மகிந்த ராஜபக்சே வெளிநாடு செல்ல தடை விதித்தது நீதிமன்றம்

கொழும்பு: வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி, அரசுக்கு எதிரான போராட்டங்கள் மற்றும் வன்முறையால் இலங்கை அரசு திணறி வருகிறது. மக்களின் தொடர் போராட்டத்தால் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்சே கடந்த 9-ந்தேதி ராஜினாமா செய்தார். இதனையடுத்து மகிந்த ராஜபக்சே ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.  போராட்டக்காரர்கள் மீது கடும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. போராட்டக்காரர்கள் எதிர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் அமைதியாக நடந்து வந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. மகிந்த ராஜபக்சே வீடு, அவரது ஆதரவாளர்களின் … Read more

இலங்கை பிரதமராகிறார் ரணில் விக்கிரமசிங்கே?| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கொழும்பு: இலங்கை பிரதமராக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கே இன்று (மே 12) மாலை பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே, அமைச்சர்கள் மற்றும் ஆளுங்கட்சி எம்.பி.,க்கள் வீடுகளை சூறையாடிய மக்கள் தீவைத்தனர். இதனால், மகிந்த ராஜபக்சே பதவி விலகினார். இந்நிலையில், இலங்கையில் 2 நாளில் புதிய அரசு அமையாவிட்டால் பொருளாதாரம் … Read more

ஜாக் டோர்சி மீண்டும் ட்விட்டரை கைப்பற்றுவாரா… மவுனம் கலைத்த முன்னாள் CEO

எலான் மஸ்க் ட்விட்டரை கையகப்படுத்தியுள்ள நிலையில், முன்னாள் ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிறுவனர் ஜாக் டோர்சி முதல் முறையாக அது குறித்து பேசியுள்ளார்.  டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ட்விட்டரை வாங்கிய பிறகு, ட்விட்டரின் இணை நிறுவனரும் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜாக் டோர்சி,  ஒத்த எண்ணம் கொண்டவர்களுடன் இணைந்து மீண்டும் நிறுவனத்தை நடத்த உள்ளதாக வதந்திகள் பரவி வருகிறது. இந்த வதந்திகளுக்கு பதிலளித்த … Read more

சீனாவின் ஜீரோ கரோனா திட்டம்: உலக சுகாதார அமைப்பு விமர்சனம்

நியூயார்க்: சீனாவின் ஜீரோ கரோனா திட்டத்தை உலக சுகாதார அமைப்பு கடுமையாக விமர்சித்துள்ளது. உலகம் முழுவதும் கரோனா தாக்கம் 2022 ஆம் ஆண்டு முதலே குறைந்து வருகிறது. இந்த நிலையில் சீனாவில் கடந்த மார்ச் மாதம் கரோனா தொற்று அதிகரித்தது. இதனை தொடர்ந்து கரோனாவை தடுக்க கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இதற்கு உலகளவில் விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில் கரோனாவுக்கு எதிரான சீனாவின் திட்டத்தை மாற்றி கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து … Read more

மீகாங் ஆற்றில் மீனவர்கள் வலையில் 4 மீட்டர் நீளமும், 180 கிலோ எடையும் கொண்ட ராட்சத திருக்கை மீன் சிக்கியது..!

கம்போடியாவில் உள்ள மீகாங் ஆற்றில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் வலையில் 4 மீட்டர் நீளமும், 180 கிலோ எடையும் கொண்ட ராட்சத திருக்கை மீன் சிக்கியது. மீனவர்கள் இரையாக வைத்த சிறிய மீனை கவ்விய போது, அழிவின் விளிம்பில் உள்ள நன்னீர் வாழ் திருக்கை மீன் சிக்கியுள்ளது.  இதையடுத்து மீனவர்கள் மீகாங் ஆற்றில் உள்ள உயிரினங்கள் குறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் குழுவினருக்கு  தகவல் தெரிவித்து வரவழைத்தனர். பின்னர் ஆராய்ச்சியாளர்கள், திருக்கை மீனை பத்திரமாக மீண்டும் ஆற்றிலேயே … Read more

கொரோனாவுக்கு எதிரான யுக்தியை மாற்றுங்கள்: சீனாவுக்கு உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தல்

