பிப். 14 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்!

கோவா மாநிலத்தில், வரும் 14 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அன்று ஒரு நாள் மட்டும் பொது விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. கோவா மாநிலத்தில், முதலமைச்சர் பிரமோத் சவாந்த் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில், மொத்தம் உள்ள 40 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக வரும் 14 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள், வரும் மார்ச் மாதம் … Read more

உத்தரப் பிரதேசத்தில் 35 ஆண்டுகளாக விவசாயிகளுக்காக அணையாமல் எரியவிடப்படும் ஒரு அணையா ஜோதி <!– உத்தரப் பிரதேசத்தில் 35 ஆண்டுகளாக விவசாயிகளுக்காக அணையாமல… –>

உத்தரப்பிரதேசத்தில் விவசாயி ஒருவரது வீட்டில் அமர் கிசான் ஜோதி என்ற பெயரில் 35 ஆண்டுகளாக ஜோதி எரியூட்டப்பட்டு வருகிறது. சிசவுலி என்ற இடத்தில் கடந்த 1987ம் ஆண்டு விவசாய சங்கத் தலைவரான மகேந்திர சிங் திகாயத் இந்த ஜோதியை ஏற்றியதாகக் கூறப்படுகிறது. தினசரி ஒன்றே கால் கிலோ நெய் மூலம் இந்த ஜோதி எரியூட்டப்படுவதாக அதனைப் பாதுகாத்து வரும் நரேந்திர திகாயத் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு வணக்கம் தெரிவிக்கும் வகையில் அமர் கிசான் ஜோதி … Read more

உத்தர பிரதேசத்தில் இன்று முதல் கட்ட தேர்தல் – 58 தொகுதிகளில் வாக்குப்பதிவு

லக்னோ : உத்தர பிரதேச சட்டசபைக்கு முதல் கட்டமாக 11 மாவட்டங்களில் உள்ள 58 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவு பெறுகிறது. இந்த தேர்தலில் பா.ஜ.க., சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தனித் தனியே களம் காண்கின்றன. முசாபர்நகர், மீரட், பாக்பத், காசியாபாத், ஷாம்லி, ஹாபூர், கௌதம் புத்தநகர், புலந்த்ஷாஹர், அலிகார், ஆக்ரா மற்றும் மதுரா உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த … Read more

விவசாய கடன்கள் தள்ளுபடி கொரோனாவில் பலியானோர் குடும்பங்களுக்கு ரூ.50 லட்சம்: உபி.யில் காங். வாக்குறுதி

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில், சட்டீஸ்கரை போன்று விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்,’ என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் இன்று தொடங்கி 7 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அனைத்து கட்சிகளும் தங்களின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு முடித்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. லக்னோவில் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி இதை வெளியிட்டார். அப்போது பேசிய அவர், ‘உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் … Read more

சென்னையில் எரிபொருள் பேட்டரி தானியங்கி உற்பத்தி மையம்: நிதின் கட்கரி தகவல்

புதுடெல்லி: சென்னையில் உள்ள ஏஆர்சிஐ மையம் இருபது கிலோ வாட் திறன் கொண்ட எரிபொருள் பேட்டரிகளை தயாரிப்பதற்கான ஒருங்கிணைந்த தானியங்கி உற்பத்தி மையத்தை அமைத்துள்ளது என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் பதில் அளித்துள்ள அவர் கூறியதாவது: நாட்டில் வாகன எரிபொருளாக ஹைட்ரஜனை பயன்படுத்துவதற்கான அரசாணையை 16 செப்டம்பர் 2016-லேயே மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ளது. இந்த அரசாணையின் நான்காவது இணைப்பில் சிஎன்ஜியுடன் 18% … Read more

2 வாரங்கள் ஆர்ப்பாட்டம் நடத்த தடை – மாநில அரசு அதிரடி உத்தரவு!

