நாட்டிலேயே முதல்முறையாக காஷ்மீரின் குர்ஜார் முஸ்லிம் நியமன எம்.பி.யாக அறிவிப்பு

புதுடெல்லி: நாட்டிலேயே முதல்முறையாக ஜம்மு-காஷ்மீரின் குர்ஜார் முஸ்லிம் ஒருவரை மாநிலங்களவை எம்.பி.யாக மத்திய அரசு நியமித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் மத்திய அரசு ரத்து செய்தது. மேலும் அம்மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இதில் சட்டப்பேரவையுடன் கூடிய காஷ்மீரில் விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, காஷ்மீரின் மலைப்பகுதியில் வசிக்கும் குர்ஜார் … Read more

எரியும் காக்கி சீருடை காங். புகைப்படத்திற்கு பாஜ கடும் கண்டனம்

புதுடெல்லி: காக்கி சீருடை தீப்பிடித்து எரிவது போன்று காங்கிரஸ் வெளியிட்ட புகைப்படத்திற்கு பாஜ கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை பயணத்தை கடந்த 7ம் தேதி தொடங்கினார்.  இப்பயணம் 5வது நாளான நேற்று முன்தினம் கேரளாவில் கால் பதித்துள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சி தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில், ஆர்எஸ்எஸ் அமைப்பின் சீருடையான காக்கி கால்சட்டை தீப்பிடித்து எரியும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளது. அதில், ‘வெறுப்பின் பிடியில் … Read more

கேரளாவில் ராகுலின் நடைபயணம் தொடக்கம்

திருவனந்தபுரம்: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேரளாவில் நேற்று நடைபயணத்தை தொடங்கினார். “பாரத் ஜோடா யாத்ரா’’ என்ற பெயரில் இந்திய ஒற்றுமை நடைபயணத்தை கடந்த 7-ம் தேதி கன்னியாகுமரியில் ராகுல் காந்தி தொடங்கினார். தமிழக பயணத்தை நிறைவு செய்த அவர் நேற்று கேரளாவில் நடைபயணத்தை மேற்கொண்டார். திருவனந்தபுரம் மாவட்டம், பாரசாலாவில் இருந்து தொண்டர்கள் புடைசூழ அவர் நடந்து சென்றார். வழிநெடுக கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் அவருக்கு வரவேற்பு அளித்தனர். காங்கிரஸ் தலைமைக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி … Read more

கார் விபத்துகளில் நிகழும் மரணங்கள் உயிரைக் கட்டிக்காக்க உதவுமா சீட்பெல்ட்?: மிஸ்திரி மரணத்தில் தெரியவரும் உண்மைகள்

டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரியின் மரணம், சாலை விபத்து குறித்த பல்வேறு கேள்விகளையும் காரணங்களையும் முன்வைத்திருக்கிறது. தேசிய குற்ற ஆவண காப்பக புள்ளி விவரத்தின்படி, கடந்த ஆண்டில் மட்டும் 1.55 லட்சம் பேர் சாலை விபத்தில் மரணம் அடைந்துள்ளனர்.அதாவது, சராசரியாக தினமும் 426 பேர் அல்லது ஒவ்வொரு மணி நேரத்துக்கும் 18 பேர் மரணம் அடைகின்றனர். இதுபோல், கடந்த ஆண்டு நடந்த 4.03 லட்சம் விபத்துகளில் 3.71 லட்சம் பேர் காயம் அடைந்துள்ளனர்.  … Read more

சிஐஎஸ்எப் வசம் காசி விஸ்வநாதர் கோயில் பாதுகாப்பு

புதுடெல்லி: காசி விஸ்வநாதர் கோயில் பாதுகாப்பு மத்திய தொழில் பாதுகாப்புபடையிடம் (சிஐஎஸ்எப்) ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. உத்தர பிரதேசம் வாரணாசியில் கங்கை நதிக்கரையில் காசிவிஸ்வநாதர் கோயில் அமைந்துள்ளது. வாரணாசி தொகுதி எம்.பி.யான பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சியால், கடந்த ஆண்டு கோயில் வளாகம் 3,000 சதுர அடியில் இருந்து 5 லட்சம் சதுர அடியாக விரிவாக்கம் செய்யப்பட்டது. இதன்மூலம் ஒரே நேரத்தில் 75,000 பக்தர்கள் வரை கோயிலுக்குள் வந்து செல்லும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. கியான்வாபி மசூதி விவகாரத்தால் … Read more

