பிசிசிஐ தேர்வுக்குழுவுக்கு எந்த தொலைநோக்கு பார்வையும் இல்லை – வெளுத்து வாங்கிய வெங்சர்க்கார்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவிய நிலையில் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. கத்துக்குட்டி அணிகளை வீழ்த்தி டெஸ்டில் நம்பர் ஒன் இடத்தை பிடித்துக் கொள்வதாகவும், முக்கியமான ஐசிசி தொடர்களில் எந்த ஒரு வெற்றியையும் இந்திய அணி பெறுவதில்லை என்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கடும் விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர். டெஸ்டில் நம்பர் 1 பவுலரான அஸ்வினை வெளியே உட்கார வைத்துவிட்டு ஆஸ்திரேலியா போன்ற அணிகளுக்கு எதிராக நீங்கள் விளையாட எப்படி மனது … Read more

Bazballers: இங்கிலாந்து அணியை வலுவாக்கும் ஜோ ரூட், அணிக்கு முதுகெலும்பு போன்றவர்

Ashes 2023: ஆஷஸ் தொடர் ஒரு அற்புதமான போட்டியாக இருக்கும் என்ற பலரின் எண்ணங்களையும் நனவாக்கும் வகையில் ஆஷஸ் போட்டியில் வீரர்கள் சிறப்பாக விளையாடி வருகின்றனர். டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் மதிய உணவு இடைவேளையில் இங்கிலாந்து அணி, 162 ரன்கள் முன்னிலையில் இருந்தது. எட்ஜ்பாஸ்டனில் நடந்த முதல் ஆஷஸ் டெஸ்டின் நான்காம் நாளில், ஜோ ரூட் ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸை ரிவர்ஸ் ஸ்கூப் செய்ய முயன்றார், அதை அவரால் செய்ய முடியவில்லை. ஆனால் சிறிது … Read more

பாகிஸ்தான் அணிக்கு இன்னொரு அப்செட்.! கோரிக்கையை நிராகரித்தது பிசிசிஐ

ஆசியக் கோப்பையை நடத்துவது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த போட்டி ஹைபிரிட் மாதிரியின் கீழ் விளையாடப்படும். அதாவது, நான்கு போட்டிகள் பாகிஸ்தானிலும், எஞ்சிய 9 போட்டிகள் இலங்கையிலும் நடைபெறவுள்ளது. இந்தியா தனது அனைத்து போட்டிகளையும் இலங்கையில் மட்டுமே விளையாடும்.  இது ஒருபுறம் இருக்க இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் சில மாற்றங்களை செய்யுமாறு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் கேட்டுக் கொண்டது. அது தொடர்பான ஒரு அப்டேட் இப்போது வெளியாகியுள்ளது.  … Read more

ஆகாஷ் சோப்ராவின் ஆரூடம்! இனி ரோஹித் ஷர்மா இந்திய டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன் இல்லை!

நியூடெல்லி: ரோஹித் டெஸ்ட் கேப்டன் என்ற நிலையில் இருந்து மாற்றப்படுவார் என இந்தியாவின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் ஆகாஷ் சோப்ரா உறுதியாக சொல்கிறார், அப்படி என்றால், ரோஹித் ஷர்மா டெஸ்ட் அணியில் இடம் பெறுவாரா? அதை மட்டும் சொல்லமாட்டேன் என்று சொல்கிறார் ஆகாஷ் சோப்ரா. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) மூன்றாவது சுழற்சி ஏற்கனவே இங்கிலாந்தில் பரபரப்பான ஆஷஸ் தொடருடன் தொடங்கியது. முந்தைய இரண்டு சுழற்சிகளில் இரண்டாம் இடத்தைப் பிடித்த இந்தியா, முறையே நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவிடம் … Read more

இதனால் தான் எனக்கு இந்திய கேப்டன் பதவி கொடுக்கப்படவில்லை – அஸ்வின்!

டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலிக்கு மாற்று கேப்டனை இந்தியா தேடும் போது, ​​கேஎல் ராகுல், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரிஷப் பந்த் ஆகியோரை பின்னுக்கு தள்ளி ரோஹித் ஷர்மா கேப்டன் பொறுப்பை பெற்றார்.  இந்த நான்கு வீரர்கள் தவிர, ஒரு சிலரே ஐந்தாவது மற்றும் அந்த ஆச்சரியமான பெயரை வழங்கினர். இது மிகவும் குறைவாக மதிப்பிடப்பட்ட விருப்பமாக இருப்பதன் தெளிவான காரணத்திற்காக ஆச்சரியமாக இருக்கிறது. அவர் தான் ரவிச்சந்திரன் அஸ்வின். அஸ்வினுக்கு கேப்டன் பதவி அனுபவம் உள்ளது, … Read more

உலக தடகள போட்டிக்கு முரளி ஸ்ரீசங்கர் தகுதி

புவனேஷ்வர், மாநிலங்களுக்கு இடையிலான 62-வது தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஒடிசாவின் புவனேஷ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் 4-வது நாளான நேற்று நடந்த ஆண்களுக்கான நீளம் தாண்டுதல் தகுதி சுற்றில் கேரள வீரர் முரளி ஸ்ரீசங்கர் 8.41 மீட்டர் நீளம் தாண்டி இறுதிசுற்றுக்கு முன்னேறினார். தனிப்பட்ட முறையில் அவரது சிறந்த செயல்பாடு இதுவாகும். உலக தடகள சாம்பியன்ஷிப்புக்கு 8.25 மீட்டர் தூரமும், ஆசிய விளையாட்டுக்கு 7.95 மீட்டரும் தகுதி இலக்காக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. … Read more

ஆஷஸ் டெஸ்ட்: 3-ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 28/2 – மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தம்

பர்மிங்காம், இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் பங்கேற்றுள்ளது. ஆஷஸ் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் தொடங்கி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 78 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 393 ரன்கள் குவித்தது. ஜோ ரூட் பொறுப்புடன் ஆடி சதமடித்து அசத்தினார். அவர் 118 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். பேர்ஸ்டோவ் 78 ரன்களும், … Read more

ஆசிய சைக்கிளிங் சாம்பியன்ஷிப்: தமிழக வீராங்கனைக்கு வெள்ளிப்பதக்கம்

புதுடெல்லி, ஆசிய சைக்கிளிங் சாம்பியன்ஷிப் போட்டி மலேசியாவின் செம்பிலான் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான ஜூனியர் தனிநபர் பிரிவில் இந்திய வீராங்கனை தன்யதா ஜே.பி. 2 நிமிடம் 28.861 வினாடிகளில் இலக்கை கடந்து புதிய தேசிய சாதனையுடன் வெள்ளிப்பதக்கம் வென்றார். இந்த போட்டியில் இந்திய வீராங்கனை ஒருவர் பதக்கம் வெல்வது இதுவே முதல்முறையாகும். 17 வயதான தன்யதா கோவையைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவி ஆவார். சீனத்தைபேயின் சாய் ரோக் லீ தங்கப்பதக்கத்தை (2 நிமிடம் … Read more

டி.என்.பி.எல். கிரிக்கெட்: 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் வெற்றி

திண்டுக்கல், திண்டுக்கலில் இன்று நடைபெற்ற 2வது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதின. அதில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இதையடுத்து மதுரை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கார்த்திக், ஹரி நிஷாந்த் ஆகியோர் களம் இறங்கினர். இதில் கார்த்திக் 4 ரன், ஹரி நிஷாந்த் 24 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர். இதையடுத்து களம் இறங்கிய ஜெகதீசன் கவுசிக் சிறிது நேரம் நிலைத்து நின்று ஆடி … Read more

உலகக் கோப்பை கிரிக்கெட் தகுதிச்சுற்று: வெஸ்ட் இண்டீஸ் அணி அபார வெற்றி

ஹராரே, 13-வது 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் வருகிற அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடக்கிறது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டிக்கு ஒருநாள் உலகக் கோப்பை சூப்பர் லீக் போட்டிகள் முடிவில் புள்ளிகள் பட்டியலில் முதல் 8 இடங்களை பிடித்த நியூசிலாந்து, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, வங்காளதேசம், இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், தென்ஆப்பிரிக்கா ஆகிய 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றன. எஞ்சிய 2 அணிகள் எவை? என்பதை நிர்ணயிப்பதற்தான 50 … Read more