அமராவதியில் தலைநகர் கட்டமைப்புகளை 6 மாதங்களுக்குள் கட்டி முடிக்க வேண்டும் ஆந்திர உயர்நீதிமன்றம் உத்தரவு: உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதிப்பு

ஆந்திரா: ஆந்திர மாநிலம், அமராவதியில் தலைநகருக்கான கட்டமைப்புகளை 6 மாதங்களுக்குள் கட்டி முடிக்க வேண்டும் என்று மாநில உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு திங்கட்கிழமை இடைக்கால தடை விதித்த உச்சநீதிமன்றம் உயா்நீதிமன்றம் நகர திட்டமிடுபவராகவோ அல்லது பொறியாளராகவோ செயல்பட முடியாது என்று கூறியுள்ளது. ஒன்றுபட்ட ஆந்திர மாநிலம் பிரிவினைக்கு பின்னா் தெலங்கானா, ஆந்திரம் என இரண்டாக பிரிந்தது. ஆந்திர மாநிலத்துக்கு கிருஷ்ணா நதிக்கரையில் அமைந்துள்ள அமராவதியை தலைநகராக அறிவித்து அதற்கான பணிகளை அப்போதைய முதல்வா் சந்திரபாபு நாயுடு மேற்கொண்டு … Read more

கொலீஜியம் நடைமுறை இந்த மண்ணின் சட்டம்: மத்திய அரசு பின்பற்ற உச்ச நீதிமன்றம் வலியுறுத்தல்

புதுடெல்லி: கொலீஜியம் நடைமுறை இந்த மண்ணின் சட்டம் என்றும் இதை மத்திய அரசு பின்பற்றித்தான் ஆக வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான குழு (கொலீஜியம்) நாடு முழுவதும் உள்ள உயர் நீதிமன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதி களை நியமிப்பதற்கான பரிந் துரையை மத்திய அரசுக்கு வழங்குகிறது. 30 ஆண்டுகளுக்கும் மேலாக.. இதைப் பரிசீலித்து மத்திய அரசு ஒப்புதல் வழங்கும். இந்தக் குழுவில் தலைமை நீதிபதியுடன் 4 … Read more

மதமாற்றங்களை தடை செய்வது குறித்த சட்டம்: ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

டெல்லி: அரசியல் அமைப்பு சட்டம் வழங்கும் வழிப்பாட்டு உரிமை என்பது மதமாற்ற உரிமையை உள்ளடக்கியது அல்லது என்று உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் மோசடியான முறையில் மதமாற்றங்கள் நடைபெற்று வருவதாகவும் இத்தகைய மோசடி மதமாற்றங்களை தடை செய்வது குறித்த சட்டம் முன் வடிவை ஏற்படுத்த சட்ட ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி வழக்கறிஞர் அஸ்வினிகுமார் உபாத்பாய் சார்பில் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து வழக்கில் பதில் மனு தாக்கல் செய்த ஒன்றிய அரசு அரசமைப்புச் … Read more

டெல்லி எய்ம்ஸ் : 200 கோடி ரூபாய் கிரிப்டோ கரன்சி கேட்டு மிரட்டல்! என்ன செய்ய போகிறது அரசு?

டெல்லி எய்ம்ஸ் சர்வரை ஹேக் செய்த ஹேக்கர்கள் ரூ 200 கோடி மதிப்புக்கு கிரிப்டோ கரன்சிகள் கேட்டு மிரட்டல் விடுத்துள்ளனர். கடந்த 6 நாள்களுக்கு முன்பு, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் இணைய தளம் மீது வைரல் தாக்கு ஏற்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. பல்வேறு முயற்சிகள் செய்தும் சர்வரை மீண்டும் பழைய நிலைக்கு இன்னும் கொண்டு வரமுடியவில்லை. பின்பு கடந்து 25ம் தேதி, டெல்லி உளவு பிரிவு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. தற்போது உலகதிற்கு … Read more

அசாம் மாநில பல்கலைக்கழகத்தில் ராகிங் கொடுமை தாங்க முடியாமல் மாடியில் இருந்து குதித்த மாணவன்

குவாஹாட்டி: அசாம் மாநிலத்தில் திப்ரூகர் பல்கலைக்கழகம் மிகவும் பிரபலமானது. இங்கு விடுதியில் தங்கிப் படித்து வந்த வணிகவியல் துறை முதலாம் ஆண்டு மாணவர் ஆனந்த் சர்மாவை, சீனியர் மாணவர்கள் நேற்று ராகிங் செய்துள்ளனர். அவர்களின் ராகிங் கொடுமையில் இருந்து தப்பிக்க, பல்கலைக்கழகத்தின் 2-வது மாடியில் இருந்து ஆனந்த் சர்மா கீழே குதித்து விட்டார். இதில் படுகாயம் அடைந்த அந்த மாணவரை, உடனடியாக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவருடைய உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. தீவிர சிகிச்சை பிரிவில் அவர் … Read more

