லண்டனில் பாஜக ஆதரவுப் பேரணி நடத்தும் வெளிநாடுவாழ் குஜராத்திகள்

லண்டன்: குஜராத்தில் எதிர் வரவிருக்கும் தேர்தலுக்கு, பாஜக மற்றும் நரேந்திர மோடி மீது தங்கள் அன்பையும் ஆதரவையும் காட்ட விரும்பும் வெளிநாடுவாழ் இந்தியர்கள்,  விரைவில் இங்கிலாந்தில் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக கார் பேரணி நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ஐக்கிய இராச்சியத்தில் வசிக்கும் புலம்பெயர்ந்த இந்தியர்கள், பாஜகவுக்கு ஆதரவாகவும், பிரதமர் நரேந்திர மோடிக்கு தங்கள் ஒற்றுமையைக் காட்டமும் வகையில் கார் பேரணி நடத்த முடிவு செய்துள்ளதாக இன்று அறிவித்துள்ளனர். குஜராத்தில் வரவிருக்கும் தேர்தலுக்கு பாஜக மற்றும் நரேந்திர மோடி … Read more

நாடு வளர்ந்த தேசமாக உருவெடுக்க கடமையை செய்வதற்கே முன்னுரிமை: பிரதமர் மோடி வலியுறுத்தல்

புதுடெல்லி: ‘நாடு வளர்ந்த தேசமாக உருவெடுக்க, நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் அவரவர் அடிப்படை கடமைகளை, பொறுப்புகளை நிறைவேற்றுவதற்கே முன்னுரிமை அளிக்க வேண்டும்’ என பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார். அரசியலமைப்புச் சட்டம் நாடாளுமன்றத்தில் முறைப்படி ஏற்றுக் கொள்ளப்பட்ட நவம்பர் 26ம் தேதி, கடந்த 2015ம் ஆண்டு முதல் அரசியலமைப்பு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, உச்ச நீதிமன்றத்தில் நேற்று நடந்த அரசியலமைப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று பேசியதாவது: இன்று ஒட்டுமொத்த உலகின் பார்வையும் இந்தியா மீது … Read more

மும்பை தீவிரவாத தாக்குதல் நினைவு தினம்: உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி புகழஞ்சலி

புதுடெல்லி: அரசியல் சாசன தின நிகழ்ச்சி உச்ச நீதிமன்றத்தில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற பிரதமர் மோடி பேசுகையில், ‘‘மும்பை தீவிரவாத தாக்குதல் நினைவு தினத்தை நாம் அனுசரிக்கிறோம். 14 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய அரசியலமைப்பு மற்றும் பொதுமக்கள் உரிமைகள் தினத்தை நாடு கொண்டாடிக் கொண்டிருந்தபோது, மனிதநேயத்தின் எதிரிகள் இந்தியாவில் மிகப் பெரிய தீவிரவாத தாக்குதலை நடத்தினர். இதில் உயிரிழந்தவர்களுக்கு நான் புகழஞ்சலி செலுத்துகிறேன்’’ என்றார். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ட்விட்டரில் விடுத்துள்ள செய்தியில், ‘‘மும்பை … Read more

காணொலியில் நடத்த ஏற்பாடு; டிச.17ல் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: முக்கிய முடிவுகள் எடுக்க திட்டம்

புதுடெல்லி: 48வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் அடுத்த மாதம் 17ம் தேதி காணொலி வாயிலாக நடக்கிறது. இந்த கூட்டத்தில் ஜிஎஸ்டிக்குள் பெட்ரோல், டீசல் கொண்டு வருவது, கேசினோ, ரேஸ் கோர்ஸ், ஆன்லைன் விளையாட்டுக்கு 28% வரி விதிப்பது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படுகிறது. ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையில் தேவைப்படும் மாற்றங்கள் குறித்து ஆலோசிக்க ஜிஎஸ்டி கவுன்சில் அமைக்கப்பட்டது. இந்த கவுன்சிலின் தலைவராக ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளார். குறிப்பிட்ட கால இடைவெளியில் இந்த … Read more

பெல்ஜியம் பெண்ணை மணந்த ஆட்டோ டிரைவர்!!நேர்மையை பார்த்து மலர்ந்த காதல்…

கர்நாடக மாநிலம் விஜயநகர் மாவட்டம் ஹம்பியை சேர்ந்தவர் அனந்தராஜ். ஆட்டோ ஓட்டுநரான இவர், சுற்றுலா வழிகாட்டியாகவும் இருந்து வருகிறார். அதாவது, ஹம்பிக்கு சுற்றுலாவுக்கு வரும் வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை தனது ஆட்டோவில் அழைத்து சென்று, அவர்களுக்கு ஹம்பியை பற்றிய வரலாற்று தகவல்களை எடுத்து கூறி வந்தார். இந்த நிலையில், கடந்த 4 ஆண்டுக்கு முன்பு பெல்ஜியத்தில் இருந்து கெமில் என்ற இளம்பெண் ஹம்பிக்கு குடும்பத்துடன் சுற்றுலாவுக்கு வந்திருந்தார்.அப்போது அவர்கள், அனந்தராஜின் ஆட்டோவில் பயணம் செய்திருந்தார். … Read more

