குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த 11 அடி நீள முதலை.. நீண்ட போராட்டத்துக்கு பின் பிடித்த வனத்துறையினர்

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் நள்ளிரவில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்திய 11 அடி நீளமுள்ள ராட்சத முதலை பிடிபட்டது. சார்லோட் நகரில் ஒரு வீட்டின் வாசலில் நிறுத்தப்பட்டிருந்த ஜீப்பிற்கு அடியில், ராட்சத முதலை இருப்பதைக் கண்டு அச்சமடைந்த மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அந்த முதலையை பிடிக்க முற்பட்ட போது, அது வாயை பிளந்து சத்தமிட்டது. பின்னர் நீண்ட போராட்டத்துக்கு பின் அந்த முதலையை வனத்துறையினர் பிடித்தனர். Source link

லுப்தான்ஸா ஊழியர்கள் வேலை நிறுத்தம்| Dinamalar

பெர்லின் : ஜெர்மனியில் ‘லுப்தான்ஸா ஏர்வேஸ்’ நிறுவன ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக, நுாற்றுக்கணக்கான விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. மேற்கு ஐரோப்பிய நாடான ஜெர்மனியின் விமான சேவை நிறுவனமான லுப்தான்ஸாவில் ஆயிரக்கணக்கானோர் பணியாற்றி வருகின்றனர். விமானிகள் மற்றும் இதர ஊழியர்கள், தங்கள் சம்பளத்தை உயர்த்த வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால், நிர்வாகம் ஏற்க மறுத்தது.இந்நிலையில், ஆயிரக்கணக்கான ஊழியர்கள் நேற்று முன்தினம் முதல் வேலை நிறுத்த போராட்டத்தை துவங்கினர். இதையடுத்து, பிராங்பர்ட்டில் … Read more

வால்மார்ட் நிறுவனத்தின் விற்பனை பெருமளவு சரிவு

அமெரிக்கர்களின் சிக்கன நடவடிக்கையால், 16 லட்சம் பேர் வேலை செய்து வரும் அமெரிக்காவின் மிகப்பெரிய சில்லரை விற்பனை நிறுவனமான வால்மார்டின் வர்த்தகம் பெருமளவு குறைந்துள்ளது. பணவீக்கம் காரணமாக புதிய ஆடைகளை வாங்குவதை தவிர்க்கும் அமெரிக்கர்கள் உணவுப் பொருட்களை வாங்குவதற்கே அதிகமாக செலவிடுகின்றனர். இதனால், அமெரிக்காவின் சில்லரை வர்த்தகத்தில் 10 சதவிகித பங்களிப்பை அளித்து வரும் வால்மார்ட் நிறுவனத்தில் ஏப்ரல் மாத இறுதியில் 61 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு சரக்கு தேக்கமடைந்தது. மேலும் அதன் பங்கு மதிப்பும் … Read more

கனடாவில் தொடர் துப்பாக்கி சூடு; கொலையாளி உட்பட மூவர் பலி| Dinamalar

வான்கூவர் : கனடாவில், மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் இருவர் இறந்தனர்; போலீசார் கொலையாளியை சுட்டுக் கொன்றனர். வட அமெரிக்க நாடான கனடாவின் வான்கூவர் நகரிலிருக்கும் சூதாட்ட விடுதி ஒன்றில் நள்ளிரவில் நுழைந்த மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதில் ஒரு பெண் படுகாயம் அடைந்தார். மூன்று மணி நேரம் கழித்து வீடற்றோருக்கான விடுதியில் ஒருவரை சுட்டுக் கொன்றார். பின் அதிகாலையில் ஒரு பேருந்து நிறுத்தத்தில் படுத்திருந்தவரையும் சுட்டு கொலை செய்துள்ளார். அவ்வழியே சென்ற ஒருவரை சுட்டதில், … Read more

வெளிநாடு சென்ற ஹிந்து, சீக்கியருக்கு தலிபான் அரசு அழைப்பு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் காபூல் : பாதுகாப்பு பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதால் ஆப்கனில் இருந்து வெளிநாடு சென்ற ஹிந்து, சீக்கியர் உள்ளிட்ட சிறுபான்மையினர் தாயகம் திரும்பும்படி, தலிபான் அரசு அழைப்பு விடுத்துள்ளது. தலிபான்கள், கடந்த ஆண்டு ஆப்கனை கைப்பற்றியதை அடுத்து ஹிந்து, சீக்கியர் உள்ளிட்ட சிறுபான்மையினர் அந்நாட்டை விட்டு வெளியேறினர். ஆப்கனில் குருத்வாராக்கள் மீது அடிக்கடி நடத்தப்பட்ட தாக்குதல் காரணமாகவும், உயிருக்கு அஞ்சிய சீக்கியர்கள் வெளிநாடுகளில் தஞ்சம் அடைந்தனர். இந்நிலையில் தலிபான் அரசு வெளியிட்டுள்ள … Read more

