வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது சுலபம்| Dinamalar

புதுடில்லி : வருமான வரித் துறையின் புதிய வலைதளம், வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதை மிகச் சுலபமாக்கியுள்ளது.கடந்த 2017க்குப் பின், வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது. இதையடுத்து, வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதை சுலபமாக்கும் நோக்கில், 2021 ஜூலையில் புதிய வலைதளம் அறிமுகப்படுத்தப்பட்டது. துவக்கத்தில் கணக்கு தாக்கலின் போது ஏற்பட்ட சில பிரச்னைகள் சரி செய்யப்பட்ட பின், தற்போது இந்த வலைதளம் மிக விரைவாக செயல்பட்டு வருகிறது. இந்த வலைதளத்தில் … Read more

சர்வதேச பர்னிச்சர் பூங்கா: ஜெர்மனி, பெல்ஜியம் நிறுவனங்கள் ரெடி.. ஆரம்பமே அசத்தல்..!

தமிழ்நாடு அரசு தொடர்ந்து வெளிநாட்டு நிறுவனங்களின் வாயிலாக முதலீட்டை ஈர்த்து மாநிலத்தின் வர்த்தகம், உற்பத்தி, வேலைவாய்ப்பை உருவாக்கி வருகிறது. மேலும் தமிழ்நாட்டு உள்நாட்டு வர்த்தகத்திற்கான பொருட்களைத் தயாரிப்பதைக் காட்டிலும் ஏற்றுமதி வர்த்தகத்தைச் சார்ந்த பொருட்களைத் தயாரிப்பது தான் நீண்ட கால வளர்ச்சிக்கும், வர்த்தக வளர்ச்சிக்கும் வழிவகுக்கும். இதன் அடிப்படையில் தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் இந்தியாவிலேயே முதல் முறையாகச் சர்வதேச பர்னிச்சர் பூங்கா-வை உருவாக்கப்பட்டு உள்ளது தமிழக அரசு. ஓசூரில் நிலத்தை வாங்கி குவிக்கும் தமிழ்நாடு அரசு.. அடுத்த … Read more

பழி தீர்க்கும் புடின்! 'நட்பற்ற நாடுகள்' பட்டியலை வெளியிட்ட ரஷ்யா

ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்ததற்கு பழிக்கு பழிவாங்கும் வகையில், ரஷ்யாவிடமிருந்து பொருளாதார தடைகளை எதிர்கொள்ளும் 43 ‘நட்பற்ற நாடுகளின்’ பட்டியலை விளாடிமிர் புடினின் ஆட்சி வெளியிட்டுள்ளது. உக்ரைனுக்கு எதிரான தனது போருக்கு சர்வதேச கண்டனத்திற்கு எதிர்வினையாக ரஷ்யா “நட்பற்ற நாடுகளின்” பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் அமெரிக்கா மற்றும் கனடா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், இங்கிலாந்து (ஜெர்சி, அங்குவிலா, பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள், ஜிப்ரால்டர் உட்பட), உக்ரைன், மாண்டினீக்ரோ, சுவிட்சர்லாந்து, அல்பேனியா, அன்டோரா, ஐஸ்லாந்து, லிச்சென்ஸ்டீன், … Read more

கேமிங் நிறுவனங்களாலும் புறக்கணிக்கப்பட்ட ரஷ்யா

மாஸ்கோ உக்ரைன் மீது படையெடுத்ததால் ரஷ்யாவில் புகழ்பெற்ற கேமிங் நிறுவனங்கள் தங்கள் விற்பனையை நிறுத்தி உள்ளன. ரஷ்யா உக்ரைன் மீது தொடர்ந்து போரிட்டு வருகிறது. இதையொட்டி உலக நாடுகள் அனைத்தும் ரஷ்யாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஒரு சில சில நாடுகள் பொருளாதாரத் தடை விதித்துள்ளன.ஒரு சில நிறுவனங்கள் ரஷ்யாவில் தங்களது நிறுவன செயல்பாட்டை நிறுத்தியுள்ளன. தற்போது அந்த வரிசையில் சில சில கேமிங் நிறுவனங்கள் இணைந்துள்ளன,  ரஷ்யாவில் எபிக் கேம்ஸ், ஆக்டிவிஷன் Blizzard, CD Projekt … Read more

உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் முதல்வர் ஸ்டாலினுடன் சந்திப்பு- அரசுக்கு நன்றி தெரிவித்தனர்

நெல்லை: கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு பெய்த வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்புப் பணிகளை  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (7.3.2022) ஆய்வு செய்து முடித்து, மதுரை விமான நிலையத்திற்கு சென்றார். அப்போது, உக்ரைனில் மருத்துவ பட்டப் படிப்பு படித்து வரும் நிவேதிதா,  திவ்யபாரதி,  ஹரிணி, நவநீத ஸ்ரீராம் ஆகியோர்  திருநெல்வேலி மாவட்டம், ஜோதிபுரத்தில் முதல்வரை சந்தித்தனர். தங்களை உக்ரைனிலிருந்து பாதுகாப்பாக மீட்டு, தாயகம் திரும்பிட அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்ட தமிழ்நாடு … Read more

