பிளஸ் 2 முடித்த அரசு பள்ளி மாணாக்கர்களுக்கு வேலைவாய்ப்புடன் தொழிற்பயிற்சி அளிக்கிறது எச்சிஎல் நிறுவனம்!

சென்னை: பிரபல மென்பொருள், வன்பொருள் மற்றும் கல்வி நிறுவனங்களை நடத்தி வரும்  ஹெச்சிஎல் நிறுவனம் பிளஸ்2 தேர்ச்சி பெற்ற மாணாக்கர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய தொழிற்பயிற்சி அளிக்கிறது. இதற்காக தமிழகஅரசுடன் மேற்கொண்டுள்ள ஒப்பந்த  திட்டத்தின்படி, பிளஸ் 2 முடித்த அரசுப் பள்ளி மாணவர்கள் இதில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு ஹெச்சிஎல் நிறுவனம் வழங்கும் வேலைவாய்ப்புடன் கூடிய ஓராண்டு பயிற்சி … Read more

அக்-31: சென்னையில் இன்று பெட்ரோல் விலை ரூ.102.63, டீசல் விலை ரூ.94.24

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

பால்மோரல் மாளிகையில் கேட் மிடில்டன் எடுத்துச் சென்ற பொருள்… முதல்முறையாக நெறிமுறையை மீறிய ராணியார்

பால்மோரல் மாளிகைக்கு விஜயம் செய்வது என்பது ராஜகுடும்பத்தில் புதிதாக இணையும் எவருக்கும் கனவு அவர் நம்பிக்கையானவர் என்பதும் ராணியார் புரிந்து வைத்திருந்தார் என்பதே இதில் சிறப்பான விடயம் ஸ்கொட்லாந்தின் பால்மோரல் மாளிகையில் கேட் மிடில்டன் கமெரா எடுத்துச் சென்றதை, நெறிமுறைகளை மீறி ராணியார் அனுமதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்கொட்லாந்தில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பால்மோரல் மாளிகைக்கு விஜயம் செய்வது என்பது ராஜகுடும்பத்தில் புதிதாக இணையும் எவருக்கும் முதன்மையான கனவு என்றே கூறப்படுகிறது. @getty ஆனால், கேட் மிடில்டனுக்கு … Read more

நடிகை சமந்தாவை பாதித்த Myositis… என்னவெல்லாம் செய்யும்? மருத்துவ விளக்கம்

பிரபல நடிகை சமந்தா, நேற்று இன்ஸ்டாவில் ஒரு பதிவைப் போட்டிருந்தார். அதில் ‘இதுவும் கடந்து போகும்’ என்று குறிப்பிட்டு, தனக்கு ‘மயோசைட்டிஸ்’ (Myositis) எனும் நோய் எதிர்ப்புத்திறன் பாதிப்பு இருப்பதாகவும், அதில் போராட்டமான நாள்களைக் கடந்து, இப்போது முழுமையாக மீளும் நாளை எதிர்நோக்கிக் காத்திருப்பதாகவும் உருக்கமாகப் பதிவு செய்திருந்தார். அதென்ன மயோசைட்டிஸ்… அது யாரை பாதிக்கும், அறிகுறிகள் எப்படி இருக்கும்? சென்னையைச் சேர்ந்த இன்டெர்னல் மெடிசின் மருத்துவர் ஸ்பூர்த்தி அருண் விளக்குகிறார்… ஸ்பூர்த்தி அருண் “மயோசைட்டிஸ் என்பது … Read more

கைகள் நடுங்க… சியோல் நகர தீயணைப்புத் தலைவர் கூறிய அந்த விடயம்: கண்ணீரில் மக்கள்

ஹாலோவீன் கொண்டாட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 153 பேர்கள் மரணமடைந்துள்ளதாக தகவல்  விபத்தில் சிக்கி மரணமடைந்த பெரும்பாலான மக்கள் இளையோர்கள் எனவும் 20 வயது கடந்தவர்கள் தென் கொரியாவின் சியோல் நகரில் முன்னெடுக்கப்பட்ட ஹாலோவீன் கொண்டாட்டம் பெரும் துயரத்தில் முடிந்த நிலையில், தீயணைப்புத் தலைவர் கூறிய வார்த்தைகள் மொத்த மக்களையும் கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது. சியோல் நகரில் முன்னெடுக்கப்பட்ட ஹாலோவீன் கொண்டாட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 153 பேர்கள் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டசின் கணக்கான … Read more

31.10.22 திங்கட்கிழமை – Today RasiPalan | Indraya Rasi Palan | October – 31 | இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

பெர்த்தில் சூரசம்ஹாரம் செய்த சூர்யகுமார்!

