ராஜாஜியின் 50வது நினைவு ஆண்டை முன்னிட்டு சிறப்பு புகைப்பட கண்காட்சி! நேரில் பார்வையிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: ராஜாஜியின் 50வது நினைவு ஆண்டை முன்னிட்டு சிறப்பு புகைப்பட கண்காட்சி சென்னையில், சிறப்பு புகைப்பட கண்காட்சி  நடைபெற்று வருகிறது. இதை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு வாழ்த்தினார். மூதறிஞர் இராஜாஜியின் 50ஆவது நினைவு ஆண்டை முன்னிட்டு அரசியல், இலக்கியம், ஆட்சி நிர்வாகம், வாழ்க்கை வரலாற்றை பொதுமக்களுக்கு விளக்கிடும் வகையில் சிறப்பு புகைப்படக் கண்காட்சி சென்னை, அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. இதில், அன்னாரின் அரசியல், இலக்கியம், ஆட்சி நிர்வாகம், வாழ்க்கை வரலாற்றை பொதுமக்களுக்கு விளக்கிடும் … Read more

பிரித்தானியாவில் மணமகன், மணமகள் இரட்டை கொலை: 21 வயது இளைஞர் கைது

தனது வருங்கால கணவருடன் உடன் கிறிஸ்துமஸ் தினத்தை கொண்டாட இத்தாலியில் இருந்து பிரித்தானிய வந்த 20 வயது  இளம் பெண் தனது காதலனுடன் குடியிருப்பு ஒன்றில் இறந்து கிடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மணமகன் மணமகள் இரட்டை கொலை பிரித்தானியாவின் வடக்கு யார்க்ஷயரில் உள்ள ஒரு குடியிருப்பில் பிற்பகல் 2.10 மணியளவில் பிரித்தானியாவில் வசித்து வரும் அன்டோனினோ கலாப்ரோ(26) என்ற இளைஞரும், இத்தாலியை சேர்ந்த  ஃபிரான்செஸ்கா டி டியோ(20) என்ற இளம் பெண்ணும் சடலமாக மீட்கப்பட்டது பெரும் … Read more

நேபாள நாட்டின் புதிய பிரதமராக பதவியேற்றார் பிரசண்டா புஷ்பா கமல் தாஹல்

காட்மாண்டு: நேபாள நாட்டின் புதிய பிரதமராக பிரசண்டா புஷ்பா கமல் தாஹல் பதவியேற்றார். பிரசண்டாவுக்கு நேபாள நாட்டின் ஜனாதிபதி வித்யாதேவி பண்டாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். நேபாள கம்யூனிஸ்ட்(மாவோயிஸ்ட்) கட்சித் தலைவரான பிரசண்டா 3வது முறையாக பிரதமராக பதவியேற்றார்.

“பாசிச ஆட்சிக்கு முடிவுகட்ட வழிகாட்டுங்கள்…“ – நல்லகண்ணு பிறந்த நாள் விழாவில் ஸ்டாலின்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 98-வது அமைப்பு தினமும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் இரா.நல்லகண்ணுவின் 98-வது பிறந்த நாள் விழாவும் சென்னையில் இன்று (டிசம்பர் 26) கொண்டாடப்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் நடைபெற்ற விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார். நல்லகண்ணுவுக்கு புத்தகம் பரிசளித்தார் ஸ்டாலின் முதல்வர் ஸ்டாலின் பேசியபோது, “ஒவ்வோர் ஆண்டும் தலைசிறந்த பெருமக்களைத் தேர்வுசெய்து தமிழக அரசின் சார்பில் ‘தகைசால் தமிழர்’ விருது வழங்கப்படுகிறது. முதல் … Read more

தம்பி அனில் அம்பானியின் முக்கிய சொத்தை தன்வசப்படுத்திய முகேஷ் அம்பானி! இத்தனை ஆயிரம் கோடியா?

அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் இன்ஃப்ராடெல் நிறுவனத்தை, முகேஷ் அம்பானி விலை கொடுத்து வாங்கியுள்ளார். ஏலத்தில் வாங்கிய முகேஷ் அம்பானி அதன்படி ரிலையன்ஸ் இன்ஃப்ராடெல் நிறுவனத்தை, முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ 3 ஆயிரத்து 720 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது. வாராக்கடன்கள் காரணமாக, அனில் அம்பானியின் அனைத்து நிறுவனங்களும் திவால் சட்டத்தின் கீழ் கையகப்படுத்தப்பட்டுள்ளன. 43 ஆயிரத்து 500 செல்போன் டவர்களும், 1.70 லட்சம் கிலோ மீட்டர் நீளத்திற்கு ஃபைபர் ஆப்டிக் வலை பின்னலும் கொண்ட ரிலையன்ஸ் … Read more

நாளை திருப்பதி கோவிலில் ‘விஐபி பிரேக் தரிசனம்’ ரத்து!

