எலக்ட்ரிக் பைக் தீ பிடித்து எரிந்ததில் பயங்கரம்; 5 மாடி கட்டிடத்தில் தீ விபத்து: பெண் உள்பட 8 பேர் கருகி பலி: 13 பேர் படுகாயம்

திருமலை: எலக்ட்ரிக் பைக் தீப்பிடித்து எரிந்ததில் 5 மாடி கட்டிடத்திற்கு தீ பரவியது. இதில் லாட்ஜில் தங்கியிருந்த பெண் உள்பட 8 பேர் பரிதாபமாக இறந்தனர். 13 பேர் பலத்த தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் ரயில் நிலையம் அருகே 5 மாடி கட்டிடத்தின் கீழ் தளத்தில் எலக்ட்ரிக் பைக் ஷோரூம் உள்ளது. இந்த ஷோரூமின் மேல்மாடியில் லாட்ஜ் இயங்கி வருகிறது. நேற்று பைக் ஷோரூமில் வழக்கம்போல் பணிகள் நடைபெற்றது. இரவு 10 … Read more

எலக்ட்ரிக் பைக்கை சார்ஜ் போட்டதால் ஷோரூமில் தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் – போலீஸ் விசாரணை

எலக்ட்ரிக் பைக்கை சார்ஜ் போட்டதால் ஷோரூமில் தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்திருக்கிறது. செகந்திரபாத் ரயில் நிலையம் அருகே செயல்பட்டு வரும் ரூபி எலக்ட்ரிக் பைக் ஷோரூமில் நேற்றிரவு தீ விபத்து ஏற்பட்டது. அங்கு 25 பேருக்கும் மேற்பட்டோர் இருந்துள்ளனர். தீவிபத்து ஏற்பட்டவுடனே அவர்களில் சிலர் ஜன்னல் வழியாக வெளியே குதித்தும், தீயணைப்பு வீரர்களாலும் மீட்கப்பட்டனர். இந்தத் தீ அருகில் இருந்த உணவகத்திலும் பரவியதால், அங்கு அறையில் தங்கியிருந்த 8 பேர் உடல் கருகி … Read more

ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் நேர்ந்த கோவிட் மரணங்களை கணக்கிட வேண்டும்: நாடாளுமன்ற நிலைக்குழு

புதுடெல்லி: கோவிட்-19 தொற்றின்போது ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் நிகழ்ந்த மரணங்களை மாநில அரசுகளுடன் இணைந்து கணக்கிட வேண்டும் என்று மத்திய சுகாதார அமைச்சகத்திற்கு நாடாளுமன்ற நிலைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. நாடாளுமன்ற நிலைக் குழு சுகாதாரம் குறித்த தனது 137-வது அறிக்கையை மாநிலங்களவையில் திங்கள்கிழமை சமர்ப்பித்தது. அந்த அறிக்கையில், ‘கோவிட் தொற்று பாதிப்பின் அதிகரிப்பு சுகாதார கட்டமைப்பின் மீது அழுத்தத்தை உருவாக்கியுள்ளது. பல கோவிட் நோயாளிகளின் குடும்பத்தினர் ஆக்ஸிஜன் சிலிண்டருக்காக வரிசையில் காத்திருந்தது, சிலிண்டர் வேண்டி கொஞ்சியது, மருத்துவமனைகளில் குறைவான … Read more

இளைஞர்கள் போதைபொருட்களுக்கு எதிராக போராட வேண்டும்: ராஜ்நாத் சிங் வலியுறுத்தல்!

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளிப்பு துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போதைபொருள் ஒழிப்பு குறித்த நிகழ்வில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். அப்போது தேசிய மாணவர் படை மாணவர்களிடம் பேசிய அவர், இந்திய சுதந்திரப் போராட்ட வீர்ர்கள் போராடி சுதந்திரத்தை பெற்றுத் தந்ததை போன்று, இளைஞர்கள் போதைப் பொருட்களுக்கு அடிமையாதலை எதிர்த்து போராடி அதை ஒழிக்க வேண்டுமென வலியுறுத்தினார் உலகின் அதிகார மையங்களில் ஒன்றாக இந்தியா திகழ்வதற்கான பாதையில் முன்னேறிக் கொண்டிருக்கும் … Read more

'பாஜகவின் அடுத்த பிரதமர் வேட்பாளர் சோனியா தான்… காங்கிரஸின் கதை முடிந்தது' – கெஜ்ரிவால் தாக்கு

மக்களவை தேர்தல் வரும் 2024ஆம் ஆண்டு நடைபெற இருக்கிறது. அதற்கு முன்னர் நடைபெற இருக்கும் குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல்கள் தேசிய அளவில் பெரும் முக்கியத்துவத்தை பெற்றுள்ளது. குஜராத் மாநிலத்தில் இந்தாண்டு இறுதியிலும், ராஜஸ்தானில் அடுத்தாண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெற வாய்ப்புள்ளது.  இதில், குஜராத்தை பாஜகவும், ராஜஸ்தானை காங்கிரஸ் கட்சியும் தக்கவைத்துக்கொள்ள இப்போது இருந்த வேலைகளை தொடங்கிவிட்டன. பாஜக, காங்கிரஸ் ஆகியவற்றை தவிர்த்து இந்த தேர்தல்களில் ஆம் ஆத்மி கட்சியும் மிகுந்த கவனத்தை … Read more

