கலிபோர்னியாவில் 8 மாத குழந்தை உட்பட 4 இந்தியர்கள் கடத்தல்

கலிபோர்னியா: அமெரிக்காவின் கலிபோர்னியாவில் 8 மாத குழந்தை உட்பட 4 இந்தியர்கள் கடத்தப்பட்டுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. கலிபோர்னியாவில் உள்ள மெர்சிட் கவுண்டியில் இருந்து கடத்தப்பட்ட நான்கு இந்தியர்களில் 36 வயதான ஜஸ்தீப் சிங், அவரின் மனைவி 27 வயதான ஜஸ்லீன் கவுர் மற்றும் அவர்களது 8 மாத குழந்தை அரூஹி தேரி ஆகியோருடன் 39 வயதான அமந்தீப் சிங் என்பவரும் கடத்தப்பட்டுள்ளனர் என்று மெர்சிட் கவுண்டி காவல் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது. ஆயுதம் ஏந்திய நபர் ஒருவர் … Read more

2022 இயற்பியலுக்கான நோபல் பரிசு: பிரான்ஸ், அமெரிக்கா, ஆஸ்திரியாவைச் சேர்ந்த மூவருக்கு பகிர்ந்தளிப்பு

ஸ்டாக்ஹோம்: 2022-ம் ஆண்டுக்கான இயற்பியல் துறைக்கான நோபல் பரிசுக்கு பிரான்ஸை சேர்ந்த அலய்ன் ஆஸ்பெக்ட், அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் எப்.கிளஸெர் மற்றும் ஆஸ்திரியாவைச் சேர்ந்த ஆன்டன் செய்லிஞ்சர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம், பொருளாதாரம் ஆகிய துறைகளில் முக்கிய பங்களிப்பை வழங்கியவர்களுக்கும் அமைதிக்காக பாடுபட்டவர்களுக்கும் ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அமைதிக்கான நோபல் பரிசை நார்வே வழங்குகிறது. பிற பரிசுகளை ஸ்வீடன் வழங்குகிறது. ஒரு தங்கப் பதக்கம், சான்றிதழ் மற்றும் இந்திய … Read more

வம்புக்கு இழுக்கும் வடகொரியா?; பதிலடிக்கு தயார் ஆகும் ஜப்பான்!

அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் கடற்படைகள் கொரிய எல்லையில் தற்போது கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட்டு உள்ளன. இந்த நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தி அச்சுறுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஜப்பான் கடற்பகுதியின் மீது கடந்த அக்டோபர் 1ம் தேதி 2 பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஏவி வட கொரியா சோதனை நடத்தியது. இதற்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்நிலையில் இன்று காலை மீண்டும் ஜப்பான் மீது வடகொரியா … Read more

அதிர்ச்சியில் ஆப்பிள் நிறுவனம்; 2024 முதல் அனைத்திலும் USB-C சார்ஜர் மட்டுமே!

ஐரோப்பிய யூனியன் பாராளுமன்றம், ஒரு முக்கிய மைல்கல்லாக, எலக்ட்ரானிக் கேஜெட்டுகள் தொடர்பாக புதிய விதிகளை அங்கீகரித்துள்ளது. இந்த புதிய விதிகள் 2024 க்குள் மொபைல் போன்கள், டேப்லெட்டுகள் மற்றும் கேமராக்கள் போன்ற மின்னணு கேஜெட்டுகளுக்கு, உலகளாவிய சார்ஜிங் போர்ட் அறிமுகப்படுத்தப்படுவதை உறுதி செய்கிறது. இந்த விதிகளுக்கு எதிராக 13 வாக்குகளும், ஆதரவாக 602 வாக்குகள் கிடைத்துள்ளது. இ-ரீடர்கள், இயர்பட்கள் மற்றும் பிற மின்னணு கேஜெட்டுகளும் ஒரே மாதிரியான சார்ஜிங் போர்ட்டைக் கொண்டிருப்பதற்கு இந்த விதி வழி வகுக்கிறது. … Read more

Nobel Prize 2022: இயற்பியலுக்கான நோபல் பரிசு பெறும் மூன்று விஞ்ஞானிகள்!

