குற்றம் நிரூபிக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் பதவி தானாக பறிபோனதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

புதுடெல்லி: குற்றம் நிரூபிக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் பதவி, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி தானாக பறிபோனதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்டதை.அடுத்து, சமூக ஆர்வலர் ஆபா முரளிதரன் என்பவர் இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கை தொடர்ந்துள்ளார். அவர் தனது மனுவில், ”மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 பிரிவு 8(3)ன்படி குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனைக்கு உள்ளாகும் மக்கள் பிரதிநிதிகளின் பதவி, தீர்ப்பு வந்ததும் தானாகவே … Read more

பாடகி பாம்பே ஜெயஸ்ரீயின் உடல்நிலை சீராக உள்ளதாக குடும்பத்தினர் தகவல்!

பாடகி பாம்பே ஜெயஸ்ரீயின் உடல்நிலை சீராக உள்ளதாகவும் மேலும் சில நாட்களுக்கு அவருக்கு பூரண ஓய்வு தேவைப்படுவதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இந்திய மொழிகள் பலவற்றில் பல்வேறு ஹிட் பாடல்களைக் கொடுத்தவர் பாம்பே ஜெயஸ்ரீ. லண்டனில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கச் சென்ற பாம்பே ஜெயஸ்ரீக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து, அவர் அங்குள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த நிலையில், அவரது உடல்நிலை சீராக உள்ளது என்றும் மேலும் ஓரிரு நாட்களுக்கு ஓய்வு தேவைப்படுவதாகவும் குடும்பத்தினர் … Read more

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வழிபட ரூ. 300 தரிசன டிக்கெட்டுகளை மார்ச் 27ம் தேதி ஆன்லைனில் வெளியீடு: தேவஸ்தானம் அறிவிப்பு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஏப்ரல் மாதம் சுவாமி தரிசனம் செய்வதற்கான ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டு மார்ச் 27ம் தேதி ஆன்லைனில் வெளியிடும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.www.tirupahtibalaji.ap.gov.in என்ற இணையதளதத்தில் 27-ம் தேதி காலை 11 மணி முதல் முன்பதிவு செய்யலாம் என்று திருமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

ராகுல்காந்தி தகுதி நீக்கம்: வயநாடு தொகுதிக்கு இடைத்தேர்தலை அறிவிக்குமா ஆணையம்?

நேற்றைய தினம் வயநாடு எம்பி ராகுல்காந்தி, எம்.பி பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில், அவர் எம்.பி.யாக இருந்த கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் இடைத்தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போது, கர்நாடகாவின் கோலார் பகுதியில் பேசிய ராகுல்காந்தி, ‘ஏன் அனைத்து திருடர்களும் மோடி என்ற குடும்பப் பெயரையே கொண்டுள்ளனர்?’ என்று பேசியிருந்தார். இதையடுத்து குஜராத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ … Read more

இந்தியாவில் ஒரு நாள் கரோனா பாதிப்பு 1,590 ஆக அதிகரிப்பு

புதுடெல்லி: இந்தியாவில் ஒரே நாளில் 1,590 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 8,601 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, இந்தியாவில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஒரே நாளில் 1,590 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம், தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை 8,601 ஆக உயர்ந்துள்ளது. கரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4 கோடியே … Read more

ராகுல் காந்தி குறி வைக்கப்பட்டது எதனால்? பின்னால் இருப்பது யார்? மோடியின் கண்களில் பயம்!

ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். “லண்டன் பேச்சு குறித்து நான் மன்னிப்பு கேட்க பாஜகவினர் கோரினர். இந்தியாவிற்கு எதிராக நான் பேசியதாக மத்திய அமைச்சர் கூறும் எனது லண்டன் பேச்சுக்களை யார் வேண்டுமானாலும் ஆய்வு செய்யலாம். லண்டன் பேச்சு குறித்து பேச அனுமதி கேட்டதற்கு மக்களவை சபாநாயகர் மறுத்துவிட்டார். அதானாயின் போலி நிறுவனங்களுக்கு 20,000 கோடி ரூபாய் யாருடைய பணம். அது எங்கிருந்து வந்தது? அதானியின் போலி நிறுவனங்களுக்குச் … Read more

தகுதிநீக்கத்தை கண்டு ஒருபோதும் நான் அஞ்சமாட்டேன்: டெல்லியில் ராகுல்காந்தி பேட்டி

டெல்லி: அதானிக்கும் பிரதமர் மோடிக்கும் என்ன தொடர்பு என்பதே எனது கேள்வி, கேள்வி கேட்பதை ஒருபோதும் நிறுத்தமாட்டேன்.ஜனநாயகத்துக்கான மக்கள் குரலாக தொடர்ந்து எனது குரல் ஒலிக்கும்.அதானி குழுமத்தில் ரூ.20,000 கோடி முதலீடு செய்த நிறுவனங்கள் யாருடையது, அந்த பணம் யாருடையது என்று ராகுல் கேள்வி எழுப்பியுள்ளார். மோடி வெளிநாடு சென்றபோதெல்லாம் அதானி குழுமத்துக்கு தொழில் ஒப்பந்தங்கள் கிடைத்ததை புகைப்பட ஆதாரத்துடன் சுட்டிக்காட்டினேன். எனது பேச்சுகள் அனைத்தும் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.

”உங்களை போன்ற எதேச்சதிகாரிகளுக்கெல்லாம்…” – மு.க.ஸ்டாலினை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையும், அவருடைய பதவியை பறித்ததும்தான் இந்தியா முழுவதும் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்காக கர்நாடகாவின் கோலார் பகுதியில் நடத்தப்பட்ட பரப்புரையில், “எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற குடும்பப் பெயர் இருப்பது எப்படி?” என முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியது, மறைமுகமாக பிரதமர் நரேந்திர மோடியை குறிப்பிடுவதை போல இருப்பதாகவும், மோடி என்ற சமூகத்தினரை அவமதிப்பதாகவும் சொல்லி குஜராத்தின் முன்னாள் பாஜக அமைச்சரும் எம்.எல்.ஏவுமான … Read more

பாஜக அரசுக்கு ஏன் இவ்வளவு அவசரம்?- அமைச்சர் முத்துசாமி

தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு ஈரோடு மேற்கு தொகுதிக்கு உட்பட்ட அம்பேத்கர் நகரில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு வீட்டு வசதி துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்து கொண்டு 300க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் சு முத்துசாமி, “தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குமாறு … Read more

பத்திரிகையாளர்களை சந்திக்கிறார் ராகுல் காந்தி: தகுதி நீக்கத்திற்கு பின் முதன்முறை

புதுடெல்லி: நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட பின்னர், முதல் முறையாக இன்று (சனிக்கிழமை) பகல் 1 மணிக்கு ராகுல் காந்தி பத்திரிகையாளர்களை சந்திக்கிறார். கடந்த 2019 ஆம் ஆண்டு அவதூறு வழக்கு ஒன்றில் குஜராத்தின் சூரத் நீதிமன்றம் வியாழக்கிழமை ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது. இதனைத் தொடர்ந்து மக்கள் பிரிதிநிதித்துவ சட்டம் 1951-ன் கீழ் அவர், வயநாடு எம்.பி. பதவியில் இருந்து வெள்ளிக்கிழமை தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இந்தநிலையில் … Read more