ஐ.பி.எல். கிரிக்கெட் : கொல்கத்தாவை பழிதீர்க்கும் முனைப்பில் பெங்களூரு..!!

பெங்களூரு, பெங்களூருவும், கொல்கத்தாவும் 2-வது முறையாக மோதுகின்றன. இந்த சீசனில் இரு அணிகள் 2-வது முறையாக மல்லுக்கட்டும் முதல் ஆட்டம் இது தான். ஏற்கனவே கொல்கத்தா ஈடன்கார்டனில் நடந்த மோதலில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 81 ரன் வித்தியாசத்தில் பெங்களூருவை பந்தாடியது. அதற்கு சொந்த ஊரில் பழிதீர்க்க பெங்களூரு அணி வரிந்து கட்டுகிறது. பெங்களூரு அணி இதுவரை 7 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 3 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்றிருக்கிறது. அந்த அணியின் கேப்டன் … Read more

ஐ.பி.எல். கிரிக்கெட்: குஜராத் அணி 5-வது வெற்றி.. மும்பையை வீழ்த்தியது

ஆமதாபாத், ஐ.பி.எல். கிரிக்கெட் 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த 35-வது லீக்கில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணி, முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்சை எதிர்கொண்டது. ‘டாஸ்’ ஜெயித்த மும்பை கேப்டன் ரோகித் சர்மா முதலில் குஜராத்தை பேட் செய்ய பணித்தார். இதையடுத்து சுப்மன் கில்லும், விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹாவும் குஜராத்தின் இன்னிங்சை தொடங்கினர். சஹா (4 … Read more

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: இந்திய அணியில் மீண்டும் ரஹானே.!

புதுடெல்லி, 2-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் ஜூன் 7-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை நடக்கிறது. இதில் ஆஸ்திரேலியா-இந்தியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டிக்கான கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. இந்த நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. தேர்வு குழுவினர், இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷா, இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, தலைமை … Read more

ஐ.பி.எல். கிரிக்கெட்: குஜராத் – மும்பை அணிகள் இன்று மோதல்

அகமதாபாத், 10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. அதன்படி, இன்றைய ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இன்று இரவு 7.30 மணிக்கு குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் களமிறங்குகின்றன. நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணி 6 ஆட்டங்களில் விளையாடி 4-ல் வெற்றியும், 2-ல் தோல்வியும் கண்டுள்ளது. முந்தைய லக்னோவுக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் வெறும் 135 … Read more

எனது சிறந்த ஆட்டம் இன்னும் வெளிவரவில்லை… சொல்கிறார் ரஹானே.!

கொல்கத்தா, ஐபிஎல் தொடரில் நேற்று முன் தினம் நடைபெற்ற 33வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மோதின. இந்த போட்டியில் சென்னை அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் அபாரவெற்றி பெற்றது. இந்த போட்டியில் சென்னை வீரர் ரஹானே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ருத்ர தாண்டவமாடினார். 24 பந்துகளில் அரைசதம் கடந்த ரஹானே சிக்சர்களாக பறக்க விட்டார். 29 பந்துகளில் 6 பவுண்டரிகள், 5 சிக்சர்கள் விளாசிய ரஹானே 71 ரன்களுடன் … Read more

ஐ.பி.எல். கிரிக்கெட்: ஐதராபாத்தை வீழ்த்தி டெல்லி 2-வது வெற்றி

ஐதராபாத், 10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு ஐதராபாத்தில் நடந்த 34-வது லீக்கில் முன்னாள் சாம்பியன் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சை எதிர்கொண்டது. ‘டாஸ்’ ஜெயித்த டெல்லி கேப்டன் டேவிட் வார்னர் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அவரும், விக்கெட் கீப்பர் பில் சால்ட்டும் டெல்லியின் இன்னிங்சை தொடங்கினர். வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமாரின் முதல் ஓவரிலேயே சால்ட் (0) விக்கெட் கீப்பர் கிளாசெனிடம் … Read more

பிரியாவிடை கொடுக்க திரண்டனர்… கொல்கத்தாவில் ஆதரவு அளித்த ரசிகர்களுக்கு டோனி நன்றி.!

