பிரதமர் மோடிக்கு பரிசளிக்கப்பட்ட 1,200 பொருட்கள் இன்று ஏலம்

புதுடெல்லி: மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: பிரதமர் மோடிக்கு பரிசாக கிடைத்த விநாயகர் சிலை, அயோத்தி ராமர் கோயில் மற்றும் வாரணாசி காசி-விஸ்வநாதர் கோயிலின் மாதிரிகள் ஆகியவை மின்னணு ஏலத்தில் விடப்படுகின்றன. பிரதமர் மோடி சமீபத்தில் டெல்லியில் 28 அடி உயர நேதாஜி சிலையை திறந்து வைத்தார். இந்த சிலையை வடித்த சிற்பி யோகிராஜ், இந்த சிலையின் மாதிரியை பிரதமர் மோடிக்கு கடந்த ஏப்ரல் மாதம் பரிசளித்தார். அதுவும் இந்த … Read more

8 ஆண்டுகள் கழித்து கணவனை பெண் என அறிந்த மனைவி… இயல்புக்கு மாறாக உறவு வைத்ததாக புகார்!

குஜராத்தின் வதோதரா மாவட்டத்தில், 40 வயதான பெண் ஒருவர் திருமணமாகி 8 ஆண்டுகள் கழித்து, தன் கணவர் ஒரு பெண் என்பதையும், அவர் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டதையும் அறிந்து மிகவும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளார்.  இதுகுறித்து கோத்ரி காவல் நிலையத்தில் மனைவி ஷீதல் கொடுத்த புகாரில், கணவர் விராஜ் வர்தன் (விஜய்தா) தன்னிடம் இயல்புக்கு மாறான வகையில் உடலுறவில் ஈடுபட்டதாகவும் (Unnatural Sex) தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். கணவரின் குடும்ப உறுப்பினர்கள் மீது புகார் கொடுத்துள்ளார். … Read more

மலிவு விலையில் நீரிழிவு மாத்திரை: ஒன்றிய அரசு அறிமுகம்

புதுடெல்லி: நீரிழிவு நோய்க்கான  மாத்திரைகள் ரூ.60 என்ற விலையில் பிரதம மந்திரியின் மலிவு விலை மருந்தகங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நீரிழிவு நோய்க்கான மருந்தான சிட்டாக்ளிப்டின் மற்றும் அதே வகையை சேர்ந்த மருந்துகள் பிரதமரின் மலிவு விலை மருந்தகங்கள்(ஜன அவுசாதி கேந்திரா) மூலம் பொது மக்களுக்கு  விற்பனை செய்யப்படுகிறது. 50 மி.கிராம் சிட்டாக்ளிப்டின் 10 மாத்திரைகளின் விலை  ரூ.60, அதே போல் 100 மி.கிராம் சிட்டாக்ளிப்டின் பாஸ்பேட் 10 மாத்திரைகளின் விலை ரூ.100 ஆகும். சிட்டாக்ளிப்டின் மற்றும் மெட்பார்மின் … Read more

பிரதமர் மோடியின் பிறந்த நாளான இன்று முதல் 75,000 தலித் பகுதிகளில் முகாமிடும் பாஜக

புதுடெல்லி: அடுத்த மக்களவை தேர்தலில் (2024) ஆதரவை அதிகரிக்க, பிரதமர் மோடியின் பிறந்த நாளான இன்று முதல் 75,000 தலித் பகுதிகளில் பாஜக முகாமிடுகிறது. இன்று பிரதமர் மோடியின் பிறந்த நாள். இந்நாளில் நாடு முழுவதும் தலித்துகள் வாழும் 75,000 பகுதிகளில் பாஜகவினர் முகாமிடுகின்றனர். இந்திய அரசியலமைப்பு நாளான நவம்பர் 26 வரை நடைபெறும் இந்த முகாமுக்கு ‘சம்பர்க் அபியான்’ (தொடர்பு இயக்கம்) என்று பெயரிட்டுள்ளனர். இதில் பாஜக எஸ்சி பிரிவினர் அப்பகுதிகளுக்கு சென்று தலித் மக்களிடம் … Read more

மோசமான கழிவு நீர் மேலாண்மை ராஜஸ்தான் அரசுக்கு ரூ.3,000 கோடி அபராதம்: தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி

புதுடெல்லி: குப்பைகள், கழிவு நீர்  மேலாண்மை திட்டத்தை முறையாக செயல்படுத்தாமல் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தியதற்காக ராஜஸ்தான் அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் ரூ.3 ஆயிரம் கோடி அபராதம் விதித்துள்ளது. கழிவு நீர், குப்பை மேலாண்மை தொடர்பாக கடந்த 2014, 2017ம் ஆண்டுகளில் உச்ச நீதிமன்றம் சில உத்தரவுகளை பிறப்பித்தது. அதன்படி  குப்பைகள், கழிவு நீர் பிரச்னைகளை தேசிய பசுமை தீர்ப்பாயம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. ராஜஸ்தான் மாநிலத்தின் பல இடங்களில் ஆறுகளில் கழிவு நீர் கலப்பு, காற்று … Read more

