விராட் கோலி சொத்து மதிப்பு: ரூ.1000 கோடியை தாண்டியது – ஒரு இன்ஸ்டாகிராம் பதிவுக்கு ரூ 8.9 கோடி வாங்குகிறார்

இந்திய கிரிக்கெட் அணியில் இருக்கும் விராட் கோலியின் சொத்து மதிப்பு கிடுகிடுவென உயர்ந்து கொண்டிருக்கிறது. சச்சின், தோனி ஆகியோர் இந்திய அணிக்காக விளையாடியபோது விளம்பர வருவாய் பெற்ற கோடிகளைவிட விராட் கோலிக்கான வருவாய் பன்மடங்கு வந்து கொண்டிருக்கிறது. இதனால் இந்திய அளவில் மட்டுமல்லாமல் உலகளவில் அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்கள் பட்டியலிலும் டாப் 10 இடத்தில் இடம்பிடித்து இருக்கிறார். பல வழிகளில் இருந்தும் வருமானம் வருவதால், விராட் கோலியின் சொத்து மதிப்பு என்பது ஆயிரம் கோடி ரூபாயைக் … Read more

2-வது டெஸ்டில் மேலும் ஆக்ரோஷமாக விளையாடுவோம் – இங்கிலாந்து பயிற்சியாளர் பிரன்டன் மெக்கல்லம்

பர்மிங்காம், பர்மிங்காமில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் முதலாவது டெஸ்டில் 281 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலியா தோல்வியின் விளிம்பில் இருந்து மீண்டு 2 விக்கெட் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றி பெற்றது. இந்த டெஸ்டில் அதிரடியாக பேட்டிங் செய்த இங்கிலாந்து முதல் நாளிலேயே 8 விக்கெட்டுடன் ‘டிக்ளேர்’ செய்தது விமர்சனத்திற்குள்ளானது. தொடர்ந்து ஆடியிருந்தால் மேலும் 30-40 ரன்கள் வரை எடுத்திருக்க முடியும் என்று முன்னாள் வீரர்கள் பலரும் கூறினர். அதே சமயம் ஆஸ்திரேலிய அணி எச்சரிக்கையுடன் … Read more

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் பெண்களுக்கான 20 ஓவர் லீக் கிரிக்கெட் போட்டி – சென்னையில் 26-ந் தேதி தொடக்கம்

சென்னை, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் இந்த ஆண்டுக்கான (2023-24) பெண்கள் 20 ஓவர் மற்றும் 50 ஓவர் லீக் கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது. பிரேயர் கோப்பைக்கான இந்த போட்டி சென்னை செங்குன்றத்தில் உள்ள ஸ்டேக் மற்றும் கேளம்பாக்கத்தில் உள்ள ஜூனியர் சூப்பர் கிங்ஸ் அகாடமி மைதானங்களில் நடக்கிறது. இதில் பெண்களுக்கான 20 ஓவர் லீக் கிரிக்கெட் போட்டி வருகிற 26-ந் தேதி தொடங்குகிறது. 29-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் கிரீன் இன்வாடெர்ஸ், சில்வர் … Read more

கோவிட் தடுப்பூசி போட்டுக்கொண்டதால், ஷேன் வார்னே இறந்தாரா? தொடரும் சர்ச்சை

ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்ன் இறந்து ஒரு வருடத்திற்குப் பிறகு, அவர் இரண்டு டோஸ் ஃபைசர் எம்ஆர்என்ஏ கோவிட் தடுப்பூசியை எடுத்துக் கொண்டதே, அவரது உயிரிழப்புக்குக் காரணமா என்பது தொடர்பான விவாதங்கள் தொடர்கிறது. இதற்குக் காரணம், இங்கிலாந்தைச் சேர்ந்த முன்னணி இந்திய வம்சாவளி இருதயநோய் நிபுணரும், ஆஸ்திரேலிய மருத்துவர் ஒருவரும் தெரிவித்துள்ள ஆய்வுகளின் முடிவு தான். கோவிட் தடுப்பூசி போட்டுக்கொண்ட ஷேன் வார்னே, ஒன்பது மாதங்களுக்கு பிறகு மாரடைப்பால் இறந்தார். அவர் போட்டுக் கொண்ட கோவிட் எம்ஆர்என்ஏ … Read more

தோனிக்கும் ஜடேஜாவுக்கும் இடையில் மனக்கசப்பு…? – மௌனம் கலைத்த சிஎஸ்கே சிஇஓ!

