14 மாதங்கள் தனிமை: 78 முறை பரிசோதனை: கொரோனாவுடன் வாழும் அதிசய மனிதர்

துருக்கியை சேர்ந்த முசாபர் காய்சான்(56) என்ற நபர் சுமார் 14 மாதங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உலகிலேயே அதிக நாள்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் என்ற யாரும் விரும்பத்தகாத சாதனையை படைத்துள்ளார். முசாபர் காய்சான்(56) தனது Leukemia நோயால் அவதிப்பட்டு கொண்டு இருக்கும் பொது முதல் முறையாக 2020ஆம் ஆண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முசாபர் காய்சான்(56) முதல் முறையாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கும் போது அவர் உயிர் பிழைக்க மாட்டார் என மருத்துவர்கள் தெரிவித்துள்னர். ஆனால் … Read more

மார்ச் 7ல் பொறியியல் மாணவர்களுக்கு நேரடி வகுப்பு

சென்னை: பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு மீண்டும் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பொறியியல் கல்லூரி உள்பட அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் ஆன்லைன் வகுப்புகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் கொரோனா குறைந்த வைரஸ் பாதிப்பு தற்போது குறைந்ததை அடுத்து மார்ச் 7ஆம் தேதி முதல் பொறியியல் மாணவர்களுக்கு மீண்டும் நேரடி வகுப்புகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மற்றும் … Read more

அந்த வாக்குறுதியையும் விரைவில் நிறைவேற்றுவோம்- முதல்வர் ஸ்டாலின் உறுதி

சென்னை: திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “உள்ளாட்சியிலும் மலரட்டும் நம்ம ஆட்சி” என்ற தலைப்பிலான தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக உரையாற்றினார். அவர் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு: பழந்தமிழகத்தில் தொண்டை மண்டலத்தின் நுழைவு வாயிலாக இருந்த மாவட்டம் இது! பல்லவர்கள் தொடங்கி ஆங்கிலேயர்கள் வரை போர் செய்த பூமி இது! பிரிட்டிஷார் முதலில் வந்து இறங்கியது பழவேற்காடு உள்ளிட்ட இந்தப் பகுதியில்தான்! பழவேற்காட்டுக்கு … Read more

சென்னை உயர் நீதிமன்றத்தின் 6 வழக்கறிஞர்களை நீதிபதிகளாக நியமிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை

டெல்லி: சென்னை உயர் நீதிமன்றத்தின் 6 வழக்கறிஞர்களை நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. நிதுமோலு மாலா, சுந்தர் மோகன், கபாலி குமரேஷ் பாபு, சௌந்தர், அப்துல் கனி அப்துல் ஹமீத், ஜான் சத்யன் ஆகியோர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.

வருமான வரித்துறை பிடியில் சிக்கிய சீனா நிறுவனம்.. 3 இடத்தில் சோதனை..!

2021ல் வருமான வரித்துறை இந்தியாவில் வர்த்தகம் செய்து வரும் பல்வேறு சீன ஸ்மார்ட்போன் நிறுவனத்தில் சோதனை செய்தது. இந்தச் சோதனையில் சியோமி, ஓப்போ உட்படப் பல நிறுவனங்கள் செய்த 6500 கோடி ரூபாய் மதிப்பிலான மோசடிகள் கண்டுபிடிக்கப்பட்டு வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது மட்டும் அல்லாமல் அபராதமும் விதிக்கப்பட்டது. சந்திரசேகரன் கைக்கு வரும் 3 புதிய நிறுவனங்கள்.. அரசு ஓகே சொல்லுமா.. காத்திருக்கும் டாடா..! இந்நிலையில் தற்போது வருமான வரித்துறை சீனாவின் முன்னணி டெலிகாம் மற்றும் … Read more

போயஸ் கார்டன் விவகாரம்: ரூ.68 கோடி டெபாசிட் தொகையைத் திரும்பப் பெற தமிழக அரசு மனுத் தாக்கல்!

கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வேதா நிலையம் வீட்டை நினைவில்லமாக மாற்ற நிலத்தைக் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது எனக்கூறி அவசரச் சட்டத்தைத் தமிழ்நாடு அரசு பிறப்பித்தது. அதைத் தொடர்ந்து, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வீட்டை நினைவு இல்லமாக மாற்ற அப்போது ஆட்சியில் இருந்த அ.தி.மு.க அரசு முடிவு செய்தது. போயஸ் கார்டன் வீடு #VikatanExclusive எனவே, நிலம் கையகப்படுத்தும் அதிகாரி லட்சுமி, வருமான வரித்துறைக்கு ஜெயலலிதா … Read more

Flax Seeds அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வதால் என்ன நடக்கும் தெரியுமா? கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்

ஆளி விதைகளில் ஆரோக்கியம் மற்றும் ஏராளமான ஊட்டச்சத்துக்களை தன்னுள் அடக்கி உள்ளது. இந்த ஆளி விதையை அப்படியே சாப்பிடலாம். பொடியாக்கி உணவுகளின் மீது தூவி சாப்பிடலாம் அல்லது முளைக்கட்ட வைத்தும் சாப்பிடலாம். ஆனால் ஆளி விதையை பொடியாக்கி அல்லது முளைக்கட்ட வைத்து சாப்பிட்டால் அதிலிருக்கும் சத்துக்களை உடலால் முழுமையாக எளிதில் உறிஞ்ச முடியும். பலருக்கும் ஆளி விதையை சாப்பிட்டால் நல்லது என்று மட்டும் தான் தெரியும். என்ன நன்மை கிடைக்கும் என்று கேட்டால் தெரியாது. ஆகவே ஆளி … Read more

26 ஆண்டுகளாக பாதிரியார் செய்த தவறால் ஆயிரக்கணக்கான கிறித்தவர்கள் மீண்டும் ஞானஸ்நானம் பெறவேண்டியுள்ளது….

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உள்ள தேவாலயத்தில் கடந்த 26 ஆண்டுகளாக ஞானஸ்நானம் பெற்றவர்கள் மீண்டும் ஞானஸ்நானம் பெறவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 1995ம் ஆண்டு முதல் இந்த தேவாலயத்தில் பாதிரியாராக பதவிவகிக்கும் அரங்கோ என்பவர் கத்தோலிக்க திருச்சபையின் தலையிடமான வாடிகன் அனுமதித்த சூத்திரத்தை தவறாக பயன்படுத்தியது தற்போது தெரியவந்திருக்கிறது. கத்தோலிக்க திருச்சபையின் வழக்கப்படி ஞானஸ்நானம் பெற்ற ஒருவரே அனைத்து விதமான தேவ ஆசீர்வாதங்களுக்கும் தகுதியானவர் என்பதால் இது அந்த திருச்சபையைச் சேர்ந்தவர்கள் இடையே வருத்தத்தை அளித்துள்ளது. இதுகுறித்து அத்திருச்சபையின் … Read more

சாதனை… 100 சதவீத கொரோனா தடுப்பூசி இலக்கை எட்டியது கோவா

பனாஜி: இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. இதற்காக தொடர்ந்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுவதால், பொதுமக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்துகின்றனர்.  இந்நிலையில், கோவா மாநிலம் 100 சதவீத கொரோனா தடுப்பூசி என்ற இலக்கை எட்டி சாதனை படைத்துள்ளது. கோவாவில் தகுதி உள்ள 11.66 லட்சம் நபர்களுக்கும் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களும் செலுத்தப்பட்டுவிட்டதாக சுகாதார சேவைகள் இயக்குனர் டாக்டர் ஐரா அல்மெய்டா தெரிவித்தார். இந்த இலக்கை … Read more

பொறியியல் மாணவர்களுக்கு மார்ச் 7ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகள் தொடங்கும்: அண்ணா பல்கலை

சென்னை: பொறியியல் மாணவர்களுக்கு மார்ச் 7ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகள் தொடங்கும் என அண்ணா பல்கலை கழகம் அறிவித்துள்ளது. ஜூன் 11ஆம் தேதி வரை தொடர்ந்து நேரடி வகுப்புகள் நடைபெறும் என கூறியுள்ளது. ஜூன் 13ஆம் தேதி செய்முறைத் தேர்வும், ஜூன் 22ஆம் தேதி செமஸ்டர் எழுத்துத் தேர்வும் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.