தூக்கத்தில் இருந்த ஒரே குடும்பத்து 6 பேர்களுக்கு நேர்ந்த துயரம்: உறவினரின் கொடுஞ்செயல்

அமெரிக்காவின் பிலடெல்பியா நகரில் தூக்கத்தில் இருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர்கள் உறவினர் ஒருவரால் கத்தியால் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிலடெல்பியா நகரில் உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை அதிகாலை சுமார் 4 மணிக்கு குறித்த பகீர் சம்பவம் அரங்கேறியுள்ளது. இதில் தொடர்புடைய 29 வயதான நபரை பொலிசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த நபர் உறவினரின் வீட்டின் படுக்கையறைக்குள் நுழைந்து இரண்டு வெவ்வேறு சமையலறை கத்திகளால் தூக்கத்தில் இருந்த 6 பேரை குத்தியதாக … Read more

இந்து சமய அறநிலையத் துறைக்கு உயர் நீதின்றம் பாராட்டு

சென்னை: கோயில் நிலங்களில் இருந்து வர வேண்டிய வாடகை பாக்கியை வசூலிக்கும் நடவடிக்கைகளை எடுத்துள்ள இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கோயில் நிலங்களில் இருந்து வர வேண்டிய ரூ. 2,390 கோடி வாடகை பாக்கியை வசூலிக்கும் நடவடிக்கைகளை எடுத்துள்ள இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கையின் தொடர்ச்சியாக ஆண்டு வாடகை ரூ. … Read more

ஏழை நோயாளிகளுக்கு இலவச டயாலிசிஸ் சேவை – மத்திய அரசு விளக்கம்

புதுடெல்லி: பாராளுமன்ற மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை மந்திரி டாக்டர் பாரதி பிரவின் பவார் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில் தெரிவித்துள்ளதாவது: நாட்டிலுள்ள மாவட்ட மருத்துவமனைகளில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள அனைத்து நோயாளிகளுக்கும் இலவசமாக டயாலிசிஸ் சேவைகளை வழங்கும் நோக்கத்துடன் 2016 ஆம் ஆண்டு பிரதமரின் தேசிய டயாலிசிஸ் திட்டம் தொடங்கப்பட்டது.   மொத்தம் 35 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 569 மாவட்டங்களில் ஹீமோடையாலிசிஸ் இயந்திரங்களின் மூலம் பிரதமரின் … Read more

தெற்கு ரயில்வே மண்டலத்தில் 4.58 கோடி மதிப்பு தங்கம் பறிமுதல்

சென்னை: தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: தெற்கு ரயில்வே மண்டலத்தில், கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் ரயில்வே பாதுகாப்பு படையின் சிறப்பு குழு நடத்திய அதிரடி நடவடிக்கைகளால், உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ₹4.58 கோடி மதிப்புள்ள சுமார் 10.055 கிலோ அளவிலான தங்கப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சட்டவிரோத கடத்தல்களில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா முடிவுக்கு வரவில்லை எச்சரிக்கை!உலக சுகாதார நிபுணர் சவுமியா தகவல்| Dinamalar

புதுடில்லி:”கொரோனா பரவல் முடிவுக்கு வந்துவிட்டதாக நினைத்து விடாதீர்கள். தற்போது பின்பற்றும் தடுப்பு நடவடிக்கைகள், பாதுகாப்பு நெறிமுறைகள் எதிர்காலத்திலும் தொடர வேண்டும். உருமாறிய வகை வைரஸ் எந்த நேரத்திலும், எங்கு வேண்டுமானாலும் பரவலாம். எனவே எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். இந்த ஆண்டு இறுதியில் நிலைமை சற்று சீரடையலாம்,” என, உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் நேற்று தெரிவித்தார்.கொரோனா பரவல் குறித்து, உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் கூறியதாவது:’எச்.ஐ.வி., ஜிகா, எபோலா, … Read more

சைபர் பாதுகாப்பிற்கும் இன்சூரன்ஸா.. HDFC ERGO-வின் அருமையான திட்டம்..!