செல்பி எடுத்த பெண்ணிடம் விளையாடிய குரங்குகள்| Dinamalar

மெக்சிகோ சிட்டி : மெக்சிகோ உயிரியல் பூங்காவில் ‘செல்பி’ எடுத்த இளம்பெண்ணின் தலைமுடியை குரங்குகள் இழுக்கும் ‘வீடியோ’ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் உள்ள உயிரியல் பூங்காவுக்கு, இளம்பெண் ஒருவர் தன் நண்பர்களுடன் நேற்று முன்தினம் வந்தார். அங்குள்ள ஒரு கூண்டில் குரங்குகள் அடைத்து வைக்கப்பட்டிருந்தன. அந்த கூண்டு அருகே நின்று பின்னணியில் குரங்குகள் தெரிவது போல அந்தப் பெண் செல்பி எடுத்தார். அப்போது, கூண்டின் இடைவெளி வழியாக அந்த … Read more

இலங்கை மாஜி அதிபர் கோத்தபய ராஜபக்சே நாடு திரும்ப திட்டம்| Dinamalar

கொழும்பு : இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே, சிங்கப்பூரிலிருந்து விரைவில் நாடு திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நம் அண்டை நாடான இலங்கை விலைவாசி உயர்வு, எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்ட பல பிரச்னைகளில் சிக்கித் தவிக்கிறது. இதையடுத்து, அந்நாட்டு மக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர். இது, 9ம் தேதி தீவிரமடைந்தது. போராட்டக்காரர்கள், அப்போதைய அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் மாளிகைக்குள் புகுந்து பொருட்களை சூறையாடினர். கோத்தபய குடும்பத்துடன் மாலத் தீவிற்கு தப்பி, அங்கிருந்து சிங்கப்பூருக்குச் சென்றார். … Read more

2024ஆம் ஆண்டிற்கு பின் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து விலக ரஷ்யா முடிவு

2024ஆம் ஆண்டிற்கு பிறகு சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து ரஷ்யா விலக முடிவெடுத்துள்ளதாக அந்நாட்டு விண்வெளி ஆய்வு மையமான ரோஸ்கோஸ்மோஸ் அறிவித்துள்ளது. உக்ரைனுடனான போர் காரணமாக ரஷ்யா மீது மேற்கு நாடுகள் பொருளாதார தடைகள் விதிக்கும் நிலையில், அந்நாடு இம்முடிவை எடுத்துள்ளது. கூட்டணி நாடுகளுக்கு அளித்த கடமைகளை முறையாக நிறைவேற்றுவோம் என அதிபர் புதினிடம் ரோஸ்கோஸ்மோஸ் தலைவர் யூரி போரிசோவ் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், கனடா, ஐரோப்பிய நாடுகள் தற்போது சர்வதேச விண்வெளி நிலையத்தில் … Read more

பிரிட்டன் பிரதமர் தேர்தல்: தொடரும் கடும் போட்டி| Dinamalar

லண்டன் : பிரிட்டனின் அடுத்த பிரதமரை தேர்வு செய்வதற்கான தேர்தலில் நடந்த ‘டிவி’ விவாதத்திலும், இந்தியாவை பூர்வீகமாக உடைய முன்னாள் நிதி அமைச்சர் ரிஷி சுனக், வெளியுறவு அமைச்சர் லிஸ் டிரஸ் இடையே கடும் போட்டி நிலவியது. ஐரோப்பிய நாடான பிரிட்டனில் பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் விலகினார். ஆளும் பழைமைவாத கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுபவரே பிரதமராக பதவிஏற்பார். அதையடுத்து கட்சித் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் நடந்து வருகிறது.இதில் ரிஷி சுனக் மற்றும் லிஸ் டிரஸ் … Read more

சீனாவில் கடும் வெயில் – அரசு எச்சரிக்கை !

ஏற்கனவே சீனாவின் தெற்கு மற்றும் தென் கிழக்கு பகுதிகளில் நாளை வரை கடுமையான வெப்பம் நிலவும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதே போல் நாட்டின் பல பகுதிகளில் வருகிற 31-ந்தேதி முதல் ஆகஸ்டு 15-ந்தேதி வரை மிக அதிக வெப்பம் பதிவாகும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் சீனாவின் பல நகரங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்துகிறது. சுமார் 70 நகரங்களுக்கு அதிக வெப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. கிழக்கு மாகானங்களான ஜெஜி … Read more