கர்நாடக மாநிலம் பெங்களூரில், அடுத்த இரண்டு வாரங்களுக்கு கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்த தடை விதித்து உத்தரவிடப்பட்டு உள்ளது. கர்நாடக மாநிலத்தில், முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் உள்ள கல்லூரிகளுக்கு, ஹிஜாப் அணிந்து வரும் முஸ்லிம் மாணவிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்து மாணவர்கள் காவித் துண்டு போன்ற உடைகளை அணிந்து வந்தனர். இதனால், ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை கல்லூரிக்குள் வர விடாமல் கல்லூரி நிர்வாகம் … Read more

பெண் ஒருவர் ஏடிஎம் மிஷினிலேயே விட்டுச் சென்ற பத்தாயிரம் ரூபாய் பணத்தை போலீசாரிடம் ஒப்படைத்த மனிதநேயமிக்க இளைஞர்.. .. <!– பெண் ஒருவர் ஏடிஎம் மிஷினிலேயே விட்டுச் சென்ற பத்தாயிரம் ர… –>

புதுச்சேரியில் ஏடிஎம்மில் பணம் எடுக்க சென்ற நபர், வேறொரு பெண் ஒருவர் மிஷினிலேயே தெரியாமல் விட்டுச் சென்ற பத்தாயிரம் ரூபாய் பணத்தை எடுத்து நேர்மையாக போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார். முருங்கப்பக்கம் கிராமத்தில் உள்ள காமராஜர் வீதியை சேர்ந்த சாந்தி என்ற அந்த பெண் அப்பகுதியில் இருந்த ஏ.டி.எம்-ல் பணம் எடுக்கச் சென்ற நிலையில், ரகசிய எண்ணை கொடுத்த பிறகும் பணம் வராததால், வங்கியில் தகவல் தெரிவித்துவிட்டு வீட்டுக்கு சென்றிருக்கிறார். சிறிது நேரம் கழித்து ஏ.டி.எம்.மில் இருந்து பணம் வெளியே … Read more

நிலையான அரசுக்கும், நிலையற்ற கட்சிக்கும் இடையே போட்டி – கோவா தேர்தல் பிரச்சாரத்தில் அமித்ஷா பேச்சு

பனாஜி: கோவா சட்ட சபைக்கு வரும் 14ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.இதையொட்டி அங்கு உச்சகட்ட பிரச்சாரத்தில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர்.  வடக்கு கோவாவில் உள்ள பிச்சோலிம் தொகுதியில் வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அங்கு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: கோவாவில் நிலையான பா.ஜ.க. அரசாங்கத்திற்கும், நிலையற்ற காங்கிரஸுக்கும் இடையிலான தேர்தல் இது.  என்னைப் பொறுத்தவரை, கோவா மக்களுக்கு இரண்டு விருப்பங்கள் உள்ளன. … Read more

ஹீரோவுடன் நெருக்கமான காட்சி கணவர் ஒப்புதல் தந்தாரா? தீபிகா ஆவேசம்

மும்பை: ஹீரோவுடன் நெருக்கமான காட்சியில் நடிக்க கணவர் ரன்வீர் சிங் ஒப்புதல் தந்தாரா என்ற மீடியாவின் கேள்வியால் கோபம் அடைந்தார் தீபிகா படுகோன். தீபிகா படுகோன், சித்தாந்த் சதுர்வேதி நடித்துள்ள இந்தி படம் கெஹ்ராய்யான். இந்த படம் நாளை அமேசான் ஓடிடியில் வெளியாகிறது. இதில் சித்தாந்துடன் நெருக்கமான காட்சிகளில் படு கவர்ச்சியாக தீபிகா படுகோன் நடித்துள்ளார். இதுவரை அவர் எந்த படத்தில் இப்படி நடித்ததில்லை. இதுபற்றி செய்தியாளர்கள் சந்திப்பில் அவரிடம் கேட்கப்பட்டது. இதுபோன்ற காட்சியில் நடிக்க கணவர் … Read more

கேரளாவில் காதலர் தினத்தன்று கரம்கோக்கும் திருநர் – திருநங்கை இணை – திருமணப் பதிவில் இது ஸ்பெஷல்!

கேரளாவில் எல்ஜிபிடிக்யூ+ சமூகத்தைச் சேர்ந்த சியாமா – மனு இணை, காதலர் தினத்தன்று திருநர் – திருநங்கை அடையாளங்களுடன் தங்கள் திருமணத்தை பதிவுச் செய்யவுள்ளனர். எல்ஜிபிடிக்யூ+ மீதான பொதுப் பார்வை சமீப ஆண்டுகளாகவே மாறியுள்ளது. குறிப்பாக இதுகுறித்த விவாதம் தொடர்ந்து பேசுபொருளாக மாறி வருவதால், இதனால் உருவான நேர்மறை விளைவுகள் சமூகம், சட்டம், குடும்ப ரீதியாகவும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளன. இந்த நிலையில்தான் கேரளாவில் திருநர் மனு, திருநங்கை சியாமா இடையே காதலர் தினத்தன்று நடக்கும் திருமணம் கவனம் … Read more