கடவுள் மறுப்பு வாசகம் விவகாரத்தில் தமிழக அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: தமிழகத்தில் பெரியார் சிலைக்கு கீழ் இருக்கும் கடவுள் மறுப்பு வாசகம் தொடர்பான மனு மீது பதிலளிக்க தமிழகம் அரசுக்கு உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த தெய்வநாயகம் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘தமிழகத்தில் பெரியார் சிலைக்கு கீழே இருக்கும் கடவுள் மறுப்பு வாசகங்கள் பெரும்பாலான மக்களின் உணர்வுகளை புண்படுத்துகிறது. இந்த வாசகம் நம் நாட்டின் மத சார்பின்மை கொள்கைக்கு எதிராகவும் உள்ளது. குறிப்பாக ஒருவரின் சுதந்திரமான நம்பிக்கைக்கு எதிராக … Read more

5 போலீஸாரை லாக்-அப்பில் அடைத்த எஸ்.பி: சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்

பாட்னா: பிஹாரில் 5 போலீஸாரை எஸ்.பி. ஒருவர் லாக்-அப்பில் அடைத்தது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. பிஹார் மாநிலத்தின் நவாடா நகர காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் சப்-இன்ஸ்பெக்டர்கள் சத்ருகன் பாஸ்வான், ராம்ரேகா சிங், உதவி சப்-இன்ஸ்பெக்டர்கள் சந்தோஷ் பவன், சஞ்சய் சிங், ராமேஷ்வர் உரான் ஆகிய 5 பேரும் காவல் நிலைய லாக்-அப்பில் அடைக்கப்பட்டிருப்பது போன்ற கண்காணிப்பு கேமரா பதிவு வாட்ஸ் அப்பில் வெளியானது. அவர்களின் பணி திருப்திகரமாக இல்லாததால் ஏரியா எஸ்.பி. … Read more

ஞானவாபி வழக்கில் விசாரணை தொடர்ந்து நடக்கும்: வாரணாசி நீதிமன்றம் தீர்ப்பு

வாரணாசி: ஞானவாபி மசூதி வழக்கில் விசாரணை தொடர்ந்து நடைபெறும் என்றும் மசூதி தரப்பில் தாக்கல் செய்த மனுவை நிராகரித்தும் வாரணாசி மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது. உத்தர பிரதேசத்தில் ஞானவாபி மசூதியின் வெளிப்புற சுவரில் உள்ள இந்து கடவுள் சிங்கார கவுரி அம்மனை தினமும் வழிபட அனுமதி கோரி 5 இந்து பெண்கள் வாரணாசி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து, ஞானவாபி மசூதியில் கள ஆய்வு செய்யவும், அதனை வீடியோவாக பதிவு செய்யவும் வாரணாசி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. … Read more

பாதுகாப்புக்காக தடுத்து நிறுத்திய போலீஸ்.. சொன்னபடியே ஆட்டோ ஓட்டுநர் வீட்டில் சாப்பிட்ட கேஜ்ரிவால்

அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இன்று ஆட்டோ ஓட்டுநர்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்றில் அரவிந்த் கேஜ்ரிவால் பிரசாரம் செய்தார். குஜராத் மாநிலம் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்கவிருக்கும் நிலையில் கேஜ்ரிவால் அங்கு முகாமிட்டுள்ளார். அதன் ஒரு பகுதியாகவே ஆட்டோ ஓட்டுநர்கள் சந்திப்பு நடந்தது. அப்போது பேசிய ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், “நான் உங்களுடைய மிகப்பெரிய விசிறி. நீங்கள் பஞ்சாப் மாநிலத்தில் ஒருமுறை ஒரு ஆட்டோ ஓட்டுநர் வீட்டுக்குச் சென்றீர்கள். அங்கு நீங்கள் உணவருந்தினீர்கள். நான் அந்த வீடியோவைப் … Read more

இனி தெரு நாய் கடித்தால் ..! – உச்சநீதிமன்ற தீர்ப்பால் மக்கள் அதிர்ச்சி..!

இனி தெரு நாய் கடித்தால் அதற்கு உணவு அளித்தவர்களே பொறுப்பாவார்கள் என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது.கேரள மாநிலம் அரைகிணறு பகுதியில் 12 வயது சிறுவன் நூராஸ், வீட்டிற்கு வெளியே சாலையில் சைக்கிள் ஓட்டிக்கொண்டிருந்தான். அப்போது திடீரென வேகமாக ஓடி வந்த தெரு நாய் ஒன்று சிறுவனை கடித்து குதறியது. இதனால் சிறுவன் தப்பித்து செல்ல முயன்றும் விடாமல் தெருநாய் தொடர்ந்து கடித்த நிலையில், இச்சம்பவம் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. மேலும் சிறுவனை கடித்த … Read more