68 ஓட்டங்கள் எடுத்த சூர்யகுமார் யாதவிற்கு இது 11வது சர்வதேச அரைசதம் ஆகும் லுங்கி இங்கிடி 4 விக்கெட்டுகளுடன் ஒரு கேட்ச் பிடித்து மிரட்டினார் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் 68 ஓட்டங்கள் விளாசினார். இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் டி20 போட்டி பெர்த்தில் நடந்து வருகிறது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பாடியது. தென் ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் லுங்கி இங்கிடி இந்திய … Read more

குஜராத்: அறுந்து விழுந்த கேபிள் பாலம்; 32 பேர் பலி! – தொடரும் மீட்புப்பணி; நெஞ்சை உலுக்கும் சோகம்

குஜராத் மாநிலம், மோர்பி பகுதியிலுள்ள கேபிள் பாலம் ஒன்று அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானது. பாலம் விபத்துக்குள்ளாவதற்கு முன்பு அதன் மீது சுமார் 500 பேர் வரை நின்று கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அதில் 400 பேர் பாலம் அறுந்து விழுந்ததில் ஆற்றில் விழுந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. பாலம் பாலம் அறுந்து விழுந்த தகவல் கிடைத்த உடனே தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து, துரிதமாக மீட்புப்பணிகளை தொடங்கினர். அவர்களுடன் மூன்று மாநிலங்களைச் சேர்ந்த பேரிடர் மீட்புக்குழுவினர் மற்றும் உள்ளூர் நீச்சல் … Read more

IND v SA: டாப் ஆர்டர் சொதப்பல், ஃபீல்டிங் குளறுபடிகள் – SKY இல்லையென்றால் இந்தியா என்னவாகும்?

இந்திய பேட்ஸ்மென்களின் ஷார்ட் பால் பலவீனத்தாலும், குறைந்த ஸ்கோரை டிஃபெண்ட் செய்யும் போது செய்யக்கூடாத ஃபீல்டிங் தவறுகளாலும் மோசமான தோல்வியைத் தழுவியுள்ளது இந்தியா. சில நாள்களுக்கு முன்னதாக, பெர்த் மைதானத்தைப் பற்றி டேவிட் ஹசி, “பேட்ஸ்மேன்கள் மிக மிகக் கவனமாக ஆட வேண்டிய களம், சற்றுநேரம் நிதானித்து, ஸ்டீப் பவுன்ஸுக்குத் தங்களைப் பழக்கப்படுத்திக் கொண்டால் மட்டுமே தப்பிக்கலாம். பந்தின் வேகத்தைப் பயன்படுத்தி கட் ஷாட் மூலமாகவோ, ஃபைன் லெக்கிலோ பவுண்டரி அடிக்க முயற்சி செய்யலாம். புல் ஷாட்டை … Read more

கேபிள் பாலம் அறுந்து விழுந்து பாரிய விபத்து… டசின் கணக்கானோர் மரணம்: 400 பேர் மாயம் என அச்சம்

பாலம் அறுந்து விழும்போது அதில் 500க்கும் மேற்பட்டோர் இருந்துள்ளனர். சுமார் 350 பேர் ஆற்றில் விழுந்துள்ளனர்.  பாலம் அறுந்து விழுந்ததில் 400 பேர்கள் வரையில் மாயமாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்திய மாநிலம் குஜராத்தில் மச்சு ஆற்றின் மீது கட்டப்பட்ட கேபிள் பாலம் அறுந்து விழுந்ததில் 60 பேர்கள் வரையில் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குஜராத்தின் மோர்பி நகரில் பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட இந்த கேபிள் பாலமானது, புதுப்பிக்கப்பட்டு 4 நாட்களுக்கு முன்பு தான் மீண்டும் திறக்கப்பட்டது. … Read more