அமெரிக்காவிடம் இந்தியா உஷாராக இருக்க வேண்டும்: முன்னாள் ராணுவ தளபதி எச்சரிக்கை

புதுடெல்லி: ‘அமெரிக்காவிடம் இந்தியா எச்சரிக்கையாக இருக்க வேண்டும்’ என முன்னாள் ராணுவ தளபதி பிக்ரம் சிங் எச்சரித்துள்ளார்.  எஸ்பிஐ வங்கி மற்றும் பொருளாதார மாநாடு நேற்று முன்தினம் நடந்தது. இதில், ​​முன்னாள் இந்திய ராணுவ தளபதி பிக்ரம் சிங் பேசுகையில்: உலகின் மிகவும் சக்திவாய்ந்த நாடான அமெரிக்கா இன்னும் நெருங்கிய நட்பு நாடுகளின் மீதான நம்பகத்தன்மையை நிரூபிக்கவில்லை. குவாட் குழுவில் இந்தியா உறுப்பினராக இருந்தாலும், அமெரிக்காவிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.   கடந்த சில ஆண்டுகளாக இந்தியா உடனான … Read more

ஒருவரை மிரட்டி பணம் வாங்க எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க பாருங்க..!!

கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டம் குன்னம்குளம் பகுதியைச் சேர்ந்தவர் நிஷாத். இவரது மனைவி ரஷிதா. இந்த தம்பதியினர் ஆடம்பரமாக வாழ வேண்டும் என்ற ஆசையில் யூடியூபில் வீடியோக்கள் போட்டு வருமானம் பார்க்கலாம் என முயற்சித்துள்ளனர். ஆனால், இவர்களுடைய வீடியோக்களுக்கு சரியான வரவேற்பு கிடைக்காததால், பணம் சம்பாதிக்க யோசித்து இருவரும் பக்காவாக பிளான் போட்டு ஃபேஸ்புக் பக்கத்தில் இருந்து வயதான வசதியான ஆட்களை தேட துவங்கி உள்ளனர். அந்த வகையில் மலப்புரம் கல்பாகம்சேரி பகுதியைச் சேர்ந்த 68 வயது … Read more

யாருக்கு எந்த நேரத்திலும் மரணம் வரலாம் என்பதற்கு இந்த செய்தி ஒரு சிறந்த உதாரணம்..!!

கர்நாடகா மாநிலம் உடுப்பி அருகே ஹவாஞ்சே பகுதியைச் சேர்ந்தவர் ஜோஸ்னா லூயிஸ் (23). இவர், உடுப்பி மாவட்டம் பிரம்மவர் தாலுக்கா, கோலலகிரி அருகே உள்ள ஹவாஞ்சே என்ற இடத்தில் உள்ள தனது உறவினர் வீட்டு திருமணத்தில் கலந்து கொண்டார். இந்நிலையில் அங்கு நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் நடனம் ஆடிக்கொண்டு சென்றுள்ளார். அப்போது திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடனடியாக மணிப்பால் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்ததில் ஏற்கனவே இறந்துவிட்டதாக … Read more

தெல்டும்டே ஜாமீன் என்ஐஏ மனு தள்ளுபடி

புதுடெல்லி:  மகாராஷ்டிராவில் 2018ம் ஆண்டு புனே அருகே உள்ள பீமா கோரேகானில் நடந்த வன்முறையில் ஒருவர் உயிரிழந்தார். இதற்கு ஒரு நாள் முன்னதாக 2017ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி புனேவில் எல்கார் பரிஷத் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதுதான், வன்முறைக்கு வித்திட்டதாக கூறி வழக்கு தொடரப்பட்டது. பின்னர், இந்த வழக்கு என்ஐஏ.வுக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் 16 பேர் கைது செய்யப்பட்டனர். சமூக செயற்பாட்டாளர் ஆனந்த் தெல்டும்டே 2020ம் ஆண்டு கைது செய்யப்பட்டு நவி மும்பையில் உள்ள … Read more

தமிழக அரசு மேல்முறையீடுக்கு ஆன்லைன் நிறுவனங்கள் பதில்: உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்

புதுடெல்லி: ஆன்லைன் ரம்மி, போக்கர் போன்ற இணையவழி சூதாட்ட விளையாட்டுகளுக்குத் தடைவிதித்து தமிழக அரசு சட்டம் இயற்றியது.  இந்த சட்டத்தை ரத்து செய்யக் கோரி ஜங்லி கேம்ஸ், ப்ளே கேம்ஸ், ரீட் டிஜிட்டல் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்தது. அதில், ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு எதிரான தமிழ அரசின் சட்டத்தை ரத்து செய்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் 3ம் தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக கடந்த ஆண்டு நவம்பர் … Read more

சோலார் பேனல் மோசடி உணவில் விஷம் கலந்து கொடுத்து சரிதா நாயரை கொல்ல முயற்சி: முன்னாள் டிரைவர் மீது குற்றப்பிரிவு போலீஸ் வழக்கு