பீஜிங் : உலகமெங்கும் கொரோனாவை பரப்பிய சீனா, தற்போது அந்த தொற்றின்பிடியில் சிக்கித்தவிக்கிறது. இந்த நிலையில் அங்கு ‘ஜீரோ கோவிட்’ கொள்கையை சீன அரசு அமல்படுத்தி உள்ளது. ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு இல்லை என்ற நிலையை அடைவதுதான் இதன் நோக்கம் ஆகும். இதற்காக கடுமையான ஊரடங்குகள், பொது முடக்கங்கள் ஷாங்காய், பீஜிங் உள்ளிட்ட பல நகரங்களில் அமலில் உள்ளது. ஹாங்சோ நகரில் செப்டம்பரில் நடக்க இருந்த ஆசிய விளையாட்டு போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட கட்டுப்பாடுகள் … Read more

ராஜபக்சேக்களுக்கு சொந்தமான ஓட்டலுக்கு தீவைப்பு| Dinamalar

கொழும்பு: இலங்கையில் மக்களின் போராட்டம் காரணமாக பிரதமராக இருந்த ராஜபக்சே பதவி விலகி, திரிகோணமலையில் உள்ள கடற்படை தளத்தில் தஞ்சம் புகுந்துள்ளார். அந்நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், தங்காலை மெடில்லா பிரதேசத்தில் ராஜபக்சேக்களுக்கு சொந்தமானதாக கருதப்படும் ஓட்டலுக்கு தீவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில், பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கொழும்புவிலிருந்து வெளியேறும் மக்கள் இலங்கையில் வெடித்த கலவரம் காரணமாக, நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதில், சற்று தளர்வு அளிக்கப்பட்டதை தொடர்ந்து … Read more

ஓடுதளத்தில் இருந்து விலகிச் சென்று தீப்பிடித்த விமானம்!..40 பேர் காயம்

சீனாவின் தென்மேற்கு நகரமான சோங்கிங்கிலிருந்து திபெத்தின் நிங்சி நகருக்கு செல்லவிருந்த திபெத் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று, புறப்படத் தயாராக இருந்தபோது ஓடுபாதையை விட்டு விலகிச் சென்றது. இதனைத் தொடர்ந்து, விமானத்தின் இறக்கைகளில் திடீரென தீப்பித்தது. தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை விரைந்து அணைத்தனர். விமானத்தில் 113 பயணிகள் மற்றும் ஒன்பது பணியாளர்கள் இருந்தனர். இவர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக திபெத் ஏர்லைன்ஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த தீ விபத்தில் 40 பேர் லேசாக  காயமடைந்ததாகவும் அவர்கள் … Read more

புதிய பிரதமராகிறார் ரணில்? ஓரிரு நாளில் பதவியேற்பு

இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே, ஓரிரு நாட்களில் பதவியேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  பரபரப்பான சூழலில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, விரைவில் புதிய பிரதமர் நியமிக்கப்படுவார் என தெரிவித்திருந்தார். அத்தோடு, முன்னாள் பிரதமரும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்கேவை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தி, பிரதமர் பதவியை ஏற்க வருமாறு அழைப்பு விடுத்தார். இந்த பேச்சுவார்த்தை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த நிலையில், பிரதமர் பதவியை ஏற்றுக் … Read more

ஹிட்லரை விட ஆபத்தானவர் புதின்: போலந்து பிரதமர்

வார்சா : உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷிய அதிபர் புதின் பற்றி போலந்து பிரதமர் மேட்யூஸ் மொராவீக்கி ‘தி டெலகிராப்’ பத்திரிகையில் ஒரு கட்டுரை எழுதி உள்ளார். அதில் அவர், “புதின், ஹிட்லரும் அல்ல, ஸ்டாலினும் அல்ல. ஆனால் துரதிர்ஷ்டவசமாக மிகவும் ஆபத்தானவர். உக்ரைனில் புச்சா, இர்பின், மரியுபோல் நகரங்களின் தெருக்கள் அப்பாவி மக்களின் ரத்தத்தால் ஓடின. இது ஸ்டாலின் மற்றும் ஹிட்லரின் சபிக்கப்பட்ட சித்தாந்தங்கள் திரும்புவதைக் குறிக்கிறது. 20-ம் நூற்றாண்டின் கம்யூனிசத்தையும், நாஜிசத்தையும் போன்று … Read more