நாட்டின் சவால்களை முறியடிப்பதில் காங்கிரசுக்கும் முக்கிய பங்கு உள்ளது: கேரள நடைபயணத்தில் ராகுல் காந்தி பேச்சு

திருவனந்தபுரம்: நம் நாடு எதிர்கொள்ளும் சவால்களை முறியடிப்பதில் காங்கிரசுக்கும் முக்கிய பங்கு இருக்கிறது என்று திருவனந்தபுரத்தில் நடைபயணத்தின் போது தன்னை சந்திக்க வந்த கலாச்சார மற்றும் மத தலைவர்களிடையே பேசும் போது ராகுல் காந்தி குறிப்பிட்டார். சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் கடந்த 7ம் தேதி இந்திய ஒற்றுமை பயணத்தை தொடங்கினார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்பி. தொடர்ந்து 4 நாட்கள் நடை பயணத்தை நிறைவு செய்தவர் தற்போது கேரளாவில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். கேரளாவில் … Read more

தேசிய சினிமா தினம் வேறு தேதிக்கு மாற்றம் – மல்டிபிளக்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா

தேசிய சினிமா தினம் செப்டம்பர் 16ஆம் தேதி கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் செப் 16ம் தேதியில் இருந்து செப் 23ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. மல்டிபிளக்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா என்ற அமைப்பு செப்டம்பர் 16ம் தேதியை தேசிய சினிமா தினம் என அறிவித்திருந்தது. அந்த நாளில் PVR, INOX, CINEPOLIS, CARNIVAL, MIRAJ, CITYPRIDE, ASIAN, MUKTA A2, MOVIE TIME, WAVE மற்றும் M2K போன்ற குழுமங்களுக்கு சொந்தமான சுமார் 4000 மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் … Read more

கோஹினூர் வைரத்தை இந்தியாவுக்குக் கொண்டு வாருங்கள் : குடியரசுத் தலைவரிடம் முறையீடு

பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தின் மரணத்தைத் தொடர்ந்து, அவரது மகன் இளவரசர் சார்லஸ் மன்னராகியுள்ளார். ராணி அணிந்திருந்த கிரீடம், மன்னர் சார்லஸின் மனைவி கமிலாவுக்கு செல்லவுள்ளது. இந்த கிரீடத்தை அலங்கரிக்கும் 105 கேரட் கோஹினூர் வைரம்  இந்தியாவில் இருந்து கொண்டு செல்லப்பட்டது என்பது அனைவரும் அறிந்ததே. கோஹினூர் வைரம் ஜெகன்நாதர் கோயிலுக்கு மகாராஜா ரஞ்சித் சிங் நன்கொடையாக வழங்கியது எனவும், அதனை மீண்டும் இந்தியாவுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு, ஜெகன்நாத சேனா என்ற அமைப்பு குடியரசுத் … Read more

ஒன்றிய அரசின் திறன் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெற அக்.31ம் தேதி வரை விண்ணபிக்கலாம்.

டெல்லி : ஒன்றிய அரசின் திறன் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெற அக்.31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளது.  www.scholarships.gov.in என்ற இணையதளத்தில் அக்.31 வரை விண்ணப்பிக்கலாம். மாதிரி விண்ணப்பப் படிவம், விண்ணப்பித்தலுக்கான தகுதி ஆகியவற்றை www.tndce.in இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. முதல் முறையாக உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் (புதிய மாணவர்கள்) ‘மாணவர் பதிவு படிவத்தில்’ தங்கள் ஆவணங்களில் அச்சிடப்பட்டுள்ள துல்லியமான மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தகவல்களை வழங்குவதன் மூலம் புதிய விண்ணப்பதாரராக போர்ட்டலில் … Read more

கத்தி வைத்திருந்ததால் டெல்லி மெட்ரோவில் சீக்கியரைத் தடுத்த அதிகாரி; சர்ச்சையான சம்பவம்

கத்தியுடன் (சீக்கியரின் அடையாளம்) வந்ததாக கூறி `டெல்லி துவாரகா செக்டார் 21’ என்ற மெட்ரோ ரயில் நிலையத்திற்குள் நுழைய விடாமல் தடுத்ததாக சீக்கியர் ஒருவர் செப்டம்பர் 8ம் தேதி அளித்த புகார் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து தேசிய சிறுபான்மையினர் ஆணையம் (NMC) டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனின் (DMRC) தலைவர் மற்றும் டெல்லி தலைமைச் செயலரிடம் அறிக்கை கேட்டுள்ளது. தக்த் ஸ்ரீ தம்தாமா சாஹிப்பின் (Takht Sri Damdama Sahib) முன்னாள் நிர்வாகி ஜதேதாரான (Jathedar) … Read more