திருவனந்தபுரம்: சோலார் பேனல் மோசடி வழக்கில் கைதான சரிதா நாயரை அவரது முன்னாள் டிரைவர் உணவில் விஷம் கலந்து கொடுத்து கொல்ல முயற்சித்ததாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  கேரளா, தமிழ்நாட்டில் சோலார் பேனல் அமைத்துத் தருவதாக கூறி பலரை ஏமாற்றி கோடிக்ககணக்கில் மோசடி செய்ததாக கூறப்பட்ட புகாரில் கேரள மாநிலம், செங்கனூரை சேர்ந்த சரிதா நாயர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 10 வருடங்களுக்கு முன் உம்மன்சாண்டி ஆட்சியின்போது இந்த மோசடி நடந்தது. முதல்வராக இருந்தபோது … Read more

குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்து இளம்பெண்களை ஆபாச வீடியோ எடுத்து பாலியல் தொழிலில் தள்ளிய கொடுமை: பல லட்சம் பறித்த பெண் உட்பட 2 பேர் கைது

திருமலை: ஆந்திராவில் இளம்பெண்களுக்கு குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்து ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி விபச்சாரத்தில் தள்ளியதோடு, இன்ஸ்டாகிராமில் வாலிபர்களுக்கு வலை விரிக்க வைத்து, அவர்கள் உல்லாசமாக இருக்கும் வீடியோக்களையும் எடுத்து பல லட்சம் பறித்த, பெண் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். ஆந்திர மாநிலம், என்டிஆர் மாவட்டம், விஜயவாடாவில் உள்ள படமடாதோட்டவாரி தெருவை சேர்ந்தவர் பசராகுரு நாகசாய். இவர் படமடா மேல்நிலைப்பள்ளி அருகே துணிக்கடை நடத்தி வருகிறார். நாகசாய் தனது கடைக்கு வரும் … Read more

தமிழகத்தில் ரயில்வே திட்டத்துக்கு ரூ.3946 கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும்

புதுடெல்லி: தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்காக ரூ.3,946 கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என டெல்லியில் நேற்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடந்த 2023-24ம் ஆண்டின் பட்ஜெட் ஆலோசனை கூட்டத்தில், தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் வலியுறுத்தி உள்ளார். நாடாளுமன்றத்தில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 1ம் தேதி ஒன்றிய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இந்த பட்ஜெட் பணிகள் தொடங்குவது முன்பு அனைத்துத்துறை நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்துவது வழக்கம். அதுபோல், 2023-24ம் ஆண்டுக்காக இடைக்கால பட்ஜெட் … Read more

மற்ற மாநிலங்களை ஓரம் கட்டி அனைத்து திட்டங்களையும் குஜராத்துக்கு கொண்டு செல்லும் ஒன்றிய அரசு: இரண்டே மாதங்களில் ரூ.2.2 லட்சம் கோடி கொட்டியது

1995ம் ஆண்டில் இருந்து, இடையில் சுமார் ஒன்றரை ஆண்டு தவிர, இன்று வரை தங்களுக்கு ஈடுமில்லை இணையுமில்லை என்ற இருமாப்புடன் குஜராத்தில் சிம்மாசனமிட்டு அமர்ந்துள்ள பாஜவுக்கு சிம்ம சொப்பனமாக மாறியிருக்கிறது ஆம் ஆத்மி. நாட்டின் பொருளாதார வளர்ச்சி, உள்கட்டமைப்பு திட்டங்கள், வளர்ச்சிப் பணிகள் என எல்லாவற்றுக்கும் ‘குஜராத் மாடலை’ முன்னுதாரணமாகவும், தங்களின் முகவரியாகவும் காட்டி வந்த பாஜவின் முகத்தில் துடைப்ப கீறல்கள் ’முக வரிகளாக’ விழுந்து சிதைத்துக் கொண்டிருக்கின்றன. என்னதான் வெளியில் காட்டிக்கொள்ளாவிட்டாலும், பிரதமர் மோடியின் பிரசாரத்தில் … Read more

மங்களூரு ஆட்டோ குக்கர் குண்டு வெடிப்பு வழக்கு என்ஐஏ விசாரிக்க உத்தரவு

மங்களூரு: மங்களூருவில் நடைபெற்ற ஆட்டோ குக்கர் குண்டு வெடிப்பு  சம்பவத்தை விசாரிக்க தேசிய புலனாய்வு முகமையிடம் ஒன்றிய உள்துறை அமைச்சகம் ஒப்படைத்தது. கர்நாடகா மாநிலம், மங்களூருவில் கடந்த 19ம் தேதி ஆட்டோவில்  குக்கர் வெடிகுண்டு வெடித்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரிக்க உத்தரவிடும்படி, ஒன்றிய உள்துறை அமைச்சகத்துக்கு கர்நாடக அரசு பரிந்துரை செய்தது. இது தொடர்பாக,  நேற்று முன்தினம் கடிதம் எழுதியது. இதை ஏற்று, இந்த  வழக்கை என்ஐஏ விசாரிக்க ஒன்றிய உள்துறை அமைச்சர் … Read more