ஏழைகளுக்கு பயன்படும் மலிவு விலை மருந்து திட்டம்| Dinamalar

புதுடில்லி : ”மலிவு விலையில் மருந்துகள் வழங்கும் திட்டத்தால், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பயனடைந்துள்ளனர்,” என, பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் தெரிவித்தார். குறைந்த விலையில் தரமான மருந்துகள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், மலிவு விலையில் மருந்துகள் தரும் திட்டம், மத்திய அரசால் துவக்கப்பட்டது. இத்திட்டத்தின் பயனாளிகளுடன், ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக, பிரதமர் நரேந்திர மோடி நேற்று கலந்துரையாடினார். அவர் கூறியதாவது:மருந்து விலைகள் மீது மக்களுக்கு இருந்த அச்சம், இத்திட்டத்தால் குறைந்துவிட்டது. இந்த திட்டத்தின்கீழ், … Read more

இன்ஃபோசிஸ் Vs விப்ரோ: எந்த பங்கு சிறந்தது? எதை வாங்கி போடலாம்?

கடந்த சில காலாண்டுகளுக்கு முன்பு வரையில் ஐடி துறையானது மிகப் பெரியளவில் வளர்ச்சி கண்டு வருகிறது. வளர்ச்சி விகிதமானது கொரோனாவுக்கு முன்பை விட உச்சத்தினை எட்டியுள்ளது. இதற்கிடையில் பணியமர்த்தல் விகிதமானது கணிசமாக உச்சத்தினை எட்டியுள்ளது. இதனால் திறன் மிகுந்த ஊழியர்களுக்கு தேவையானது அதிகமாக உள்ளது. இதற்கிடையில் இந்திய ஐடி நிறுவனங்கள் சர்வதேச நிறுவனங்களுக்கு சிறந்த போட்டியாளராக இருந்து வருகின்றது. ஜிஎஸ்டியால் என்ன பிரச்சனை.. சிறு தொழில்களுக்கு என்ன பாதிப்பு.. ! கணிசமான வளர்ச்சி கடந்த இரண்டு தசாப்தங்களில் … Read more

இன்றைய ராசி பலன் | 08/03/2022 | Daily Rasi Palan | Daily Horoscope | Astrology | Sakthi Vikatan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். #இன்றையராசிபலன் Today’s Horoscope | rasi palan #DailyHoroscope​ | #Rasipalan​ | #Horoscope​ #Raasi​ #Raasipalan #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam 12 ராசிகளுக்கான ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2022 : https://bit.ly/3srMOs 12 ராசிகளுக்கான ராகு – கேது புத்தாண்டு பலன்கள் … Read more

ரஷ்ய தூதரகத்தின் வாயிலை இடித்து நொறுக்கிய டிரக்! வைரலாகும் காட்சி., ஓட்டுநர் கைது

அயர்லாந்தில் உள்ள ரஷ்ய தூதரகத்தின் வாயில்களை டிரக் ஒன்று இடித்து உடைத்தெரிந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது. டிரக் ஓட்டுநரை பொலிஸார் கைது செய்தனர். டெஸ்மண்ட் விஸ்லி எக்லெசியாஸ்டிகல் சப்ளைஸ் நிறுவனத்திற்கு சொந்தமான அந்த பெரிய சப்ளை டிரக் தெற்கு டப்லினில் உள்ள ரஷ்ய தூதரகத்தின் வாயில் அருகே ரிவர்ஸ் வந்து கொண்டிருந்த நிலையில், வேகமாக சென்று தூதரகத்தின் இரும்பு கதவுகளை இடித்து தள்ளியது. ரஷ்ய தூதரகத்தின் வாயில் மீது டிரக் மோதியதை மக்கள் பிளக்ஸ் கார்டுகளுடன் … Read more

பிக்பாஸில் அசத்தும் பிந்து !

தென்னிந்திய சினிமாவில் முன்னணி பிரபல நடிகையாக திகழும் பிந்து மாதவி, தெலுங்கு பிக்பாஸில் கலந்துகொண்டு இருக்கிறார். தமிழ் சினிமாவில் வெப்பம் படம் மூலம் அறிமுகமானவர் இவர், தொடர்ந்து கழுகு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, பசங்க 2 என வெற்றிப்படங்களில் நடித்தார். தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு சினிமாவிலும் பல வெற்றிப்படங்களில் நடித்தார். தமிழில் கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸில் கலந்து கொண்டு புகழ்பெற்றார். பிறகு அவருக்கு பெருமளவில் ரசிகர் பட்டாளம் தமிழகத்தில் உருவாகியது. இதனை தொடர்ந்து தற்போது தமிழைப்போல … Read more