மங்களூர் குக்கர் குண்டு வெடிப்பு: ஷாரிக் உடன் தொடர்பில் இருந்தவர்கள் குறித்து தேசிய புலனாய்வு அமைப்பினர் விசாரணை!

மங்களூர் குக்கர் குண்டு வெடிப்பு வழக்கில் ஷாரிக் உடன் தொடர்பில் இருந்தவர்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. குண்டுவெடிப்பு நிகழ்ந்த மங்களூர் அருகிலுள்ள நாகுரி பகுதியை போலீசார் தங்களின் முழுக்கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ள நிலையில் தேசிய புலனாய்வு அமைப்பினரும் விசாரணையை துவங்கியுள்ளனர். இதில், தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக பல முறை சிறைக்கு சென்ற ஷாரிக் வெளியே வந்த பிறகு சில மாதங்களாக தலைமறைவாக இருந்துள்ளார். அவர், கடந்த 2 ஆண்டுகளில் 4 செல்போன் எண்களை பயன்படுத்தியதும் விசாரணையில் தெரிய … Read more

நிர்மலா சீதாராமன் தலைமையில் ஒன்றிய பட்ஜெட் ஆலோசனை தொடங்கியது

புதுடெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் வரும் டிசம்பர் 7ம் தேதி தொடங்க உள்ள நிலையில், அடுத்த நிதியாண்டுக்கான ஒன்றிய பட்ஜெட் ஆலோசனை கூட்டங்களை ஒன்றிய நிதியமைச்சகம் தொடங்கியுள்ளது. இதுதொடர்பாக இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) ஒன்றிய நிதியமைச்சகத்துக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளது. குறிப்பாக தனிநபர் வருமான வரி விகிதங்களைக் குறைக்கும் பரிந்துரையின் மூலம் சுமார் 5.83 கோடி பேர் பயனடையலாம் என்று சிஐஐ தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஒன்றிய பட்ஜெட் – … Read more

”கல்வியைபோல வேலைவாய்ப்புக்கும் இட ஒதுக்கீடு தேவை” – ஜிப்மர் முன்பு அதிமுக ஆர்ப்பாட்டம்!

ஜிப்மர் மருத்துவமனை வேலை வாய்ப்பில் புதுச்சேரி மாநிலத்தவர்களுக்கு 26.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி 500-க்கும் மேற்பட்ட அதிமுகவினர், ஜிப்மர் மருத்துவமனை முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரியில் உள்ள மத்திய அரசின் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையான ஜிப்மர் நிர்வாகம், செவிலியர் பணி தேர்வுக்கான அகில இந்திய அளவில் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், கிட்டத்தட்ட 450 பணிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு அகில இந்திய அளவில் தேர்வு நடைபெற உள்ளது. அகில இந்திய அளவில் இந்த … Read more

ராமர் அனைவருக்கும் சொந்தம்: பரூக் அப்துல்லா கருத்து

ஸ்ரீநகர்: தேசிய மாநாடு கட்சியின் சார்பில் காஷ்மீரின் ஸ்ரீநகரில் நேற்று முன்தினம் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சி தலைவர் பரூக் அப்துல்லா பேசியதாவது: இந்திய பிரிவினை காலத்தில் முகமது அலி ஜின்னா எனது தந்தை ஷேக் முகமது அப்துல்லாவின் ஆதரவை கோரினார். அப்போது எனது தந்தை இந்தியாவுக்கு ஆதரவு அளித்தார். நல்ல வேளையாக காஷ்மீர் பாகிஸ்தானோடு இணையவில்லை. இந்தியாவில் 80 சதவீதம் பேர் உள்ள இந்துக்கள் ஆபத்தில் இருப்பதாக அரசியல் உள்நோக்கத்துடன் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. எந்த மதமும் … Read more

குக்கர் குண்டுவெடிப்பு… கோவைக்கும், மங்களூருவிற்கும் என்ன தொடர்பு? ஆக்‌ஷனில் கர்நாடக போலீஸ்!

