உலகின் முதல் நானோ யூரியா திரவ தொழிற்சாலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

குஜராத்தில் உலகின் முதல் நானோ யூரியா திரவ தொழிற்சாலையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். கலோல் என்ற இடத்தில் ஆலையைத் திறந்து வைத்து பேசிய அவர், இந்த தொழிற்சாலையில் ஒரு சாக்கு யூரியாவின் திறனை அழுத்தி ஒரு பாட்டிலில் நீர்மமாக அடைத்துவிட முடியும் என்றும் இதனால் போக்குவரத்துச் செலவு குறைவதுடன், சிறு விவசாயிகளும் பயன் அடைவார்கள் என்றும் குறிப்பிட்டார். மேலும், இந்த தொழிற்சாலை தினசரி ஒன்றரை லட்சம் பாட்டில் நானோ யூரியா தயாரிக்கும் திறன் பெற்றுள்ளதாகவும் அவர் … Read more

ரூ.3500 மதிப்புள்ள 50 கிலோ யூரியாவை ரூ.300க்கு தருகிறோம்- பிரதமர் மோடி

குஜராத்தின் காந்தி நகர் கலோலில் உலகின் முதல் நானோ யூரிவா திரவ ஆலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:- வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 50 கிலோ யூரியா மூட்டையின் விலை ரூ.3500 ஆக உள்ளது. விவசாயிகளுக்கு 50 கிலோ யூரியா மூட்டை ரூ.300க்கு வழங்கப்படுகிறது. 7- 8 ஆண்டுகளுக்கு முன் பெருமளவு யூரியா கள்ளச்சந்தையில் விற்கப்பட்டதால் விவசாயிகள் பாதிப்படைந்தனர். இவ்வாறு அவர் கூறினார். இதையும் படியுங்கள்.. பாட்டாளி மக்கள் கட்சிக்கு டாக்டர் … Read more

ஜம்மு காஷ்மீர் பகுதியில் பாதுகாப்புப் படைக்கும், பயங்கரவாதிகளுக்கும் துப்பாக்கிச் சண்டை; 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் பகுதியில் தொடர்ந்து பாதுகாப்புப் படைக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது. ஜம்மு காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ளூர் போலீசார், பாதுகாப்புப் படையினர் இணைந்து சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்ட பகுதியில் இருந்து ஆயுதங்கள், வெடிமருந்துகள் உள்பட ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன … Read more

உத்தராகண்ட் முன்னாள் அமைச்சர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை – மருமகள் மீது போலீஸார் வழக்கு பதிவு

டேராடூன்: உத்தராகண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திர பகுகுணா (59). இவர் 2004-05-ம் ஆண்டில் என்.டி. திவாரி அமைச்சரவையில் அமைச்சராக பணியாற்றியுள்ளார். தற்போது இவர் ஹால்தானி பகுதியில் மகன் அஜய் பகுகுணா, மருமகள், பேத்தியுடன் வசித்தார். கடந்த வாரம் பேத்தியை மானபங்கம் செய்ய முயன்றதாக இவரது மருமகள் போலீஸில் புகார் கொடுத்தார். இதையடுத்து போலீஸார் ராஜேந்திர பகுகுணா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில், கடந்த புதன்கிழமை போலீஸாருக்கு போன் செய்து விட்டு மாடியிலுள்ள … Read more

மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் ; இண்டிகோ விமான நிறுவனத்திற்கு 5 லட்ச ரூபாய் அபராதம்

மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில் இண்டிகோ விமான நிறுவன ஊழியர்கள் விதிமுறைகளை பின்பற்ற தவறியதாக இண்டிகோ விமான நிறுவனத்திற்கு 5 லட்ச ரூபாய் அபராதம் விதித்து விமான போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 7ஆம் தேதி ராஞ்சி விமான நிலையத்தில் இருந்து ஐதராபாத் செல்ல தங்களது மாற்றுத்திறனாளி மகனுடன் வந்த பெற்றோரை விமானத்தில் ஏற்ற இண்டிகோ நிறுவன ஊழியர்கள் மறுப்பு தெரிவித்தனர். பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, அவர்களை விமானத்தில் ஏற்ற முடியவில்லை என அந்நிறுவனம் … Read more

எம்பி நவ்நீத் ராணா கைது விவகாரம்; மகாராஷ்டிரா தலைமை செயலருக்கு நோட்டீஸ்.! நாடாளுமன்ற நெறிமுறை குழு தகவல்