சூட்கேஸில் மனித உறுப்புகள்… ஷ்ரதா வாக்கருடையதா? போலீசார் சந்தேகம்

அரியானா மாநிலம் சூரஜ்குண்ட் வனப் பகுதியில் கடந்த வியாழன் பிற்பகல் மனித உடல் உறுப்புகளுடன் சூட்கேஸை ஃபரிதாபாத் போலீசார் மீட்டுள்ளனர். இறந்தவரின் அடையாளத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் உடல் மிகவும் பழையதாக இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர். போலீசாரின் தகவல்களின்படி, மனித எச்சங்கள் ஒரு பிளாஸ்டிக் பை மற்றும் ஒரு சாக்கில் சுற்றப்பட்டிருந்தன, மேலும் சூட்கேஸுக்கு அருகில் ஆடைகள் மற்றும் பெல்ட் ஆகியவை மீட்கப்பட்டன. போலீசாரின் முதல் பார்வையில், ஒரு நபர் வேறு இடத்தில் கொலை செய்யப்பட்டு, அடையாளம் … Read more

குருவாயூர் கோயிலில் பரபரப்பு; பாகனை தூக்கி வீச முயன்ற யானை: புதுமண தம்பதி போட்டோ எடுத்த போது விபரீதம்

திருவனந்தபுரம்: குருவாயூர்  கோயிலில் திருமணத்திற்குப் பின் புதுமண தம்பதி யானை அருகே நின்று போட்டோ எடுக்க  முயன்றபோது யானை மிரண்டு பாகனை தாக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் பாகன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். கேரளாவிலுள்ள  பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்று குருவாயூர் கிருஷ்ணன்  கோயில். இக்கோயிலில் தாலி கட்டிய ஒரு இளம் ஜோடி  புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது  தாமோதர தாஸ் என்ற கோயில் யானை சென்று கொண்டிருந்தது. யானையின் மேல் ஒரு  … Read more

போலி வேலைவாய்ப்பு மோசடியில் மியான்மியரில் சிக்கிய 200 தொழிலாளர்கள் மீட்பு

நியூடெல்லி: ‘வெளிநாட்டு வேலை’ வாங்கித் தருவதாக சொல்லி ஏமாற்றிய போலி முகவர்களை நம்பி மியான்மரில் சிக்கித் தவித்த 200க்கும் அதிகமான இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். போலி வேலைவாய்ப்பு மோசடி கும்பலினால் பாதிக்கப்பட்டு மியான்மரில் சிக்கியிருந்த 200க்கும் மேற்பட்ட இந்தியர்களை மீட்டுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்திய அரசின் முயற்சியினால் 200க்கும் அதிகமானோர் மீட்கப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி தெரிவித்தார். அதில் 153 பேர் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டிருக்கின்றனர். மேலும் 50 பேரை இந்தியாவுக்குள் திரும்ப … Read more

சமூக வலைதளங்களில் துப்பாக்கி கலாசார பதிவை நீக்க கெடு: பஞ்சாப் அரசு அதிரடி

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் பொது இடங்களில் துப்பாக்கிகளை காட்சிப்படுத்தவும், துப்பாக்கி கலாச்சாரம் மற்றும் வன்முறையை ஊக்குவிக்கும் பாடல்களை சமூக வலைதளத்தில் பதிவிடவும் கடந்த 13ம் தேதி அம்மாநில அரசு தடை செய்தது.  இதை மீறுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், பஞ்சாப் மாநில டிஜிபி கவுரவ் யாதவ் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘அடுத்த 72 மணி நேரத்தில் சமூக வலைதளங்களில் துப்பாக்கி கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் வகையில் பதிவிட்டுள்ள பதிவுகளை தானாக முன்வந்து நீக்குமாறு அனைவருக்கும் … Read more

வாய்பாட்டை ஒப்பிக்க தவறிய மாணவனுக்கு நடந்த கொடூரத்தை பாருங்க..!!

உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தில் உள்ள சிசாமாவ் என்ற இடத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 5-ம் வகுப்பு படிக்கும் விவான் என்ற மாணவனுக்கு இந்த கொடூரமான தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 24-ம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது. 2-ம் வாய்பாட்டை மாணவன் மனப்பாடமாக ஒப்பிக்காததால் ஆசிரியர் பவர் ஹேண்ட் டிரில்லிங் இயந்திரத்தைப் பயன்படுத்தி காயப்படுத்தினார். இதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மாணவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். … Read more