அரசு ஊழியர்களுக்கு கெடுபிடி: சொத்து விவரம் வெளியிட விரைவில் புதிய விதிமுறை

புதுடெல்லி: ஒன்றிய அரசு ஊழியர்கள் சொத்து விவரங்களை தாக்கல் செய்வதற்கான புதிய விதிகள் விரைவில் பரிந்துரைக்கப்பட இருப்பதாக ஒன்றிய அரசு பணியாளர் மற்றும் பயிற்சி துறை தெரிவித்துள்ளது. கடந்த 2013ம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட லோக்பால், லோக் ஆயுக்தா சட்டப் பிரிவு 44ன் படி, அரசு ஊழியர்கள் தங்களின் சொத்து விவரங்களை ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 31ம் தேதி அல்லது ஜூலை 31ம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும். முதலில், 2014ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி வரை … Read more

சமூக ஊடகங்களில் அதிக நேரம் செலவழிக்கும் இந்தியர்கள் – ஆண்டுக்கு 4.2 சதவீதம் பேர் வலைதள கணக்கு தொடங்குவதாக ஆய்வில் தகவல்

சென்னை: சமூக ஊடகங்களில் அதிக நேரத்தை இந்தியர்கள் செலவழிக்கிறார்கள் என்றும், ஆண்டுதோறும் 4.2 சதவீதம் பேர் புதிதாக வலைதளக் கணக்கை தொடங்குகின்றனர் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது. வளர்ந்து வரும் தொழில்நுட்பம், உலகளாவிய டிஜிட்டல் நிலப்பரப்பை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. குழந்தைகள் முதல் முதியோர் வரை அனைவரும் ஸ்மார்ட்போன்கள் மற்றும் இணையத்தில் மூழ்கிக் கிடக்கின்றனர். இதில் வைரஸ் போல் சமூக ஊடகங்களும் தொற்றிக் கொண்டுள்ளன. 1997-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ‘சிக்ஸ் டிகிரி’ என்ற சமூக வலைதளம் முதல் தற்போது … Read more

உன் சமையலறையில் உப்பா? சர்க்கரையா? கஞ்சா செடி மச்சான்..! ஃபேன் வைத்து செடி வளர்த்த ஜோடி.!

காதலனை மகிழ்விப்பதற்காக வீட்டின் சமையலறையில் கஞ்சா செடி வளர்த்த காதலியை போலீசார் கைது செய்துள்ளனர். கஞ்சா செடி வைத்து காதல் வளர்த்த காதல் பறவைகள் சிறைபறவையான பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு… காதலுக்கு அடையாளமாக ரோஜா செடி வளர்ப்போர் மத்தியில் கஞ்சா செடி வளர்த்து கம்பி எண்ணும் தாடி பையனும், கேடி பொண்ணும் இவர்கள்தான்..! கொச்சியில் உள்ள ஆக்ஸொனியா அடுக்குமாடி குடியிருப்பில் கஞ்சா செடி வளர்க்கப்படுவதாக போலீசாருக்கு சிலர் தகவல் அளித்துள்ளனர். அந்த அடுக்கு … Read more

தெரு நாய்களிடம் இருந்து காப்பாற்ற பள்ளி குழந்தைகளுக்கு துப்பாக்கி பாதுகாப்பு

காசர்கோடு:  கேரளாவில் தெரு நாய்களிடம் இருந்து குழந்தைகளை பாதுகாப்பதற்காக ஏர் கன்னுடன் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. கேரளாவின் பெரும்பாலான பகுதிகளில் தெருநாய்கள் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது. பள்ளி செல்லும் குழந்தைகள் தெருநாய்களால் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர். இந்த விவகாரம் பூதாகரமாகி வரும் நிலையில், சமீர் என்பவர் ஏர் கன்னை  ஏந்தியபடி பள்ளி குழந்தைகளை அழைத்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. இது தொடர்பாக சமீர் கூறுகையில்,பேட்டியில், … Read more

2008ல் மன்மோகன் சிங் தலைமையிலான காங். ஆட்சியில் உருவான நமீபியா சிறுத்தை திட்டம்: பெயரை தட்டி செல்கிறது பாஜ

புதுடெல்லி: இந்தியாவிற்கு சிறுத்தைகளை கொண்டு வரும் திட்டத்திற்கு, கடந்த 2008-09ம் ஆண்டில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் உருவாக்கப்பட்டதாக காங்கிரஸ் கூறி உள்ளது. இந்தியாவில் முற்றிலும் அழிந்துவிட்ட சிறுத்தையை, 70 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கொண்டு வர ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, கண்டங்களுக்கு இடையேயான இடமாற்ற திட்டத்தின் கீழ், ஆப்ரிக்க நாடான நமீபியாவில் இருந்து 8 சிறுத்தைகள் இந்தியா கொண்டு வரப்படுகிறது. போயிங் விமானம் மூலம் 3 ஆண் மற்றும் 5 … Read more