இனி ரூ. 2 ஆயிரத்திற்கும் அதிகமான வணிக பண பரிவர்த்தனைகளுக்கு கட்டணம்..!!

இந்தியாவில் பெரும்பாலான பெருநகரங்களில், யுபிஐ மூலம் கூகுள் பே உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்தி பணப்பரிவர்த்தனை நடைபெற்று வருகிறது. கிராமங்களில் கூட தற்போது பண பரிவர்த்தனை சுலபமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. சில்லறை வணிக கடைகள் உட்பட பல இடங்களில் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளுவதற்கு ஆன்லைன் செயலிகள் பயன்படுகின்றன. இதனால் ரூபாய் நோட்டுகள் பயன்பாடு குறைந்து வருகிறது. ஏடிஎம் வாசலில் கூட மக்கள் நிற்பது, முன்பை விட குறைந்து விட்டது. தற்போதெல்லாம் பேடிஎம், கூகுள் பே, ஜி பே, போன் பே … Read more

224 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு: மே 10-ம் தேதி கர்நாடகா தேர்தல்

புதுடெல்லி: கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல் மே 10-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. மே 13-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று, முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் டெல்லியில் நேற்று அறிவித்தார். கர்நாடக சட்டப்பேரவையின் பதவிக் காலம் வரும் மே 24-ம் தேதி நிறைவடைகிறது. இந்நிலையில், டெல்லியில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: கர்நாடகாவில் மொத்தம் உள்ள 224 தொகுதிகளுக்கும் மே 10-ம் தேதி … Read more

அரசியல்வாதிகள் மதத்தைப் பயன்படுத்துவதை நிறுத்தினால் வெறுப்புணர்வு பேச்சுக்கள் முடிவுக்கு வரும் – உச்ச நீதிமன்றம்!

அரசியல்வாதிகள் மதத்தைப் பயன்படுத்துவதை நிறுத்தினால் வெறுப்புணர்வு பேச்சுக்கள் முடிவுக்கு வரும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. வெறுப்பைத் தூண்டும் பேச்சு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது கருத்துத் தெரிவித்த நீதிபதிகள், வெறுப்புணர்வு பேச்சுக்கள் ஒரு தீயவட்டம் என்று குறிப்பிட்ட நீதிபதிகள், இத்தகைய பேச்சுக்கள் விளிம்பு நிலையில் இருந்து வருவதாகவும், மக்கள்தான் தங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டனர். அரசியலை மதத்துடன் கலக்கும் போது பெரிய பிரச்சனை எழுகிறது என்று குறிப்பிட்ட நீதிபதிகள், … Read more

போன் பே, பேடிஎம், அமேசான் பே போன்ற வாலட்டுகளில் இருந்து ரூ. 2 ஆயிரத்திற்கும் மேல் யுபிஐ மூலம் பணம் செலுத்தினால் 1.1% கட்டணம்: நாளை மறுநாள் முதல் அமலுக்கு வருகிறது

* வங்கி டூ வங்கிக்கு மட்டும் இலவசம் தொடரும் புதுடெல்லி: போன் பே, பேடிஎம், அமேசான் பே உள்ளிட்ட டிஜிட்டல் வாலட்டுகளில் இருந்து  ரூ.2 ஆயிரத்திற்கும் மேல் அதிக தொகைகளை யு.பி.ஐ செயலிகள் மூலம் அனுப்ப, 1.1 சதவீதம் வரை கட்டணம் விதிக்கப்பட உள்ளதாக தேசிய பணப் பரிவர்த்தனை கழகம் அறிவித்துள்ளது.  நாடு முழுவதும் தற்போது யுபிஐ மூலம்,   கூகுள் பே, போன் பே, பேடிஎம் உள்ளிட்ட ஆப்களை பயன்படுத்தி பணப்பரிவர்த்தனை நடைபெற்று வருகிறது. பெரு வணிக … Read more

கர்நாடக சட்டமன்ற தேர்தல் வரும் மே 10-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குபதிவு!!

கர்நாடாகாவில் ஆளும் பாஜக அரசின் பதவிக்காலம் வரும் மே 24-ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. அதற்கு முன்னதாக புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்தை தேர்தல் ஆணையம் பெற்றுள்ளது. 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டப்பேரவையில் மொத்தம் 2.51 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதனிடையே தேர்தல் தேதி அறிவிப்பிற்கு முன்னதாகவே தேர்தல் களம் அம்மாநிலத்தில் சூடு பிடித்துள்ளது. பாஜக சார்பில் பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர் அமித்ஷா, கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்டோரும் காங்கிரஸ் … Read more

