பட்ஜெட் உரையில் மிடிள் கிளாசுக்கு சூசகமாக குட் நியூஸ் சொன்ன நிதி அமைச்சர்: நோட் பண்ணீங்களா?

Budget 2024: மக்களின் முழு ஆதரவுடன் வரும் தேர்தலிலும் தங்கள் கட்சியே பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கும் என நம்பிக்கை தெரிவித்த நிதி அமைச்சர், ஆட்சிக்கு வந்தால் தாங்கள் திட்டமிட்டுள்ள பல நலத்திட்டங்கள் பற்றியும் குறிப்பு காட்டியுள்ளார்.

ஹேமந்த் சோரனை 5 நாள் காவலில் விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அனுமதி

ராஞ்சி: ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு ராஞ்சி நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. நிலமோசடி தொடர்பான சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கடந்த புதன் கிழமை அமலாக்கத் துறை ஹேமந்த் சோரனிடம் 7 மணி நேரம் விசாரணை நடத்தியது. 7 மணி நேர விசாரணைக்கு பிறகு, புதன்கிழமை இரவு 8.30 மணி அளவில் அவரை அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்து, தங்கள் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர். … Read more

“பாஜக ஆதரவு மத்திய அமைப்புகளின் பழிவாங்கும் செயல்” – ஹேமந்த் சோரன் கைதுக்கு மம்தா கண்டனம்

கொல்கத்தா: ஜார்க்கண்ட மாநில முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டிருப்பதற்கு கண்டனம் தெரிவித்துள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, “இது பாஜக ஆதரவு மத்திய அமைப்புகளின் பழிவாங்கும் செயல்” என்று விமர்சித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் வெள்ளிக்கிழமை மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள பதிவில், “சக்திவாய்ந்த ஒரு பழங்குடியினத் தலைவரான ஹேமந்த் சோரன் அநியாயமாக கைது செய்யப்பட்டிருப்பதற்கு எனது கடுமையான கண்டனங்களைத் தெரிவிக்கிறேன். இது பாஜக ஆதரவு மத்திய அமைப்புகளின் பழிவாங்கும் செயல், … Read more

மத்திய அரசின் சோலார் திட்டம்… 300 இலவச மின்சாரம்… முழு விவரம் இதோ!

Rooftop Solar Scheme: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நேற்று தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில், மத்திய அரசின் சோலார் மின்சார திட்டம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

ஜார்க்கண்ட் முதல்வராக பதவியேற்றார் சம்பாய் சோரன்

ராஞ்சி: ஜார்க்கண்ட் முதல்வராக சம்பாய் சோரன் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா துணைத் தலைவரும் ஹேமந்த் சோரன் அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவருமான சம்பாய் சோரன் முதல்வராக இன்று பதவியேற்றுக்கொண்டார். ராஞ்சியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன், சம்பாய் சோரனுக்கு பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் ஜார்க்கண்ட் முதல்வராக செயல்பட்டு … Read more

“வட இந்திய மாநிலங்கள் பின்தங்கியதற்கு காங்கிரஸே காரணம்” – டி.கே.சுரேஷுக்கு மத்திய அமைச்சர் பதிலடி

புதுடெல்லி: வட இந்திய மாநிலங்கள் பின் தங்கியதற்கு காங்கிரஸ் கட்சியே காரணம் என்று மத்திய அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் குற்றம் சாட்டியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கர்நாடகாவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்பி டி.கே. சுரேஷ், வட இந்தியாவில் இருந்து தென் இந்தியாவை தனி நாடாக பிரிக்க வேண்டி வரும் எனக் கூறி இருக்கிறார். ஒரு பக்கம் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை என்ற பெயரில் யாத்திரை மேற்கொண்டு வருகிறார். அதேநேரத்தில், … Read more

கொரியர்களின் பாட்டி இராமருக்கு பேத்தி! கொரிய சாம்ராஜ்ஜியத்தை ஆண்ட அயோத்தி இளவரசி!

Indian Princess Suriratna Alias Korean Empress: அயோத்தி ராமர் கோவில் பிராணபிரதிஷ்டை நிகழ்ச்சியை லட்சக்கணக்கான தென்கொரியர்கள் பார்த்ததற்குக் காரணம் என்ன தெரியுமா?

கர்நாடகாவில் கையால் கழிவுகள் அகற்றுவதை அனுமதிக்க முடியாது: முதல்வர் சித்தராமையா எச்சரிக்கை

பெங்களூரு: கர்நாடகாவில் கையால் கழிவுகள் அகற்றுவதை அனுமதிக்க முடியாது. இதை மீறி யாரேனும் கையால் கழிவுகளை சுத்தம் செய்ய வைத்தால் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என முதல்வர் சித்தராமையா எச்சரித்தார். கர்நாடக சமூக நலத்துறையின் சார்பில் 4 ஆயிரம் துப்பரவு பணியாளர்களுக்கு இழப்பீடு வழங்கும் நிகழ்வு நேற்று பெங்களூருவில் உள்ள அம்பேத்கர் பவனில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதல்வர் சித்தராமையா பேசியதாவது: கையால் மலம் அள்ளுவது, மலத்தொட்டியில் இறங்கி சுத்தம் செய்வது போன்றவை நாட்டில் சட்டப்படி தடை விதிக்கப்பட்டுள்ளது. … Read more

இடைக்கால மத்திய பட்ஜெட் 2024 ஹைலைட்ஸ்

புதுடெல்லி: முத்ரா திட்டத்தில் 30 கோடி பெண்களுக்கு கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மத்திய இடைக்கால பட்ஜெட்டில் பெண்களின் முன்னேற்றம் குறித்து அவர் கூறியதாவது: முத்ரா திட்டத்தில் நாடு முழுவதும் 30 கோடி பெண்களுக்கு கடன் உதவி வழங்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் அவர்கள் தொழில்முனைவோராக மாறியுள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில் உயர் கல்வியில் மாணவிகளின் சேர்க்கை 28 சதவீதமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் சார்ந்த படிப்புகளில் … Read more

வாராணசி நீதிமன்ற உத்தரவின்படி 30 ஆண்டுகளுக்கு பிறகு கியான்வாபி மசூதி வளாக வியாஸ் மண்டபத்தில் பூஜைகள் தொடங்கின

புதுடெல்லி: வாராணசி நீதிமன்ற அனுமதியை தொடர்ந்து கியான்வாபி மசூதி வளாகவியாஸ் மண்டபத்தில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு பூஜைகள் தொடங்கின. உத்தரபிரதேச மாநிலம் வாராணசியில் காசி விஸ்வநாதர் கோயிலை ஒட்டி கியான்வாபி மசூதி அமைந்துள்ளது. இந்நிலையில் வாராணசி சிவில் நீதிமன்றத்தில் பிரபல வியாஸ் குடும்பத்தின் மகள்வழி பேரனான சைலேந்தர் குமார் பாதக், கடந்த ஆண்டு இறுதியில் 2 மனுக்களை தாக்கல் செய்தார். அவர் தனது மனுவில் காசி விஸ்வநாதர் கோயிலின் சிறிய மண்டபம் (வியாஸ் மண்டபம்) கியான்வாபி மசூதியை … Read more