கொல்கத்தா, சென்னை அணி வெற்றி ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டனில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்சை தோற்கடித்து 5-வது வெற்றியை ருசித்ததுடன் புள்ளிப்பட்டியலிலும் முதலிடத்துக்கு முன்னேறியது. இதில் முதலில் பேட் செய்த சென்னை அணி 4 விக்கெட்டுக்கு 235 ரன்கள் குவித்தது. டிவான் கான்வே (56 ரன்கள்), ரஹானே (ஆட்டம் இழக்காமல் 71 ரன்கள்), ஷிவம் துபே … Read more

சிட்னி மைதானத்தின் நுழைவு வாயிலுக்கு தெண்டுல்கர் பெயர் சூட்டிய ஆஸி. கிரிக்கெட் வாரியம்.!

சிட்னி, கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்களான இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சச்சின் தெண்டுல்கர், வெஸ்ட்இண்டீஸ் முன்னாள் கேப்டன் பிரையன் லாரா ஆகியோரின் மகத்தான சாதனைகளை போற்றி கவுரவப்படுத்தும் வகையில் ஆஸ்திரேலியாவில் உள்ள புகழ்பெற்ற சிட்னி கிரிக்கெட் மைதானத்தின் ஒரு நுழைவு வாயிலுக்கு அவர்களது பெயரை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நேற்று சூட்டியது. இந்த நுழைவு வாயில் வழியாக தான் வெளிநாட்டு அணி வீரர்கள் மைதானத்துக்குள் நுழைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அங்கீகாரம் குறித்து தெண்டுல்கர் கருத்து தெரிவிக்கையில், … Read more

உள்ளூரில் எழுச்சிபெறுமா சன்ரைசர்ஸ் ஐதராபாத்.? டெல்லி அணியுடன் இன்று மோதல்

ஐதராபாத், புள்ளி பட்டியலில் கடைசி இரு இடங்களில் உள்ள அணிகள் மோதும் ஆட்டம் இதுவாகும். முன்னாள் சாம்பியனான ஐதராபாத் அணி இதுவரை 6 ஆட்டங்களில் விளையாடி 2-ல் வெற்றியும், 4-ல் தோல்வியும் கண்டுள்ளது. இதில் கடைசி இரு ஆட்டங்களில் மும்பை, சென்னையிடம் வீழ்ந்ததும் அடங்கும். முந்தைய சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் வெறும் 134 ரன்னில் முடங்கிப்போனது. மீண்டும் எழுச்சிபெறும் உத்வேகத்துடன் ஆயத்தமாகும் ஐதராபாத் அணிக்கு சொந்த ஊரில் விளையாடுவதால் உள்ளூர் சூழல் அனுகூலமாக இருக்கும். அந்த அணியின் … Read more

அர்ஷ்தீப்சிங் உடைத்த ஸ்டம்புகளின் விலை என்ன தெரியுமா..?

மும்பை, ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மும்பைக்கு எதிராக நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில் பஞ்சாப்புக்கு வெற்றியை தேடித்தந்த வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப்சிங் கடைசி ஓவரில் துல்லியமாக வீசிய யார்க்கரில் திலக்வர்மா, வதேரா ஆகியோருக்கு மிடில் ஸ்டம்பு பாதியாக உடைந்து சிதறியது. கிரிக்கெட்டில் தற்போது நவீன தொழில்நுட்ப வசதியுடன் கூடிய ஒளிரும் ஸ்டம்புகள் பயன்படுத்தப்படுகிறது. இந்த எல்.இ.டி. வகை ஸ்டம்பில் கேமரா, மைக்ரோ போன் பொருத்தப்பட்டிருக்கும். அர்ஷ்திப்சிங் உடைத்த ஸ்டம்புகளின் விலை குறித்து சமூக வலைதளத்தில் ஒரு விவாதமே நடந்து … Read more