சசி தரூர் Vs டி.ராஜா வார்த்தைப் போர் – திருவனந்தபுரத்தில் வாக்குகளை பிரிப்பது யார்?

திருவனந்தபுரம்: தனக்கு எதிராக திருவனந்தப்புரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மேற்கொள்ளும் பிரச்சாரம் என்பது எதிர்க்கட்சிகளின் வாக்குகளை பிரிக்க மட்டுமே பயன்படும்” என்று காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “வயநாட்டில் ராகுல் காந்தியின் வேட்புமனு தாக்கல் குறித்து புகார் தெரிவிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திருவனந்தபுரத்தில் பாஜகவின் விளையாட்டை விளையாடுவது நகைப்புக்குரியது. எனக்கு எதிராக திருவனந்தபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மேற்கொள்ளும் பிரச்சாரத்தின் நோக்கம், பாஜகவுக்கு எதிரான … Read more

‘யானையை விரட்டுவோம்… புலியை துரத்துவோம்… – கேரளாவில் கவனம் ஈர்க்கும் தேர்தல் வாக்குறுதிகள்

மூணாறு: இடுக்கி தொகுதியில் வனப்பகுதியை விட்டு வெளியே வரும் யானை, புலி, காட்டெருமை உள்ளிட்ட விலங்குகளால் பொதுமக்களுக்கு உயிரிழப்பு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. ஆகவே இவற்றை காட்டுக்குள் துரத்தி பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம் என்று பிரதான கட்சிகள் அங்கு தேர்தல் வாக்குறுதிகளை அளித்து வருகின்றன. தேனி மாவட்டத்தின் தமிழக எல்லையில் கேரளாவின் இடுக்கி மாவட்டம் அமைந்துள்ளது. இது கேரளாவின் மிகப் பெரிய மக்களவைத் தொகுதியாகும். உடும்பஞ்சோலை, தொடுபுழா, தேவிகுளம், இடுக்கி, பீர்மேடு, மூவாற்றுப்புழா, கோதமங்கலம் என்று 7 … Read more

மம்தாவின் ‘யார்க்கர்’… ஐபிஎல் புகழ்… யார் இந்த யூசுப் பதான்? | 2024 தேர்தல் கள புதுமுகம்

புதுடெல்லி: மக்களவைத் தேர்தலில் களம் காணும் கவனிக்கத்தக்க புதுமுக வேட்பாளர்களைப் பற்றி பார்த்து வருகிறோம். அந்த வகையில், தேர்தலில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யூசுப் பதான் மேற்கு வங்க மாநிலம் பஹராம்பூர் தொகுதியில் மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் சார்பில் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். இந்தத் தொகுதி காங்கிரஸின் கோட்டையாக உள்ள நிலையில், அங்கு மக்களவை காங்கிரஸ் குழு தலைவரான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி எம்பியை எதிர்க்க உள்ளார். யூசுப் பதான் அங்கு வெல்வாரா என்பது … Read more

சிஏஏ-வுக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு 3 வாரத்தில் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ) எதிராக 237 மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் மத்திய அரசு 3 வாரங்களில் பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டம் கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்ட நிலையில், அதற்கான விதிமுறைகள் கடந்த 11ம் தேதி வெளியிடப்பட்டு சட்டம் அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து, சிஏஏ-வுக்கு எதிராக இந்திய யூனியன் முஸ்லிம் லீக், காங்கிரஸ் செய்தித் தொடர்பு … Read more

பாஜகவில் இணைந்தார் ஹேமந்த் சோரனின் அண்ணி சீதா சோரன்!

ராஞ்சி: ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மூத்த தலைவரும், ஹேமந்த் சோரனின் அண்ணியுமான சீதா சோரன் பாஜகவில் இணைந்துள்ளார். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் மறைந்த தலைவர் துர்கா சோரனின் மனைவியான சீதா சோரன், அந்தக் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்தார். இந்நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியை விட்டு விலகி, இன்று அவர் பாஜகவில் இணைந்துள்ளார். மேலும், தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் அவர் ராஜினாமா செய்துள்ளார். பாஜகவில் இணைந்தது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய … Read more

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசுக்கு நோட்டீஸ் -உச்சநீதிமன்றம்

Citizenship (Amendment) Act, 2019: குடியுரிமை திருத்தத்தை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீது மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பதில் அளிக்க 3 வார கால அவகாசம்.

‘இந்தியா ஒளிர்கிறது’-க்கு நேர்ந்ததே ‘மோடியின் உத்தரவாதங்கள்’ கோஷத்துக்கும் நடக்கும்: கார்கே

புதுடெல்லி: நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி மாற வேண்டும் என நாடு விரும்புகிறது என டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே பேசினார்.. காங்கிரஸ் கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டம் டெல்லியில் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தலைமையில் இன்று நடைபெற்றது. இதில், காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால், தேர்தல் அறிக்கைக் குழு தலைவர் ப.சிதம்பரம், காங்கிரஸ் பொதுச் செயலாளர் … Read more

''பாஜகவின் அரசியல் பிரிவாக அமலாக்கத்துறை உள்ளது'' – கவிதா மீதான அறிக்கைக்குப் பின் ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

புதுடெல்லி: மதுபானக் கொள்கை விவகாரத்தில், டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், மணீஷ்சிசோடியா ஆகியோருடன் இணைந்து கவிதா முறைகேடு செய்துள்ளதாக விசாரணை அமைப்பு குற்றம் சாட்டியுள்ள நிலையில், அமலாக்கத்துறை பாரதிய ஜனதா கட்சியின் அரசியல் பிரிவாக செயல்படுவதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் அமலாக்கத்துறையை கடுமையாக விமர்சித்துள்ளது. அதன் அறிக்கையில் கூறியிருப்பதாவது: “அமலாக்கத்துறை அப்பட்டமான பொய் மற்றும் அற்பமான அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது அமலாக்கத்துறை ஒரு நடுநிலையான அமைப்பாக இருப்பதுக்கு … Read more

மகாராஷ்டிரா | காவல்துறையினருடன் நடந்த மோதலில்  4 நக்ஸலைட்டுகள் உயிரிழப்பு

கட்சிரோலி: மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலியில் செவ்வாய்க்கிழமை போலீஸாருடன் நடந்த மோதலில் 4 நக்ஸலைட்டுகள் கொல்லப்பட்டதாக மூத்த காவல்துறை அதிகாரி தெரிவித்தார். இவர்கள் மீது ரூ.36 லட்சம் பரிசு தொகை அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து காவல் கண்காணிப்பாளர் நீலோத்பால் கூறுகையில், “மக்களவைத் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், நாசகார செயல்களில் ஈடுபடும் நோக்கில் தெலங்கானாவில் இருந்து சில நக்ஸலைட்டுகள் பிரன்ஹிதா நதியைக் கடந்து கட்சிரோலிக்குள் நுழைந்துள்ளதாக திங்கள்கிழமை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து கட்சிரோலியின் … Read more

37 கோடி வாக்காளர்கள்… இது மோடி வைக்கும் குறி!

கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது நாடு முழுவதும் 17.1 கோடி வாக்காளர்கள் பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். அந்த தேர்தலில் பாஜக 282 தொகுதிகளில் வெற்றி பெற்றது. கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது 22 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் பாஜகவுக்கு ஆதரவு அளித்தனர். அந்த தேர்தலில் பாஜக 303 தொகுதிகளில் வெற்றி பெற்றது. வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்காக 37 கோடி வாக்காளர்களின் ஆதரவை திரட்ட பிரதமர் நரேந்திர மோடி இலக்கு நிர்ணயித்திருக்கிறார். … Read more