கேஜ்ரிவால் கைது விவகாரம்: ஜெர்மனியின் கருத்துக்கு இந்தியா கடும் கண்டனம்

புதுடெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் ஜெர்மனி வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் கூறிய கருத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. டெல்லி மதுபான ஊழல் வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை அமலாக்கத் துறை கடந்த வியாழக்கிழமை கைது செய்தது. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கேஜ்ரிவால் கைதுக்கு கண்டனம் தெரிவித்து … Read more

வாரணாசியில் பிரதமர் மோடிக்கு எதிராக 3-வது முறையாக களமிறங்கும் காங்கிரஸின் அஜய் ராய்!

புதுடெல்லி: மக்களவை தேர்தல் 2024க்கான நான்காவது வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. இதில் வாரணாசி தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அஜய் ராஜ், மூன்றாவது முறையாக பிரதமர் மோடியை எதிர்த்து களம் காண்கிறார். நீண்ட இழுபறிக்குப் பிறகு மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், தமிழ்நாடு, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களுக்கான மக்களவை தொகுதி வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய நான்காவது பட்டியலை காங்கிரஸ் தலைமை இன்று வெளியிட்டுள்ளது. இதில் தமிழகத்தின் ஏழு தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதே போல உத்தர … Read more

சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம், திருவள்ளூரில் சசிகாந்த் செந்தில் போட்டி – தமிழக காங். 7 வேட்பாளர்கள் அறிவிப்பு

புதுடெல்லி: மக்களவை தேர்தல் 2024க்கான நான்காவது வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் சிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரம், திருவள்ளூர் தொகுதியில் சசிகாந்த் செந்தில் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். அகில இந்திய காங்கிரஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள இந்த 4வது பட்டியலில், மொத்தம் 45 வேட்பாளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இதில் தமிழகத்தில் ஏழு தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. திருவள்ளூர் (தனி) தொகுதியில் சசிகாந்த் செந்தில், கிருஷ்ணகிரியில் கே.கோபிநாத், கரூரில் ஜோதிமணி, கடலூரில் எம்.கே.விஷ்ணு பிரசாத், சிவகங்கையில் கார்த்தி … Read more

செய்தித் தெறிப்புகள் @ மார்ச் 23: கேஜ்ரிவால் உருக்கம் முதல் மாஸ்கோ பயங்கரம் வரை

“இசையிலும் அரசியலைக் கலக்க வேண்டாம்” – முதல்வர் ஸ்டாலின்: “டி.எம்.கிருஷ்ணா எனும் கலைஞனின் திறமை எவராலும் மறுதலிக்க முடியாதது. அரசியலில் மத நம்பிக்கைகளைக் கலந்தது போல, இசையிலும் குறுகிய அரசியலைக் கலக்க வேண்டாம்! விரிந்த மானுடப் பார்வையும், வெறுப்பை விலக்கி, சக மனிதரை அரவணைக்கும் பண்புமே இன்றைய தேவை!” என்று முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். முன்னதாக, கர்னாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு சென்னை மியூசிக் அகாடமி சார்பில் 2024-ம் ஆண்டுக்கான சங்கீத கலாநிதி விருது வழங்கப்படும் என்று … Read more

ED பிடியில் டெல்லி முதல்வர்: டெல்லி மதுபான ஊழல் வழக்கில் இதுவரை நடந்தது என்ன?

Arvind Kejriwal: ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தின் உத்தரவின்படி, சிசிடிவி கவரேஜ் உள்ள இடத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்தப்படும். சிசிடிவி காட்சிகள் பாதுகாக்கப்பட வேண்டும். 

பாஜக பெற்ற ‘ப்ரீப் பெய்டு’, ‘போஸ்ட் பெய்டு’ லஞ்சம் எவ்வளவு? – காங்கிரஸ் பட்டியல்

புதுடெல்லி: தேர்தல் பத்திரம் விவகாரத்தில் பாஜக அரசை தொடர்ந்து விமர்சித்து வரும் காங்கிரஸ் கட்சி, “வெளிப்படைத் தன்மையில்லாத இந்தத் திட்டமானது வங்கிகள் மூலமாக, ப்ரீப் பெய்டு, போஸ்ட் பெய்டு மற்றும் ரெய்டுக்கு பின்பாக என லஞ்சம் பெறுவதை உறுதி செய்துள்ளது” சாடியுள்ளது. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பிரிவு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறுகையில், “கருப்பு … Read more

ஒரு கிராமத்திற்காக 12 கிராமங்களை பாகிஸ்தானுக்கு கொடுத்த இந்தியா – காரணம் என்ன?

Historic Village Husainiwala : சுதந்திரத்திற்கு பின் பிரிவினையின் போது இந்தியா 12 கிராமங்களை பாகிஸ்தானுக்கு கொடுத்து, இந்த ஒரே ஒரு கிராமத்தை மட்டும் பெற்றதாம். அந்தளவிற்கு அந்த கிராமத்தில் என்ன சிறப்பு என்பதை இதில் காணலாம்.

அமலாக்கத் துறை விசாரணை, கைதுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தை நாடிய கேஜ்ரிவால்!

புதுடெல்லி: தான் கைது செய்யப்பட்டதை எதிர்த்தும், அமலாக்கத் துறை விசாரணைக்கு அனுமதி வழங்கிய விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்தும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் வழக்கு தொடர்ந்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் தெரிவித்த கேஜ்ரிவாலின் வழக்கறிஞர்கள் குழு, “டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டிருப்பதும், அவரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு விசாரணை நீதிமன்றம் அனுமதி வழங்கியதும் சட்டவிரோதமானவை. அவர் உடனடியாக காவலில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும். டெல்லி உயர் … Read more

மதுபான ஊழல் வழக்கு… கடந்து வந்த பாதை… முக்கிய கைதுகள் குறித்த விபரம்!

டெல்லி மதுபான ஊழல் வழக்கு தொடர்பாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்க இயக்குனரகம் (ED) வியாழக்கிழமை கைது செய்தது. இந்த மோசடி வழக்கு குறித்தும், அது தொடர்பான கைதுகள் குறித்தும் முழுமையாக அறிந்து கொள்ளலாம்.

“விவசாயிகள் வருவாய் எங்கே இரட்டிப்பானது?” – மோடிக்கு சரத் பவார் சரமாரி கேள்வி

புனே: விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாக்கப்படும் என்ற வாக்குறுதியை பிரதமர் மோடி நிறைவேற்றவில்லை என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி (எஸ்பி) தலைவர் சரத் பவார் குற்றம்சாட்டியுள்ளார். மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் நாடு முழுவதும் தீவிரமடைந்து வருகிறது. மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 48 தொகுதிகளுக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. ஏப்ரல் 19-ம் தேதியில் தொடங்கி மே 20-ம் தேதிக்குள் மகாராஷ்டிராவில் தேர்தல் முடிவடைய இருக்கிறது. இந்நிலையில், மகாராஷ்டிராவின் எதிர்க்கட்சிகளின் கூட்டணியான மகா விகாஸ் அகாதி சார்பில் பாரமதி மக்களவைத் … Read more