MS Dhoni Jadeja: சுமார் இரண்டு மாதங்களாக நடைபெற்ற 16ஆவது ஐபிஎல் தொடர் கடந்த மே மாதம் நிறைவைடந்தது. இந்த தொடர், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், அதன் ரசிகர்களுக்கும் குறிப்பாக கேப்டன் தோனிக்கும் மறக்க முடியாத தொடராக அமைந்தது எனலாம். ஏனென்றால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. குஜராத் அணியுடனான இறுதிப்போட்டியில் கடைசி பந்து வரை சென்று, ஜடேஜாவின் வின்னிங் ஷாட்டால் சிஎஸ்கே கைப்பற்றியது.  தோனி அடுத்த சீசனிலும் … Read more

IND vs WI: வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இந்திய அணிக்குள் வரும் வாசிம்-வகார் போன்ற ஜோடி

மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தில் இந்திய அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டொமினிகாவில் ஜூலை 12ஆம் தேதி தொடங்குகிறது. மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், இந்தியாவின் இரண்டு இளம் மற்றும் அபாயகரமான வேகப்பந்து வீச்சாளர்கள் அறிமுகமாக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  இந்த இளம் ஜோடி பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் மூத்த வீரர்களான … Read more

Ashes 2023: ஆஷஸ் தொடர் இங்கிலாந்துக்குத் தான்! மல்லு கட்டும் மகளிர் கிரிக்கெட் அணி

நாட்டிங்காம்: ஆஷஸ் தொடர் இங்கிலாந்து மண்ணில் நடந்துக் கொண்டிருக்கிறது. ஆடவர் தொடரில் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. ஆனால், ஆஸ்திரேலியாவை தோற்கடிக்க முடியும் என்று இங்கிலாந்து உறுதியாக நம்புகிறது என்பது, ஆடவர் கிரிக்கெட் போட்டிகளுக்கு மட்டுமல்ல மகளிர் கிரிக்கெட் போட்டிகளுலும் தான். ஆஸ்திரேலியா 2015 முதல் பெண்கள் ஆஷஸ் தொடரை நடத்தி வருகிறது, கடந்த நான்கு தொடர்களில் மூன்றில் வெற்றி பெற்றது.  டிரென்ட் பிரிட்ஜில் இன்று (2023, ஜூலை 22 புதன்கிழமை) தொடங்கும் மகளிர் ஆஷஸ் … Read more

சுனில் சேத்ரி 'ஹாட்ரிக்' கோல் அடித்து சாதனை: சர்வதேச போட்டியில் அதிக கோல் அடித்தவர்கள் பட்டியலில் 4-வது இடத்துக்கு முன்னேற்றம்

பெங்களூரு, தெற்காசிய கால்பந்து போட்டியில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் 4-0 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை பந்தாடியது. கேப்டன் சுனில் சேத்ரி ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்ததுடன், சர்வதேச போட்டியில் அதிக கோல் அடித்தவர்கள் பட்டியலில் 4-வது இடத்துக்கு முன்னேறினார். 14-வது தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி பெங்களூருவில் உள்ள ஸ்ரீ கண்டீவரா ஸ்டேடியத்தில் நேற்று மாலை தொடங்கியது. ஜூலை 4-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக … Read more

இந்திய அணியை தேர்வு செய்யும் பொறுப்பில் வீரேந்திர சேவாக்? விரைவில் அறிவிப்பு

இந்தியத் தேர்வுக் குழுவுக்கு புதிய தேர்வாளரை பிசிசிஐ தேடிக் கொண்டிருக்கிறது. முன்னாள் தலைமை தேர்வாளர் சேத்தன் சர்மா 2023 பிப்ரவரியில் ஒரு ஸ்டிங் ஆபரேஷனுக்குப் பிறகு தனது பதவியை இழந்தார். அந்த ஸ்டிங்கில், இந்திய வீரர்கள் மற்றும் அணி தேர்வு தொடர்பான ரகசிய தகவல்கள் குறித்து அவர் பேசியிருந்தார். இது பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் புதிய தேர்வுக்குழு தலைவர் வடக்கு மண்டலத்தில் இருந்து தேர்ந்தெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் வீரேந்திர சேவாக், கவுதம் கம்பீர், ஆஷிஷ் … Read more

ஆஷஸ் டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி: முதல்நாள் 'டிக்ளேர்' செய்ததில் வருத்தமில்லை – இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ்

பர்மிங்காம், பர்மிங்காமில் நடந்த பரபரப்பான ஆஷஸ் முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றியை ருசித்தது. இதில் இங்கிலாந்து நிர்ணயித்த 281 ரன்கள் இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா 4-வது நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 107 ரன்கள் எடுத்திருந்தது. மழையால் 3 மணி நேரம் தாமதமாக தொடங்கிய கடைசி நாளில் யாருக்கு வெற்றி வாய்ப்பு என்பது மதில் மீது பூனையாக தெரிந்தது. உஸ்மான் கவாஜா (65 ரன்) அலெக்ஸ் … Read more