திருப்பதி: நாளை திருப்பதி கோவிலில் ‘விஐபி பிரேக் தரிசனம்’ ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு லட்சக்கணக்கானோர் குவிவார்கள் என்பதால், தரிசனத்துக்கு பல்வேறு ஏற்பாடுகள் மற்றும் டிக்கெட்டுகளை தேவஸ்தானம் போர்டு வெளியிட்டு உள்ளது. இதையொட்டி நாளை (27ந்தேதி)  ஆழ்வார் திருமஞ்சனம் நடக்கிறது.  இதையொட்டி, நாளை விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து, திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ,. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதம் (ஜனவரி) … Read more

மண்டல பூஜைக்காக தங்க அங்கி அடங்கிய பெட்டி சபரிமலை வந்து சேர்ந்தது

திருவனந்தபுரம்: மண்டல பூஜைக்காக தங்க அங்கி அடங்கிய பெட்டி பலத்த பாதுகாப்புடன், சபரிமலை வந்து சேர்ந்தது. இன்று மாலை மூலவர் சுவாமி ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட உள்ளது. திருவராங்கூர் ராஜகுடும்பத்தால் அளிக்கப்பட்டுள்ள இந்த தங்க அங்கி, ஆண்டுதோறும் மண்டல கால பூஜையின் போது சுவாமி ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும்.

ஸ்டாலினின் துபாய் விசிட்; தஞ்சை தேர் விபத்து; எழுவர் விடுதலை, இன்னும் பல… தமிழ்நாடு ரீவைண்ட் 2022

2022-ம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு… தரமற்ற பொங்கல் பரிசுகள், வெடித்த சர்ச்சை !தமிழகத்தில் இந்த ஆண்டு குடும்ப அட்டைத்தாரர்கள், இலங்கை தமிழர் முகாம்களில் வசிப்பவர்களுக்கு 21 பொருள்கள் அடங்கிய பொங்கல் பரிசுதொகுப்பு வழங்கப்பட்டது. இந்த பரிசுத்தொகுப்பில், அரிசி, வெல்லம், பருப்பு, ரவா, கோதுமை, வெல்லம், நெய், கரும்பு உள்ளிட்ட 21 வகையான பொருள்கள் இடம்பெற்றிருந்தது. பொங்கல் பரிசுகள் தரமற்ற முறையிலும், எடை குறைவாக இருந்ததாகவும், பல இடங்களில் முழுமையாக பொருள்கள் கிடைக்கவில்லை எனவும் … Read more

தேம்ஸ் நதியில் மிதந்த ஆசிய இளைஞரின் சடலம்… வயதான தாயாரின் உருக்கமான வேண்டுகோள்

மேற்கு லண்டனில் குடியிருக்கும் தாயார் ஒருவர் தமது மகனின் கொலை தொடர்பில் விடை தெரிய 25 ஆண்டுகளாக போராடி வருகிறார். 25 ஆண்டுகளாக நீடிக்கும் போராட்டம் மேற்கு லண்டனில் வசிக்கும் சுக்தேவ் ரீல் என்ற பெண்மணியே, 1997ல் சடலமாக மீட்கப்பட்ட தமது மகன் தொடர்பில் 25 ஆண்டுகளாக போராடி வருகிறார். சம்பவத்தின் போது 20 வயதான ரிக்கி ரீல், அக்டோபர் மாதம் 14ம் திகதி தமது நண்பர்கள் சிலருடன் ஊர் சுற்ற சென்றுள்ளார். Image: Humphrey Nemar ரிக்கி … Read more

தமிழக காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர் பணிக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு

சென்னை: தமிழக காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர் பணிக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. 2-ம் நிலை காவலர், சிறை காவலர், தீயணைப்புதுறை வீரர் உள்ளிட்ட பணிகளுக்கான தேர்வு முடிவு வெளியிட்டுள்ளனர்.  ஒரு காலி பணியிடத்திற்கு 5 பேர் விதம் அடுத்த கட்ட உடற்தகுதி தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளனர்.