புதுடெல்லி: சுயே ச்சை பெண் எம்பி நவ்நீத் ராணா கைது விவகாரம் தொடர்பாக வரும் ஜூன் 15ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று மகாராஷ்டிரா தலைமை செயலருக்கு நாடாளுமன்ற நெறிக்குழு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே வீட்டு வாசலில், ‘அனுமன் சாலிஸா’ பாடல் பாடப்போவதாக, சுயேச்சை பெண் எம்பி நவ்நீத் ராணாவும், அவரது கணவரும், சுயேச்சை எம்எல்ஏவுமான ரவி ராணாவும் அறிவித்தனர். இவர்களது அறிவிப்பு பதற்றத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து … Read more

கரோனா காலம்: 40% வடகிழக்கு மாநில மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பில் பங்கேற்கும் வசதி இல்லை – NAS தகவல்

புதுடெல்லி: கரோனா பொது முடக்க காலத்தில், வடகிழக்கு மாகாணங்களில் 40 சதவீதத்திற்கும் அதிகமான மாணவர்கள் ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்வதற்கான டிஜிட்டல் உபகரணங்கள் இல்லாமல் இருந்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கடந்த புதன் கிழமை நேஷனல் அச்சீவ்மெண்ட் சர்வே 2021 (National Achievement Survey) அறிக்கை வெளியானது. இந்த அறிக்கையின் படி, வடகிழக்கு மாகாணங்களில் 40 சதவீதத்திற்கும் அதிகமான பள்ளி மாணவர்கள் கரோனா பொது முடக்க காலத்தில் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்வதற்கான டிஜிட்டல் உபகரணங்கள் … Read more

இரும்பால் செய்யப்பட்ட தேரில் மின்சாரம் பாய்ந்து விபத்து ; 3 பேர் உயிரிழப்பு

தெலுங்கானா மாநிலம் நம்பள்ளி அருகே தேரில் மின்சாரம் பாய்ந்த விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இருவர் படுகாயமடைந்தனர். கேதேபள்ளி என்ற ஊரில் இருக்கும் கோவிலுக்காக இரும்புக் கம்பியால் ஆன தேர் வாங்கப்பட்டது. அந்த தேர் மரத்தடியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், மழை பெய்ததால் தேரை கோவிலில் உள்ள கொட்டகைக்கு மாற்ற முடிவு செய்து அப்பகுதி மக்கள் தேரை இழுத்துச் சென்றுள்ளனர். அப்போது, தேரின் மேல் பகுதியில் இருந்த இரும்புக் கம்பி உயரழுத்த மின்கம்பியில் … Read more

டிராக்டர் ஓட்டி வந்த மணமகள்

வட மாநிலங்களில் சமீப காலமாக திருமண நிகழ்ச்சிக்கு வரும் மணமகள்கள் வித்தியாசமான முறையில் வருவது புதிய நாகரீகமாக மாறி உள்ளது. கடந்த மாதம் அரியானாவில் ஒரு மணமகள் குதிரையில் ஏறி திருமண மண்டபத்துக்கு வந்தார். அவர் கையில் வாளை ஏந்தியபடி சுழற்றி கொண்டு வந்தது திருமண விழாவுக்கு வந்தவர்களை ஆச்சரியப்பட வைத்தது. அதேபோன்று வித்தியாசமான முறையில் பெண்கள் யோசித்து திருமண விழாக்களில் கலந்து கொள்கிறார்கள். நேற்று மத்திய பிரதேசத்திலும் இப்படி ஒரு சம்பவம் நடந்தது. அந்த மாநிலத்தின் … Read more

லீவு விட்டாச்சு!: ஏழுமலையானை தரிசிக்க திருப்பதி திருமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.. 4 கி.மீ. தூரம் நீளும் வரிசை..!!

ஆந்திரா: கோடை விடுமுறையையொட்டி திருப்பதி திருமலையில் பெருமாளை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. ஏழுமலையானை தரிசிக்க நாள்தோறும் 300 ரூபாய் டிக்கெட்டுகளை தேவஸ்தானம் ஆன்லைன் வாயிலாக விநியோகித்து வருகிறது. இது தவிர இலவச தரிசனத்திலும் பக்தர்கள் ஆயிரக்கணக்கில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் நாடு முழுவதிலும் இருந்து திருமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை கூடுதலாகியுள்ளது. இதனால் வைகுண்டம் காம்ப்ளக்சில் உள்ள 31 அறைகளும் நிரம்பி வழிகின்றன. இதன் வெளியிலும் சுமார் 3 … Read more