கோவை கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு, கடந்த அக்டோபர் 23ஆம் தேதி காரில் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் ஜமேஷா முபின் என்ற ISIS ஆதரவாளர் உயிரிழந்தார். இதையடுத்து நவம்பர் 19ஆம் தேதி கர்நாடக மாநிலம் மங்களூருவில் ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் முகமது ஷாரித் ISIS ஆதரவாளர். இதனால் ஜமீஷா முபினுக்கும், முகமது ஷாரித்திற்கும் இடையில் தொடர்பு இருக்கிறதா? இருவரும் கோவையில் சந்தித்துள்ளார்களா? தொலைபேசி மூலம் கோவையில் யாருடனாவது … Read more

மங்களூரு ஆட்டோ வெடித்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்படும்: பறிமுதல் செய்யப்பட்ட வெடிபொருட்களை பார்வையிட்ட பின் கர்நாடக ஏடிஜிபி விளக்கம்

கர்நாடகா: மங்களூரு ஆட்டோ வெடித்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்படும் என கர்நாடக ஏடிஜிபி தெரிவித்துள்ளார். மங்களூருவில் ஆட்டோ வெடிகுண்டு வெடித்தது தொடர்பாக கர்நாடக ஏடிஜிபி விளக்கம் அளித்துள்ளார். பறிமுதல் செய்யப்பட்ட வெடிபொருட்களை பார்வையிட்ட பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஏடிஜிபி, ஆட்டோவில் குண்டு வெடித்தது தொடர்பாக மைசூரில் 2 பேர், கோவையில் ஒருவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. மங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்படும். ஆட்டோவில் பயணித்த ஷாரிக்கிற்கு சர்வதேச பயங்கரவாத அமைப்புடன் … Read more

'ஜாமீன் வழங்க நீதிபதிகள் பயப்படுகிறார்கள்' – உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பகீர் பேச்சு!

‘கீழமை நீதிமன்ற நீதிபதிகள் ஜாமீன் வழங்க பயப்படுகிறார்கள்’ என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கூறியுள்ள கருத்து கவனம் பெற்றுள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த யு.யு.லலித்தின் பதவி காலம் முடிவடைந்த நிலையில், நாட்டின் 50-வது தலைமை நீதிபதியாக கடந்த 9ஆம் தேதி டி.ஒய் சந்திரசூட் பதவியேற்றுக் கொண்டார். இந்த நிலையில் இந்திய பார் கவுன்சில் ஏற்பாடு செய்திருந்த பாராட்டு விழாவில் சந்திரசூட் கலந்துகொண்டார். இவ்விழாவில் பேசிய அவர், “நீதித்துறையில் ஆணாதிக்கம், சாதிய ரீதியான கட்டமைப்பு … Read more

'மனிதநேயத்தின் அடையாளம்…': ராகுல் காந்தியை பாராட்டிய சஞ்சய் ராவத்

புதுடெல்லி: தன்னுடைய அரசியல் சகாவின் மீது ராகுல் காந்தி அக்கறை கொண்டிருப்பது அவரின் மனித நேயத்தைக் காட்டுவதாக சிவ சேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவ சேனா அணியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத். பணமோசடி குற்றச்சாட்டில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட இவர், நவ.9 ஆம் தேதி ஜாமீனில் வெளியே வந்தார். இந்த நிலையில் இவர் திங்கள் கிழமை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவொன்றில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான ராகுல் … Read more

Bihar Truck accident : 7 சிறுவர்கள் உள்பட 8 பேர் பலி ; ஓட்டுநர் கைது!

பிகாரில் வைஷாலி மாவட்டத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்த மத வழிப்பாட்டு கூட்டத்தில், லாரி புகுந்ததில் 7 சிறுவர்கள் உள்பட மொத்தம் 8 பேர் உயிரிழந்துள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மன்ஹார் – ஹாஜிபூர் நெடுஞ்சாலையில் வேகமாக வந்துகொண்டிருந்த லாரி, தனது கட்டுப்பாட்டை இழந்து கூட்டத்திற்கு புகுந்ததாக தகவல்கள் கூறுகின்றன. தொடர்ந்து, அந்த லாரி ஓட்டுநர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருடைய உடல்நிலை தற்போது சீராகியுள்ளது.  இந்த விபத்து நேற்று ஏற்பட்ட நிலையில், விபத்து நடந்த இடத்தை ஆர்ஜேடி எம்எல்ஏ முகேஷ் ரோஷன் … Read more

புனேயில் நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 48 வாகனங்கள் மோதி விபத்து.. சுமார 30 பேர் காயம்!

மகாராஷ்டிர மாநிலம் புனேயில் நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 48 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் சுமார் 30 பேர் காயமடைந்தனர். நவாலே பாலத்தில் நேற்று லாரிகள், கார்கள், ஒன்றின் மீது ஒன்று அடுத்தடுத்து மோதின. சரிவுப் பாதையில் சென்ற லாரி ஒன்றின் பிரேக் வேலை செய்யாததால் திடீரென நின்று விட பின்னால் வந்த கார் மோதி கவிழ்ந்ததையடுத்து, இந்த விபத்து நேரிட்டதாக கூறப்படுகிறது. Source link