதாதுவில் அணை கட்டுவோம்! வாட்டாள் நாகராஜ் மிரட்டல்

ஓசூர்: திமுக தனது தேர்தல் அறிக்கையில், மேகதாது அணை கட்ட கர்நாடக அரசை அனுமதிக்க மாட்டோம் என்று கூறியதை கண்டித்து,  கன்னட அமைப்பின் தலைவரான வாட்டாள் நாகராஜ் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மிரட்டலுக்கு நாங்கள் அஞ்ச மாட்டோம்; மேகதாதுவில் அணை கட்டுவோம் என  வாட்டாள் நாகராஜ் ஆவேசமாக பேசினார்.  மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு தீவிரம டைந்தால், கர்நாடக மாநிலம் முழுவதும் தமிழ் சினி மாக்கள் திரையிட அனுமதிக்க மாட்டோம். … Read more