உலக அளவில் உயரிய விருதாக கருதப்படும் நோபல் பரிசு, மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், இலக்கியம் மற்றும் அமைதிக்கான துறைகளில் சர்வதேச அளவில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. 2022 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு துறைவாரியாக அறிவிக்கப்பட்டு வருகிறது. இதில் நேற்று மருத்துவத்துக்கான பரிசு அறிவிக்கப்பட்டது. அழிந்துபோன ஹோமினின்களின் மரபணுக்கள் மற்றும் மனித பரிணாமம் பற்றிய கண்டுபிடிப்புகளுக்காக, சுவீடன் நாட்டைச் சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சியாளரான ஸ்வாண்டே பாபோவிற்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்து … Read more

வடகொரியா ஏவுகணை வீச்சு: ஜப்பான் மக்களுக்கு எச்சரிக்கை!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதால் உலகம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. உக்ரைன் மீது ரஷ்யா அணு ஆயுதங்களை கொண்டு தாக்கக் கூடும் எனவும் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், ஜப்பான் கடற்பகுதியில் வட கொரியா ஏவுகணை வீசியுள்ளது. இந்த ஏவுகணை பசிபிக் பெருங்கடலில் விழுவதற்கு முன்பு ஜப்பான் எல்லைக்கு மேலே பறந்து சென்றது. இதனால் அந்நாட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏவுகணை வீச்சை தொடர்ந்து, ஜப்பான் நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வடக்கு … Read more

இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிப்பு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஸ்டாக்ஹோம்: இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது. ஐரோப்பிய நாடான ஸ்வீடனைச் சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் நினைவாக, ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு துறைகளில் சிறந்த சாதனை புரிந்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப் படுகிறது. இது, உலகின் மிகவும் உயரிய விருதாக கருதப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசுகள் வழங்கப்படுகின்றன. இந்தாண்டு நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப் … Read more

துபாயில் ஹிந்து கோயில் இன்று திறப்பு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் துபாய்: துபாயில் கட்டப்பட்ட ஹிந்து கோயில் இன்று (அக்.,4)திறக்கப்பட உள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்சில் மிக பழமையான ஹிந்து கோயில் சிந்தி குரு தர்பார் கோயில் , துபாயில் 1950களில் அமைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து துபாயின் ஜபேல் அலி பகுதியில் சுமார் 25 ஆயிரம் சதுர அடி பரப்பளவில்லை. ரூ.148 கோடி செலவில், புதிய ஹிந்து கோயில் கட்ட திட்டமிடப்பட்டது. இதற்கு துபாய் அரசு அனுமதி வழங்கியது. தொடர்ந்து 2020 … Read more

Investment: இந்தியாவில் முதலீடு செய்ய விருப்பமா? NRIகளுக்கான இந்திய சட்டங்கள் இவை

புதுடெல்லி: இந்தியாவில் ஒரு சொத்தை வாங்க ஆர்வமுள்ள, ஆனால், இந்திய குடியுரிமை இல்லாத இந்தியர் (NRI), தங்களுக்கான வரி விதிப்பு நடைமுறைகளை அறிந்துக் கொள்ள வேண்டும். அவர்களுக்கு இந்தியாவில் சொத்து வாங்கத் தடை இல்லை என்றாலும், அவரது சொத்து முதலீடு அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தின் (FEMA) விதிகளின்படி செய்யப்பட வேண்டும். இந்த  ஃபெமா விதிகள் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மக்கள் (PIOs) செய்யும் சொத்துகள் மீதான முதலீடுகளுக்கு பொருந்துபவை ஆகும். இந்திய ரிசர்வ் வங்கி, NRI … Read more

கரோனா காலத்தில் நாம் கற்றுக் கொண்ட முக்கிய பாடம்: சவுமியா சுவாமிநாதன்

புதுடெல்லி:காலநிலை மாற்றம், சுற்றுசூழலுடன் நம் வாழ்வு எவ்வளவு பிணைந்துள்ளது என்ற புரிதல்தான் பெருந்தொற்று காலத்தில் நாம் கற்றுகொண்ட முக்கிய பாடம் என உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனியார் தொலைகாட்சிக்கு சவுமியா சுவாமிநாதன் அளித்த பேட்டியில், “ இந்த கரோனா தொற்று காலத்தில் நாம் கற்று கொண்ட பாடம் காலநிலை மாற்றம். நாம் சுற்றுசூழலுக்கு என்ன செய்தோமோ அதற்கான விளைவை தற்போது எதிர் கொண்டுள்ளோம். நமது வாழ்வு சுற்றுசூழலுடன் இணைந்துள்ளது. … Read more