தமிழகத்தில் மேலும் 3,592 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை:     தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நேற்று 3,971 ஆக பதிவாகி இருந்தது.   இந்நிலையில், தமிழகத்தில் இன்றைய தொற்று பாதிப்பு 3,592 ஆக குறைந்துள்ளது. இதுதொடர்பான புள்ளிவிவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:  தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3,592 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 28 ஆயிரத்து 69 ஆக அதிகரித்துள்ளது. … Read more

உத்திரப்பிரதேச சட்டமன்ற தேர்தலில் முதற்கட்டமாக 58 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு

லக்னோ: உத்திரப்பிரதேச சட்டமன்ற தேர்தலில் முதற்கட்டமாக 58 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ளது. கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்றது.

பென்ஸ் கார் கிப்ட்-ஆ.. ஊழியருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த முதலாளி.. கார் விலை என்ன தெரியுமா?!

ஒவ்வொரு வருடமும் சம்பள உயர்வை கூட போராடி வாங்க வேண்டியிருக்கும் நிலையில், கேரளாவில் ஒரு நிறுவனத்தின் முதலாளி தன் நிறுவனத்தில் நீண்ட காலம் பணியாற்றும் ஒரு அதிகாரிக்கு விலை உயர்ந்த பென்ஸ் காரை கொடுத்து இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். இது மாதிரி முதலாளி எல்லாம் எங்க இருக்காங்க என்பது தான் பெரும்பாலானவர்களின் மையின் வாய்ஸ் ஆக உள்ளது. ரூ.1500 கோடி சம்பளமா.. சன் டிவி கலாநிதி மாறன், காவேரி கலாநிதி சம்பள உயர்வுக்கு எதிர்ப்பு..! MyG நிறுவனம் … Read more

120 கிமீ ரேஞ்சு.., டார்க் கிராடோஸ், கிராடோஸ் R இ-பைக் விற்பனைக்கு வந்தது

டார்க் மோட்டார்ஸ் நிறுவனம் கிராடோஸ் மற்றும் கிராடோஸ் R என இரண்டு எலக்ட்ரிக் பைக் மாடல்களை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. கிராடோஸ், கிராடோஸ் R இரு பைக் பாடல்களும் பொதுவாக 4KWh லித்தியம் அயன் பேட்டரி மூலம் இயக்கப்பட்டு IP67 சான்றிதழ் பெற்றதாக அமைந்துள்ளது. மற்றபடி ஈக்கோ, சிட்டி, ஸ்போர்ட்ஸ் உட்பட ரிவர்ஸ் மோட் ஆகிய டிரைவ் மோடுகளை பெற்றுள்ளது. கிராடோஸ் மாடலில் 7.5kW, 28Nm மோட்டார் மூலம் இயக்கப்பட்டு 4 நொடிகளில் 0-40 கிமீ வேகத்தை … Read more

ரஷ்ய கலை அரங்கில் 1930ம் ஆண்டு ஓவியத்துக்கு கண் வைத்த பாதுகாவலர்… ரூ. 7.5 கோடி நஷ்டம்…

ரஷ்யாவில் உள்ள எக்டேரின்புர்க் நகரில் உள்ள எல்ஸ்ட்டின் மைய்ய கலை அரங்கில் பழமையான ஓவியங்கள் வைக்கப்பட்டிருந்தது. 1932 வாக்கில் ஹன்னா லெபோர்ஸ்கயா வரைந்த ‘த்ரீ பிகர்ஸ்’ என்ற ஓவியமும் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. கண்ணில்லாத இந்த ஓவியத்தில் கண் வரைந்ததைக் கண்டு திடுக்கிட்ட பார்வையாளர் ஒருவர் இதுகுறித்து நிர்வாகத்தினரிடம் புகார் அளித்தார். விசாரணையில் அன்றைய தினம் புதிதாக வேலைக்கு சேர்ந்த பாதுகாவலர் ஒருவர் பொழுது போகாததால் தனது கையில் இருந்த பேனாவால் இந்த ஓவியத்தில் கண் வரைந்த … Read more

சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக முனீஸ்வர்நாத் பண்டாரி நியமனம்

சென்னை: சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சீவ் பானர்ஜி கடந்த நவம்பர் மாதம் மேகாலயா மாநிலத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதனால், சென்னை ஐகோர்ட்டின் பொறுப்பு தலைமை நீதிபதியாக முனீஸ்வர்நாத் பண்டாரி நியமனம் செய்யப்பட்டார். அலகாபாத் கோர்ட்டில் மூத்த நீதிபதியாக இருந்த முனீஸ்வர்நாத் பண்டாரி, சென்னை ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதியாக கடந்த ஆண்டு நவம்பரில் பதவி ஏற்றார். அவரை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக நியமிக்க கொலீஜியம் முடிவு செய்தது. இதுதொடர்பான பரிந்துரையை கொலீஜியம் மத்திய அரசுக்கும், … Read more

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக முனீஷ்வர்நாத் பண்டாரி நியமனம் செய்து குடியரசுத் தலைவர் உத்தரவு

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக முனீஷ்வர்நாத் பண்டாரி நியமனம் செய்து குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். முனீஷ்வரநாத் பண்டாரியை தலைமை நீதிபதியாக நியமனம் செய்ய உச்சநீதிமன்ற கொலிஜியம் கடந்த வாரம் பரிந்துரைத்தது.

காதலர் தினத்திற்கு பரிசளியுங்கள்… ‛தனிஷ்க் வைர நகைகள்…!| Dinamalar

காதலர் தினம் நெருங்கிவிட்டது. இந்த தருணத்தில் உங்கள் இதயம் படபடக்கும். இந்த நிகழ்வை கொண்டாடும் நேரம் இது. இந்த அன்பை போற்றுங்கள். இந்த காதலர் தினத்தில் உங்கள் அன்புக்குரியவருக்கு, உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துங்கள். அவருக்காக என்ன பரிசளிக்கலாம் என யோசிக்கலாம். ‘ஐ லவ் யூ’ என்ற வார்த்தைக்கு ஈடு இணையான பரிசு எதுவும் இல்லை. ஆனாலும் அவருக்கு அற்புதமான நகையை பரிசளிக்கலாம். உங்கள் அன்பை அர்த்தமுள்ள பரிசாக கொடுத்தால் அது கொண்டாட்டமாகவும், அது அவருக்கு என்றென்றும் பொக்கிஷமாக … Read more

பிரம்மாஸ்திரத்தை கையிலெடுக்கும் சோமேட்டோ..ஸ்விக்கிக்கு சரியான செக்..!

சோமேட்டோ பெரு நகரங்கள், நகரங்களில் இருப்பவர்கள் பலரும் அறிந்திருக்கலாம். இதில் ஆர்டர் செய்து உணவும் சாப்பிட்டிருக்கலாம். இது ஆப் மூலமாக ஆன்லைனில் உணவு டெலிவரி செய்யும் ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனமாகும். சமீபத்தில் தான் இந்த நிறுவனம் பங்கு சந்தையிலும் களமிறங்கியது. ஒவ்வொரு துறையிலும் கடுமையான போட்டிகள் நிலவி வருகின்றன. ஆனால் அதனை எல்லாம் தாண்டி வெற்றி பெரும் நிறுவனங்கள் தான் இன்று வெற்றியாளர்களாய், உலகினை வலம் வருகின்றன. அந்த வகையில் உணவு டெலிவரி வணிகத்தில் கடுமையான … Read more