வழக்கை ஒத்திவைத்த நீதிபதி… கத்தியை காட்டிய குற்றவாளி – நீதிமன்றத்தில் பரபரப்பு

ஒடிசா மாநிலத்தின் கஞ்சம் மாவட்டதில் பெர்ஹாம்பூர் பகுதியில் அமைந்துள்ள நீதிமன்றத்தில், வாரத்தின் முதல் வேலை நாளான நேற்று பெரும் பரபரப்பான சம்பவம் நிகழ்ந்துள்ளது.  அந்த நீதிமன்றத்தில்,பெர்ஹாம்பூர்துணை-பிரிவு நீதித்துறை நீதிபதி பிரக்யான் பரமிதா பிரதிஹாரி என்பவர் நேற்று நீதிமன்ற பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். பெண் நீதிபதியான அவர், மதியம் பல்வேறு வழக்குகளை விசாரிக்கவும் தயாராகிக்கொண்டிருந்தார்.  பாகாபன் சாஹூ (50) என்பவரும் ஒரு வழக்கு விசாரணைக்காக நேற்று நீதிமன்றத்திற்கு வந்திருந்தார். அவரின் வழக்கும் மதியம், நீதிபதி பிரக்யானால் விசாரிக்கப்பட இருந்தது. அப்போது, … Read more

“இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்'ஐ திரையிட்டது அதிர்ச்சியளிக்கிறது”

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் வெறுப்புணர்வை தூண்டும் விதமாக தயாரிக்கப்பட்ட மோசமான திரைப்படம்’ என்று இந்திய சர்வதேச திரைப்பட விழாக் குழுவினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். கோவாவில் கடந்த நவம்பர் 20-ம் தேதி தொடங்கிய 53-வது சர்வதேச திரைப்பட விழா நேற்றுடன் (நவ.28) நிறைவடைந்தது. இதற்கு இஸ்ரேலிய திரைப்பட இயக்குனரும், கோவாவில் உள்ள இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் (IFFI) நடுவர் குழுவை சேர்ந்தவர் மற்றும் விழா தலைவர் நடாவ் லாபிட் தலைமை ஏற்றார். நிறைவு விழாவில் பேசிய … Read more

மதமாற்றம் செய்வது அடிப்படை உரிமையில் அடங்காது: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனு

புதுடெல்லி: பாஜக மூத்த தலைவரும், மூத்த வழக்கறிஞருமான அஸ்வினி குமார் உபாத்யாயா, கட்டாய மத மாற்றத்தை தடுக்க உத்தரவிட கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது. நாட்டின் பல பகுதிகளிலும் கட்டாய மத மாற்றம் நடக்கிறது. துாண்டுதல், ஏமாற்றுதல், அச்சுறுத்துதல் ஆகியவற்றின் வாயிலாக மத மாற்றங்கள் நடக்கின்றன. மேலும், பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுத்தும் கட்டாய மத மாற்றம் நடக்கிறது. இது, தேசிய அளவிலான பிரச்சினையாக உள்ளது. பில்லி, சூனியம், … Read more

அதானி துறைமுக எதிர்ப்பு போராட்டம்: கேரள காவல் துறையினர் 40 பேர் காயம்

கொச்சி: கேரள மாநிலத்தில் அதானி குழுமம் ரூ.7,500 கோடியில் துறைமுக திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதற்கு, மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, மீனவர்கள் அதானியின் விழிஞ்சம் துறைமுக திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால், துறைமுக கட்டுமானப் பணிகள் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக முடங்கியுள்ளன. கட்டுமானப் பணிகள் நடைபெற தடையில்லை என்று நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அதானி துறைமுக கட்டுமான லாரிகளை நேற்று முன்தினம் பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் … Read more

லேசான காய்ச்சலுக்கு ஆன்டிபயாட்டிக் மருந்தினை தரக்கூடாது: ஐ.சி.எம்.ஆர்..!!

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சில வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி தோல் மற்றும் மெல்லிய திசு நோய்த்தொற்றுகளுக்கு 5 நாட்களுக்கும், சமூக அளவில் பரவியுள்ள நிமோனியாவுக்கு 5 நாட்களுக்கும், நிமோனியா பாதித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு 8 நாட்களுக்கும் ஆன்டிபயாட்டிக் மருந்துகள் தரலாம். லேசான காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆன்டிபயாட்டிக் மருந்து தருவதை தவிர்க்க வேண்டும். பொதுவாக ரத்தம் அல்லது பிற திசுக்களில் தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிர்களின் இருப்பு மற்றும் அவற்றின் இருப்புக்கு உடலின் எதிர்வினை ஆகியவற்றின் விளைவாக … Read more