பெண் வேடத்தில் அம்மனுக்கு நன்றி சொன்ன ஆண்கள்!! வைரல் வீடியோ

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கொட்டம்குளக்கரா தேவி கோவிலில் ஆண்டுதோறும் மலையாள மீனம் மாதத்தில் சமய விளக்கு திருவிழா நடைபெறுவது வழக்கம். இதில் கேரளாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான ஆண்கள் பெண்கள் வேடமிட்டு பங்கேற்பர். பெண்கள் வேடமிட்டு தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவதன் மூலம் செல்வம் பெருகும் என்பது அவர்களின் நம்பிக்கை. மாலை முதலே ஆலயத்து படையெடுக்கும் ஆண்கள் கோவிலில் விற்கப்படும் 5 முக விளக்கை வாங்கி அதில் தீபம் ஏற்றி இரவு முழுவதும் கோயிலை … Read more

ஜனநாயகத்தின் தாய் இந்தியா: பிரதமர் மோடி பெருமிதம்

புதுடெல்லி: ‘‘இந்தியா ஜனநாயகத்தின் தாய்” என்று பிரதமர் மோடி ஜனநாயக நாடுகளின் உச்சி மாநாட்டில் தெரிவித்துள்ளார்.  ஜனநாயக நாடுகளின் 2023ம் ஆண்டுக்கான உச்சிமாநாடு வீடியோகான்பரன்சிங்கில் நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசியதாவது: இந்திய அரசின் ஒவ்வொரு முயற்சியும் இந்திய குடிமக்களின் கூட்டு முயற்சியினால் இயக்கப்படுகின்றது. பல உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் இந்தியா இன்று வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரமாக இருக்கின்றது. இதுவே  ஜனநாயகத்திற்கான மற்றும் உலகத்திற்கான சிறந்த விளம்பரமாகும். தேர்ந்தெடுக்கப்பட்ட … Read more

கிரிமினல் வழக்கில் உயர் நீதிமன்ற தடை எதிரொலி லட்சத்தீவு எம்பி முகமது பைசல் தகுதி நீக்கம் வாபஸ்: மக்களவை செயலகம் அறிவிப்பு

புதுடெல்லி:  கிரிமினல் வழக்கில் விதிக்கப்பட்ட 10 ஆண்டு சிறை தண்டனைக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்ததால்,  லட்சத்தீவு எம்பி முகமது பைசல் மீதான தகுதி நீக்க உத்தரவை மக்களவை செயலகம்  திரும்ப பெற்றுள்ளது.  தேசிய வாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த லட்சத்தீவு நாடாளுமன்ற  உறுப்பினரான முகமது பைசல் கடந்த 2009ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலின்போது, அரசியல் விவகாரம் தொடர்பாக முன்னாள் ஒன்றிய அமைச்சர் பிஎம் சயீத்தின் மருமகன் பாடாநாத் சாலிக்கை தாக்கியதாக கூறப்படுகின்றது. இதனையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் … Read more

கூகுளுக்கு ரூ. 1,337 கோடி அபராதம்: கம்பெனி சட்ட தீர்ப்பாயம் உத்தரவு

புதுடெல்லி: கூகுள் மீது வர்த்தக ஒழுங்குமுறை ஆணையமான சிசிஐயின் உத்தரவு சரியானது என தேசிய கம்பெனி சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம் உறுதி செய்தது. 30 நாட்களுக்குள் 1,337 கோடி ரூபாய் அபராத தொகையை செலுத்த உத்தரவிட்டுள்ளது. பல்வேறு சந்தைகளில் ஆண்ட்ராய்டு செல்போன்கள் தொடர்பான வர்த்தகத்தில் நேர்மையற்ற வழியில் செயல்பட்டதாக கூகுள் நிறுவனத்துக்கு இந்திய வணிக போட்டி ஆணையம்(சிசிஐ) கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ரூ.1,337.76 கோடி அபராதம் விதித்தது. இந்திய வணிக போட்டி ஆணையம் விதித்த அபராதத்தை … Read more

வெளிநாடுகளில் இருந்து தமிழ் நாடு என்ஜி ஓக்களுக்கு 3 ஆண்டில் ரூ. 6804 கோடி நிதி: ஒன்றிய அரசு தகவல்

புதுடெல்லி,மார்ச்30: கடந்த 3 ஆண்டுகளில் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட ரூ.55,600 கோடியில் தமிழ்நாடு உள்பட 4 மாநிலங்கள் அதிக நிதி பெற்றுள்ளன என்று ஒன்றிய அரசு தெரிவித்து உள்ளது. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த்ராய் கூறியதாவது:  வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டம் 2010ன் படி, வெளிநாட்டு நிதி பெறும் ஒவ்வொரு அரசு சாரா நிறுவனமும் வரவு செலவு கணக்கை ஒவ்வொரு ஆண்டும் சமர்ப்பிக்க வேண்டும். அதன் அடிப்படையில் கடந்த 3 ஆண்டுகளில் … Read more