இன்றைய காலகட்டத்தில் பல இன்சூரன்ஸ் திட்டங்கள் வந்து விட்டன. பொதுவாக இன்சூரன்ஸ் என்றால் ஹெல்த் இன்சூரன்ஸ், வாகன இன்சூரன்ஸ் என பல வகையான திட்டங்கள் உள்ளன. ஆனால் சைபர் பாதுகாப்புக்கான இன்சூரன்ஸ் திட்டங்களும் உள்ளன என்பது எத்தனை பேருக்கு தெரியும். அத்தகைய இன்சூரன்ஸ் திட்டத்தினை தான் ஹெச்டிஎஃப்சி எர்கோ ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் தனிப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு, இணைய பாதுகாப்பினை நோக்கமாகக் கொண்டு, தனது சைபர் சாசெட் இன்சூரன்ஸ் பாலிசியினை அறிமுகப்படுத்தியுள்ளது. வாடிக்கையாளார்கள் ஒரு நாளைக்கு 2 ரூபாய் … Read more

IPL Auction 2022: அதிகம் அறிமுகமில்லாத, ஆனால் ஆக்ஷனில் அசத்தப்போகும் வெளிநாட்டு வீரர்கள் யார், யார்?

வாய்ப்புகளை வசப்படுத்துவதற்கான வழி என்பதையும் தாண்டி, இதயங்களை வசீகரிப்பதற்கான வாய்ப்பு என்பதாலும் ஐபிஎல் கிரிக்கெட்டர்களால் விரும்பப்படுகிறது. முகமறியா இளம்வீரர்களது திறனை வெளிக்கொணர ஆரம்பிக்கப்பட்டதுதான் ஐபிஎல். ஆனால், தற்சமயம் சர்வதேச அணிக்காக ஆடிக் கொண்டிருக்கும் வேற்று நாட்டு வீரர்கள்கூட ஐபிஎல்லில் ஆடிவிட மாட்டோமா என ஆசைப்படுமளவு மாறியுள்ளது. இது பணத்தின் மீதான ஈர்ப்பு மட்டுமல்ல, புகழின் மீதான போதையும்கூட. இந்த டி20 போட்டிகளில் கிடைக்கும் கவனம், சமயத்தில் சர்வதேசப் போட்டிகளையே தாண்டி நிற்கிறது. அந்த வகையில் வேற்று நாட்டைச் … Read more

இங்கிலாந்தில் முதல் பலி வாங்கிய லஸ்ஸா காய்ச்சல்… ஒரே குடும்பத்தில் மூவர் கண்காணிப்பில்

இங்கிலாந்தின் பெட்ஃபோர்ட்ஷையரில் ஒருவர் லஸ்ஸா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மரணமடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த காய்ச்சலால் இங்கிலாந்தில் இறக்கும் முதல் நபர் இவர் என இங்கிலாந்தின் சுகாதார பாதுகாப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. மேற்கு ஆபிரிக்காவில் இருந்து திரும்பிய குடும்பம் ஒன்று லஸ்ஸா காய்ச்சலால் பாதிக்கப்பட, தற்போது அந்த குடும்பத்தில் ஒருவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாகவே தெரிய வந்துள்ளது. இதுவரை பிரித்தானியாவில் 10 பேர்களுக்கு மட்டுமே லஸ்ஸா காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 2009ம் ஆண்டுக்கு பின்னர் … Read more

வன்னியர் இட ஒதுக்கீடு தொடர்பான மேல்முறையீட்டு மனுக்கள் மீது திட்டமிட்டபடி விசாரணை நடத்தப்படும்- உச்சநீதிமன்றம்

புதுடெல்லி: வன்னியர் இட ஒதுக்கீடு தொடர்பான மேல்முறையீட்டு மனுக்கள் மீது திட்டமிட்டபடி விசாரணை நடத்தப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீட்டிற்கான சட்டத்தை சட்டசபையில் நிறைவேற்றி அரசாணை வெளியிட்டது. இதை எதிர்த்து வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கு விசாரணையின்போது உள்ஒதுக்கீடு அரசியல் அமைப்பிற்கு எதிரானது என உயர்நீதிமன்றம் மதுரை கிளை தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்தது. இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு … Read more

கனமழை எதிரொலி – திருவாரூரில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

திருவாரூர்: மன்னார் வளைகுடா பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தென் தமிழக மாவட்டங்கள், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை, மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், தென் கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்ப நிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் … Read more